Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

74. மனம் அடங்குவது

  • மனமே மனிதன் என்பது பெருவாரியான நம்பிக்கை.
  • வேதம் மனத்தைக் குதர்க்கம் என்றது.
  • மனமே மனிதனானால், மனிதன் எப்படி மனத்தை அடக்குவான்.
  • மனம் எப்படித் தானே அடங்கும்? ஏன் மனம் அடங்க வேண்டும்?
  • செயலில் சாதிப்பவனுக்கு மனமே கருவி. மனத்தின் திறன் அவன் திறன்.
  • யோகத்தை நாடுபவனுக்கு மனம் தடை.
  • ஞான யோகம், ராஜ யோகம் மனத்தைக் கட்டுப்படுத்தும்.
  • ஆத்மா பிரபஞ்சத்தில் செயல்படும் அரங்கம் மனம்.
  • மனத்திற்கு இரு பகுதிகள் உள்ளன. அவை அகம், புறம்.
  • புறம் ஐந்து புலன்களாலானது, அகம் எண்ணத்தாலானது.
  • புறம், இடம்; அகம், காலம்.
  • காலமும், இடமும் ஆத்மாவின் அக, புற வெளிப்பாடுகள்.
  • காலத்தைக் கடந்தவன் ரிஷி, அவனுக்கு யோகம் உண்டு.
  • மனம் ஒருவருக்குத் தானே அடங்குமானால், அவருக்குப் பூரண யோகம் தன் வாயிலைத் திறப்பதாகப் பொருள்.
  • மனம் குதர்க்கமானது என்பதைக் கூறும் நிகழ்ச்சி, "மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்கக் கூடாது” என்றால், மருந்தைத் தொட்டால் குரங்கை மனம் நினைவுபடுத்தும். வேண்டாம் என்பதை வேண்டும் என செய்வது குதர்க்கம்.
  • வேத காலத்தில் மனம் பிறந்து ஆட்சி செய்யவில்லை. அது உபநிஷத காலத்திற்குரியது.
  • தர்க்க சாஸ்திரம் எழுந்த காலம் அது.
  • ரிஷிகள் தர்க்கம் செய்தாலும், தர்க்கத்தின் முடிவைவிட அகவுணர்வைப் போற்றி ஏற்றனர்.
  • சதஸில் ஒருவரையொருவர், "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' எனக் கேட்பதில்லை. "உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் திருஷ்டியென்ன?'' என்றே கேட்பார்கள்.
  • சுருதி கேட்டது, ஸ்மிருதி நினைவிலிருப்பது. கேட்பது அசரீரி, வாணி, அந்தராத்மாவின் குரல். ரிஷிகட்கு மனம் கூறுவது முக்கியமில்லை. ஆத்மா கூறுவது முக்கியம்.
  • மேல்நாட்டார் மன வளர்ச்சி பெற்றவர்.
  • அவர் வாழ்வு மனத்தின் அறிவால் வழிநடத்தப்படுவதால் சிறப்பானது.
  • நமக்கு இருந்த மன வளர்ச்சி அறுபத்து நான்கு சாஸ்திரம் எழுதியது. இப்பொழுது இழந்துவிட்டோம்.
  • மனம் வளர்ந்தால், வசதி எழும், மகிழ்ச்சி வாராது.
  • நம் நாட்டில் உள்ள சந்தோஷம் வெளிநாட்டிலில்லை.
  • இந்த சந்தோஷத்தை ஆன்மீக சாந்தியாகக் காண்பது வழக்கம்.
  • மன வளர்ச்சி பெரியது. ஆனால் வாழ்வின் மையம் மனிதன்.
  • மனித வாழ்வு வளம் பெற்று மகிழும்படி மனம் வளர வேண்டும்.
  • மனித வாழ்வைக் கருதாது வளரும் மனம் பிரச்சினையை எழுப்பும்.
  • மனம் பிரச்சினை எழுப்பினால், அதைத் தீர்க்கும் சக்தி உலக வாழ்வில் இல்லை.
  • மனம் மனிதனில் உயர்ந்த அம்சம். அது அடங்குவதில்லை.
  • அடங்கினால் அதைவிடப் பெரியதில்லை. அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.

******

75. உயிருக்கு ஆபத்து வந்த பொழுது எழும் பிரார்த்தனை - நம்பிக்கை பிறக்கிறது.

  • அதே நிமிஷம் உயிர் போகும் - அடுத்த நிமிஷமில்லை - நிகழ்ச்சிகள் உண்டு. எலக்ட்ரிசிட்டி ஷாக், எதிரியின் துப்பாக்கி, மலை உச்சியிலிருந்து புரளும் நேரம், சூன்யம் போன்றவை.
  • அந்த நேரம் நாம் நினைத்து, மனத்திற்கு தோன்றி, சமர்ப்பணம் செய்ய முடியாது.
  • சமர்ப்பணம் தானே எழுந்து, க்ஷண நேரம் முன் - நம்மைக் காப்பாற்றுவதுண்டு. அது எவருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு பூரண யோக வாயில் திறக்கிறது.
  • "க்ஷணச் சித்தம் - க்ஷணப் பித்தம்" என்ற வழக்குச் சொல் பல வகையாகப் பயன்படுகிறது.
    அவற்றிற்கு எல்லாம் பொதுவானது - க்ஷணச் சித்தம், க்ஷணத்தில் எழும் சிந்தனை.
  • சமர்ப்பணம் -
    • சமர்ப்பணம் முக்கியம்.
    • சமர்ப்பணம் முதல் கட்டம்.
    • சமர்ப்பணம் என்பது மட்டுமே வேலை, வேறு வேலையில்லை.
    • சமர்ப்பணம் நாம் செய்வது உண்மை.
      தானே சமர்ப்பணம் எழுவதும் பெரிய உண்மை.
      வேலையும் சமர்ப்பணமும் இணைந்துள்ள நிலையுண்டு.
      சமர்ப்பணத்தை நம்புவதும் நம்பிக்கை.
      சமர்ப்பணமும் தேவைப்படாத ஜீவன் ஆன்மீக ஜீவனுக்குரியது.
      கீதையின் சரணாகதி ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு சரணடைவது.
      அது சர்வ தர்மங்களையும் கை விட்ட நிலை.
      தர்மம் என்பது எல்லா இலட்சியங்களையும் நம் ஜீவனில் செயல்படுத்தும் நம் சொந்த சட்டமான முறை.
      ஒவ்வொருவருக்கும் உரிய தர்மம் உண்டு.
      தர்மம் என்ற சொல்லை எந்த மொழிகளும் பெயர்க்க முடியாது.
      Duty கடமை என்பது குறையான மொழி பெயர்ப்பு.
      கீதையின் சரணாகதி மனத்தின் நம்பிக்கை.
      நம்பிக்கையைக் கடந்து மனம் உண்டு.
      மனத்தைக் கடந்த உணர்வும், உடலுணர்வும் உண்டு.
      ஜீவன் அவற்றைக் கடந்து, அவற்றை உட்கொண்டது.
      பகவான் கூறும் சரணாகதி ஜீவனின் சரணாகதி, அனைத்தையும் உட்கொண்ட ஜீவனுமாகும்.
      சமர்ப்பணம் முதற் கட்டமானாலும் ஆரம்பிக்க முடியாது.
      சமர்ப்பணம் முழு ஜீவனுக்குரியது, அடிமனக் குகையிலுள்ள சைத்திய புருஷனுக்குரியது.
      இதுவரை செய்த யோகங்கள் அனைத்தும் மேல்மனத்திற்குரியவை.
      இதுவரை செய்த யோகங்கள் அகந்தையின் யோகம்.
      ஒரு முறை சமர்ப்பணம் செய்தால் மோட்சம் கிட்டும்.
  • உயிருக்கு ஆபத்து வந்தபொழுது எழும் சமர்ப்பணம் உயிரைக் காப்பாற்றும். உயிரைக் காப்பாற்றி ஜீவனுக்கு அளிக்கும், ஜீவனை சமர்ப்பணத்தால் ஆன்மாவுக்கும் அளிக்கும். அதற்கு,
    ஆத்ம சமர்ப்பணம்
    யோக சமர்ப்பணம் எனப் பெயர்.
  • Synthesis of Yoga என்ற நூலில் இரண்டாம் அத்தியாயம் self-consecration ஆத்ம சமர்ப்பணம் பதினெட்டு பக்கமுடையது.

    அதிலுள்ள கருத்தின் சாரத்தை வாழ்வில் அனுபவத்தில் கண்டு, அன்பர்களுக்கு பலிக்கும் வகையில் பிரார்த்தனை பலிக்க நான் "சமர்ப்பணம்" எனக் கூறுவது

    அன்னையிடம் பிரச்சினையைக் கூறுவது.

    யோக சமர்ப்பணமான, ஆத்ம சமர்ப்பணம் அன்பர் பயிலும் சமர்ப்பணத்தினின்று காத தூரமுள்ளது. இது எளியது. அது முழுமையானது.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டியிலும், பரிணாமத்திலும்
இறைவன் ஆனந்தம் பெறுகிறான்.
 

*******



book | by Dr. Radut