Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேக்கப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminable
Page 298
Para 4
II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
To our Science this indeterminate Existence reveals itself as an Energy.
நம் விஞ்ஞானத்திற்கு நிர்ணயம் செய்ய இயலாத இப்பெருவாழ்வு தன்னை ஒரு சக்தியாக அறிவிக்கிறது.
It is known not by itself but by its works.
அது அதனால் அறியப்படாமல் அதன் செயல்களால் அறியப்படுகிறது.
They throw up in its motion waves of energism.
அவை தம் சலனத்தில் சக்தியலைகளை
வெளிப்படுத்துகின்றன.
In them is a multitude of infinitesimals.
அவற்றுள் எண்ணற்ற அணுத்துகள்கள் உள்ளன.
These group themselves to form larger infinitesimals.
இவை ஒன்று சேர்ந்து பெரிய அளவிலான அணுத்துகள்களை உருவாக்குகின்றன.
They become a basis for all the creations of the Energy.
இவையே சக்தியின் அனைத்து சிருஷ்டிகளுக்கு அடிப்படையாகிறது.
Even those farthest away from the material basis do this.
பொருட்தன்மையிலிருந்து அதிக தொலைவிலுள்ளவையும் இதையே செய்கின்றன.
These emerge as a world of organised Matter.
இவை முறைப்படுத்தப்பட்ட ஜட உலகமாக எழுகின்றன.
They emerge as Life, as Consciousness.
இவை வாழ்வாகவும் ஜீவியமாகவும் வெளிப்படுகின்றன.
They emerge as still unexplained activities of evolutionary Nature.
பரிணாமம் பெறும் இயற்கையின் இன்னும் விளக்கப்படாத செயல்பாடுகளாக அவை எழுகின்றன.
On the original process are erected a multitude of processes.
மூலமான செயல்முறையின் மீது எண்ணற்ற செயல்முறைகள் எழுப்பப்படுகின்றன.
We can observe them, follow, can take advantage and utilise them.
நாம் அவற்றைக் கவனிக்கலாம், பின்பற்றலாம், அவற்றால் பயனடையலாம் மற்றும் அவற்றை உபயோகப்படுத்தலாம்
But they are not fundamentally explicable.
ஆனால் அவற்றை அடிப்படையாக விளக்கமுடியாது.
We know there are a varying number of electric infinitesimals.
பல வகையான எண்ணிக்கைகளைக் கொண்ட மின்னணுத்துகள்களை நாம் அறிவோம்
They can produce the appearance of larger atomic infinitesimals.
அவை அளவில் பெரிய அணுத்துகள்களின் தோற்றத்தை உண்டுபண்ண முடியும்.
These are of different natures, qualities, powers.
அவை வேறுபட்ட இயல்புகள், தன்மைகள் மற்றும் சக்திகள்
கொண்டன.
How can these diff erent dispositions come to constitute these different atoms?
இவ்வாறான வேறுபட்ட அணுக்களை உண்டாக்கும் பல வகையான குண அமைப்புகள் எப்படி ஏற்பட்டன?
We fail to discover this.
நம்மால் இதைக் கண்டறிய முடியவில்லை
The differenti ae in the constituents are said to be the cause.
அதன் உட்கூறுகளின் வேறுபாடுகளே இதற்குக் காரணம்
How do they necessitate the differentiae in the outcome?
அவை அவற்றின் வெளிப்பாடுகளில் இந்த வேறுபாடுகளை எங்ஙனம் அவசியமாக்குகின்றன?
Certain invisible atomic infinitesimals combine.
சில கண்ணுக்குத் தெரியாத அணுத்துகள்கள் ஒன்று சேர்கின்றன.
They produce new visible determinations.
அவை புதிய பார்வைக்குப் புலப்படும் நிர்ணயங்களை உற்பத்தி செய்கின்றன.
These are quite different in nature, quality and power from the constituent infinitesimals.
இவை அதன் மூலக்கூறுகளின் இயல்பு, தன்மை மற்றும் சக்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்டன.
We fail to discover how the appearance of water is due to a fixed formula.
ஒரு நிலையான சூத்திரத்தால் நீர் எவ்வாறு உருவம் பெறுகிறது என்பதை நாம் கண்டறியத் தவறுகிறோம்
The oxygen and hydrogen are not just a combination of gases.
ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் வெறும் வாயுப் பொருட்களின் கலவை அல்ல.
It is a new creation, a new form of substance.
அது ஒரு புதிய சிருஷ்டி, ஒரு பொருளின் புதிய ரூபம்
It is a material manifestation of a quite new character.
அது முற்றிலும் புதிய தன்மை கொண்ட ஒரு ஜடப்பொருளின் வெளிப்பாடு.
We see that a seed develops into a tree.
நாம் ஒரு விதை மரமாக வளர்வதைக் காண்கிறோம்
We follow the line of the process of production and utilise it.
அவ்வுற்பத்திச் செயல்முறையைப் பின்பற்றி நாம் பயனடைகிறோம்.
But we do not discover how a tree can grow out of a seed.
ஆனால் ஒரு விதையிலிருந்து ஒரு மரம் எப்படி வளர முடியும் எனக் கண்டுபிடிப்பதில்லை
How is the life of the tree implied in the energy of the seed?
ஒரு விதையின் சக்திக்குள் ஒரு மரத்தின் வாழ்வு எவ்வாறு புதைந்திருக்க முடியும்?
How can the seed develop into a tree?
ஒரு விதை எப்படி மரமாக வளர முடியும்
We know that genes and chromosomes are the cause of hereditary transmissions.
பரம்பரை பரம்பரையாக குணம் தொற்றி வருவதற்கு மரபணுக்கள் மற்றும் பண்பணுக்கள் காரணம் என்பதை நாமறிவோம்.
These are not only of physical but of psychological variations.
இவை உடலில் மட்டுமின்றி உளநிலையிலும் வேறுபடுகின்றன.
But how can psychological characteristics be transmitted in this inconscient material vehicle?
ஆனால் உளநிலை சிறப்பியல்புகள் இருளான இந்த ஜடமான கருவியில் எப்படி அனுப்பப்படுகின்றன?
We are told there is a cogent Nature-process.
இதற்குத் தெளிவான ஒரு இயற்கைச் செயல்முறை இருப்பதாக நமக்குக் கூறப்பட்டது.
There is a play of electrons, atoms and their resultant molecules.
அங்கு மின்னணுக்கள், அணுக்கள் மற்றும் அவை சேர்வதால் எழும் மூலக்கூறுகள் இவற்றின் செயல்பாடு உண்டு.
There is an activity of cells, glands, chemical secretions and physiological processes.
அங்கு உயிரணுக்கள், சுரப்பிகள், ரசாயனக் கசிவுகள் மற்றும் உடலியங்கியலின் செயல்முறைகள் உண்டு.
They act on the nerves and brain of a Shakespeare or a Plato.
இவை ஒரு ஷேக்ஸ்பியர் அல்லது ப்ளேடோவின் நரம்புகள் மற்றும் மூளையில் செயல்படுகின்றன.
This produces a Hamlet or a Symposium or a Republic.
இது ஒரு ஹாம்லெட் அல்லது சிம்போசியம் அல்லது ரிபப்ளிக்கை உற்பத்தி செய்கின்றது.
These are highest points of thought and literature.
இவை சிந்தனை மற்றும் இலக்கியத்தில் மிக உயர்ந்த இடங்களுக்குரியவை.
How could they be composed by such material movements?
இத்தகைய ஜடப் பொருட்களின் இயக்கங்களால் இவை எப்படி இயற்றப்படுகின்றன?
We fail to discover or appreciate this.
நாம் இவற்றைக் கண்டுகொள்வதில்லை அல்லது பாராட்டுவதில்லை.
There is a divergence here of the determinants and the determination.
இங்கு நிர்ணயம் செய்யும் பொருள் மற்றும் நிர்ணயம் விரிவடைகின்றன.
It becomes so wide that we are no longer able to follow the process.
இவ்விரிவு அதிக அளவானதால் அதன் செய்முறையை நம்மால் அறிய முடிவதில்லை
We cannot understand or utilize it.
நமக்கு அது புரிவதில்லை அல்லது அதைப் பயன்படுத்த முடிவதில்லை.
These formulae of Science may be pragmatically correct and infallible.
இந்த விஞ்ஞானத்தின் சூத்திரங்கள் நடைமுறைக்கேற்ப சரியானவை மற்றும் தவறற்றவை.
They may govern the practical how of Nature’s processes.
இயற்கையின் செய்முறைகளுக்கான ஞானத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை அவை பெற்றிருக்கலாம்.
But they do not disclose the intrinsic how or why.
ஆனால் ஏன், எப்படி எனும் அதன் உட்பொருளை அவை வெளியிடுவதில்லை.
Rather they seem the formulae of a cosmic Magician.
சொல்லப்போனால் அவை ஒரு பிரபஞ்ச மந்திரவாதியின் சூத்திரங்கள் போல் தோன்றுகின்றன.
They are precise, irresistible, automatically successful each in its field.
அவை தெளிவான, தடை செய்ய இயலாத, இயல்பான வெற்றியை ஒவ்வொன்றும் அதன் துறையில் பெறக் கூடியவை.
But their rationale is fundamentally unintelligible.
ஆனால் அவற்றின் அடிப்படைக் கோட்பாடு புரிந்து கொள்ள இயலாததாக உள்ளது.
Contd...
தொடரும்…
 
ஜீவிய மணி
 
 
ஜீவிய மணி
மனம் பிரிவினையின் கருவி.
மீண்டும் சேர்ப்பது அதன் இரகஸ்யம்.
தானே மறைவதால் தன்னையே மறக்க வேண்டி வருகிறது.
 

*************



book | by Dr. Radut