Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXII. The Problem of Life

22. வாழ்வின் பிரச்சனை

பக்கம் 207 - பாரா 1

வாழ்வு சித்-சக்தியில் உற்பத்தியாகிறது. இதற்குரிய நேரம் உண்டு. சித்-சக்தி அனந்தம், பிரம்மம். எதனாலும் கட்டுப்படுத்தப்படாதது. அதன் ஐக்கியம் அதற்கேயுரியது. ஆனந்தமும் அப்படியே. சித்-சக்தி சச்சிதானந்தப் பகுதி. பிரபஞ்ச வாழ்வுக்கு முக்கிய நேரமுண்டு. அதன் தோற்றம் மாறுபட்டது. அனந்த வாழ்வின் தூய்மையில் உறைவது சித்-சக்தி. பகுக்க முடியாத சக்தியை அது சொந்தமாகப் பெறுவதிலும் அது சித்-சக்தியிலுறைகிறது. வாழ்வு மனத்தின் திறன். அறியாமை மனத்தை இருளால் சூழ்கிறது. மனம், பகுக்கப்படாத சக்தியின் பகுதியான துண்டு. இதன் விளைவாக இரட்டைகள் - ஒளி, இருள் - எழுகின்றன. எதிர்ப்பு, சச்சிதானந்த மறுப்பு, ஆகியவை தோற்றமாக எழுகின்றன. அவை சச்சிதானந்தத்தின் சுபாவம். மனம் அதை முடிந்த முடிவாகக் கொள்கிறது. என்றாலும் அது தோற்றமே. பல்வேறு கூறுகளையுடைய சத்தியத்தை அவை பிரதிபலிக்கின்றன. அது பிரபஞ்ச ஜீவியம். மனத்திரையின் பின் அது மறைந்துள்ளது. அதனால் பிணக்காக அவை தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்கிறது. ஒவ்வொன்றிற்கும் அவ்வுரிமையுண்டு. எனவே, திரளான பிரச்சனைகளும் புதிர்களும் எழுகின்றன. அவற்றையெல்லாம் தீர்க்க வேண்டும். இக்குழப்பத்தின் பின்னணியில் மறைந்த சத்தியமுள்ளது. ஐக்கியமும் அங்குறைகிறது. அவை தீர்வை நாடுகின்றன. அத்தீர்வு திரை மறைவிலிருந்து வெளிவருகிறது. திரை அப்படி விலகுவது சிருஷ்டி.

பக்கம் 207 - பாரா 2

தீர்வு மனத்தில் காணப்பட வேண்டும். ஆனால் மனம் மட்டும் அதைச் செய்ய முடியாது. தீர்வு வாழ்வில் எழ வேண்டும். சொல்லப்போனால் தீர்வு ஜீவனின் செயலுக்குரியது. மேலும் அதை ஜீவனின் ஜீவியத்திற்குரியது எனவும் கூறலாம். ஜீவியம் சக்தியாகச் சிருஷ்டிக்கிறது. அது உலக நிகழ்ச்சிகளையும், பிரச்சனைகளையும் உற்பத்தி செய்கிறது. எனவே ஜீவியம் சக்தியாகி பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். எப்படியும் இப்பிரச்சனைகள் அதனால் உற்பத்தியானவை. அது உலக இயக்கத்தை அதன் இயல்பான பூர்த்திக்கு அழைத்துச் செல்லும். அதுவே சத்தியப் பரிணாம வளர்ச்சியின் இரகஸ்யம். வாழ்வு தோற்றமாயிற்று. அவை தொடர்சங்கிலி. அவற்றுள் மூன்று கட்டங்களுள. அவை ஜடமானவை. அது ஜீவியத்துள் அமிழ்ந்துள்ளது. அது தன் மேலெழுந்தவாரியான ஜீவியத்துள் மறைந்துள்ளது. அது தன்னை வெளிப்படுத்தும் செயல். அவை சக்தியின் ரூபங்களின் பிரதிநிதி. செயலின் பார்வையிலிருந்து ஜீவியமே மறைந்துவிடும். அது ரூபத்தில் தன்னை இழந்தது. இரண்டாவது பிராணனுக்குரியது. அது வெளிவரும் ஜீவியம். அது வாழ்வின் சக்தியாகப் பாதி தெரிகிறது. அது வளரும் வழி, செயல், ரூபம் அழிவது. அதன் ஆதியான சிறையினின்று பாதி விடுதலை பெறும். அது தன் சக்தியில் துடிப்புடையது. அதை உயிரின் வேகமாக அறிகிறோம். அதைத் திருப்தியாகவோ, வெறுப்பாகவோ அறிகிறோம். முதலில் அது ஜோதியின் பிழம்பாக இல்லை. அது பூரணமற்ற தோற்றம். ஜோதி தன் சுய வாழ்வின் ஞானம். அது சூழலின் ஞானமுமாகும். மூன்றாவது மனத்தின் உணர்வு. அது கருத்து. பிரதிபலிக்கும் உணர்வு. புதுக்கருத்தாக அது வாழ்வின் விபரமாகிறது. ஜீவனின் உள்ளுறை வாழ்வின் மாறுபாடு அது. புற வாழ்வை தகுந்த மாதிரி மாற்றிக் கொள்கிறது. இது மனம். அதன் ஜீவியம் தன் சிறையிலிருந்து விடுதலை பெற்றது. அதன் விடுதலை செயலிலும் ரூபத்திலும் தெரியும். அது தனிமனித ஜீவியமாக வரும். அது ஒரு சிறு பகுதியை மட்டும் அறியும். தன் முழுச் செயலின் பகுதியாகும்.

பக்கம் 208 - பாரா 3

வாழ்வினது சிக்கல்களின் சிகரம் இங்குள்ளது. அதுவே சிரமம். மனிதன் மனத்தாலான ஜீவன். மனத்தின் ஜீவியம் மனத்தின் சக்தியாக வேலை செய்கிறது. அது பிரபஞ்ச சக்தியையும் வாழ்வையும் அறியும். மனிதன் அதன் பகுதி. தன் வாழ்வுக்குப் பிரபஞ்ச அம்சமுண்டு என மனிதன் அறியான். தன் ஜீவனின் முழுமையையும் அறியான். பொதுவாக வாழ்வை அவனால் சமாளிக்க முடியவில்லை. வெற்றிகரமாக வாழ்வை அவன் சமாளிப்பது அவசியம். ஜட சூழலை அவன் வெல்ல முயல்கிறான். அதனால் அவன் ஜடத்தை அறிய முற்படுகிறான். அதே போல் ஜட வாழ்வை ஆள முற்படுகிறான்.

அதற்கு அவன் வாழ்வை அறிய வேண்டும். அவன் மனப்போக்கின் விளைவுகளை அறிய அவன் முதலில் தன் மனத்தை அறிய வேண்டும். அது பெரிய இருண்ட சலனம். அங்கு அவன் ஒரு ஒளிப்பிழம்பு. அது தன்னையறியும் தழல். அவன் அப்பொழுது விலங்கு போலுள்ளான். மேலும் மேலும் வளரும் ஞானப் பிழம்பு அவன். தன்னை முழுமையாக   ஆட்கொள்ள அவன் தன்னையறிய முற்படுகிறான். உலகையறிய அவன் உலகை ஆட்கொள்ள வேண்டும். இதுவே அவனுள் எழும் வேகம். அது அவனுடைய ஜீவியத்தின் அவசியம். அவன் வாழ்வின் உத்வேகத்தின் சக்தியது. அது சச்சிதானந்தத்தின் இரகஸ்யமான மன உறுதி. அது உலகில் தனி மனிதனாக எழுகிறது. மனிதன் அதில் வெளிப்படுகிறான். இருப்பினும் அவன் சச்சிதானந்தத்தை மறுக்கிறான். தன் உள்ளுறை உந்துதல்களைத் திருப்தி செய்யும் நிபந்தனைகள் அவை. இவற்றைக் காண்பது மனிதனுடைய பிரச்சனை. இவற்றை தீர்க்க முயல்வது அவனுடைய கடமை. இல்லாவிடில் அவன் சுபாவமே அவனை வற்புறுத்தும். உள்ளுறை தெய்வம் அவனை ஓட ஓட விரட்டும். இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். உந்துதல் திருப்தி அடைய வேண்டும். அதுவரை மனித குலம் ஓயாது. மனிதன் தன்னைப் பூர்த்தி செய்வது அவசியம். தன்னுள் உள்ள தெய்வத்தைத் திருப்தி செய்வதால் அதைச் செய்ய முடியும். அல்லது அவனுள்ளிருந்து புதிய பெரிய ஜீவனை அவன் சிருஷ்டிக்க வேண்டும். அது அவனால் முடியும். மனித குலம் தெய்வீகமாகும். இல்லையெனில் அவன் சத்திய ஜீவனுக்கு வழி விட வேண்டும்.

பக்கம் 209 - பாரா 4

நிலையின் இயற்கைக்குரியது இது. மனிதனுடைய ஜீவியம் முழுவதும் ஒளிமயமானதல்ல. அது இருளினின்று - ஜடத்தின் இருளினின்று - முழுவதும் விடுபடவில்லை. பெரிய வெளிப்பாட்டின் வளர்ச்சியில் அது ஒரு அம்சம். பரிணாம சிருஷ்டியின் போக்குக்குரியது. மனிதன் அங்கு எழுகிறான். அவன் இப்பொழுதுள்ள இடத்தில் நிற்க முடியாது. அவனது தற்கால நிலையைக் கடந்து அவன் செல்ல வேண்டும். அல்லது தன்னையே அவன் கடந்து செல்ல வேண்டும். இல்லையெனில் மனிதனுக்கு முன்னேறும் சக்தியில்லை. மனத்தின் கருத்து வாழ்வின் செயலாக முயல்கிறது. வாழ்வின் முழுச் சத்தியமானால் அம்மாற்றம் ஏற்படுகிறது. தொடர்ந்த மேலுறைகளினின்று தன்னை அது விடுவித்துக் கொள்கிறது. அது ஜோதியாக வெளிப்படுகிறது. அதுவே அது பூர்த்தி பெறும் வகை. ஜீவிய ஒளியில் அது முழுமை பெறுகிறது. அங்ஙனம் அது சக்தியில் சந்தோஷ நிறைவடைகிறது. பவரும் வாழ்வும், வாழ்வின் இரு கூறுகள். அப்பொழுது அது வெளிப்படுகிறது. ஜீவியமும், சக்தியும் வாழ்வின் சுபாவம். மூன்றாம் கட்டமுண்டு. முதலிரண்டும் மூன்றாவதில் இணைகின்றன. அங்கு அவை ஒன்றாக இணைகின்றன. முடிவாக அவை அங்கு முழுமை பெறுகின்றன. திருப்தியுறும் ஆனந்தத்தின் சுயவாழ்வு அது. மனித வாழ்வு பரிணாம வாழ்வு. அதற்கு அது தவிர்க்க முடியாத முடிவு. அதாவது தன்னைக் காண்பதாகும். பிறவியில் பிரம்மம் வித்தாக மறைந்துளது. தன்னையறிவதெனில் உள்ளதை முழுவதும் விபரமாக வெளிப்படுத்துவதாகும். சித்-சக்தியெனும் சலனத்தில் அவை புதைந்துள்ளன. இவ்வாழ்வு அதில் உற்பத்தியானது. அதன் சத்து மனித வாழ்விலடங்கியது. அது சச்சிதானந்தம். ஒரு வகை சுமுகமான ஐக்கியத்தில் அவன் அவற்றையடைகிறான். அது தனி மனித வாழ்வு. அதுவே பிரபஞ்ச வாழ்வு. இதை மனித குலம் பொதுவான ஜீவியத்தில் வெளிப்படுத்தும். பொதுவான சக்தியின் சலனத்தில் அது வெளிப்படும். மேலும் பொதுவான ஆனந்தமாக அது எழுகிறது. அது பிரம்ம அம்சமுள்ளது. இந்த ரூபங்களில் அது தன்னை இழந்துள்ளது.

பக்கம் 209 - பாரா 5

வாழ்வுக்கு அடிப்படையான நிலையுண்டு. அது தன் அடிப்படை அமைப்பான ஜீவியத்தையுடையது. அதன் சுபாவத்திற்குரிய வாழ்வு அதைப் பொறுத்தது. சக்தி ஜீவியத்தைப் போன்றது. ஜீவியம் அனந்தம். ஜீவியம் ஒருமையுடையது. தன் செயலையும் ரூபத்தையும் கடந்தது. செயலைத் தழுவி அதனூடே செயல்படும் பொழுது அப்படியேயிருக்கும். சச்சிதானந்த ஜீவியம் அத்தகையது. சக்தி அதைப் போன்று அப்படியேயிருக்கும். அதன் வீச்சு அனந்தமானது. அதன் செயலில் ஒருமையுடையது. தன் பவர் சுயஞானத்தைக் கடந்தது. ஜீவியம் ஜடமான இயற்கை போன்றுமிருக்கும். அது மூழ்கி தன்னை மறந்துளது. தன் சக்தியால் நடத்தப்பட்டு அது விரைவாகச் செல்கிறது. அவற்றின் தொடர்பு அனந்தமான சுபாவமுடையது. அது அதன் சுபாவம். ஜீவியம் சக்திக்குள்ள தொடர்பைப் பொறுத்தது. சக்தி அப்படியிருக்கும். அது ராட்சச சலனம். அது ஜடமாகவும் ஜட இருளாகவுமுள்ளது. அது எதைப் பெற்றுள்ளது என அறியாது. பார்வைக்கு இயந்திரம் போலிருக்கும். ஒரு எதிர்பாராத சந்தர்ப்பம் போன்றதில் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. அது சத்தியம், நியாயம் என்ற சட்டம். பரமாத்ம ஜீவனின் உறுதியால் அது நிர்ணயிக்கப்படுகிறது. தன் இயக்கத்தினுள் அது முடிகிறது. ஜீவியம் பிரிந்திருக்கும். மனதில் அது போல் உள்ளது. பல மையங்களில் அடங்கி செயல்படுகிறது. ஒவ்வொன்றும் தன்னைப் பூர்த்தி செய்ய முயல்கிறது. அடுத்த மையத்திலிருப்பதை அவை அறியா. மற்றவற்றுடன் உள்ள தொடர்பை அறியா. பார்வைக்கு அவை பிரிந்து தெரியும். அவற்றுள் சக்தியும் பொருளும் உண்டு. அவை ஒன்றுக்கொன்று எதிரானவை. அவற்றின் உண்மையான ஐக்கியத்தில் அப்படியில்லை. சக்தி அப்படிப்பட்டது. நம்மைச் சுற்றியும் நம்முள்ளும் வாழ்வைக் காண்கிறோம். அது அப்படிப்பட்ட வாழ்வு. சக்திகள் மோதுமிடம் அது. தனி மனித வாழ்வு இணைந்து பிணையும் நிலை. ஒவ்வொன்றும் தன் முழுமையை நாடுகிறது. மற்றவற்றுடன் உள்ள தொடர்பை அவையறியா. அது முரண்பாடு. சக்தியைச் சிரமப்பட்டு ஏற்கும் நிலையது. அவை பிரிந்து எதிர்க்கும். அவை வேறுபடும். மனத்தில் அதிர்ச்சி கலந்தது. அது போராட்டம். அது நிலையற்ற தொடர்பு. பிரிந்து, மாறுபட்டு, எதிர்க்கும் சக்திகள் அவை. தன் அவசியத்தை அவை அறிவதில்லை. அது மற்றதற்கு அவசியம். ஐக்கியத்தின் அம்சங்களில் தன் நிலையை அறியாது. அவை பின்னணியில் வெளிப்படும். அங்குப் பிணக்கழியும். ஜீவியம் ஐக்கியத்தையும் பிரிவினையையும் உடையது. ஐக்கியத்துள் பிரிவினையுண்டு. அது அதை ஆள்கிறது. அப்பொழுது அதற்குச் சத்தியம், சட்டம், நியாயம், தனிமனிதனதும் முழுமையதும் தெரியும். அவையிரண்டும் தம்மையறிந்து பரஸ்பர ஒற்றுமையில் சுமுகமாகின்றன. அங்கு ஜீவியத்தின் முழு சுபாவமும் ஒருமையுடையது. அதற்குத் தன்னைப் பல என அறியும் திறனுண்டு. பல தங்களை ஒன்றாக அறியும். அங்குச் சக்திக்கும் அதே சுபாவமுண்டு. அப்படிப்பட்ட வாழ்வது. ஐக்கிய சட்டத்தை ஏற்கும். அதற்குரிய சட்டம் முறைப்படி அவை நடக்கும். எல்லா ஜீவன்களும் தன்னில் வாழும் வாழ்வாகும். அவை பிறரிலும் தன்னிலும் வாழும். தன்னையறியும் ஒரு ஜீவன் பல ஆத்மாவில் வாழ்வது அது. ஒரே ஜீவியம் பல மனங்களில் செயல்படுவது அது. சக்தியும் ஒரே சந்தோஷம் பல வாழ்வில் உறைவதாகும். ஒரே சத்தியமான ஆனந்தம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்வது. அவை பல இதயங்களிலும் உடலிலும் நடக்கின்றன.

பக்கம் 211 - பாரா 6

இந்த நான்கு நிலைகளில் முதல் நிலை இவற்றின் ஆரம்பம். இவை தொடர்ந்து வளரும் கட்டங்கள். இவை ஜீவியத்திற்கும் சக்திக்கும் இடையேயுள்ளன. இது ஜீவனுக்குரிய நிலை. இது சச்சிதானந்தத்திலுள்ளது. அங்கு நான்கும் ஒன்றே. அங்குச் சக்தி ஜீவனின் ஜீவியம். ஜீவியமாக இருப்பதைத் தவிர்க்காமல் அது செயல்படுகிறது. மேலும் அங்கு ஜீவியம் இதே போல் பிரகாசமான ஜீவனின் சக்தியாகும். அது என்றும் தன்னையறியும். அது தன் ஆனந்தத்தை அறியும். பூரண ஆனந்த சக்தியாக இருப்பதில் அதற்கு என்றும் குறைவு வாராது. அது தன்னை ஆள்வது. இரண்டாம் நிலை ஜட சுபாவம். அது ஜடலோகத்திற்குரிய ஜீவனின் பவர். அது சச்சிதானந்தம் தன்னையே மறக்கும் நிலை. இங்கு ஜீவியமும் சக்தியும் முழுமையாகப் பிரிந்து தோன்றுகின்றன. அது விநோதமான ஆச்சரியம். அனைத்தையும் ஆளும் குறையற்ற ஜட இருளின் ஆச்சரியம் அது. அது போர்வை. தற்கால ஞானம் இதைப் பிரபஞ்ச தெய்வ சக்தியெனத் தவறாக நினைக்கிறது. மூன்றாம் நிலை மனத்திலும் வாழ்விலும் உண்டு. மறுப்பு எழுவதில் நாம் அதைக் காண்கிறோம். அது போராடுகின்றது. நிலைமையைக் கண்டு பிரமிக்கிறது. (பணிந்து நிற்கும் வாய்ப்பில்லை. அதற்குத் தெளிவான ஞானமில்லை. வெற்றிகரமான முடிவை இயல்பாக அறியும் திறனுமில்லை.) இவை மனிதனின் தோற்றத்திற்குரிய ஆயிரம் பிரச்சனைகள். திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளில் அவை கலந்துள்ளன. அது அரைகுறையான தன்னையறியும் ஜீவன். ஜட இருள் லோகத்திலிருந்து அது வெளி வருகிறது. நான்காம் நிலை சத்திய ஜீவியத்திற்குரியது. அது முழுமை பெற்ற வாழ்வு. அது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும். பாதியை வலியுறுத்துவதால் ஏற்படும் சிக்கலது. அது முழு மறுப்பிலிருந்து எழுகிறது. இரகஸ்யமான அனைத்தையும் அது பூர்த்தி செய்கிறது. அது வித்தாக உள்ளது. பரிணாமத்திற்காக அது உள்ளது. பொது மறுப்பின் திரையின் பின்னேயுள்ளது. அதுவே உண்மையான மனிதனின் உண்மையான வாழ்வு. இப்பகுதியான வாழ்வு பகுதியான பூர்த்தி பெறாத மனிதத்தன்மை. முழு ஞானத்துடன் அது முயன்று முன்னுக்கு வருகிறது. நாம் ஜட இருள் என அழைப்பதின் வழிகாட்டுதல் அது. நாம் உணரும் பகுதிகளில் ஒரு முன்னறிவிப்புள்ளது. அது போராடும் ஓட்டம். இது பூரணத்தின் சிதறிய பகுதிகள். இதற்கு லட்சியத்தின் தோற்றமுண்டு. அது உற்சாகம் தரும் ஞான உதயம். கவி, தீர்க்கதரிசிக்குரியது. ஞானிக்கும் துறவிக்கும் அது உண்டு. அறிஞனுக்கும் சாதுவுக்கும் உண்டு. அவர்கள் பெரிய சிந்தனையாளர்கள். மனித குல மாணிக்கங்கள் அவர்கள்.

பக்கம் 212 - பாரா 7

நாம் குறிப்பிட்ட விவரங்களுடன் ஆராய்ச்சியை ஆரம்பித்தோம். அதே அடிப்படையில் செல்கிறோம். மனிதனில் ஜீவியமும் சக்தியும் குறையான அடிப்படையிலிருப்பதால் உள்ள சிரமம் தென்படுகிறது. இதுவே தற்சமயம் மனிதனின் மன, வாழ்வு நிலை. அவை மூன்று. முதலாவதாக அவன் தன்னுள் ஒரு சிறு பகுதியையே அறிவான். அவை அவன் மேல்மன வாழ்வு. அதுவே மேலெழுந்தவாரியான மனநிலை. அது அவன் மேல் நிலையிலுள்ள உடல் வாழ்வு. அவன் அறிந்ததெல்லாம் அதுவே. அதையும் அவன் முழுமையாக அறியமாட்டான். அதன் கீழ், கண்ணுக்குத் தெரியாத வாழ்வுண்டு. அடிமனமும் ஆழ்மனமும் பொங்கி எழுவதால் ஏற்பட்டது அது. மேலும் மனிதனுடைய அடிமன, ஆழ்மன உந்துதல்கள் உள்ளன. ஆழ்மனத்தின் ஜடஉடலும் உண்டு. அவை மனிதனின் பெரும் பகுதி. அவன் அவற்றை அறியான். அவற்றை அவனால் ஆள முடியாது. அது அவனை அறியும், ஆளும். வாழ்வும் சித் சக்தியும் ஒன்றே. நமக்கு ஏதோ சிறிதளவு ஆள முடியும். நாம் நம்மை அறிவதுடன் ஐக்கியமானதால் ஏற்பட்ட வாழ்வு அது. மற்றவை தம் சொந்த ஜீவியத்தால் ஆளப்பட வேண்டும். நம் மேல்மன வாழ்வுக்கு அது அடியில் உள்ளது. அவையிரண்டும் ஒன்றே. அவை இரண்டும் தனிப்பட்ட இயக்கங்களில்லை. எனவே பெரியது சிறியதை ஆள்கிறது. அது பெரியதாகையால் சக்தி வாய்ந்தது. அதன் அளவை அது நிர்ணயிக்க வேண்டும். எனவே நாம் நம் அடிமன, ஆழ்மனத்தால் ஆளப்படுகிறோம். நாமறிந்த வாழ்விலும் அப்படியேயாகும். சில சமயம் நமக்குக் காரியங்கள் பிடிபடும். அது தன்னைத் தானே வழிநடத்திக் கொள்ளும். அதிலும் பெரியதற்கு நாம் கருவியாவோம். உள்ளே அது ஜட இருளாகத் தோன்றுகிறது.

பக்கம் 212 - பாரா 8

மனிதன் தன் சொந்த முடிவால் வேலை செல்வதாய் நினைக்கிறான். உண்மையில் இயற்கை அவனுடைய எல்லா வேலைகளையும் செய்கிறது. விவேகிகளும் தங்கள் சுபாவத்தைப் பின்பற்றுகிறார்கள். முன்னோர்கள் கூறியதன் தாத்பர்யம் அதுவே. இயற்கை ஜீவனுடைய சிருஷ்டிக்கும் சக்தியின் ஜீவியம். ஜீவன் நம்முள் உள்ளது. அவனுடைய தலைகீழ் சலனத்தால் அவன் மறைக்கப்படுகிறான். அவன் தன்னையே மறுப்பதாகக் காணும், அவனுடைய ஜீவியத்தின் தலைகீழான சிருஷ்டிக்கும் சக்தியை மாயை என்றனர். அது இறைவனின் மாயை. எல்லா வாழ்வும் மெஷின் போல் இயங்குகிறது என்றனர். அதை இறைவன் தன் மாயையால் நடத்துகிறான். வாழ்வின் இதயத்தில் அவன் வீற்றிருக்கிறான். மனிதன் மட்டுமே இதுவரை தன் மனதால் தன்னைக் கடக்க முடிகிறது. அதனால் அவனுக்கு இறைவன் இருப்பது தெரிகிறது. அவ்விதம் மனிதன் தன்னை ஆட்சி செய்ய முடிகிறது. இது தெளிவு. இது ஜட இருளால் முடியாது. ஆழ் மனதிலும் இது முடியாது. எனவே ஆழத்தில் புதைந்து பெறக் கூடியதில்லை. உண்மையான ஆழம் ஜட இருளில் உள்ளது. இறைவன் அதனுள் உள்ளான். நாம் உள்ளே செல்ல வேண்டும். அங்கிருந்து பரமாத்மாவை நோக்கி உயர வேண்டும். அது சத்திய ஜீவியத்திலுள்ளது. அங்கு இந்த ஐக்கியத்தை ஏற்படுத்தலாம். இதுவே உயர்ந்த தெய்வீக மாயை. இது தெளிவான தன்னையறியும் ஞானத்திலுள்ளது. இது சத்தியத்திலும் சட்டத்திலும் உண்டு. தாழ்ந்த மாயையில் இது ஆழ்மனத்தில் வேலை செய்கிறது. இது செயல்படுவது மறுப்பு. மறுப்பு இவ்விதம் அதற்கு எதிர்ப்பாகிறது. இத்தாழ்ந்த சுபாவம் செயலில் தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படி வெளிவருவது உயர்ந்த மாயையின் எண்ணம். இது மாயை. இது உலகை தெய்வீகமாக அறிவது. இது தோற்றம். இதைச் சத்திய ஞானம் ஆட்சி செய்கிறது. தோற்றத்தின் பின்னுள்ள சத்தியத்தை அது அறியும். மறுப்புக்கு மறுப்பான ஒப்புதலை அது தயாராகத் தருகிறது. நாம் அதை நாடுகிறோம். மனிதன் பகுதி, தோற்றம். அங்கு மனிதன் உண்மையான சிறப்புடையவன். அங்கு அவன் முழுவதும் தன்னையறிந்தவன். சுய வாழ்வுடன் பூரண ஐக்கியம் பெறுவதால் அவன் தன்னையறிகிறான். அவன் எல்லாம் அறிந்த இறைவன். பிரபஞ்ச பரிணாமத்தைப் பெற்ற இறைவன் அவன்.

பக்கம் 213 - பாரா 9

இரண்டாவது பிரச்சனை மனிதன் உலகிலிருந்து பிரிந்துள்ளான். அவன் மனம், வாழ்வு, உடலால் பிரிந்துள்ளான். அவன் தன்னையேயறியவில்லை. உடனுள்ளவர்களையும் அதே போல் அறியவில்லை. பார்க்கப்போனால் இங்கு அது அதிகம். கண்டும், சிந்தனை செய்தும் யூகமாக ஒரு சட்டத்தை ஏற்படுத்துகிறான். பிறரிடம் அனுதாபம் கொள்ள அவனுக்குப் போதுமான திறனில்லை. பிறரைப் பற்றி பொதுவாக மனம் ஒரு அர்த்தமற்ற முடிவுக்கு வருகிறது. ஆனால் அது ஞானமாகாது. ஞானம் தன்னையறிந்து ஐக்கியமாவதிலிருந்து வரும். அதுவே உண்மை ஞானம். அது ஆத்மீக வாழ்வு தன்னையறிவது. நாம் எதை நம்மையறிந்து கண்டுகொள்கிறோம் என்றறிவோம். மற்றவை மறை பொருள். நம்முடைய ஜீவியத்தில் நாம் அதனுடன் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகலாம். நாம் அதை அறிய முடியும். நாம் அத்துடன் ஓரளவுதான் ஒன்ற முடியும். வழி மறைமுகமாகவோ குறையானதாகவோ இருக்கலாம். பெறும் ஞானமும் அது போலவேயிருக்கும். நாம் வேலை செய்ய அது உதவும். அதில் சற்று கலங்கிய குழப்பமிருக்கும். அது தத்துக்குத்தலானது. இருந்தாலும் நம் மனப்போக்குக்கு அது தெளிவாகப் போதும். ஓரளவு நடைமுறை குறிக்கோளை அவ்வழி எட்டலாம். சில தேவைகள், சில சௌகரியங்கள், ஓரளவு சுமுகம் அப்படி எழும். அது நிலையற்றது, குறையான சுமுகம் என்று நாமறிவோம். தெரிந்து எழும் ஐக்கியமே சிறந்த உறவைத் தரும். நம்முடனுள்ளவரிடம் நாம் அறியும் ஐக்கியத்தை அடைய வேண்டும். பிரியத்தால் ஏற்படும் அனுதாபம் போதாது. மனம் புரிவதால் அதையடைய முடியாது. மனத்தின் ஞானமும் அதைப் பெற முடியாது. அது எப்பொழுதும் மேலெழுந்தவாரியான ஞானமாகவேயிருக்கும். எனவே அது குறையுடையதாகவே அமையும். அது விரக்தியும், மறுப்பும் தரும். நாமறியாதது வேகமாகக் கீழிருந்து மேலே வரும். அடிமனம், ஆழ்மனத்திலிருப்பது நமக்குக் கட்டுப்படாது. அவையும் எழும். நம்மையறிந்து நாம் ஒருமையை எட்டலாம். அதனுள் நுழைவதால் அதை நிலைநிறுத்தலாம். அது நாம் ஒன்றான விஷயமாகும். அது பிரபஞ்சமானது. பிரபஞ்சம் முழுமைக்குரியது. பிரபஞ்சம் தன்னையறியும். நாம் அறியாததில் பிரபஞ்சம் தன்னையறியும். அது சத்திய ஜீவியம். இங்கு வாழ்வின் பெரும் பகுதி ஆழ்மனத்திற்குரியது. எனவே நாம் அதை ஆள முடியாது. மனம் இதை இயல்பாகக் கொள்ளும். உடலும், உயிரும் அப்படியே. எல்லாச் செயல்களிலும் தாழ்ந்த ஜீவியம் அகந்தைக்குக் கட்டுப்பட்டது. கட்டுத்தறியில் அது மூன்று முடிச்சால் கட்டப்பட்டது. மனிதனின் தனித்தன்மை பலதரப்பட்ட கட்டுத்தறியது. மேலேயுள்ள சத்திய ஜீவியம் பிரிந்ததில் ஐக்கியத்தைக் காணவல்லது.

பக்கம் 214 - பாரா 10

மூன்றாம் சிரமம் உண்டு. அது ஜீவியத்திற்கும் சக்திக்கும் இடையேயுள்ளது. வாழ்வின் பரிணாம சத்தியம் அது. பரிணாமமே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது மூன்று தொடர்ந்த ரூபம் பெறுகிறது. அவை ஜடம், வாழ்வு, மனம். ஒவ்வொன்றிற்கும் அதற்கே சொந்தமான சட்டம் உண்டு. வாழ்வும் உடலும் பிணக்கால் போராடுகின்றன. வாழ்வு தன் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும்படி உடலைக் கட்டாயப்படுத்துகிறது. தன் உந்துதல்கள், திருப்திகள், தேவைகளையும் திருப்தி செய்ய வேண்டும். உடலின் திறமை அளவுக்குட்பட்டது. இது போல் வாழ்வைத் திருப்தி செய்ய அமரத்துவம் பெற்ற உடலால்தான் முடியும். அது தெய்வீக உடலாகும். நம் உடல் அடிமைப்பட்டது. உடல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது. அது வேதனைப்படுகிறது. எந்த நேரமும் இடைவிடாது ஊமையாய் உடல் வாழ்வை எதிர்த்துப் புரட்சி செய்கிறது. வாழ்வு அளவுக்கு மீறி உடல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. மனம் உடலையும் வாழ்வையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறது. சில சமயங்களில் மனம் உடலை எதிர்த்து வாழ்வுக்கு உதவும். சில சமயங்களில் மனம் உயிரின் உணர்வைக் கட்டுப்படுத்தும். மனம் உடலின் தசையாலான உருவத்தைக் காப்பாற்ற முயல்கிறது. உயிரின் ஆசைகட்கு ஆதரவு தேவை. மேலும் அளவு கடந்து செயல்படுவதினின்றும், பாசத்தின் வேகத்தினின்றும் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். மனம் உயிரை ஆட்கொள்ளவும் முயல்கிறது. மனம் உயிரின் சக்திகளைத் தனக்குப் பயன்படுத்த முயல்கிறது. மனம் வாழ்வை முழுவதும் ஆட்கொள்ள முயல்கிறது. மனம் தன் செயலுக்கு அதிகபட்ச ஆனந்தம் பெற முயல்கிறது. மனம் தன் எண்ணம், கலையுணர்வின் இலட்சியங்களை அடைய முயல்கிறது. மனம் மனித வாழ்வின் பூர்த்தியை நாடுகிறது. உயிரும் அடிமைப்படுத்தப்பட்டது. அதையும் தவறாகப் பயன்படுத்தினர். அடிக்கடி அது புரட்சி செய்யும். மனம் அறிவற்ற கொடுங்கோலனாக உயரே வீற்றுள்ளது. இதுவே நம் கரணங்களின் போராட்டம். மனம் இதைத் திருப்தியாகத் தீர்க்க முடியாது. இது தீர்க்க முடியாத பிரச்சனை என்பதால் தீராது. அழியும் உடலிலும் உயிரிலும் அழியாத ஆத்மா ஏற்ற ஆர்வத்தின் பிரச்சனையிது. இது தானே சரி செய்து கொள்ளும். அல்லது இது பிரச்சனையைக் கைவிடும். நாத்திகவாதி போல அது அடங்கலாம். அல்லது நம் தோற்றமான ஆத்மாவின் தர்மத்திற்குக் கட்டுப்படலாம் அல்லது துறவியைப் போன்றோ மதவாதி போன்றோ அது வாழ்வை விலக்கலாம். அவ்விதம் பூவுலக வாழ்வை அது கண்டிக்கலாம். அவ்வழி எளிய வாழ்வின் இனிய அனுபவத்தை நாடி விலகலாம். சரியான தீர்வு ஒன்று உள்ளது. அது மனத்தைக் கடந்தது. அங்கு அமரத்துவம் சட்டம். அது நம் வாழ்வின் நிலையாமையை வெல்லும்.

பக்கம் 215 - பாரா 11

இது அடிப்படையான பிரிவினை. இது இயற்கையின் சக்திக்கும் ஜீவனுடைய ஜீவியத்திற்கும் இடையேயுள்ளது. இயலாமையின் ஆரம்பமிது. மனம் உயிரிலிருந்தும், உயிர் உடலிலிருந்தும் பிரிந்துள்ளது. ஆனால் ஒவ்வொன்றும் தனக்குள்ளே பிரிந்துள்ளது. உடலின் திறமை ஆத்மாவின் இயல்பைவிடக் குறைந்தது. ஆத்மா தன்னையறியும் ஜீவன். அதுவே உடலின் புருஷன். உயிரின் சக்தி உத்வேகமுள்ள ஆத்மாவின் சக்தியைவிடக் குறைந்தது. அது உயிரின் ஜீவன், தன்னையறிவது. அது உள்ளேயுள்ள புருஷன். மனத்தின் சக்தி அறிவு உணர்வின் ஆத்ம சக்திக்குக் குறைந்தது. இதுவே உள்ளேயுள்ள மனத்தின் புருஷன். ஆத்மா உள்ளேயுள்ள ஜீவியம். தன் முழுமையான சித்திக்கு அது ஆர்வமாக உள்ளது. எனவே அவ்வார்வம் தனிநபர் உருவகத்தை எப்பொழுதும் கலந்ததாக இருக்கும். சக்தி அந்த ரூபத்தில் தன்னையிருத்திக் கொள்கிறது. ஆத்மா எந்த நேரமும் அதை உந்தும். அந்நிலைக்கு ஒவ்வாத தூரத்திற்கு அதை நகர்த்தும். அதைக் கடந்த நிலையது. அவ்விதம் இடைவிடாது அது நகர்த்தப்படும். எனவே பதிலிறுப்பது அதற்குக் கடினம். இந்த நிலையின்று உயர்ந்த நிலைக்குப் பரிணாம வளர்ச்சி பெறுவது அதிகச் சிரமம். மூவகையான ஆத்மாவின் தேவைகளைச் சந்திக்க முயல்கிறது. அது சிதறி ஓடுகிறது. உணர்வும் உணர்வும் மோதுகின்றன. உந்துதல் உந்துதலை எதிர்க்கிறது. இதய எழுச்சி இதய எழுச்சியை எதிர்க்கிறது. எண்ணம் எண்ணத்தை எதிர்க்கிறது. ஒன்றை ஏற்று அடுத்ததை மறுக்கிறது. செய்ததை நினைத்து வருந்தி மீண்டும் வருகிறது. சரிசெய்து, விட்டுக் கொடுத்து மீண்டும் முடிவின்றி சரி செய்ய முயல்கிறது. ஆனால் அதன் ஞானமும் உறுதியும் அளவுக்குட்பட்டவை. ஞானமும் உறுதியும் பிரிந்துள்ளன. அவை பிணக்கால் பீடிக்கப்பட்டன. ஐக்கியம் மேலே சத்திய ஜீவியத்திலுள்ளது. அங்குதான் எந்த பிரிவினையும் அறிந்து இணைய முடியும். அங்கு மட்டுமே ஞானமும் உறுதியும் சமம். அவை பூரண சுமுகம் பெற்றன. அங்கு மட்டுமே சித்தும் சக்தியும் தெய்வீக சமநிலை பெற்றுள்ளன.

பக்கம் 215 - பாரா 12

மனிதன் தன்னையறியும் ஜீவனாக வளர்கிறான். அவன் சிந்திக்கும் ஜீவனாகவும் வளர்கிறான். வளரும் அளவுக்குத் தன்னுள் உள்ள பிணக்கையும் அறிகிறான். பிணக்கு அவனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவனது கரணங்கள் பிரிந்து நிற்பதால் ஏற்பட்டது அது. தன் கரணங்கள் சுமுகமடைய வேண்டும் என அவன் முயல்கிறான். அவை அவன் மனம், உயிர், உடலாகும். மேலும் அவன் அறிவும், உறுதியும் சுமுகமாக அவன் முயல்கிறான். அவன் உணர்ச்சியும் சுமுகமடைய வேண்டும். அச்சுமுகம் எல்லாக் கரணங்களிலும் எழ வேண்டும். நடைமுறையில் சரி செய்யும் வழியொன்றுண்டு. ஓரளவு சாந்தி தரக்கூடியது அது. அதைப் பெறும் வாயிலில் மனிதன் நின்றுவிடுகிறான். சமரசம் என்பது பாதி வழியில் நிற்பது. உள்ளுறை தெய்வம் உண்டு. பூரண சுமுகம் பெறும் வரை அது திருப்தியடையாது. நம் முழுமையான பூரண வளர்ச்சியுடன் இணைந்தது அது. அதற்கு பல அம்சமுள்ள வித்துகள் உண்டு. அதற்குக் குறைந்த முடிவு பிரச்சனையை விலக்குவதாகும். பிரச்சனையை விலக்கினால் அதன் தீர்வை விலக்கியதாகாது. அல்லது அது தற்காலிகமான தீர்வாக இருக்கும். ஆத்மா ஓய்வு பெறும் இடமாக அது அமையும். ஆத்மா தொடர்ந்து வளர்ந்து உயர்வது. ஆத்மாவில் சுமுகம் தவிர வேறெதுவுமில்லை. அதன் அடிப்படையான நிபந்தனைகளை அது நாடும். அது பூரணமான மனநிலை, அத்துடன் அது பூரணமான உயிரின் சக்தியின் லீலையாகும். அது பூரண உடல் வாழ்வு. அந்நிலை தீவிரமான குறைபாடு. அதனுள் எப்படி நாம் பூரணத்தின் சக்தியை நாடுவது. மனம் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு வரையறையும் அடிப்படை. அது நமக்குப் பூரணம் தர இயலாது. உடலோ உயிரோ அதைத் தர இயலாது. அவை மனத்தின் அச்சில் மனத்தின் சக்தியாலானதால் அவற்றால் பூரணம் தர இயலாது. மனம் பிரித்து வரையறையை ஏற்படுத்துகிறது. பவரும் சட்டமும் ஆழ்மனத்தில் உள்ளன. அவை தாழ்ந்த மாயையெனும் திரையால் போர்த்தப்பட்டன. அது ஊமையான எதிர்கால சூசகம். இல்லாத இலட்சியமாக அது எழுகிறது. பரமாத்மாவில் அவை வெளிப்படையாக இருக்கின்றன. அங்கு அது எப்பொழுதும் சித்திப்பது. இருந்தாலும் அது நம்மிடமிருந்து பிரிந்துள்ளது. சுயமான அஞ்ஞானம் என்ற திரை பிரிக்கிறது. சுமுகமாக்கும் பவரையும் ஞானத்தையும் நாம் நாடுகிறோம். அதை மேலே தேட வேண்டும். நாமுள்ள நிலையிலோ, கீழேயோ தேட முடியாது.

பக்கம் 216 - பாரா 13

மனிதன் வளர்கிறான். தன்னுள் உள்ள பிணக்கைத் தீவிரமாக அறிவதும் அவன் வளர்ச்சியும் சேர்ந்து வருகின்றன. தன் அறியாமையையும் அவன் அறிவான். உலகத்துடன் அவன் தொடர்பை அது ஆட்சி செய்கிறது. அவனால் அதைப் பொறுக்க முடியவில்லை. ஒரு சுமுகமான சட்டத்தை அவன் நாடுகிறான். அது சுமுகமான தத்துவம். சாந்தி, சந்தோஷம், ஐக்கியமான சட்டம் அது. மேலும் மேலும் அதுவே குறியாக மனிதன் செயல்படுகிறான். இதுவும் மனிதனுக்கு மேலிருந்து வரும். மனிதன் தன் மனத்தை வளர்க்க வேண்டும். அம்மனம் பிறர் மனத்தை அறியும். அப்பொழுது அவனால் தன் மனத்தை அறிவது போல் மற்றவர் எவர் மனத்தையும் அறிய முடியும். நம் மனத்தின் அறியாமையும், தவறாகப் புரிந்து கொள்வதும் அம்மனத்திலிருக்காது. பிறரைத் தன் போலாக்கும் உறுதியாக அது உணர்ந்து செயல்படும். அவ்விதயம் உணர்ச்சிக்கு உறைவிடமாகும். பிறர் உணர்ச்சியை தன்னுட்கொள்ளும் உணர்ச்சியாக அது இருக்கும். தன்னைப் பூர்த்தி செய்வதைப் போல் பிறரைப் பூர்த்தி செய்யவல்லது அது. அது வாழ்வின் சக்தியாகவுமிருக்கும். பிறர் சக்தியை உணர்ந்து அவற்றைத் தனதாக ஏற்றுக் கொள்ளும். சிறையாகி உலகினின்று தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாக இல்லாமல் அது உடலாக அமையும். இவையனைத்தும் சத்தியம், ஜோதியின் சட்டப்படி நடக்கும். தவறு, கோளாறு ஆகியவற்றைக் கடந்தது அது. நம்முடைய பாவம் பொய் பிறருடையதுமானவற்றைக் கடந்தது அது. பிறருடைய உறுதி, உணர்ச்சி, வாழ்வின் சக்தியையும் அது அப்படியே நடத்தும். அப்படியே மனித வாழ்வு வாழ்வாக அமையும். அப்படி மட்டுமே மனித வாழ்வு வாழ்வாக அமையும். அப்பொழுது வாழ்வு ஆன்மீகமாகவும், நடைமுறையிலும் ஒன்றாகும். மனிதன் மற்ற மனிதர்களாக உணர்வான். அவ்வழி தனி மனிதன் பிரபஞ்ச மனிதனாவான். ஆழ்மனமும், பாதாளமும் இதையறியும். அவை அங்கு ஓர் நிபந்தனைக்குட்பட்டுள்ளன. நாம் கீழிருந்து மேலே செல்லத் தேவையான நிபந்தனையிது. மனிதன் ஜட இருள் சமுத்திரத்திலுள்ள கடவுளை நாடிச் செல்லவில்லை. அங்கு இருள் இருளால் சூழப்பட்டுள்ளது. மனிதன் தெய்வத்தை நாடுகிறான். இறைவன் காலம் கடந்த ஜோதியில் உறைகிறான். அதுவே நம் ஜீவனின் உயர்ந்த ஆகாயம். அது ஆரம்ப உற்சாகம். வளரும் ஆத்மாவை அது எடுத்து உயர்கிறது. நமது நிலைக்குரியது அது.

பக்கம் 217 - பாரா 14

மனித குலம் உயர முயல வேண்டும். அது அன்பால் நடத்தப்படுகிறது. உயிரின் ஆர்வமும் அறிவுடன் தெளிவும் உதவுகின்றன. அவை மனிதனை ஆட்கொள்கின்றன. பரநலம் சாதிக்கிறது. மேலேயுள்ள சத்திய ஜீவியத்தின் ஐக்கியத்திற்கு   அவையிட்டுச் செல்லும். இறைவனுடன் நம்மை அது இணைய உதவுகிறது. நம் ஜீவனோடும் இணைய உதவுகிறது. மனிதகுலத்து நபர்களுடன் இணைய உதவுகிறது. அங்கு முடிவான தீர்வான நன்மையை நாடுகிறது. இல்லாவிடில் மனித குலம் வழி தவறும். வெற்றி மற்றவர்கட்குப் போகும். புதிய படைப்புகளுண்டு. காத்திருக்கும் அன்னையது. இறைவனை நோக்கிச் செல்லும் யாத்திரையில் இது நான்காம் கட்டமாகும்.

முற்றும்.

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆத்ம வளர்ச்சியின் அகநிலையை வர்ணிப்பது சாவித்திரி.
அதை புறமாக்குவது யோகம்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆட்டம் கண்ட உணர்ச்சி சாதிக்காது.
அமைதியான உணர்ச்சி சாதிக்கும்.
 
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்புபவர்க்குச் சொல்லலாம். சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது.
 
 
 
******



book | by Dr. Radut