Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.138 The first writhings of a cosmic serpent Force

பிரபஞ்ச சர்ப்ப சக்தியின் முதல் வளைவுகள்

  • சமாதியான ஜடம் புதிரான வளைவினின்று நகர்ந்து விலகி
  • குளிர்தென்றலில் தலையைக் குவித்து நிமிர்த்திற்று
  • இரவின் இறுக்கம் இதுவரை விலகவில்லை
  • மனத்தின் மகத்தான மகிமைகளை இன்னும் ஏற்கவில்லை
  • பதக்கம் தாங்கிய படத்தை ஆத்மாவின் கிரீடமாக்கவில்லை
  • கண் கூசும் ஆத்ம கதிரவனின் ஜோதியில் எழுந்து நிமிர்ந்து நிற்கவில்லை
  • அழுகிய நாற்றத்தின் அதிகாரத்தையே கண்டோம்
  • மந்திர வாசகம் ஜீவிய ஒளியைப் பெற்று மகிழவில்லை
  • முதிர்ந்து கசந்த காமம் அறியும் புலனுணர்வு
  • பிண்டமான உடலின் இருண்ட ஜீவனின் கீழே
  • இருளில் இசையெழுப்பும் சோம்பேறியின் சுறுசுறுப்பு
  • இயற்கையின் வேகம் எழுந்து பலன் தரும் கருவி
  • சகதியிலிருந்து எழும் ஆத்ம தாகம்
  • இறைவனின் இரகஸ்யம் எழும் திரைமறைவு
  • இரவில் ஒளிந்துள்ள அறியாமை எனும் அழிந்த ஞானம்
  • வாய்மூடி ஏற்ற ஆபாசம் கடமையான கடுமை
  • இருண்ட ஜடம் மூடி மறைக்கும் அவசியமான தேவை
  • இறைவனின் இன்ப எழிலில் காணும் இயற்கையின் மண்  
  • அவனது பார்வை, ஆத்மாவைத் தாங்கி வரும் அதிர்ச்சியின் சூழல்
  • மிளிரும் ஒளியின் மின்னலை ஊடுருவும் பார்வை
  • அசைந்தாடும் அஸ்திவாரமற்ற அமைப்பின் இரகஸ்யம்
  • திடமான அணுக்களின் ஊமை மொழியின் உணர்வான வேகம்
  • துடிக்கும் தசையும், பதைக்கும் எண்ணமும் பெற்ற தலைமை
  • மீறி எழும் காமம், பீறிட்டெழும் மன வேக உறுதி
  • மறைந்த நீரோட்டத்துள் இதையும் அவன் கண்டான்
  • ஆச்சரியமான மூலத்தின் அதிசயமான செயல்களைக் கண்டான்
  • புதிரான சக்தி எவருக்கும் புலப்படாத சிக்கல்
  • இவ்வொளியும் நிழலும் ஆட்டமாய் ஏற்படுத்திய அவன்
  • இனிய கசப்பு இசைவான வாழ்வின் முரண்பாடு
  • ஆத்ம இரகஸ்யங்களை அறிவுறுத்தும் உடலசைவு
  • வேகமான நரம்பின் விரைவான உணர்வு
  • சுழலும் யந்திரத்தின் சூட்சும ஒளியும் அன்பும்
  • உறக்கத்தின் நினைவுகளை உற்சாகப்படுத்தும் உத்தரவு
  • காலம் நுரைத்தெழுந்து ஆழ்ந்த மனத்தின் அம்சங்களைக் கூறும்
  • இனிய உண்மையில் எழும் தழலின் அளவிலா மறதி

*******



book | by Dr. Radut