Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

124. உடனுறைபவர் சுதந்திரத்தை விரும்பி ஏற்பது.

  • சுதந்திரம் தனக்கு மட்டும் என்பது மனிதன்.
  • பிறருக்கு மனிதன் சுதந்திரம் கொடுப்பதில்லை. திறமையில்லாதவன் செய்வான்.
  • எடுத்ததற்கெல்லாம் சட்டம் பேசும் இளைஞன் ஸ்தாபனம் நன்கொடையாக ‘செக்’ பெற்றதைக் கறுப்புப் பணமாக்கினார். அதைக் கணக்கில் எழுதினார். பதில் சொல்ல வேண்டியவர் இவரில்லை. இவரை அதைச் செய்ய அனுமதித்தவர் 30 ஆண்டுகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சமர்ப்பணத்தால் வாழ்ந்தார். இதை யார் செய்வார்கள்?
  • ஆபீஸில் சுதந்திரம் கிடைக்கும் என குமாஸ்தா நினைத்துவிட்டால், 3 மணிக்கே வெளியில் போய்விடுவான். திரும்பி வரமாட்டான்.
  • அடுத்தவருக்குச் சுதந்திரம் கொடுத்து எழும் பிரச்சனையை சமர்ப்பணத்தால் ஒருவர் தீர்த்தால் அது அவருக்குப் பூரணயோக வாயில்.
  • மனைவி பணம் திருடுவதைக் கேட்காவிட்டால், வருஷம் 10 ஆனாலும் திருடுவதை நிறுத்தமாட்டாள்.
  • அவள் திருட முடியாத புதிய வருமானம் 10 மடங்கு வந்தபொழுது, அதைக் கொடுப்பவர்களை அணுகி, “இது வேண்டாம் எங்களுக்கு” எனக் கூறுவாள்.
  • சுதந்திரம் செயல்பட விழையும்.
  • அதனால் பிறரை ஆள முற்படும்.
  • தனக்கே முதல்வரை அழிக்க அச்சுதந்திரத்தைப் பயன்படுத்துவார்.
  • அத்தனையும் 50 ஆண்டுகள் அனுமதித்தாலும் திருந்தமாட்டார்கள்.
  • சுதந்திரம் தருபவர்க்கு பூரண யோக வாயில் திறந்தபடியிருக்கும்.
  • மனைவியை விருந்தாளிமுன் அதிகாரம் செய்யப் பிரியப்படுபவர் உண்டு.
  • கணவனை அதுபோல் அதிகாரம் செய்பவருண்டு.
  • தேங்காய்த் துருவிக் கொடு எனவும் ஒருத்தி கேட்டாள்.
  • கேட்டவள் பெற்ற சுதந்திரம், கொடுத்தவருக்கு யோகத்தில் சுதந்திரம் தருகிறது.
  • “என்னை அவமானப்படுத்துகிறார்” எனக் குறைப்பட்டாள்.
  • உலகம் பலவிதம், இதுவும் ஒருவிதம், இதையும் ஏற்றால் பூரண யோக வாயிலாகும்.
  • அமெரிக்காவில் குற்றத்தைத் தடுக்க குற்றம் நிகழக்கூடிய இடங்களைக் கவனித்து எச்சரிப்பார்கள்.
  • இந்தியாவில் அனைவரும் உயிரைவிட்டு தான் சுதந்திரம் அனுபவிக்க 30 ஆண்டுகள் முயன்றவரை அமெரிக்கா அப்படி எச்சரித்தது.
  • எவரும் செய்யாத குற்றத்திற்கு இருவரைக் கைது செய்தது.
  • அன்னை தரிசனம் பெற்றவருக்கு அரெஸ்ட் வரவில்லை.
  • வருவதற்குமுன் உணர்ந்தால் வராது.
  • 30 ஆண்டுகளுக்குப்பின் தொடர்ந்தால் தவிர்க்க முடியாது.
  • பூரண யோக வாயில் அரெஸ்ட் வாரண்டாகவும் வரும்.
  • அதை வாயிலாக அறிபவர்க்குச் சிறை அரச பதவியாகும்.
  • சட்டம் தவறாது.

************

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒன்றான பிரம்மம், பிரம்மம் மாயை என இரண்டாகப் பிரிந்தது.

*********



book | by Dr. Radut