Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

58. நடக்காதது நடக்கும் - அனந்தம் கண்டத்தை ஏற்பது.

  • நாமறிந்த செயல்களே நமக்கு நடக்கும்.
  • பெரிய இடங்களில் நடப்பது நமக்கு நடக்காது.
  • நம் கிராம விசேஷத்திற்கு ஜட்ஜ் வருவதில்லை.
  • எலக்ஷன் வந்தபின் எந்த பெரிய மனிதர் வீதி வழியாக நாம் நடக்க உத்தரவு இல்லையோ, அவர் வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்பார் - அது நடக்காதது நடப்பது.
  • நம் நிலைமைக்கு உயர்ந்த நிலை நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் நடப்பது நடக்காதது நடப்பது.
  • அது ஒரு கட்டம் உயர்ந்த நிலையிலிருந்து வரும்.
  • உச்ச கட்ட நிகழ்ச்சி, அடி மட்டத்தில் வந்து நடக்கும்.
  • மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்ப்பது நடப்பது. அவன் ஆபீசராவது நடக்காதது.
  • பிரம்மம் அனந்தம், பெரியது, பிரம்மாண்டம்.
  • அணு சிறியது, அடி மட்டத்திலுள்ளது.
  • பிரம்மம் அணுவில் வெளிப்படுவது நடக்காதது நடப்பது.
  • வில்வ மரத்தில் வில்வ இலைகள் இருக்கும்.
  • அதைப் பறித்தால் கையில் இலை வரும்.
  • அதைப் பறித்தவுடன் அது பொற்காசாவது நடக்காதது.
  • எல்லா பெரிய மகான்கள் வாழ்விலும் நடந்தது.
  • மும்பய் (பம்பாய்) ஏர்போர்ட்டில் தொலைந்த சாவியை சென்னை ஏர்போர்ட்டில் நினைவுகூர்ந்து தேடினால் கிடைக்காது.
    கிடைப்பது நடக்காதது நடப்பது.
  • நாம் வாழ்வது மனிதன் வாழும் உலகம்.
  • மனம் அதைவிட உயர்ந்தது.
  • முனி, ரிஷி, யோகி, தெய்வ நிலைகள் மேலும் உயர்ந்தவை.
  • சத்திய ஜீவியம் அடுத்த உயர்ந்த கட்டம்.
  • சத்திய ஜீவியம் நம் வாழ்வில் வந்து செயல்படுவது அப்படிப்பட்ட நிகழ்ச்சி.
  • நடக்காததற்கு உதாரணமாக யானை வாயில் போன கரும்பு, திருடன் கையில் கொடுத்த பொருளைச் சொல்வார்கள்.
  • எதிரியிடம் நம் முக்கியமான விஷயம் (power) சிக்கியபின் நமக்கு தப்ப வழியில்லை.
    பிரார்த்தனையால் எத்தனையோ காரியங்கள் பலித்தாலும், இது பலிப்பதில்லை.
    பலிக்காது என கைவிட்ட பிறகு எதிரிக்கு மேல் அதிகாரி நம்மைத் தேடி வந்தால், எதிரியிடமிருந்து நம் முக்கிய விஷயத்தைப் பெற்றுத் தருவது நடக்காதது.

    அது ஒருவர் வாழ்வில் நடந்தால் அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.

  • ஊர் முழுவதும் ஒன்று சேர்ந்து நம்மை நிலத்தை விட்டு கிளப்ப முடிவு செய்து ஊரில் உள்ள அத்தனை மாடுகளையும் உள்ளே விட்டால், அதிலிருந்து தப்புவது அரிது.

    அன்னையை அழைத்து நிலத்தைச் சுற்றி வந்தால் 3ஆம் நாள் எந்த மாடும் உள்ளே வரவில்லை என்பது அனந்தம் அணுவில் வெளிப்படுவது.

    இந்த அனுபவம் யோகம் பலிப்பதைக் குறிக்கும்.
  • சண்டிகேசி வாயில் நல்ல சொல் எழுவது, கெட்ட இராசியுள்ளவர் கையால் நல்ல காரியம் நடப்பது, இலஞ்சத்திற்குப் பேர் போனவர் இலஞ்சம் பெறாமல் கையெழுத்திடுவது, பிரார்த்தனைக்குப் புயல் கட்டுப்படுவது, செய்யும் காரியம் 10 அல்லது 20 மடங்கு பெருகுவது, எவரும் SSLC பாஸ் செய்யாத குடும்பத்துப் பையன் பட்டம் பெறுவது, MLAயிடமும் அணுக முடியாதவருக்கு முதன்மந்திரி அறிமுகமாவது போன்றவை இத்தலைப்புக்குரியவை. அவர்கட்கு யோகம் பலிக்கும்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சப்தம் சலனம்.
சலனமின்றி சப்தமில்லை.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பரநலம் பிறரால் ஏற்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர்.
 
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆத்மாவுக்குத் தியானம்; வியாதிக்குத் தூக்கம்.
 
 
 
******



book | by Dr. Radut