Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 184: To achieve her power in them her creatures live

அவன் சக்தியையடைய அவன் ஜீவன்கள் வாழ்கிறார்

  • பெருமை அதன் உயர்வை நாடும்
  • அகமெனும் சமுத்திரம் புறத்தில் வெளிப்பட்டு
  • வளரும் வட்டங்களாக அலையலையாக வட்டமிட்டு
  • விழுங்கி, வளர்ந்து, சூழ்நிலையை நிரப்பி
  • அப்பெரியதும் பல சிறு பெட்டிகளைச் செய்து
  • குறுகும் அகலத்தில், சிறு பெருவெளியில் அடங்கி
  • சிறு பெருமையை வென்று அவை திருப்தியாக வாழ்கின்றன
  • அவர்கள் சிறு சாம்ராஜ்யத்தை ஆள
  • அவர்கள் சொந்த லோகத்தில் ஒரு முக்கிய புள்ளியாகி
  • சூழலின் சந்தோஷத்தைத் தனதாக்கி, வருத்தத்தையும் ஏற்று
  • வாழ்க்கையின் நோக்கங்களையும், தேவைகளையும் திருப்திபடுத்தி
  • அது போதுமான பொறுப்பு, இவ்வேலைக்குரிய அதிகாரம்
  • புருஷனுக்குரிய பொறுப்புள்ள மனிதன், அவன் விதியையும் ஏற்று
  • இதுவே ஆரம்பம், மாறும் கட்டம்
  • சொர்க்கமயமாகும் முதற்கட்டம்
  • பிரகாசமான அப்பெருவெளியையடைபவர் அனைவர்க்கும்
  • புவியில் வாழும் மனிதர்கட்கு இவர்கள் உடன்பிறப்பு
  • இந்த லோகம் நம் அழியும் நிலையின் எல்லைக்குரியது
  • இப்பெரு உலகம் நம் பெருவாழ்வைத் தரும்
  • அதன் வலுவான அமைப்பு நம் வளரும் ஜீவன்
  • அதன் ஜந்துக்கள், நமது பிரகாசமான பிரதிபலிப்பு
  • நாம் ஆரம்பிக்கிறோம், அது முடிக்கிறது
  • நாம் எட்ட முயல்வதை அது பத்திரப்படுத்துகிறது
  • சிந்தனையில் வளர்ந்த பிரம்மாட்சரமாகும்
  • முழுமையாக, நம்மைப்போல் எதிராகச் சிதையாமல்
  • இதயத்துள் ஒளிந்துள்ளது தலைவரை ஏற்றுப் பின்பற்றி
  • அவர் வாழ்வு அகத்தின் சட்டத்தைப் பணிந்து
  • அற்புதக் கடையங்குளது, வீரனின் அச்சு
  • ஆத்மா அதன் தலைவிதியை நிர்ணயிப்பதைக் கவனிக்கிறது
  • பராமுகமான ஜடமான ஆத்மா எவருமில்லை
  • தங்கள் கட்சியையறிவார்கள், தாம் வணங்கும் கடவுளையறிவார்கள்
  • தர்ம யுத்தம் நடக்கிறது, தகுந்த கட்சியில் சேர
  • தெய்வீக ஜோதிக்குப் புனித யாத்திரை புறப்படுகிறது
  • அங்கு அறியாமையும் அறிவை நாடுகிறது
  • தொலைவின் நட்சத்திரத்தின் பிரகாசம் விளங்குகிறது

**********

ஜீவிய மணி

அசையும் வாழ்வுக்குச் சிந்திக்க முடியாது.

**********



book | by Dr. Radut