Skip to Content

12. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

47. தியானம் தேடி வருவது - மௌன சக்தி

  • மனிதன் தேவைப்பட்டதைத் தேடுகிறான்.
  • தேடுவது கிடைப்பதுண்டு. கிடைக்காமலும் போவதுண்டு.
  • கிடைப்பது திறமை.
  • கிடைக்காவிட்டால் தேட வேண்டியது திறமை.
  • தியானம் அனைவருக்கும் உரியதில்லை.
  • கம்ப இராமாயணம் அனைவரும் படிப்பதில்லை.
  • ஓரளவு தமிழ் புலமையுள்ளவரே படிக்க முடியும்.
  • படிப்பவரில் சிலருக்கே புரியும்.
  • புரிவது அரிது, அதை நுணுக்கமாக உணர்வது பெரிது.
  • புரிவதால், அதை எழுத முடியும் என்பதில்லை.
  • சிறந்த பக்தியுள்ளவர்க்கே தியானம் உரியது.
  • அது அனைவரும் தொடர்ந்து பயில்வதில்லை.
  • பயில்பவர்க்கெல்லாம் பலன் வரும் எனக் கூற முடியாது.
  • பலன் வரும்பொழுது அதன் கட்டங்கள் ஆயிரம்.
  • முதற்கட்டம் தியானம் தினமும் செய்ய முடிவது.
  • முடிவான கட்டம் சமாதி.
  • முடிவான கட்டம் பலிப்பவருக்கு தியானம் தேடி வரும்.
  • பெரிய மனிதர், அதிகாரி, மந்திரி, கவர்னரைப் போய்ப் பார்க்க அனுமதி கிடைப்பது தியானம் பலிப்பது.
  • அவர் நம்மைத் தேடி வருவது தியானம் நம்மைத் தேடி வருவது.
  • அனைவரும் பதவியை மனத்தால், செயலால் நாடுகிறார்கள்.
  • பதவி எவரையும் தேடி வருவதில்லை.
  • இந்திரா, சாஸ்திரி, ராஜாஜியைப் பதவி தேடி வந்தது.
  • நாடிப் போகும் பதவி தேடி வர நாம் உச்சகட்ட உயர்வு பெற வேண்டும்.
  • அந்த உச்சகட்ட உயர்வை அன்னை மனிதனுக்கு அவன் கேளாமல், கேட்கத் தெரியாமல் அளித்து, அவனை நாடி வருகிறார்கள்.
  • ஏற்பவரிலர்.
  • ஏற்றவர், அதன் அம்சத்தை அறிந்து ஏற்க வேண்டும்.
  • ஏற்றதைப் பாராட்டிப் போற்ற வேண்டும்.
  • தியானம் அவருக்குப் பலிக்கும்.
  • அவர் போற்றுவதை தியானம் ஏற்க வேண்டும்.
  • ஏற்ற தியானம் அதை நாட வேண்டும்.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.
  • நாம் தியானத்தை ஏற்ற பாங்கை தியானம் பாராட்டி நாடினால் தியானம் தேடி வரும்.
  • முடிவான கட்டம் அப்பொழுது முதற் கட்டமாகிறது.
  • அன்னை அவதாரம் முடிவானதை மனிதனுக்கு முதலாக்கித் தருகிறது.
  • அதை ஏற்று, அடுத்த கட்டத்தில் அன்னையை ஆத்மா நாடினால் நம்மை நாடி தியானம் வரும்.
  • தியானம் நாடி வருவது அன்னை நம்மை விரும்பி அழைப்பது.
  • அது யோகத் தகுதியுண்டு என அறிவிப்பது.
  • சூரியன் உதயமானால் பூமாதேவிக்கு உயிர் வருகிறது.
  • தியானம் நாடி வருவது உள்ளத்தில் சூரியன் உதயமாவது.
  • உள்ளம் உயர்ந்தால், உயர்ந்து ஆன்மாவை அறிந்தால், சூரியன் உதயமாகும்.
  • அது மௌன சக்தியைத் தரும் - Silent will பலிக்கும்.
  • உலகம் உள்ளேயுள்ளதை அறிபவனை நாடி தியானம் வரும்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சைத்திய புருஷன் தானே இனிமையானவன். சுமுகம் செறிந்து இனிமையாகிறது. கடந்த காலம் இணைவதால் மேலும் செறிவடைகிறது.
 
சைத்திய புருஷன் இனிமைக்குரியவன்.
 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யோகத்திற்கு முதலாகத் தேவையானது சரியான நோக்கம், முறையல்ல. உணர்வோடு கலந்த நிலையிலிருந்து வெளிவந்து பிராணமய புருஷனைக் காணும் நோக்கம் தேவை.
 
யோகத்திற்கு முறையைவிட நோக்கம் முக்கியம்.
 
******



book | by Dr. Radut