Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

P.33 Reality is one not a sum or a concourse

சத்தியம் என்பது ஒருமையுடையது, பல அம்சம் சேர்ந்த கூட்டு அல்ல

  • தலை, கை, கால், இடுப்பு போன்றவை மனிதனுடைய அங்கங்கள்.
  • ஆனால் அனைத்தும் சேர்ந்த ஒருமை, பல பகுதிகள் சேர்ந்த கூட்டு அல்ல.
  • உடல், குடும்பம், சத்தியம் ஆகியவை ஒருமையுடையவை.
  • பெட்டி, மெஷின், வீடு ஆகியவை பல பகுதிகள் சேர்ந்து எழுந்தவை.
  • ஒரு மெஷினின் பகுதிகளைப் பிரித்து எடுப்பதைப் போல் உடலைப் பிரிக்க முடியாது.
  • ஒரு மெஷினின் பகுதிகளைப் பிரித்து கூடையில் எடுத்தால் அது மெஷினாகாது, மெஷினின் பகுதிகளாகும்.
  • அவற்றை ஒரு சட்டப்படி இணைத்தால் அது மெஷினாகும்.
  • மெஷினின் பகுதிகள் ஜட லோகத்திற்கும் மெஷின் சூட்சும லோகத்திற்கும் உரியவை.
  • மெஷினைக் கோர்த்து அதற்குரிய ரூபம் எழுந்தால் அந்த ரூபம் சூட்சுமத்திற்குரியது.
  • வீடு, ஜடம்; குடும்பம், சூட்சுமம்.
  • குடும்பம் பிரிந்தால் கூட்டமான வீடாகும்.
  • பிரம்மம் சத்தியம், உலகம் சத்தியம், அவை பிரிந்து தோன்றினாலும் பிரிக்க முடியாதவை.
  • ஒரு மரத்தைப் பல பகுதிகளாக வெட்டிப் பிரித்தால் அது மரமாக இராது, விறகாக மாறும்.
  • உலகம் ஒன்று, பிரபஞ்சம் ஒன்று, பிரம்மம் ஒன்று, ஏகன் எனப்படும். அதைப் பிரித்துப் பார்க்கலாமே தவிர, பிரிக்க முடியாது.
  • பிரிப்பது மனம், பிரிவினை பார்வைக்குரியது, உண்மையல்ல.
  • மனிதன் எந்தக் கட்சியிலிருந்தாலும் ஜாதி அவனை ஒன்றாகச் சேர்க்கும்.
  • தொழில், ஜாதி, சொந்த ஊர், மலையாளி, முஸ்லீம் என்பவை நேரம் வந்தால் எத்தனை பிரிவினையிருந்தாலும் சேர்ந்து கொள்ளும்.
  • எது எது பிரிந்து தோன்றினாலும் பிரம்மம் என்ற அளவில் அனைத்தும் ஒன்றே.
  • இந்தியாவில் பிரிந்துள்ள கன்னட, தமிழ் மக்கள் அமெரிக்காவில் இந்தியர் என்ற அளவில் சேர்ந்து கொள்வார்கள்.
  • பிரம்மம் பிரிவினையை அனுமதிக்காது, பிரிக்க முடியாதது.
  • ஆத்மா என்பது ஒருமை, ஐக்கியம் உடையது.
  • ஆத்மாவையடைய நாம் ஐக்கியத்தை நாட வேண்டும்.
  • பிரம்மம், சத்தியம், வாழ்வு, ஜீவன், ஜீவியம் என்ற நிலைகளில் ஐக்கியம் அதிகமாகத் தெரிவது போல் பொருள்கள், எண்ணம், உணர்ச்சி ஐக்கியத்தை வெளிப்படுத்துவதில்லை. அவை பிரிந்தே தோன்றும். உண்மையில் பிரிவினையில்லை.
  • பல நாடுகள், பல மதங்கள், பல கலாச்சாரங்களாக மனித குலம் பிரிந்து தோன்றினாலும் மனித குலம் ஒன்றே, மனித சுபாவம் ஒன்றே, மனித குல இலட்சியம் ஒருமையை இறைவனில் காண்பதாகும்.

*******



book | by Dr. Radut