Skip to Content

10. அஜெண்டா

அஜெண்டா

Spiritual degree bribing the examiner

(Volume 11, 1970, Page 8)

ஆன்மீகப் பட்டத்தைப் படிக்காமல் பெறும் வழி

  • மனிதன் சோம்பேறி என்கிறார் அன்னை. சிரமமில்லாமல் செய்வதை மனம் நாடும். வருடம் முழுவதும் படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்வதைவிட, ஆசிரியர் மார்க் போட்டு பாஸ் செய்வதை மனம் நாடுகிறது.
  • விவசாயம், வியாபாரம், தொழில், விஞ்ஞானம், டெக்னாலஜி, புதிய கருவிகள், அறிவுள்ள முறைகள் ஆகியவை நாகரிகத்தின் பாதை. அவை அனைத்தும் எளிய பாதையை நாடும் மார்க்கம்.
  • நாட்டின் நாகரிகப் பாதையே சோம்பலை வளர்ப்பதானால், எப்படி மார்க் போட்டு பாஸ் செய்வது தவறாகும்? எளிமையை பொய்யின் பாதையில் தேடுவது தவறு என்பது கொள்கை. எளிமை தவறல்ல. மார்க்கம் தவறு. ஏன் பொய் தவறாகும்?
  • கொலை, கொள்ளை, துரோகம், பொய், தவறென நாம் கொள்கிறோம். ஏன் எனக் கேள்வி எழுப்புவதில்லை. மக்கள் நாகரிகம் பெறுமுன் பொய்யும், மெய்யும் வேறானதாகத் தெரியவில்லை. அவை இரண்டும் இரண்டு வகை பேச்சென மனிதன் நினைத்தான். நெடுநாள் அனுபவத்தில் பொய் சொல்பவன் சிறு வயதிலிறப்பதையும், அவன் செய்யும் காரியங்கள் கூடிவருவதில்லையெனவும், அவனுக்கு வாழ்க்கை வசதியாக இருப்பதில்லை எனவும், அவன் நாடும் பெண், அவனை பெற்றவர், அவன் பெற்ற மக்கள், அவன் விரும்பும் நட்பு அவனை விட்டு சீக்கிரம் விலகுவதையும் கண்ணுற்ற மனிதன் பொய் வசதி செய்யாது, வாழ உதவாது எனக் கண்டு, மெய்யைப் பொய்யைவிட அதிகமாகப் பாராட்டினான். மேலும் பன்னெடு நாளான பின் மெய் சொல்வது கடினமெனவும், சிரமப்பட்டு மெய்யைக் கடைபிடித்தால், மனம் நிறைவு பெறுகிறது எனவும், பொய் சொன்னால் மனம் குறையாக வேதனைப்படுகிறது எனவும் கண்டான். ஆண்டவனையடையும் மகான்கள் பொய் சொல்வதில்லை எனவும், மக்கள் பொய் சொல்லக்கூடாது என்று கூறுவதையும் கண்டு, பொய்யை விட்டு மெய்யைக் கடைப்பிடித்தான். பொய் சொல்பவன் போரில் வெல்வதில்லை. பொய் பொருளீட்ட உதவாது எனக் கண்டு பொய்யை மனிதன் விலக்கினான். இது நடைமுறை. இதைக் கடந்த தத்துவம் உண்டா?
  • நம்மில் உறையும் ஆண்டவன் ஆன்மா.

    அகமான ஆன்மா புறமான மெய்யாவது தத்துவம்.

    புறத்தில் ஆன்மாவை அடைந்தவன், அகத்தில் ஆன்மாவை அடைவது எளிது.

    ஆன்மாவை அடைவது தவ முயற்சி, மோட்சம் எனப்படும்.

    உடலால் உழைப்பவன் உத்தமன்.

    மனத்தால் உழைப்பது மெய்யைக் கடைப்பிடிப்பது.

    இது மோட்சம் தரும் என்பது ஆயிரம் காலத்து வழக்கு, அனைவரும் ஏற்பது.

    அனைவரும் ஏற்கும் இலட்சியம் ஆன்மீக இலக்கு என்பதால் சத்தியத்தை மனிதன் நாடினான்.

    பெரிய காரியங்களில் மெய் சொல்வது அவசியம், எளிது.

    சிறிய காரியங்களில் மெய் சொல்வதை நாம் அவசியமாக அறியவில்லை, கடினம்.

    எவ்வளவுக்கெவ்வளவு சிறிய காரியங்களில் மெய்யாக நடக்க முடிகிறதோ, மனிதன் அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்தவன்.

    உயர்ந்தவன் உத்தமன். உயர்ந்தவனை உலகம் ஏற்கும், பாராட்டும்.

    உயர்ந்தவன் இறைவனுக்குரியவன்.

    உயர்வு உள்ளத்திற்குரியது.

    வசதியை நாடுபவன் வாழ வழி தேடுபவன்.

    உயர்வை நாடுபவன் உத்தமனாக முனைபவன்.

    உயர்வு உள்ள நிறைவு தரும்.

    அது அன்னை விரும்புவது, ஏற்பது.

    ஆன்மீக திருஷ்டியில் மெய் ஒளியாகவும், பொய் இருட்டாகவும் தெரிகிறது.

    மனம் இயல்பாக ஒளியை நாடுகிறது.

    காவியம் சாவித்திரி உஷைக்கால உதயத்தில் ஆரம்பிக்கிறது.

    வேதம் தெய்வத் திருவுடலிலிருந்து இருண்ட ஆடை கழன்று விழுவதை வர்ணிக்கிறது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிறர் மீது குறை கூற முடியாத நிலையே நன்றியறிதலாகும்.

*****



book | by Dr. Radut