Skip to Content

ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

கர்மயோகி

 

VIII. The Methods of Vedantic Knowledge

 

We have five senses.

There is a sense-mind.

 

This mind can develop further senses.

 

It is its own sovereign action.

Our hands can learn the weight of things.

 

It can be very accurate.

Sense-mind can teach it.

No other physical means is necessary.

Sense-mind has that capacity.

It uses the sense of contact as a starting point.

 

It learns of the pressure also.

But it is not the touch that teaches the mind.

Mind finds out the right weight.

 

It does so by its own independent perception.

 

Touch is used to know the object.

 

That is how pure reason acts.

Sense-mind also acts like reason.

 

It does the same thing with sense-experience

8. வேதாந்த ஞானம்

 

நமக்கு ஐம்புலனுண்டு.

புலன்கட்கு அறிவுண்டு.

இவ்வறிவு புதிய புலன்களை உற்பத்திச் செய்யவல்லது.

மனத்தின் அடிப்படை உரிமை அது.

பொருள்களின் எடையை கை அறிய உதவும்.

எடை துல்லியமாக இருக்கும்.

புலனறிவால் அதைக் காண முடியும்.

வேறு உதவி தேவையில்லை.

புலனறிவுக்கு அத்திறனுண்டு.

தொடு உணர்ச்சியே ஆரம்பம்.

கனத்தையும் ஆரம்பமாகக் கருதுகிறது.

மனம் தொடு உணர்வால் அறியவில்லை.

மனம் சரியான எடையை தானே அறிகிறது.

தனக்கேயுரிய திறமை மூலம் மனம் அறிகிறது.

பொருளை அறிய தொடு உணர்ச்சி பயன்படுகிறது.

பகுத்தறிவு இவ்விதம் செயல்படுகிறது.

புலனறிவும் இப்படியே புரிந்து கொள்கிறது.

புலனறிவு தொடு உணர்ச்சியைப் பயன்படுத்துகிறது.

 

It is used as a mere first starting point.

From there it proceeds to a knowledge.

 

That knowledge has nothing to do with sense-experience.

It has nothing to do with sense-organs too.

It may even contradict their evidence.

 

The extension of faculty is now a fact.

 

It is not only to outsides.

 

Not only in small things this is true.

 

Manas can thus be extended to others.

 

It is true senses relate to objects.

 

Then, this extension becomes a possibility.

It can be extended to others' thoughts.

 

Feelings too can thus be known.

 

Their utterance is not needed.

No aid by their gesture is called for.

 

No action or facial expression is necessary.

These are partial evidence.

 

They are misleading data.

Sometimes they contradict the fact.

 

We can utilise the senses inside.

 

We can recognise the sense experience.

Appearances and images will be enough.

They do not belong to our environment.

Nor do they belong to our organisation.

All these are extensions of our faculties

அதை ஆரம்பமாக்குகிறது.

அதிலிருந்து ஞானம் பெற முயல்கிறது.

பெற்ற ஞானத்திற்கும் புலனுணர்விற்கும் தொடர்பில்லை.

புலன்களுடன் தொடர்பேயில்லை.

மனம் அறிவதும் புலன் உணர்வதும் எதிராகவுமிருக்கலாம்.

திறமையை நீட்ட முடியும் என்பது உண்மை.

புறப்பொருள்கட்கு மட்டும் அன்று அவ்வுண்மை.

இது சிறிய விஷயங்களில் மட்டும் உண்மையன்று.

மனத்தை, இதேபோல் மற்றவற்றிற்கும் நீட்டலாம்.

புலன்கள் பொருள்களைத் தீண்டுவது உண்மை.

ஆகவே, இதுபோல் நீட்டுவதும் முடியும்.

பிறர் எண்ணங்களையும் இதுபோல் அறியலாம்.

உணர்ச்சியையும் இதுபோல் அறியலாம்.

அவற்றை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை.

அங்க அசைவுகளும் தேவையில்லை.

முகக்குறியோ, செயலோ தேவையில்லை.

அவை முழுமையுடையவையில்லை.

தவற்றுக்கு அடிகோலுபவை அவை.

சில சமயங்களில் அவை உண்மைக்கு எதிராகவுமிருக்கும்.

நம்முள் உள்ள புலன்களை நாம் பயன்படுத்தலாம்.

புலனுணர்வை நாம் கண்டறியலாம்.

தோற்றங்களும், உருவமும் போதும்.

அவை நம்மைச் சூழ்ந்தவையல்ல.

நமக்கு அவை தேவையுமில்லை.

இவை நம் திறமைகளின் வெளிப்பாடுகள்.

 

We hesitate to receive them.

We are incredulous.

It is abnormal to the physical mind.

 

It belies our ordinary life.

 

It goes against our daily experience.

They are difficult to set in motion.

We cannot easily systematize them.

 

They cannot become an orderly instrument.

 

Nor are they a serviceable set.

 

Still, we must admit a higher truth.

 

These enlarge our active field.

 

It is a superficial field.

Of course, the effort is ill-ordered.

 

It is by a casual, untaught effort we try.

Maybe it can be a scientific effort.

 

It may even be a well regulated practice.

 

We have an aim in view.

None of them leads to our aim.

 

These truths have psychological experiences.

They are beyond the perception of sense.

 

But, they are seizable by the perception of reason.

They give us only a larger field.

 

They offer more effective means for observation.

நாம் தயங்குகிறோம்.

நமக்கு நம்பிக்கை எழவில்லை.

ஜட மனத்திற்கு இவை புறம்பானவை.

நம் அன்றாட வாழ்வை இவை பொய்யாக்குகின்றன.

தினசரி வாழ்வுக்கு எதிராக இருக்கின்றன.

இவற்றைச் செயல்படுத்துவது கடினம்.

இவற்றை முறைப்படுத்துவதும் முடியாத ஒன்று.

ஒழுங்கான கருவியுமாக இதனால் முடியாது.

பயன்தரும் முறையில் அவற்றால் செயல்படமுடியாது.

இருப்பினும் ஓர் உயர்ந்த உண்மையை நாம் ஏற்க வேண்டும்.

நம் செயலை அவற்றால் விரிவுபடுத்த முடியும்.

இது மேலெழுந்தவாரியான அரங்கம்.

நம் முயற்சி முறையானதன்று.

விவரமில்லாமல், தான்தோன்றியாக நாம் முயல்கிறோம்.

இதை விஞ்ஞானரீதியாக மாற்ற முடியும்.

சிறந்த முறையாகவும், இதை மாற்றலாம். 

நமக்கோர் இலட்சியம் உண்டு.

இவை எதுவும் நமக்கு உதவா.

இவற்றிற்கு மனோதத்துவ உண்மையுண்டு.

அவை புலனைக் கடந்தவை.

ஆனால், அவை பகுத்தறிவுக்குப் புலப்படும்.

நம் பார்வையை அதனால் விரிவுபடுத்த முடியும்.

சூழலை அறிய அவை பெருங்கருவிகளாகும்.

 

There is the truth of things.

 

They always escape beyond the senses.

Universal life has a rule.

 

It is a sound one.

It is in its very constitution.

 

There may be truths attainable by reason.

 

If so, man can attain it.

Because, in man the capacity to know will be there.

He can arrive at it.

He can verify them.

 

He can do so by experience.

It is a knowledge by identity.

This is in our mentality.

By extension, we can be aware of it.

Thus we are aware of our own existence.

 

It is really a self-awareness.

It is more or less conscient.

It is present to our conception.

Our self has its own contents.

 

Our knowledge is based on that conception.

 

We can say it differently.

It will be a general formula.

We seek knowledge of the contents.

We seek knowledge of the continent.

 

One is in the other.

சத்தியம், உண்மை என்பவை பொருள்கட்குண்டு.

அவை புலன்கட்குப் புலப்படா.

உலகத்தில் ஒரு சட்டம் உண்டு.

அது ஒரு போதும் தவறாது.

உலகத்தின் பிறப்பிலேயே ஏற்பட்டது அச்சட்டம்.

அறிவுக்கு எட்டிய உண்மைகள் உலகில் உண்டு.

அப்படியானால், அது மனிதனுக்குண்டு.

அவற்றையறியும் திறன் மனிதனுக்குண்டு.

மனிதன் அவற்றைப் பெறலாம்.

சரியா எனச் சோதிக்கலாம்.

அனுபவத்திலவற்றை அறியலாம்.

அது ஐக்கியத்தால் பெறும் ஞானம்.

நம் மனத்தின் திறன் அது.

அதைப் பெற நாம் முயலலாம்.

நம்மை நாம் அறிவதே அப்படித்தான்.

அது தன்னையறிதலாகும்.

நாம் அறிந்து செய்யும் செயலாகும்.

நம் அறிவுக்கு எட்டும் ஞானமிது.

நம் ஆத்மாவுக்கு விஷயமுண்டு.

 

அத்தத்துவமே நம் ஞானம்.

வேறுவகையாகவும் அதைக் கூறலாம்.

அது பொது விதி.

நாம் விஷய ஞானத்தைத் தேடுகிறோம்.

நாம் உள்ளுறை இரகஸ்யத்தை நாடுகிறோம்.

ஒன்று மற்றதிலுள்ளது.

 

 

There is Self beyond us.

Self is outside us also.

It is Atman.

 

It is Brahman of the Upanishads.

Our mental self-awareness is in us.

It can be extended to Self.

This is a possibility.

 

Indian Vedanta bases itself on this.

Vedanta has knowledge of the Self.

The Self of the universe can be known through it.

Contd...

நம்மைக் கடந்த ஆத்மா உண்டு.

நமக்கு வெளியேயும் ஆத்மா உண்டு.

அதை ஆத்மா என்போம்.

உபநிஷதம் அதை பிரம்மம் என்கிறது.

மனம் தன்னை அறிவது அதுபோலாகும்.

அதை ஆத்மாவுக்கும் தர முடியும்.

அது முடியும்.

வேதாந்தத்தின் அடிப்படை இது.

வேதாந்தம் ஆத்மாவை அறியும்.

அதன் மூலம் உலகை அறியலாம்.

தொடரும்...

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சர்வ ஆரம்பப் பரித்தியாகி எனில் எவ்வளவு சிறியதானாலும் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. (e.g.) ஓர் அபிப்பிராயத்தைச் சொல்வது, அல்லது நோக்கத்தை வெளியிடுவது, சௌகரியத்திற்காக ஒரு பழக்கப்பட்ட காரியத்தைச் செய்வதும் அது போலாகும். அடக்கமுடியாத ஆசையை அடக்க முயல்வது ஆரம்பமாகும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அறியாமையே ஞானம். அது மாறும் நேரம் நாம் காண்பது ஞானோதயமாகும். பொதுவாக நம் குணத்தின் அன்றாட வெளிப்பாட்டில் அந்நேரம் இருக்கும். அது தலைகீழேயும் காணப்படும்.

Comments

ஸ்ரீ அரவிந்தம் - லைப்

ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

The Tamil translation is not in the correct opposite line of the English version.

Page No.1 - Line No.6 - துல்யமாக - 

துல்லியமாக  

Page No.2 - Line No.2 - அதிருந்து -

அதிலிருந்து

ஸ்ரீ அரவிந்த சுடர்

Extra space in the beginning of the 3rd, 6th and last lines.

ஸ்ரீ அரவிந்த சுடர்

Extra space in the beginning of the 2nd and last lines.

 



book | by Dr. Radut