Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

நம் நியாயம், அன்னைக்கு அநியாயம், கொடுமை

  • ஆசிரமத்திற்கு அந்த நாளில் (1920 முதல் 1930 வரை) வட நாட்டிலிருந்து குடும்பங்கள் வரும். பல நண்பர்கள் சேர்ந்து வருவார்கள்.
  • அன்னை அந்நாளில் ப்யூஸ் போன பல்ப் போடுவதிலிருந்து, வந்த பூக்களை கழுவி சுத்தம் செய்வது வரை எல்லா வேலைகளிலும் பங்குகொள்வார்.
  • எல்லா ஆசிரம கட்டிடங்கட்கும் (டிபார்ட்மெண்ட்) வருவார்.
  • சாதகர்கள் வீட்டிற்கு வருவார், டென்னிஸ் விளையாடுவார்.
  • விளையாட்டு மைதானத்தில் தினமும் பயிற்சியைப் பார்வையிடுவார்.
  • பால்கனி தரிசனம் தருவார்.
  • அவர் கண்ணில் பட்ட பல விசிட்டர்களில் ஒருவர் முகம் தேஜஸ் நிரம்பியிருந்தால் அவரை அழைத்து விசாரிப்பார். தினமும் வந்து பார்க்கச் சொல்வார்.
  • 1958 முதல் தம் அறையை விட்டு வெளியே வருவதில்லை.
  • வரிசையில் 9 வயது குழந்தை 100 பேருக்குப் பின்னால் நின்று " MOTHER" என்று சொல்லிக்கொண்டேயிருந்ததால் தானுள்ள இடத்திலிருந்து திரும்பி அக்குழந்தையைப் பார்ப்பார்.
  • லேக் எஸ்டேட்டில் ஒரு வயதான கிழவி, "அம்மா, அம்மா" எனக் கதறினால் டென்னிஸ் விளையாடுவதை விட்டுவிட்டு எஸ்டேட்டிற்குப் போய் அந்த வயதான பெண்ணைக் கண்டு ஆசிர்வதிப்பார்.
  • பால்கனியில் உள்ள பொழுது அவ்வழியே போகும் கழுதை திரும்பிப் பார்த்தால், அதன் பக்தியை மெச்சி அதை வாங்கச் சொல்லி தென்னந்தோப்பில் வைப்பார்.
  • தேங்காய்மட்டை, கம்பளம் பேசும் குரல் அவருக்குக் கேட்கும்.
  • வலி படும் மரத்தின் குரல் கேட்கும்.
  • இந்த விலங்குகள், செடிகொடிகளுக்குள்ள பக்தியும் ஆர்வமும் நமக்கிருப்பதில்லை.
  • பக்தியுள்ளவரை அன்னை அழைத்துப் பேசினால், அவருடன் வந்த அனைவரும் தங்களைக் கூப்பிடவில்லை எனக் குறைபடுவதைப் பற்றி அன்னை அடிக்கடி கூறுவார்.
  • குழந்தைக்கு ஜுரம் என டாக்டரிடம் போனால் குழந்தைக்கு ஊசி போடுகிறார். என்னைக் கவனிக்கவில்லையே, எனக்கு ஊசி போடவில்லையே என நாம் குறைபடுவதில்லை.
  • அன்னையிடம், பலருக்கு குருவான சாஸ்திரி தன் சிஷ்யனை அழைத்து வந்தார். அன்னை சிஷ்யனை அளவு கடந்து கவனித்து, முக்கிய வேலைகளைக் கொடுத்தார். குருவுக்கு பெயிண்ட் ஆபீஸில் பெயிண்ட் நிறுத்துக் கொடுக்கும் வேலையைக் கொடுத்தார்.
  • அன்னை கொடுப்பதை ஏற்பது முறை.
    கேட்டுப் பெறுவது அன்னையிடம் முறையில்லை.
    கேட்டால் பெறும் பொருள், பிறகு வாராமலே போய்விடும் என நாம் காண்பதில்லை.
    ஜலதோஷமானதால், தன் பிறந்தநாளுக்கு அன்னை தரிசனம் தர சம்மதித்ததால், அவர் "ஜலதோஷத்துடன் போகக்கூடாது" என முடிவு செய்தார். இது தவறினால் அடுத்த பிறந்தநாளன்றுதான் தரிசனம் கிடைக்கும்.
    அன்னை அவரைப் பாராட்டினார்.
    ஜலதோஷம் போனபிறகே அன்னையே கூப்பிட்டு அனுப்பி தரிசனம் கொடுத்தார்.

*******



book | by Dr. Radut