Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/86) அசத்திலும் பரம்பொருளைக் காண்பது பூரண யோகம்.

  • பூரண யோகம் பூரணத்தை ஏற்கிறது.
  • சத், கர்மம், நியூட்டன் ஒரு வகை - பகுதி.
  • அசத், சத், ஜீவன், ஐன்ஸ்டீன் அடுத்த வகை - முழுமை.
  • நியூட்டனை விட உயர்ந்த மனம் இனி உற்பத்தியாகாது என்றார் பகவான்.
  • ஐன்ஸ்டீன் நியூட்டனைக் கடந்தவர்.
  • சென்ற நூற்றாண்டில் நியூட்டன் கூறியவை உண்மை.
  • இருபதாம் நூற்றாண்டில் உலகம் மலர்ந்து நியூட்டனைக் கடந்தது.
  • அதற்குரிய தத்துவத்தை ஐன்ஸ்டீன் கூறினார்.
  • சந்திர மண்டலம் சென்றதும், இன்ட்டர்நெட், செல்போன் வந்ததும் நியூட்டன் தத்துவத்தை, உலகம் ஐன்ஸ்டீனால் கடந்து வந்ததால் நிகழ்ந்தவை.
  • இந்திய மரபிற்கு, கர்மம் உண்மை. அது மனத்திற்குரிய உண்மை.
  • மனம் சக்திக்கும், கர்மத்திற்கும் உரியது.
  • சத்திய ஜீவியம் மனத்தைக் கடந்தது.
  • அதனால் கர்மத்திற்குரிய சக்தியை மனிதன் கடந்து ஜீவனுக்கு வருகிறான்.
  • கர்மம் அழிவது ஜீவன் எழுவதால்.
  • சச்சிதானந்தமே முடிவு என்பது சிருஷ்டியை சத்தோடு முடிப்பது.
  • சத்தைக் கடந்த அசத்துண்டு.
  • சத்தும், அசத்தும் சேர்ந்த முழுமை பிரம்மம்.
  • இதுவரை செய்த யோகங்கள் முடிவாக சச்சிதானந்தப் பிரம்மத்தை அடைந்தன.
  • பூரண யோகம் அவர்கள் விலக்கிய அசத்தையும் சேர்த்துக் கொள்கிறது.
  • அதைச் செய்ய மனத்தைக் கடந்து சத்திய ஜீவியம் வர வேண்டும்.
  • மனம் செயல்படும்பொழுது கர்மம், இருள் உண்டு.
  • மனத்தைக் கடந்து சத்திய ஜீவியம் செல்லும்பொழுது கர்மத்தைக் கடந்த ஜீவன் செயல்பட்டு இருள் அருளாகத் திருவுருமாறுகிறது.
  • ஞானயோகி மனத்திலிருந்து அட்சரப் பிரம்மத்தையடைய பிரபஞ்சத்தைத் தவிர்க்கிறார்.
  • பிரபஞ்சம் மனிதனுக்கும் இறைவனுக்கும் - பிரம்மத்திற்கும் - இடையில் உள்ளது.
  • சமாதியால் மனிதனால் நேரே மனத்திலிருந்து பிரம்மத்தை அடைய முடியும்.
  • அது கண் மூடிய நிலை.
  • விழிப்பான நிலையில் மனிதன் முழுமையை நாடுகிறான்.
  • முழுமை பிரபஞ்சத்தை ஏற்பதிலுள்ளது.
  • கண் மூடிய நிலையில் எலிசபெத்தைக் கவர்வது விக்காம்.
  • விழிப்பான நிலையில் எலிசபெத்தைக் கவர்வது டார்சி.
  • பெம்பர்லி, சொத்து, வித்தியாசம்.
  • யோகிக்கு பிரபஞ்சம் முழுமை தருவதுபோல் எலிசபெத்திற்குப் பெம்பர்லி முழுமை தருகிறது.
  • எலிசபெத் உணர்ச்சி வசப்பட்டு, அறிவைப் பயன்படுத்தாமல், விக்காமை நாடினாள்.
  • அறிவுடன் செயல்பட உணர்வைக் கடந்து வர வேண்டும். அது முழுமை.
  • மனம் - அட்சரப் பிரம்மம் - சமாதி - பகுதி - கர்மம் - சக்தி - ஒரு நிலை.
  • சத்திய ஜீவியம் - முழு பிரம்மம் - விழிப்பு - முழுமை - ஜீவன் - அடுத்த நிலை.
  • அறிவில்லாத நிலையில் சேர மன்னன் காதல் வயப்பட்டு, முடியைத் துறந்து, முஸ்லீம் மாப்பிள்ளையானான். அவர்கட்கு மாப்பிளா முஸ்லீம் எனப் பெயர்.
  • அதேபோல் எட்வர்ட் VII முடியைத் துறந்து அமெரிக்க (divorcee) விவாகரத்தான பெண்ணை மணந்தான்.
  • இருவரும் வாழ்வில் தாழ்ந்தனர், உயரவில்லை.
  • அறிவு உணர்வைக் கடந்தது, சத்திய ஜீவியம் அறிவைக் கடந்தது.

*******

II/87) பரம்பொருள் சத்தியமாகும் எனில் அசத்தாகவுமாகும்.

  • எதுவுமாகும் பரம்பொருள்.
  • பரம்பொருள் - பிரம்மம் - எதுவுமாகும்.
  • பரம்பொருள் எதிரெதிரானவையாகவுமாகும், ஒரே சமயத்திலும் ஆகும்.
  • பரம்பொருளுக்கு முடியாததில்லை.
  • பரம்பொருள் சத்தாகி, சத்புருஷனாகி, ஆன்மாவாகி, சத்தியமாகிறது.
  • அசத் என்பது பரம்பொருளில் சத் போக மீதி.
  • சத்தாவதுபோல் பரம்பொருள் அசத்தாகவுமாகும்.
  • சர்க்கார் நம்மைப் பாதுகாக்க ஏற்பட்டது.
  • வெளிநாட்டுத் தாக்குதல்களினின்று சர்க்கார் நம்மைக் காக்கிறது.
  • உள்நாட்டுக் கலவரத்தினின்றும் காப்பாற்றுகிறது.
  • உள்நாட்டுக் கலவரத்தில் சர்க்கார் போலீஸ் மூலம் மக்களைத் தாக்குகிறது. நம்மைக் காக்கும் சர்க்கார், நம்மைத் தாக்கவும் செய்கிறது.
  • அணைக்கும் கரம் அடிக்கும்.
  • அமிர்தமான பால் கெட்டுப் போனால் விஷமாகும்.
  • ஏராளமான சௌகரியங்களைச் செய்யும் விஞ்ஞானம், ஏராளமான தொந்தரவுகளையும் செய்கிறது.
  • கத்திக்கு வெட்டும் திறமை உண்டு. வெட்டலாம், வெட்டக் கூடாது என்ற குணமில்லை.
  • திறமை கத்திக்குரியது, அதன் குணத்தை மனிதன் நிர்ணயிக்கிறான்.
  • ரிஷிகள் பரம்பொருளை அட்சரப் பிரம்மமாகக் கண்டனர்.
  • அட்சரப் பிரம்மம் அசைவற்றது, குணங்களற்றது, ரூபமற்றது.
  • அதனால் ரிஷிகள் பிரம்மம் சிருஷ்டிக்க முடியாது என்றனர்.
  • அசையாத பிரம்மம் எப்படி சிருஷ்டிக்கும் என்பது அவர்கள் நோக்கம்.
  • பகவான் பிரம்மம் அசையாதது மட்டுமல்ல, வேண்டுமானால் அசையும் என்றார்.
  • அசைவற்றதை உச்சகட்டமான நிலையெனக் கண்டனர் ரிஷிகள்.
  • அசைவது திறனற்றது, அசையாத நிலை திறனுடையது என்று கருதினர்.
  • பிரம்மம் அசையும் திறனற்றது எனக் கூறுவது சரியில்லை என்றார் பகவான்.
  • அசையும் சுதந்திரம் அதற்கில்லை என நாம் கூறுவது அதன் முழு சுதந்திரத்தை மறுப்பதாகும் என்றார்.
  • சுதந்திரம் என்ற கருத்தை ரிஷிகள்,
    • செயலிலிருந்து சுதந்திரம்.
    • அசைவிலிருந்து சுதந்திரம் என்று கொண்டனர்.
  • பிரம்மத்தால் அசைய முடியாது எனில் அது பூரண சுதந்திரமாகாது என்றார் பகவான்.
  • பிரம்மம் அசையும், அசையாமலுமிருக்கும், எதுவாக இருக்க வேண்டும் என்ற சுதந்திரம் அதற்குண்டு என்றார் பகவான்.
  • மனம் பெற்ற சுதந்திரம் ரிஷிகள் கூறுவது.
  • பகவான் கூறும் சுதந்திரம் சத்திய ஜீவிய சுதந்திரம்.
  • மனத்திற்கு எல்லையுண்டு.
  • சத்திய ஜீவியத்திற்கு எல்லையில்லை.
  • ரிஷிகள் கண்ட பிரம்மம் பகுதியானது.
  • பகவான் கண்ட பிரம்மம் முழுமையானது.
  • போர்க்களம் சென்று ஆயுதமேந்தாமல் பாரதப் போரை வென்றது ரிஷிகள் கண்ட பகுதியான தெய்வீக மனத்திற்குரிய அட்சரப் பிரம்மம்.
  • போர்க்களம் போகாமல், ஆயுதமேந்தாமல் உலகப் போரை வென்றது பகவான் கண்ட முழுமையான சத்திய ஜீவியத்திற்குரிய பிரம்மம்.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
பொறுப்பால் திறமை வரும்.
 

*******



book | by Dr. Radut