Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

 

ஆங்கிலம்: திருமதி லெஸ்லி ஜெக்கப்

தமிழ்: திருமதி வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 273
Para 3
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
If such intervening gradations exist, they must be superconscient to human mind.
இதுபோன்ற இடைப்பட்ட நிலைகள் இருந்தால் அவை மனித மனத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும்
The normal human mind does not seem to have any entry into these higher grades of being.
சாதாரண மனித மனம் ஜீவனின் இந்த உயர்ந்த நிலைகளில் நுழைய முடியாதது போல் தெரிகிறது.
Man is limited in his consciousness by mind.
மனிதனின் ஜீவியம் மனத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது.
He is even hampered by a given range or scale of mind.
மனத்தின் அளவு அல்லது எல்லை மனிதனுக்குத் தடையை ஏற்படுத்துகின்றது.
What is below his mind, submental or nether to his scale, readily seems to him subconscious.
மனத்தின் கீழுள்ள நிலைகள் அவனுக்கு ஆழ்மனமாகத் தெரிகின்றன.
It seems not distinguishable from complete inconscience.
அது ஜட இருளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாமல் உள்ளது.
What is above it is to him superconscious.
மேலுள்ளவை அவனுக்கு அவன் ஜீவியத்தைக் கடந்தவை.
He is almost inclined to regard it as void of awareness.
புரிந்து கொள்ள முடியாத சூன்யமாக அதை அவன் கருத விழைகிறான்.
He regards it as a sort of luminous Inconscience.
பிரகாசமான ஆழ்ந்த நிலையாக அதை அவன் எண்ணுகிறான்.
He is limited to a certain scale of sounds or of colours.
ஓரளவுக்குட்பட்ட நிலைக்குரிய ஒலிகளும் வண்ணங்களும் அவனுக்குப் பரிச்சயம்.
What is above or below that scale is to him inaudible and invisible.
அந்த அளவுக்கு மேல் அல்லது கீழுள்ளவை அவனுக்குக் கேட்காது, பார்வைக்குப் புலப்படாது.
In the same way it is with his scale of mental
consciousness.
இதைப் போலவே அவனுடைய ஜீவியத்தின் அளவு உள்ளது.
It is confined at either extremity by an incapacity.
ஏதாவது ஒரு இறுதி முனையில் இயலாமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
That marks his upper and his nether limit.
இது அதன் உயர்ந்த மற்றும் தாழ்ந்த எல்லையாகும்
He has no sufficient means of communication even with the animal.
அவனுக்கு விலங்குகளோடும் தேவையான அளவு தொடர்புக்கான வழி வகை இல்லை
The animal is his mental congener, though not his equal.
விலங்கு அவனுக்குச் சரிசமமாக இல்லாவிடினும் மனத்தை
பொறுத்தவரையில் ஒரே இனத்தைச் சேர்ந்தது.
He is even capable of denying mind or real consciousness to animals.
அவன் விலங்குகளில் செயல்படும் மனத்தையும் ஜீவியத்தையும் மறுக்கலாம்.
This is because its modes are other and narrower than those with which he is familiar.
ஏனென்றால் அவைகளின் செயல்படும் விதம் மாறுதலாகவும் குறுகியதாகவும் அவன் புரிந்து கொள்ளும் நிலையிலிருந்து வேறுபட்டும் உள்ளது.
He can observe submental being from outside.
தாழ்ந்த மனத்தின் ஜீவன்களை வெளியிலிருந்து அவனால் காண முடியும்.
But he cannot at all communicate with it. Or enter intimately into its nature.
ஆனால் அவனால் அவைகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. அல்லது அவைகளின் இயல்போடு நெருக்கமாக இணைய முடியாது.
Equally the superconscious is to him a closed book.
அதே போல் அவனைக் கடந்த உயர் நிலையிலுள்ள பரமாத்மாவும் அவனுக்கு ஒரு மூடிய புத்தகம் போன்றது.
It may well be filled only with empty pages.
அதை அவனால் காலியான பக்கங்களாகவே நிரப்ப முடியும்
It seems as if he had no means of contact with these higher gradati ons of consciousness.
உயர்ந்த நிலையிலான ஜீவியத்தோடு அவன் தொடர் கொள்ள வழிவகை இல்லை என்று தெரிகிறது.
If so, they cannot act as links or bridges.
அப்படியானால், அவை இணைக்கும் கருவிகளாகவோ அல்லது பாலங்களாகவோ செயல்பட முடியாது.
His evolution must cease with his accomplished mental range and cannot exceed it.
அவனுடைய பரிணாமம் மனத்துடன் முடிவுக்கு வரும் அதைக் கடக்க முடியாது.
Nature in drawing these limits has written finis to his upward endeavour.
 
Page 274
Para 4
இயற்கை இவ்வரையறைகளை ஏற்படுத்தி மனிதனின்  மேல்நோக்கிச் செல்லும் பாதையை அடைத்து வைத்துள்ளது.
When we look more closely, we perceive that this normality is deceptive.
இதை இன்னும் தெளிவாக நோக்கினால், இயற்கையில் இச்செயல் மாயையானது என்பதை நாம் உணரலாம்
In fact there are several directions in which human mind reaches beyond itself.
உண்மையில் மனித மனம் தன்னைக் கடந்து செல்லும் திசைகள் பல உண்டு.
It can tend towards self-exceeding.
தன்னைக் கடக்கும் முயற்சியை அது எடுக்க முடியும்
It does so through lines of contact or veiled passages.
அது தொடர்புக்கான வழிகள் அல்லது திரையான பாதைகள் மூலம் இதைச் செய்கிறது.
These passages connect it with higher grades of consciousness.
இப்பாதைகள் அதை உயர்நிலை ஜீவியத்தோடு இணைக்கும்
They are grades of the self-manifesting Spirit.
அவை ஆன்மாவின் சுய வெளிப்பாட்டிற்கான நிலைகள்.
First, we have noted the place Intuition occupies in the human means of knowledge.
முதலில் நாம் மனிதனுக்குண்டான அறிவில் உள்ளுணர்வு என்பதன் இடத்தைக் கண்டோம்
Intuition is in its very nature a projection of the action of these higher grades.
உயர்நிலைகளின் செயல்பாட்டினால் எழுவது உள்ளுணர்வு.
The action is projected into the mind of Ignorance.
அஞ்ஞானத்தினுள் இச்செயல் எழுப்பப்படுகிறது.
It is true that in human mind its action is largely hidden.
நம் மனத்தில் இச்செயல் வெகுவாக மறைந்துள்ளது என்பது உண்மை.
It is hidden by the interventions of our normal intelligence.
நம் சாதாரண அறிவின் இடையீட்டினால் அது மறைக்கப்பட்டுள்ளது.
A pure intuition is a rare occurrence in our mental activity.
மனத்தின் செயல்பாட்டில் தூய உள்ளுணர்வு எழுவது அபூர்வமான நிகழ்வாகும்.
For what we call by the name is usually a point of direct knowledge.
உண்மையில் இது நேரடி ஞானத்தின் ஒரு பகுதி.
That point is immediately caught and coated over with mental stuff .
அப்பகுதி எழுந்ததும் நம் மனம் அதை ஆக்கிரமித்துக் கறைப்படுத்துகிறது.
It serves only as an invisible or very tiny nucleus of a crystallisati on.
அதனால் அது கண்ணுக்குத் தெரியாத அல்லது மிகச் சிறிய ஒரு கருவளவு மட்டுமே நமக்கு உதவுகிறது.
It is in its mass intellectual or otherwise mental in character.
அது திரண்ட அறிவுத்திறனாகவோ அல்லது மனமாகவோ உள்ளது.
Or else the flash of intuition is quickly replaced or intercepted.
அல்லது மின்னலாகத் தோன்றும் உள்ளுணர்வு இடைமறிக்கப்படுகிறது.
Before it has a chance of manifesti ng itself it is quickly replaced.
அது வெளிப்படும்முன் உடனடியாக மாற்றப்படுகிறது.
It is replaced by a rapid imitative mental movement, insight or quick perception.
விரைவாக ஒன்றைப் பின்பற்றி எழும் போலியான மனத்தின் செயல், நுண்ணறிவு அல்லது விரைவாகப் புரிவதாக அது மாற்றம் பெறுகிறது.
This swift process of thought owes its appearance to the sti mulus of the coming intuition.
இவ்வாறாக எண்ணம் க்ஷணத்தில் தோன்றி வெளிப்படுவது உண்மையில் உள்ளுணர்வின் தூண்டுதலால் நடைபெறுவது.
But it obstructs its entry or covers it with a substituted mental suggestion.
ஆனால் எண்ணம் அதைத் தடை செய்து அதை மனத்தின்  கருத்தாக மாற்றுகிறது.
The suggestion may be true or erroneous.
உள்ளுணர்வு மனத்தின் கருத்தாக வெளிப்படும்போது அது சரியாகவோ, தவறாகவோ இருக்கும்
But in either case it is not the authentic intuitive movement.
Even so, this intervention from above shows a connection.
எப்படியானாலும், அது மெய்யான உள்ளுணர்வின் செயல் அல்ல.
இருப்பினும், மேலிருந்து எழும் இந்த இடையீடு ஒரு தொடர்பைக் குறிக்கிறது.
This connection is between mind and what is above it.
இத்தொடர்பு மனம் மற்றும் அதன் மேலுள்ளதன் இடையே ஏற்படுவது.
Behind all our original thinking there is a veiled, a halfveiled intuitive element.
நம் எல்லா அடிப்படையான எண்ணங்களுக்குப் பின்னால் திரையாக, பாதி மறைந்துள்ள உள்ளுணர்வின் பகுதி உண்டு.
This fact is enough to establish a connection between mind and what is above it.
இவ்வுண்மை மனம் மற்றும் அதன் மேலுள்ளதன் இடையே உள்ள தொடர்பை நிரூபிக்கப் போதுமானது.
It opens a passage of communication.
அது இரண்டுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான வழியைத் திறக்கிறது.
It opens an entry into the superior spirit ranges.
உயர்ந்த ஆன்மீக நிலைகளில் நுழையக் கூடிய திறப்பை ஏற்படுத்துகிறது.
There is also the reaching out of mind to exceed the personal ego limitation.
மனத்திலிருந்து உயர்ந்து தனிப்பட்ட அகந்தையின் வரையறையைக் கடக்கும் திறனும் அங்கு உண்டு.
It reaches out to see things in a certain impersonality and universality.
உயர்ந்து அதன் வழியாக பொதுவான, பிரபஞ்ச பார்வையை பெறும் முயற்சி அது.
Impersonality is the first character of cosmic Self.
பிரபஞ்ச ஜீவனின் முதல் இயல்பு பொதுத்தன்மை பெறுவது.
Universality is non-limitati on by the single point of view.
பிரபஞ்சமயமாதல் என்பது ஒற்றைப் பார்வைக் கோணத்தின் வரையறை அகலுவது.
It is the character of cosmic perception and knowledge.
இது பிரபஞ்சத்தை நாம் உணர்வது மற்றும் பிரபஞ்ச ஞானம் பெறுவதன் தன்மை ஆகும்.
This tendency is therefore a widening.
ஆகவே, இம்மனோபாவம் பரந்த நிலையை அடைவது.
Even though rudimentary, it is a widening of these restricted mind areas.
இது அடிப்படையான ஆரம்ப நிலைக்குரியதானாலும், குறுகிய மனத்தின் பகுதிகள் விஸ்தீரணம் அடைவதாகும்.
It is a widening towards cosmicity.
இது பிரபஞ்ச அளவிற்குப் பரந்து விரிவது.
It is a widening towards a quality which is the very character of the higher mental planes.
இத்தன்மை உயர்ந்த மன நிலைகளின் குணத்தைப் பெறும் அளவிலான முயற்சியாகும்.
It is a widening towards that superconscient cosmic Mind.
இவ்விஸ்தீரணம் பரமாத்மாவின் பிரபஞ்ச மனத்தை  நோக்கியது.
It must in the nature of things be the original mind-action.
மூலமான மனத்தின் செயல்பாடாக உள்ளது அது.
Our mind action is only a derivative and inferior process of it.
நம் மனத்தின் செயல் என்பது அதிலிருந்து தோன்றிய ஒரு கீழ்நிலைப் படைப்பு.
Again, there is not an entire absence of penetration from above into our mental limits.
இருந்தாலும், நம் தாழ்ந்த மனத்தில் உயர்ந்ததன் ஊடுருவல் இல்லாமல் இல்லை.
The phenomena of genius are really the result of such a penetration.
அவ்வூடுருவல் மேதைகளை உருவாக்குகிறது.
It is veiled no doubt,
அது திரையானது,
It is veiled because the light of the superior consciousness acts within narrow limits.
உயர்ந்த ஜீவியத்தின் ஒளி குறுகிய வரையறைக்குட்பட்டு செயல்படுவதால் அது மறைவாக உள்ளது.
It usually acts in a special field.
அதன் செயல்படும் அரங்கம் விசேஷமானது.
It acts without any regulated separate organisation of its characteristic energies.
அதன் தனிச் சிறப்பான சக்திகள் ஒழுங்கும் தனித்த அமைப்புகள் இன்றியும் செயல்படும்
It oft en acts indeed quite fitfully and erratically.
அது தொடர்ச்சியற்ற, ஒழுங்கற்ற செயல்பாட்டைக் கொண்டது.
It acts with a supernormal or abnormal irresponsible governance.
சாதாரண நிலையைக் கடந்த அல்லது அசாதாரணமான பொறுப்பற்ற முறையில் அது செயல்படுகிறது.
Also in entering the mind it subdues and adapts itself to mind substance.
மனத்தில் நுழையும்போது அது தன்னை அடக்கி மனத்தின் பொருளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.
Thus, it is only a diminished dynamis that reaches us.
ஆக, அது குறைக்கப்பட்ட திறனாக நம்மை வந்தடைகிறது.
It is not all the original divine luminosity.
மூலமான தெய்வீகப் பிரகாசத்தை அது இழந்துள்ளது.
That luminosity might be called the overhead consciousness beyond us.
அப்பிரகாசத்தை நம்மைக் கடந்த நிலையிலுள்ள உயர்ந்த ஜீவியம் எனலாம்.
Sti ll the phenomena of inspiration and revelatory vision are there.
இருந்தாலும், அக ஊக்கம் மற்றும் ஞான வெளிப்பாட்டின் காட்சி அங்கு உண்டு.
Their origin is unmistakable
அதன் ஆதி தவறற்றது.
Intuitive perception, intuitive discernment, surpass our less illumined normal mind-action.
உள்ளுணர்வு புரிதல், உள்ளுணர்வைப் பிரித்தறிதல் இவை  நம் தாழ்ந்த சாதாரண மனத்தின் செயல்பாட்டை மீறியவை.
Finally, there is the vast field of mystic and spiritual experience.
முடிவாக, இறை உணர்வு மற்றும் ஆன்மீக அனுபவங்களுக்கான பெரிய களம் உள்ளது.
Here the gates already lie wide open.
இங்குக் கதவுகள் ஏற்கனவே திறந்து உள்ளன.
They are open to the possibility of extending our consciousness beyond its present limits.
நம் ஜீவியத்தை அதன் வரையறைகளைத் தாண்டி நிலையில் விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளது என்பதைக் குறிக்குமாறு அவை திறந்துள்ளன.
They are open, unless, indeed, we turn away from their vistas.
அதன் பரந்து விரிந்த பரப்பிலிருந்து நாமாக விலகினாலொழிய, அவை திறந்தே உள்ளன.
We may do so by an obscurantism that refuses to inquire.
எதுவும் விளங்காத நிலையில் நாம் ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல் இருக்கலாம்.
Or we may be attached to our boundaries of mental normality.
அல்லது நாம் நம் மனத்தின் வரையறைகளோடு
ஒன்றியிருக்கலாம்.
In this way we may shut the gates.
அப்படிச் செய்வது நாமே அக்கதவுகளை அடைப்பதாகும்
But in our present investigation we cannot afford to neglect the possibiliti es.
ஆனால் தற்போது நாம் மேற்கொண்டுள்ள விசாரணையின் படி, உருவாகியுள்ள வாய்ப்புகளைப் புறக்கணிப்பது சரியன்று.
These domains of mankind’s endeavour bring possibilities near to us.
மனிதகுல முயற்சி கண்டறிந்த இந்த அரங்கங்கள்  வாய்ப்புகளை நம் அருகில் கொண்டுவரத்தக்கன.
They bring added knowledge of oneself.
நம்மைப் பற்றிய கூடுதலான அறிவை அவை நமக்கு அளிக்கின்றன.
They bring the knowledge of the veiled Reality.
மறைபொருளான சத்தியத்தின் ஞானத்தை அவை நமக்குத் தருகின்றன.
It is their gift to human mind.
இது மனித மனத்திற்கு அவை தரும் பரிசு.
It is the greater light which arms them with the right to act upon us.
மேலேயுள்ள ஜோதி நம்மீது செயல்படும் உரிமையை இவைகளுக்குத் தருகிறது.
It is the innate power of their existence.
இந்தச் சக்தியை அவை தங்கள் உள்ளார்ந்த இயல்பாக பெற்றுள்ளன.
Contd...
தொடரும்…

 

************

ஜீவிய மணி

அதிர்ஷ்டம் எங்கே இருக்கிறது?

அதிர்ஷ்டம் முயற்சியில் இருக்கிறது. முயற்சி என்பது உடலைவிட உணர்வுக்கும், அறிவுக்கும், ஆன்மாவுக்கும் பெரும் பலனைத் தரும். சத்திய ஜீவிய முயற்சி ஆன்மாவைக் கடந்தது. திருவுருமாற்றம் சத்திய ஜீவிய முயற்சி. திருவுருமாற்றத்தைத் தொடங்க உதவும் நிலைகள் தாழ்ந்தவை. உலகின் தாழ்ந்த நிலைகளில் அதிர்ஷ்டத்தின் இரகஸ்யம் உள்ளது.

தாழ்ந்ததை உயர்த்தும்பொழுது பலன் அபரிமிதமாக வரும் என்ற தத்துவத்தை மனமும், உணர்வும் ஏற்கவேண்டும்.

************

ஜீவிய மணி

குடும்பம் கொடுமைப்படுத்துவதாலும், சமூகம் அநீதி இழைப்பதாலும், வாழ்வு துரோகம் செய்வதாலும் மனிதன் கஷ்டத்திற்கு உள்ளாகிறான். இது வந்தபின் பொதுவாக 10, 20 ஆண்டுகள் அல்லது ஒரு தலைமுறை, அவற்றை அனுபவிக்கிறான். அனுபவித்தபின் தன்னை அறியாமல் தெளிவு ஏற்பட்டு முயற்சியைச் சரியான பாதையில் செலுத்திப் பலன் பெறுகிறான். ஸ்ரீ அரவிந்தம் கூறும் ஞானம் இருந்தால், இதுபோன்ற சிரமம் வந்தவுடன் இது அதிர்ஷ்டத்தின் வாயில் எனப் புரிந்து தன் முயற்சியைச் சரியான பாதையில் எடுத்தால், அதிர்ஷ்டம் இப்பொழுதே வரும்.

************book | by Dr. Radut