Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

24. ஜடம்

மரபு வாழ்வைக் கட்டுக்கடங்காத பேயெனக் கருதுகிறது. இது சரியல்ல. சொல்லிலகப்படாத கனவு எனவும் கூறுகிறது. இதுவரை நாம் செய்த ஆராய்ச்சி இவை தவறு என விளக்கமாகக் கூறுகிறது. மற்றும் பலர் வாழ்வை உண்மையென அறிவர். அவர் வாழ்வை மோசமான உண்மையாகக் காண்கின்றனர். உண்மை வேறு. வாழ்வு பிரம்மாண்டமான சத்தியம். கடல் போன்ற கருத்து நிறை கருவூலம். பிரம்மம் சிருஷ்டியில் அனைத்துமானான். அந்த அனைத்தும் வாழ்வாகும். அதனடிப்படைச் சட்டம் இப்பொழுது நமக்குப் புலனாகிறது. அதன் அந்தரங்க வலிமை உலகை உட்கொண்டது. சிறப்பின் சிகரம் நம்மை நிமிர்ந்து பார்க்கும்படி அழைக்கிறது. நம் திருஷ்டியின் முடிவில் வாழ்வென்பது இறைவன் இகவுலகில் மலரும் மகத்தான அரங்கம் எனக் காண்கிறோம். வாழ்வுக்கடியில் வேறொரு சட்டம் உண்டு. நாம் அதை போதுமான அளவு கருதவில்லை. அது ஜடம். அது வாழ்வின் பீடம். அதனின்று ஆலவிருக்ஷமாக வாழ்வு பரிணாம வளர்ச்சி பெறுகிறது. மரம் விதையினின்று எழுகிறது. ஜடத்தினின்று வாழ்வு உற்பத்தியாகிறது. இது ஜடமான சட்டம். மனம், வாழ்வு, உடல் ஆகியவற்றை நம்பி உள்ளன. விரியும் நறுமலர் ஜீவியம் மனத்தினின்று எழுவதைப் பொருத்தது. பல வகையிலும் பெருகி தன் மூலமான சத்தியத்தை நாடி உயர்ந்தெழுகிறது. இவை அனைத்தும் சத்திய ஜீவிய வாழ்வு நிலை என்ற அரங்கம் பரவி நிற்கும் பாங்கில் நிகழ்கின்றன. இதுவும் நிபந்தனைக்குட்பட்டதாகத் தெரிகிறது. உடல் எனும் உணர்வு நிறைந்த எல்லைக்குள் வாழ்வு இயங்கும் நிர்ப்பந்தம் பெற்றுள்ளது. அதுவே ஜடம் என்ற அஸ்திவாரம். இதன் முக்கியம் நாம் அறிவது. அக்காரணத்தால் மனிதன் உடலை உருவாக்கியுள்ளான். அல்லது அவன் உடலும், சிகரமான மூளையும் பெற்றுள்ளான் எனக் கூறலாம். இவை இரண்டும் வளரும் ஒளியைப் பெற்று பயனடைபவை. விலங்கிலிருந்து இவ்வழி மனிதன் இதுவரை உயர்ந்தது. அவன் அவ்வழி பெற்ற மனித நிலை தெய்வீகமானது. அவன் பெற்ற உடல் எனும் கருவியின் கடமை நிறைந்த செயலது. உள்ளுறை ஜீவனிலும், எண்ணத்திலும் மட்டுமல்லாமல் மனித வளர்ச்சி வாழ்வில் மையமாக நிலைக்கிறது. வளர்ந்து மனிதன் தெய்வீகம் பெறுகிறான். இல்லையேல் வாழ்வை எதிர்பார்ப்பது வீண். அல்லது மனிதன் தெய்வீகக் கருவியில்லை. வாழ்வை ரத்து செய்தால், அதன் கரு கருகிவிடும். இது உண்மையானால் பூவுலக வாழ்வு சச்சிதானந்தத்தை எட்டலாம். இது தன்னை அழித்து பெறும் இலட்சியம். அதாவது மனம், உயிர், உடல், ஆத்மாவினின்று விலக வேண்டும். தூய்மையான அனந்தம் முடிவாகும். வாழ்வு தன்னையறிந்து வளரும் பாதைக்கு விதிக்கப்பட்ட எல்லையுண்டு பொருள் பெறும். மற்ற ஜீவராசிகளினின்று மனிதனை சிறப்பாக விலக்கிக் காட்டிய சக்தியிது. மற்றவற்றை விலக்கி முன் வந்த மனிதன் இப்பொழுது தான் விலகி வேறொரு நிலைக்கு வழி விட வேண்டுமென்றாகிறது.

உடல் பெரிய சிரமமான தடை. இதை ஆரம்பத்திலிருந்து அறிவோம். இது தாண்ட முடியாத தடை. தடையே மலையானது. எனவே பக்தர்கள் தங்கள் தடையை விதித்தனர். ஆன்மீக சித்தியின் தீவிரம் ஆர்வத்தை எழுப்புகிறது. ஆர்வம் அதிகமானால் தடை தீவிரமாகும். தவசிக்கு உலகம் வெறுப்பாகிவிட்டது. வெறுப்பைத் தத்துவமாக அறிய ஒரு சட்டத்தை நாடுகிறான். அது உடலின் மீது வெறுப்பாயிற்று. குறிப்பான வெறுப்பின் சின்னமாக உடல் மாறிற்று. உடல் இருண்ட பாரம். மனிதனால் சுமக்க முடியாத பாரம். உடல் ஜடமான சொரணையற்றதாகிவிட்டது. உடல் பிடிவாதம் செய்யும். தவசியின் வாழ்வு துறவாகியது. அவன் தேடுவது மோட்சம். மோட்சம் இடையறாத நினைவாகியது. உடலை விட்டொழிக்க ஆர்வம் எழுந்தது. ஜட வாழ்வை மனிதன் அறிய முற்பட்டான். ஜடமான பிரபஞ்சத்தின் சத்தியத்தை ஏற்க மறுத்தான். மதம் ஜடத்தைச் சாபமாகக் கருதுகிறது. எல்லா மதங்களும் அப்படி நினைக்கின்றன. மதம் கூறுவது முக்கியம். ஆன்மீகம் முக்கியம். தற்காலிகமாக உடலை மனம் ஏற்றது. ஆன்மீகமெனில் உடலை வெறுப்பதாக முடிந்தது. பழம்பெரும் மதங்கள் பொறுமையானவை. அவை ஆழ்ந்துணர்ந்தவை. நாம் வாழ்வது கலியுகம். அது பாரமானது. பிற்கால கொள்கைகள் சூடு நிறைந்த அவசரமானவை. அது ஆத்மாவின் அவசரம். ஜுர வேகம் கொடுமையாயிற்று. பிற்கால மதங்கள் உடலையும் ஆத்மாவையும் பிரித்தன. அது மலை போன்ற பிளவு. பழைய மதங்கள் அத்தவற்றைச் செய்யவில்லை. பூமியை பூமாதேவி எனவும், மோட்சத்தைப் பிதா எனவும் கூறினர். இருவரையும் சமமான அன்புடன் கருதினர். அவை பழம்பெரும் புதிர்கள். இவை நமக்கு விளங்கா. நம் பார்வைக்குப் புலப்படாதவை அவை. நாத்திகவாதியும், துறவியும் கொண்ட கொள்கை அவை. வாழ்வு சிக்கலானது. அதை அவிழ்க்காமல் சிதைக்கப் பார்க்கிறார்கள். அவ்வழி மனிதன் பிரச்சினையை விலக்குகிறான். சொர்க்கத்தை நாடித் திளைக்கிறான். அல்லது வாழ்வை அழித்து ஆத்ம சாந்தியடைகிறான். ஆன்மீக வாய்ப்பை நாம் அறியும் பொழுது இப்போராட்டம் தெரிகிறது. ஆனால் இதுவே உண்மையான ஆரம்பமில்லை. வாழ்வு ஆரம்பத்திலிருந்து இதுவும் ஆரம்பிக்கிறது. வாழ்வு தன் செயலை நிலைநிறுத்தப் போராடுகிறது. வாழ்வுக்குத் தமஸை எதிர்த்த ஜீவனுள்ள உருவங்களுண்டு. ஜட இருளின் சக்திகளை எதிர்த்தும் வாழ்வு போராடுகிறது. அதுவே சிதைவதையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அவை ஜட தத்துவத்திற்குரிய சிக்கல்கள். முடிச்சு பெறும் மதிப்பு. வாழ்வு இவையனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். தொடர்ந்து இடைவிடாமல் வாழ்வு, ஜடத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இப்போராட்டத்தில் வாழ்வுக்குரியது நிரந்தர தோல்வி. தோல்வி தோற்றம், உண்மையல்ல. ஜட தத்துவத்தை நோக்கிப் போராட்டம் சரிகிறது. அது மரணம். போராட்டம் ஆழ்ந்து வலுவடைகிறது. மனத்திற்கு அதனுடைய சண்டை உண்டு. மனம், வாழ்வு ஜடத்தின் தாழ்ந்த முரட்டுத்தனத்திற்கு உட்பட வேண்டியுள்ளது. வாழ்வும் ஜடமும் அளவோடுள்ளவை. அவ்வரம்புகளை எதிர்த்து மனம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. மனம் அவற்றை எதிர்த்துப் புரட்சி செய்கிறது. புரட்சி ஜடத்தின் தமஸை எதிர்த்துப் போராடும். மேலும் வாழ்வின் தீவிரப் பாசத்தையும் எதிர்க்க வேண்டியுள்ளது. பாசம் உள்ள இடத்தில் துன்பமிருக்கும். போராட்டம் திரும்புகிறது. இப்போராட்டம் பகுதியான சிறு போராட்டம். மனம் வெற்றி பெற்று எதிர்ப்பை அடக்குகிறது. பாச எழுச்சியை வெட்டி வீழ்த்துகிறது. உடலின் வேகத்தையும் மனம் சிதைக்கிறது. உடல் சமாளிப்பதை மனம் அனுமதிப்பதில்லை. மனம் பெரு அளவில் செயல்பட வேண்டியிருப்பதால் இவை அவசியமாகின்றன. உயர்ந்த தர்மம் எழுந்து தன்னை வலியுறுத்துகிறது. இப்போராட்டங்கள் வாழ்வை பொறுமையை இழக்கச் செய்கின்றன. உடல் வெறுப்படைகிறது. இரண்டிலிருந்தும் விலக வேண்டியிருக்கிறது. மனம் தலைமை தாங்கும் தார்மீக வாழ்வுக்கு வழி ஏற்படுகிறது. மனத்தை விட உயர்ந்த வாழ்வுக்கு வழி ஏற்படுகிறது. பிணக்கு முற்றி உயர்ந்து செயல்படுகிறது. மனம், வாழ்வு, உடல் கண்டிக்கப்படுகின்றன. உடலும், ஆசையுமான வாழ்வின் திருமூர்த்திகள் அவை. மனமும் வேதனையின் மூலமாக விலக்கப்படுகிறது. ஆத்மா மீதும் அதன் கருவிகள் மீதும் போர் தொடுக்கப்படுகின்றது. உள்ளுறை ஆத்மாவின் வெற்றியை அனைத்தும் நாடுகின்றன. அதன் குறுகிய வாழ்வின் இருப்பிடம் விலக வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. இதனால் மனம், வாழ்வு, உடல் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன. முடிவாக ஆத்மா அனந்தத்துள் சென்றடைகிறது. உலகம் பிணக்கானதை பிணக்கை வளர்த்து முடிவு தேடுகிறார்கள். முடிந்தவரை முடிவை வளர்த்து உயர்த்துகிறார்கள். வெட்டி, விலக்கி, முடிவாகப் பிரிய வேண்டியது நிலைமை.

வெற்றி, தோல்விகள் உண்டு. அவை தோற்றம். இது முடிவான தீர்வில்லை. இது பிரச்சினையிலிருந்து தப்பும் வழி. வாழ்வு ஜடத்தால் உண்மையிலேயே தோற்கடிக்கப்படுவதில்லை. ஒரு சமரசம் நடக்கிறது. வாழ்வை நீட்டிக்க மரணத்தை அது பயன்படுத்துகிறது. மனம் வாழ்வையும், ஜடத்தையும் வெல்கிறது என்பது உண்மையல்ல. வளர்ச்சி வருகிறது. ஆனால் பூரணமானதல்ல. சில வாய்ப்புகள் மற்றவற்றைப் புறக்கணித்து வளர்கின்றன. அவற்றின் வளர்ச்சி மற்றதன் வளர்ச்சியைப் பொருத்தது. சில வாய்ப்புகளை விலக்கி, மற்றதைப் பயன்படுத்தாத நிலையது. வாழ்வையும், உடலையும் முழு அளவில் நன்கு பயன்படுத்துவதில் அவ்வாய்ப்புகள் மிளிரும். மனம், வாழ்வு, உடல் எனும் தாழ்ந்த திருமூர்த்திகள் அவை. ஜீவாத்மா அவற்றை வெல்லவில்லை. அதன் உரிமையை மறுத்தது. ஆத்மா பிரபஞ்சத்தில் பல உருவங்களாகிறது. அவ்வழி ஆத்மா சில கடமைகளை மேற்கொள்கிறது. ஆனால் பிரச்சினைகட்குத் திருப்தியான தீர்வுகள் இல்லை. தன் முயற்சிக்கு வெற்றிகரமான முடிவில்லை. நமக்கு ஒரு பார்வையுண்டு. சச்சிதானந்தமே ஆரம்பம், முடிவு, மையம் என்பதாகும். எனவே நம் போராட்டமும், பிணக்கும் சாஸ்வதமானதல்ல. அவை அவற்றின் அடிப்படையில்லை. எனவே நாம் ஒரு முடிவு தேட வேண்டும். வாழ்வு ஜடத்தை வெல்வதில் அது உள்ளது. உடலை சிறப்பாக வாழ்வு பயன்படுத்துவதில் அது உள்ளது. அது வாழ்வு, ஜடத்தை மனம் வெல்வதில் உண்டு. அது சக்தி மூலம் நடக்கும், உடலை சிறப்பாக வாழ்வு பயன்படுத்துவதில் அது அமையும். மனம், வாழ்வு, உடலை வெல்வதில் அமையும். வாழ்வின் சக்தியை சுதந்திரமாக, சிறப்பாகப் பயன்படுத்துவதில் அது அமையும். அது மனத்தின் ரூபம். தன்னை அறியும் ஆத்மா அதைப் பயன்படுத்துகிறது.

இந்த முடிவான வெற்றியால் நாம் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளோம். இது மட்டுமே மற்றதை சாதிக்க முடியும். இந்த வெற்றிகள் எப்படி சாத்தியம் எனப் பார்க்கலாம். அல்லது எப்படி முழுமையாக முடியும் எனக் காணலாம். ஜடம் என்பதின் சத்தியத்தை நாம் அறிய வேண்டும். இதுவரை ஆத்மா, மனம், வாழ்வின் சத்தியத்தைக் கண்டோம். அது போல் ஜடத்தின் அடிப்படையான உண்மையைக் காண வேண்டும்.

ஜடம் இல்லை. அதற்கு வாழ்வு இல்லை. இது ஒரு வகையில் உண்மை. இன்று நாம் ஜடத்தை அறிவது அதன் உண்மையில்லை. நாம் ஜடத்தைப்பற்றி நினைப்பதும், அனுபவிப்பதும் உண்மையில்லை. அது தோற்றம். சிருஷ்டியில் உள்ள அனைத்தையும் நம் புலன்கள் அறியும். அவ்வுறவில் நாம் வாழ்கிறோம். அவ்வுறவில் ஜடத்தின் உண்மையில்லை. விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது. ஜடம் ஆராய்ச்சியால் ரூபத்தை இழந்து சக்தியாகிறது. இது அடிப்படையான பிரபஞ்ச சத்தியம். விஞ்ஞானம் இவ்வுண்மையை அறியும். தத்துவம் வேறொரு உண்மையை அறியும். ஜடம் தோற்றமாக இருக்கிறது. இது ஜீவியம் காணும் தோற்றம். ஒரு சத்தியமுண்டு. அது ஆத்மா. அது தன்னை அறியும் ஜீவன். இதுவும் அடிப்படையான சத்தியம். இது பெரிய உண்மை. இதனுள் முழுமை அதிகமாக உள்ளது. தத்துவம் இதைக் கண்டுகொண்டது. இருந்தாலும் மேலும் ஒரு கேள்வி உண்டு. ஏன் சக்தி ஜடமாக வேண்டும்? அது சக்தியின் ஓட்டமாகவே இருக்கலாமல்லவா? ஜடம் ஆத்மா. ஜடம் ஆத்மாவாகவே இருக்கலாம். அதன் சந்தோஷங்களை அனுபவிக்கலாம். ஜடமாகத் தோன்றும் அவசியமென்ன? இது மனம் செய்தது என்கிறார்கள். இல்லையேல் இது வேறெதுவாகவுமிருக்கலாம். எண்ணம் நேரடியாக சிருஷ்டிப்பதில்லை. எண்ணம் ஜடப்பொருள்களைக் காணவும் முடியாது. அதனால் புலன்கள் செய்த காரியம் இதுவெனக் கூறுகிறார்கள். புலனறிவு ரூபத்தை சிருஷ்டிக்கிறது. புலன்கட்கு ரூபம் தெரிகிறது. எண்ணம் எழும் மனம் புலனறிவு ஏற்படுத்திய ரூபங்களை எடுத்துச் செயல்படுகிறது. புலனறிவு இந்த ரூபங்களை எண்ணத்திற்கு சமர்ப்பிக்கிறது. ஒரு மனிதனுடைய மனம் ரூபங்களை உற்பத்தி செய்ததில்லை என்பது தெளிவு. ஜடம் என்ற தோற்றம் தனிமனிதன் உற்பத்தி செய்ததில்லை. மனித மனம் பூமாதேவி உற்பத்தி செய்தது. மனத்தால் பூமி உற்பத்தி செய்தது நாம் என்று கூற முடியாது. உலகமே மனத்துள் உள்ளது எனக் கூறலாம். அது உண்மை இல்லை. இது குழப்பம் விளைவிக்கும். மனிதன் பிறக்குமுன் ஜட உலகமிருந்தது. மனிதன் அழிந்தாலும் உலகமிருக்கும். நம் மனம் அனந்தத்தில் அழியலாம். ஆனால் ஜடமிருக்கும் உலகை சிருஷ்டித்தது பிரபஞ்ச மனம் என நாம் முடிவு செய்ய வேண்டும். அது உண்மையானால் அம்மனம் நம்மை அறியாமல் ஆழத்தில் மறைந்திருக்க வேண்டும். அது உலகமாக இருக்கும், அல்லது நம் அறிவுக்கு மேற்பட்ட ஆத்மாவாக இருக்கலாம். பிரபஞ்ச புலன் என்பது ஆத்மா உற்பத்தி செய்ததாகும். அது ரூபத்துடன் உறவுள்ள ரூபத்தை ஏற்படுத்துகிறது. ஜட உலகம் என்ற சக்தியலைகளைக் கொண்டது அது. இதுவும் முடிவான பதில் கூறும் விளக்கமாகாது. ஜடம் ஜீவியத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என இது கூறுகிறது. ஜடம் பிரபஞ்ச செயலின் அடிப்படை. இந்த முடிவு எப்படி ஜீவியம் ஜடத்தை உற்பத்தி செய்தது எனக் கூறவில்லை.

நாம் ஆரம்பத்தில் உள்ள சட்டங்களைக் கருதுவோம். அவ்வழி அதிகமாகப் புரியும். பெரு வாழ்வு செயல்பட்டால் சித்-சக்தியாகும். சக்தியின் செயல்களை ஜீவியத்திற்கு சமர்ப்பிக்கிறது. அவை அதன் சொந்த ஜீவனின் ரூபங்கள். நிலையான ஒன்று தன்னையறியும் ஜீவன். சக்தி அதன் செயலாகும். அதன் விளைவுகள் தன்னை அறியும் ஜீவனின் ரூபங்கள். பொருள் ஜடம். அதனால் ஜடம் ஆன்ம ரூபம். ஆத்ம ரூபம் நம் புலன்கட்குரிய தோற்றத்தைப் பெறுகிறது. மனத்தின் பிரிக்கும் குணத்திலிருந்து இது எழுகிறது. அதிலிருந்து பிரபஞ்சம் முழுவதும் நம்மால் அறிய முடிந்தது. ஒருபடி தவறாது நாம் பிரபஞ்சத்தை அப்படி புரிந்து கொண்டோம். பிரபஞ்ச விவரங்களை முழுவதும் அறிய இது உதவுகிறது. சித்-சக்தியின் செயல் என நாம் இப்பொழுது அறிவோம். ஜட ரூபங்கள் அதன் விளைவு. வாழ்வு இந்த ரூபங்களுள் கலந்து மறைந்துள்ளது. முதலில் அவை ஜட இருள் சக்தியாக எழுகின்றன. இது பரிணாம வளர்ச்சி பெற்று மனம் வெளிப்படுகிறது. சக்தியின் உண்மையான ஜீவனாக அதன் ஜீவியமாக மனம் வெளிப்படுகிறது. வாழ்வு அதனுள் எப்பொழுதும் இல்லாமலில்லை. வெளிப்படாதபோதும் அது இல்லாமலில்லை. மூலமான தன்னையறியும் ஞானம் சத்திய ஜீவியம். மனம் சிறிய பவர்.

வாழ்வு, மனத்தின் கருவியின் சக்தியாகும். அது சத்திய ஜீவியம் வழி வருகிறது. ஜீவியம் சித். அது மனமாக செயல்படுகிறது. தன் உயர்ந்த சத்தியமான சத்திய ஜீவியத்தினின்று அது பிரிகிறது. வாழ்வுக்கு அது பிரிவினையாகத் தோன்றுகிறது. மேலும் தன்னுடைய வாழ்வு-சக்தியுள் அது கலந்து மறைகிறது. இது ஆழ்மன வாழ்வாகிறது. ஜட இருளின் சக்தியாக அது புறத்தில் தோன்றுகிறது. ஜட செயலில் அப்படி செயல்படுகிறது. அவ்வழி ஜட இருள், தமஸ் சிதையும் அணுக்களுக்கு ஒரு மூலம் ஏற்படுகிறது. இவை தளராது பிரிக்கும் மனத்தின் திறனில் உண்டு. இது தானே தன்னுள் மறைவது. இப்படி பிரபஞ்சம் உற்பத்தியாயிற்று. மனம் சத்திய ஜீவனின் முடிவான செயல். சிருஷ்டியில் அது நடக்கிறது. எனவே வாழ்வு சித்-சக்தியின் செயல். வாழ்வு அஞ்ஞானத்தின் நிபந்தனையில் செயல்படுகிறது. மனம் மேலிருந்து கீழே வருவதால் இது ஏற்பட்டது. எனவே ஜடம் சத் புருஷனின் முடிவான செயல். ஜடம் தன்னுள் பிரிந்த தோற்றமுடையது. இதைச் செய்வது பிரபஞ்ச மனம். இப்பிரிவினையை தனி மனித மனம் திருப்பிச் செய்கிறது. அது அதனுள் வதிகிறது. ஆனால் அதைக் குறைக்கவில்லை. ஆத்ம ஐக்கியத்தை சிறிதும் குறைக்கவில்லை. இது சக்தியின் ஐக்கியம். அல்லது இதுவே ஜடத்தின் உண்மை ஐக்கியம்.

இப்பிரிவினை தோற்றம். இது நடைமுறைக்குரியது. ஆதி, பகுக்க முடியாத முழு வாழ்வு. ஏனென நாமறியோம். இது மனத்தால் நடந்தது. மனம் "பல' என்ற சட்டத்திற்குரியது. அதைக் கடைசி வரை கொண்டு போகும் அவசியம் மனத்திற்குண்டு. அதைப் பிரித்து துண்டு செய்தே சாதிக்க முடியும். வாழ்வில் மனம் கலந்து கொள்வது இதற்கு அவசியம். "பல'வற்றிற்குரிய ரூபங்களை அது ஏற்படுத்த வேண்டும். ஜீவன் பிரபஞ்ச சட்டம். அது பொருளின் தோற்றத்தைப் பெற வேண்டும். அது ஜீவனற்ற ஜடப்பொருளாக இருக்க வேண்டும். அது தூய்மையான சூட்சுமப் பொருளல்ல. அதற்குப் பொருளின் தோற்றம் தேவை. பொருள் எனில் மனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்பு நிலையாக இருக்க வேண்டும். பல பொருள்கள் ஏற்படும் பொழுது அவற்றுள் ஒரு பொருளாக இருக்க வேண்டும். தூய ஜீவியத்திற்குத் தொடர்புள்ள பொருளாக அது இருக்க முடியாது. தன் சொந்த சாஸ்வத வாழ்வின் அம்சமாக இருக்க வேண்டும். தூய்மையான வாழ்வு சத்தியம். அல்லது மென்மையான ரூபத்தின் சூட்சுமப் புலனாக அது இருக்க முடியாது. இங்கு அப்புலன் இருண்டிருக்கும். அது புறத்தில் உணரும் புலனாகும். அது பொருள்களைத் தீண்டும். தன் பொருள்களின் சத்தியத்திற்கு அதற்கு உத்தரவாதம் தேவை. சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தை மனம், வாழ்வில் புக அனுமதிக்கிறது. அதைத் தொடர்ந்து தூய பொருளும் உள்ளே வருகிறது. அது ஜடப் பொருளாகவும் நுழைகிறது. உறுதி ஜீவனைப் பலவாக செய்யும். தனித்த மையங்களினின்று பிரிந்த உணர்வை அது ஏற்படுத்த வேண்டும். இது உறுதி செயல்படுவதின் அவசியமான விளைவு. இது தாழ்ந்த உலக அனுபவத்தில் முதல் முறை. ஆன்மீக அடிப்படைக்கு நாம் திரும்பப் போவோம். இங்கு பொருள் மிகவும் தூய்மையானது. அது பிரிந்தால், பிரிந்து தன் ரூபத்தை இழந்தால், தன்னை அறியும் ஜீவனாகும். இதற்கு சுய வாழ்வுண்டு. அதற்குப் பிறப்புரிமையாக ஐக்கியம் மூலம் தன்னையறியும். ஆனால் தன் ஜீவியத்தைப் பொருளாக அது திருப்பவில்லை. சத்திய ஜீவியத்திற்கு இந்த ஞானம் உண்டு. அது ஐக்கியத்தால் அதைச் செய்யும். தன் பொருளை சுயமாக அறியும் ஐக்கியம் உண்டு. அதன் சுய சிருஷ்டியின் ஜோதியது. அந்த சிருஷ்டி ஜீவனை அதற்கே அளிக்கும். இதை அகம்-புறமாகச் செய்யும். இது ஒன்று, பல தன் சொந்த செயல்படும் ஜீவியத்துடையது. ஜீவனைப் புறமாக சுப்ரீம் ஞானத்தில் பெறுகிறது. தன் முழு பார்வையால் அதைப் புறமாகவும், அகமாகவும் காணும். தன்னுள்ளே அது புறமாகத் தெரியும் பொருள். அகத்தில் அதைத் தானாகவே காணலாம். ஒரே சமயத்தில் அதைப் புறமாக வெளியில் காணலாம். அதன் ஜீவிய வட்டத்திற்கும், அது புறமாகத் தோன்றும் பொருள். அது வேறல்ல. அதன் ஜீவனின் பகுதியது. அதனின்று விலக்கப்பட்டப் பகுதி. அதாவது அதன் பார்வையிலிருந்து விலக்கப்பட்டது.

ஞானி, ஞானம், பொருளாக அது அமைகிறது. அது சாட்சிபுருஷன். புறத்தில் செயல்படும் இச்சலனத்தால் மனம் உருவாகிறது. இதை முன்பே கண்டோம். இதன்படி மனிதன் காண்கிறான். தன் பிரபஞ்ச ஜீவனின் ஒரு பகுதியை அவன் அடுத்தவராக அறிகிறான். இதுவே பிரிக்கும் மனம். அதேசமயம் வேறொரு செயலும் உண்டு. அதுவும் ஒரே சமயத்தில் நடப்பது, அல்லது அதே செயலின் பின்புறம். அது ஜீவனை இணைக்கும் செயல். அது பிரிவினைக்கு மாற்று செய்யும். சொந்த பார்வைக்கு உண்மையாவதை அது தடுக்கும். ஒரு நிமிஷமும் அனுமதிக்காது. அது அவனுக்கு மட்டும் உண்மையாக அனுமதிப்பதில்லை. அது தெரிந்து இணையும் செயல். இது பிரிக்கும் மனத்துள் வருகிறது. இருண்டு அஞ்ஞானமாய், புறத்தில் பிரதிபலிக்கிறது. அது ஜீவியத் தொடர்பாகக் காணப்படும். பிரிந்த ஜீவன், விலகியப் பொருளாக அவை தெரியும். பிரிந்த ஜீவனின் தொடர்பு புலன். அல்லது அடிப்படையில் இது புலனறிவாகத் தெரியும். இதுவே புலன் ஏற்படும் தத்துவம். எண்ணமுடைய மனம் இந்தப் புலனில் அடிப்படையில் செயல்படுகிறது. பிரியக்கூடிய இந்த ஐக்கியம் புலனறிவு. எண்ணத்தின் மனம் அடுத்த உயர்ந்த ஐக்கியத்தை நாடுகிறது. அங்குப் பிரிவினை ஐக்கியத்திற்குட்பட்டது. பொருள் ஜடப்பொருள். அந்த ரூபத்தில் மனம் புலனுடைய தொடர்பால் செயல்படும். அவ்வழி தன்னையறியும் ஜீவனைத் தொடர்பு கொள்கிறது. மனமே இந்த ஞானத்தின் செயல்.

மனத்திற்குரிய சுபாவமுண்டு. தன்னையறியும் ஜீவனின் பொருளை மனம் அறிந்து புலனால் உணர்கிறது. அதனால் முழுமையையோ ஐக்கியத்தையோ அப்படி அறிய முடியாது. பிரிவினை சட்டப்படி புலனால் செயல்படுகிறது. மனம் அணுவின் சிறு பகுதிகளாலும் அதைக் காண்கிறது. முழுமையை எய்த பிரிந்த புள்ளிகளை ஒன்று சேர்க்கிறது. இந்தப் பார்வையின் கோணங்களால் பிரபஞ்ச மனம் உறைகிறது. அவை சேர்ந்தவை. மனம் முழு எண்ணத்தின் கருவி. அதன் உடன் பிறந்த சக்தியால் மனம் சிருஷ்டிக்கிறது. மனம் தான் காண்பவற்றை எல்லாம் வாழ்வின் சக்தியாக மாற்றும். அதுவே அதன் சுபாவம். அனைத்து வாழ்வு தன் சுய அம்சங்களை அப்படி சக்தியாக மாற்றுகிறது. சிருஷ்டிக்கும் சக்தியுள்ள ஜீவிய சக்தியாக பல வகையிலும் அதை மாற்றுகிறது. பிரபஞ்ச மனம் இப்பல்வேறு பார்வைகளை பிரபஞ்ச வாழ்வின் பிரபஞ்ச பார்வையாக மாற்றுகிறது. ஜடத்தில் அவை அணுவாக உருவாகின்றன. அவற்றுள் உள்ள வாழ்வு அவற்றிற்கு ஜீவனளிக்கிறது. மனமும் உறுதியும் அவற்றை ஆள்கின்றன. உருவத்தை அவை உந்துகின்றன. அப்படி உருவான அணு வாழ்வு அவற்றின் ஜீவனுக்குரிய சட்டம். அவை சேர்ந்து தொகுப்பாகின்றன. ஒவ்வொரு தொகுப்பும் தன் வாழ்வு தனி என்ற கற்பனையில் உள்ளது. மறைந்துள்ள வாழ்வு ரூபம் அவற்றிற்குரியது. மறைந்துள்ள மனமும் உறுதியும் உள்ளிருந்து உத்வேகமளிக்கின்றன. அதுபோன்ற தனித்த பொருள் (அ) வாழ்வுக்கு ஜீவனற்ற அகந்தையின் சக்தி ஆதரவு தருகிறது. அதன் உறுதி ஊமையானது. அது சிறைப்பட்டுள்ளது. இருந்தாலும் பவர் அதிகம். தன்னையறியும் மனத்தின் அகந்தை அதை விடுவிக்கிறது. அது தன்னையறியும். பிரிந்து செயல்படுகிறது. மனம் அதனுள் பொதிந்துள்ளதா, வெளிப்பட்டுள்ளதா, மறைந்துள்ளதா, மறைவிலிருந்து எழுகிறதா என்பதைப் பொருத்தது.

அணுவாக அமைப்பு இருப்பதே இதன் காரணம், காரணம் சாஸ்வதமானதல்ல. ஆதியில் எழுந்ததில்லை. ஜடத்தின் மூலமான சாஸ்வதமான சட்டம் இதற்குக் காரணமில்லை. பிரபஞ்ச மனத்தின் இயல்பான செயலே இதற்குக் காரணம். ஜடம் சிருஷ்டிக்கப்பட்டது. அதை சிருஷ்டிக்க அணுவை அணுவாகச் சிதைப்பது அவசியம். அது அடிப்படையாகவும், ஆரம்பமாகவும் வழங்கும். அணுவை அணுவின் சிதைவாகப் பிரித்தால் அது அனந்தத்தை அளவு கடந்து பிளந்ததாகும். ஆகாயம் இருக்கலாம். இருப்பது உண்மையாகவுமிருக்கலாம். அது தொடு உணர்வால் அறிய முடியாதது. அது ஜடத்திற்கு ஆன்மீக ஆதரவாகப் பெரும்பாலும் அமையும் என்றாலும் அது தோற்றம். நம் இன்றைய வளர்ச்சிக்கு அது ஜடமாகப் புலப்படவில்லை. அணு என நாம் அறிவது ஒரு தொகுப்பு. தொகுப்பாகத் தோன்றுவது, பார்வையைக் கடந்த நிலையில் மூலமும், சாரமும் உண்டு. தோற்றமான அணுவை சாரமான அணுவாக்குவோம். மேலும் துண்டு செய்தே அதைச் செய்ய முடியும். உடைப்போம். அணுவின் அணுவான தூசியாகட்டும். இப்பொழுது அணுவின் அமைப்பு இருக்கும். இது மனம், வாழ்வின் சுபாவத்திற்குரியது. அவை அணுவை உற்பத்தி செய்தன. அதற்கு நிலையில்லை. ஒருவேளை பிரிந்து சேர்ந்தபடியிருக்கலாம். அப்படியானால் அதுவும் தோற்றத்திற்குரியதே. சாஸ்வதமான சக்தியோட்ட அலைகளில் அதை நாம் காண்கிறோம். அது அணுவற்ற விரிவல்ல. அதற்கு உள்ளுறை விஷயமில்லை. அணுவற்று விரிந்த நிலை பொருளுக்கு எழுவது தூய பெருவாழ்வின் சத்தியம். அது விரிவு. தொகுப்பல்ல. பிரித்துப் பரப்புவதன்றி உடனுறையும் அமைப்பு அது. அது தூய்மையான பொருளின் சத்தியமுமாகும். அது சத்திய ஜீவிய ஞானம். அதன் வாழ்வின் தீவிரம் செயல்படும் சட்டம். பிரிக்கும் மனத்தின் சிருஷ்டித்திறன் வெளிப்படும் கருத்தல்ல. இது ஜடத்திற்கு அடிப்படையான சட்டத்தின் தோற்றமுமில்லை. இவை செயல்படும் பொழுது மனம் பின்னணியில் இவற்றை அறியும். ஜடத்தின் அடிப்படை சத்தியமது. நிலையான சத்தியம் தன்னையறிந்து நீளும் நிகழ்ச்சியது. ஆனால் அவற்றின் ஒருமையுணர்வால் அவை செயல்படவில்லை. சுய உருவகத்தை சுயமாக உணர்ந்தறிவதுமில்லை.

ஜடத்தின் உண்மையை நாம் இப்பொழுது கண்டுகொண்டோம். ஜீவன் சிந்திப்பதால் தன்னை பிரபஞ்சமாக விரிவுபடுத்துகிறது. அது பிரபஞ்சத்தில் பொருளாகக் காணப்படுகிறது. அது ஜீவியத்தின் புறமாகும். பிரபஞ்ச மனமும் வாழ்வும் அதைப் பிரதிபலிக்கின்றன. அவற்றின் செயல் சிருஷ்டிக்கும் திறனுடையது. அது அணுவாகப் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டது. இதன் விளைவாக நாம் ஜடம் எனக் கருதுவது எழுகிறது. இந்த ஜடம் மனம், வாழ்வு போன்றது. இது ஜீவன். இது பிரம்மம், சுயமாக சிருஷ்டிக்கும் திறனுடையது. தன்னையறியும் ஜீவனின் சக்தியின் ரூபம் இது. இந்த ரூபம் மனம் கொடுத்தது. இது வாழ்வால் பலித்தது. அதன் சத்தியத்தை அதனுள் பெற்றிருக்கிறது. அந்த சத்தியம் ஜீவியம். அது தன்னிடமிருந்தே மறைந்துள்ளது. தன் சுய உருவகத்துள் அது கலந்து மறைந்துள்ளது. எனவே, அதற்குத் தன்னையறியும் திறனில்லை. ஜடம் சொரணையற்ற மிருகம். நமக்கு அப்படித் தோன்றும். அதன் ஜீவியம் அதனுள் மறைந்துள்ளது. அதற்கு இரகஸ்ய அனுபவம் உண்டு. ஜடம் ஆனந்த ஜீவன். இரகஸ்ய ஜீவியத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறது. தன்னை உணர்வின் பொருளாகக் கொடுக்கிறது. மறைந்துள்ள கடவுளை ஆசைகாட்டி இப்படிச் செய்கிறது. அதன் இரகஸ்யத்தினின்று ஆசைகாட்டி வெளியில் கொண்டு வருகிறது. ஜடம் பொருளாக வெளிப்படும் ஜீவன். ஜடம் ஜீவனின் சக்திக்கு அளிக்கப்பட்ட ரூபம். உருவம் பெற்ற சுய பிரதிபலிப்பு இது. இரகஸ்யமான சுய ஜீவியத்தின் பிரதிநிதி ஜடம். ஆனந்தம் தன் ஜீவியத்திற்கே புறமாகத் தோன்றும் நிலை. ஜடம் என்பது சச்சிதானந்தம் தவிர வேறென்ன? ஜடம் சச்சிதானந்தம். தன் சொந்த மனத்தின் அனுபவம் காணும் நிலை, புற ஞானத்தின் தோற்றமான உருவம். அதுபோன்ற செயலும், ஆனந்தமுமான வாழ்வுக்கும் அது பொருந்தும்.

 

*******book | by Dr. Radut