Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்ஜாதி கையே.

    கை பெரிதானால், நெய்யிக்குக் குறைவிருக்காது.

  2. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல்.

    தட்டிப் பறிப்பவரெல்லாம் தாம் கட்டி வைத்தப் பணத்தைத் தருபவர்.

  3. ஆற்றிலே போகுது தண்ணீரை, அப்பா குடி ஆத்தாள் குடி.

    நாடெல்லாம் செல்வம் கொழிக்கிறது. நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்.

  4. பிள்ளைப் பெறப் பெற ஆசை. பணம் சேரச் சேர ஆசை.

    நினைக்க நினைக்க நெஞ்சம் ஆத்மாவாகும்.

தொடரும்....

********

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தொந்தரவு உள்ளிருந்துதான் வரும். வெளியிலிருந்து வரவே வராது.
உள்ளது ஒன்றே.
 

 

*******



book | by Dr. Radut