Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

112. அழைப்பின் ஆன்மீக அம்சம்

  • அன்பர்கள் அழைப்பை அறிவார்கள். அது நாம் அன்னையை நம் பிரச்சனையைத் தீர்க்க அழைப்பது. அது சொல்லற்ற பிரார்த்தனை.
  • ஆத்மா அன்னையை விழைவதால் எழும் குரல் அழைப்பு.
  • அதுவும் சொல்லானால் மேலெழுந்தவாரியாக எழுவது.
  • சொல்லழிந்த அழைப்பு மௌனம் தரும் அழைப்பு.
  • சொல் மறைந்து தானே குரல் எழுந்து அழைப்பு உருவானால் மனம் ஈடுபட்ட காரியம் உடனே பூர்த்தியாகும். காதல் வயப்பட்டவனுக்குக் காதலி எதிரே தோன்றுவாள். பெண் குரல் நேரடியாகத் திருமணத்தில் முடியும்.
    30 ஆண்டுகள் தொண்டராக இருந்தவர்க்குத் தலைவர் பதவி வரும்.
    வேலையில்லாதவர்க்கு பல வேலைகள் தேடி வரும்.
    மாற்றாம் தாயாரிடம் வளர்பவர்க்குத் தாயன்பு தாராளமாக எழும்.
    சொல்லிருந்த அளவில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் வாய்ப்பாகும்.
    சைக்கிள் வாங்க முடியாதவனுக்கு மோட்டார் பைக்கைத் தாண்டி கார் வரும்.
  • அதே அழைப்பு நம்மைக் கடந்து அன்னை உள்ளிருந்து அழைப்பதானால்
    அது பூரண யோக தீட்சையாகும்.
    சூட்சும உலகில் அன்னை அன்பரைத் தம் இதயத்துள் ஏற்பதாகும்.
  • பகவான்முன் March 29, 1914 அன்று அன்னை தரையில் உட்கார்ந்து ரிச்சர்ட்டுடன் பகவான் பேசுவதைக் கேட்டபொழுது அவர் மனநிலை அப்படியிருந்தது. அன்று அன்னை கீதை யோகத்தை முடித்தவர். கிருஷ்ணாவதாரமானவர். அவர் பெற்றது முடிவான மௌனம். கடைசிவரை அவருடனிருந்தது. ‘உலகம் இருளில் மூழ்கியிருந்தாலும் பகவானிருப்பதால் திருவுள்ளம் நிறைவேறும்’ என அன்னை எழுதிய நாள் அது.
  • நம் மனம் சொல்லையிழந்தால் அன்னை அங்கிருந்து நம்மை அழைப்பார். அவர் பெற்ற மௌனம் நம் மனம் பெறும். அன்பர் அந்நேரம் சாதகராவார். Sincerity உண்மை, அதுவும் ஆன்மீக உண்மை, அன்னையைப் பெறும் உண்மை எது என மனம் அறிந்து ஆத்மாவுக்கு அறிவிக்கும். Sincerity உண்மை சரணாகதியை விரும்பினால் அவருக்கு யோகம் பலிக்கும். மரணம் அழியும். அன்னை நெஞ்சையடைந்து அங்கேயே தங்கும் யோக பாக்கியம் கிடைக்கும்.
  • பூரண யோகம் செய்தால் பூரணமாகப் பலிக்கும் சித்தி மனத்தை எட்டி ஆத்மாவில் உதித்து, அது சைத்திய புருஷனை எட்டி மேல்மனத்தில் அழைப்பாக மாறுவது, ஒருவர் உலகத்தின் சார்பாக அன்னையைப் பூவுலகத்திற்கு அழைப்பதாகும். அது பொன்னான நேரம்.
    பொன்னொளியாகப் பகவான் பிரகாசிக்கும் தருணம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆத்மா ஆதி, அந்தம், மாற்றம், வளர்ச்சி அற்றது என்பது மரபு. பகவான், அது வளர்கிறது; அதற்காகவே பல பிறவிகள் எடுக்கிறது என்கிறார். நாமும் உடல், உயிர், மனத்தை விட்டு அகன்று சத்தியத்தை நாடுவது அதன் பிரதிபலிப்பு.

********



book | by Dr. Radut