Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • சட்டம்
    • நல்லது சிறியதானாலும் தன்னிலிருந்து பெரியதை விடுதலை செய்யும்.

      எது அப்படிப்பட்ட சிறிய முக்கியமான காரியம் என எப்படிக் காண்பது. சூட்சுமமானவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார்கள். இந்தச் சட்டத்தைச் சொன்னவுடன் அது போல் அவர்கள் வாழ்வில் பார்த்தது நினைவு வரும். புரிந்து கொள்வார்கள். இராஜாஜி 1952இல் முதன்மந்திரியானது, கெட்டுப்போன திருமணம் கூடிவந்தது, நிச்சயமாகத் தோற்கும் எலக்ஷன் தடம் மாறி அபரிமிதமாக ஜெயித்தது போன்ற காரியங்களைக் காணாதவரில்லை, கவனிக்காதவருண்டு.

      • தானே பார்த்து குறியாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
      • சொல்லிக் கொடுப்பதில்லை, காட்டியும் கொடுப்பதில்லை.
        சொல்லியபின் எப்படி என கேள்வி கேட்பவருக்குப் பலிக்காது, சொல்லக் கூடாது.
      எதையும், எவரும், எந்த அளவிலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்ய முடியும் என்பது வாழ்வில் ஆன்மீக சத்தியம்.

      நமக்கு நம் விஷயம் முக்கியம்.
      உலகத்து வாய்ப்பில் அது கடுகு.
      பெரிய ஆத்மா சேவை செய்யலாம்.
      சிறிய ஆத்மா தனக்கே சேவை செய்து கொள்ளக் கூடாதா?
      இன்று வரை ஒருவர் சம்பாதித்தது, நாட்டுக்கு ஒரு நாளைய வருமானமாக வரும் என்பதை அறிய பிரியப்படுவாரா? செய்வாரா? 

      உள்ளே போ
      இதுவே சட்டம்.
      உண்மையாக இரு
       

  • சீசனில்லாத பொழுது "கிரேஸ்" மலர் கிடைப்பது

    சீசனில் சாமந்தி ஒரு சாதகருக்குக் கிடைக்கவில்லை.
    இவர் டைனிங் ரூமில் சேவை செய்பவர், சாமந்தி தேடினார், கிடைக்கவில்லை. சீசன் இல்லை என்றனர்.
    சீசனில்லாத பொழுது கிரேஸ் கிடைப்பது அன்னையின் சிறப்பான அருள்.
    அன்னைக்கு அன்பர் மீது குறிப்பிட்ட அக்கறை அது என அறிய முடியுமா?
    இது போல் நடந்தவற்றைக் கணக்கெடுத்து ப்ண்ள்ற்ஆக எழுதலாம்.

    இது போல் நடக்காதது இல்லை என அறிய அதிக நேரமாகாது.
    நடப்பதெல்லாம் இப்படித்தானே என அனுபவம் கூறும்.
    சற்று நம்மை இப்பொழுது கவனித்தால்
    குறிப்பிட்ட கிரேஸ் இடைவிடாது செயல்படுகிறது.
    நமது குதர்க்கமும் அதே போல் இடைவிடாது செயல்படுகிறது எனத் தெரியும்.
    குணம் என்பது மனம்.
    அன்னையை அறிய மனத்தைக் கடக்க வேண்டும்.
    குணத்திற்கு வேலையில்லை.
    கெட்ட குணத்திற்கு என்ன வேலை?

    நம்மிடம் பிறர் நடப்பது முழுவதும் நாம் பிறரிடம் நடப்பதாகும்.

  • "100 ரூ." பெற சில சிறு விஷயங்களைக் கருதலாம்
    • தத்துவம்: எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்தால் மனத்திலுள்ள எந்த ஒரு காரியமும், எவ்வளவு பெரியதானாலும் தானே முடியும்.

      விதிவிலக்கு: விலக்கானவை எழுந்தால் சிறு முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

      இதன் விளக்கத்தை என் நூலில் – Spiritual Opulence - படிக்கலாம்.

      பட்டியல் உயர்ந்ததிலிருந்து சிறியது வரையும், சிறப்பானதினின்று எளிமையானது வரை எழுதப்பட்டது.
      இதைப் பயிலும் வேறொரு முறை தத்துவம்:

      • ஒரு துளி நல்லெண்ணமிருந்தால் அன்னைக்கு நம் மீது பாசம் எழும்.
      • உண்மை, இனிமை, பெருந்தன்மை, அடக்கம், தூய்மை அல்லது எந்த நல்ல குணமும் இதைச் சாதிக்கும். எதிரானதும் உண்மை. ஒரு பெரிய பிரச்சனை தீரும் - உதாரணமாக இழந்த வேலை திரும்ப வரும். உங்களை ஒருவர் துரோகம் செய்து திளைத்தால் அது நடக்கும். இது ஒரு சூட்சும ஆன்மீக இரகஸ்யம்.

    பட்டியல்:

    1. 100% சத்தியம் தரும் தூய்மையை மனம் 30 நாள் பெற வேண்டும்.
    2. ஒரு மாதம் அளவு கடந்த தூய்மை, உடல், படுக்கை, அலமாரி, தட்டு, துணி போன்றவை.
    3. உள்ளே போ - மனித ஆழத்தைக் கடந்து போ - அன்னையே அங்கிருந்து தன்னையழைக்கட்டும். அப்படி 1 மணி நேரமிருக்க வேண்டும்.
    4. 72 மணி நேரம் நயத்தக்க நாகரிகம் பயில வேண்டும். நாம் சந்திப்பவர் மீது நயமான இனிமை உள்ளிருந்து எழுந்து பெருகுவது.
    5. 72 மணி நேரம் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் பற்றி பாராட்டிப் புகழ்ந்து மகிழ்தல்.
    6. 12 மணி நேரம் எவரைப் பற்றியும், எதைப் பற்றியும் தவறாக நினைக்க முடியாத மனநிலை.
    7. நீங்கள் விரும்பும் ஒருவர்க்குத் தினசரி ஒரு வேளை உங்கள் கையால் பரிமாறி அவர் வயிறு குளிர்ந்து இனிக்கிறது எனக் கூறும் வரை 3 நாள் தொடர்ந்து சாப்பாடு போடவும்.
    8. ஒரு அம்சத்தில் ஒரு வினாடி அன்னையின் ஆன்மீகப் பெருமையை முழுவதும் பாராட்ட வேண்டும்.
    9. கோரம் க்ஷண நேரம் லாவண்யமாகத் தெரிவது.
    10. மெய்மறந்து உடல் புளகாங்கிதமாகப் புல்லரிப்பது - மூன்று நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு படி.
    11. 10 நிமிஷம் அன்னையுள்பட அனைவரையும் மறந்த மகிமை.
    12. ஒரு முறை உண்மையாக "100 ரூபாயை''விட அன்பு உயர்ந்தது என அறிவது.
    13. முழு கிராக்கிக்கு எதிரான முழு நாகரிக இளமை நிறைந்த பண்பு - 12 மணி நேரம்.

தொடரும்....

*******



book | by Dr. Radut