Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.125 There sat the oligarchies of naturalLaw

         இயற்கையான நியாயம் ஏற்றமிகு அதிகாரம்

  • அமைதியான அரசவைக்கு பெருமை பொருந்திய சேனைத் தலைவர்கள் பணிந்த:
  • ஆத்மாவின் அனைத்து அம்சங்களும் தெய்வீக மணம் வீசின.
  • பாசமான நெருக்கம் பவித்திரமாக அணைத்தது
  • ஆள்வது ஆனந்தம், அடிமை செய்வதும் ஆனந்தம்
  • இது அன்பின் ஆதிக்கம், அன்பான இதயம் அடிமையாக விழைகிறது
  • காதலின் கருவூலம் கண்மூடி பூரித்துப் பணிகிறது.
  • மன்னன் மகிமை ராஜ்ய மணம் வீசும் ஆட்டம்.
  • வணக்கத்தின் பணிவு வலிமையை எழுப்புகிறது
  • கர்வமான கடவுளின் ஆனந்தமான ஆத்மா துதிக்கிறது:
  • ஆண்டவன் அடிமையுடன் இரண்டறக் கலந்த இன்பமிது;
  • நிதானமான சுதந்தரம் இதயத்திற்கு வணங்கும் சேவை
  • ராஜ கம்பீரம் பணிவின் பவித்திரம்,
  • அது உன்னதமான கிரீடத்தின் உள்ளன்புடைய உரிமை,
  • அவன் நம்பிக்கை இயற்கையின் உச்சி எட்டிய இலக்கியம்,
  • அவன் ஊழியம் ஆன்மீக ராஜ்யத்தின் வாரிசு.
  • ஞானம் சிருஷ்டியுடன் கலந்து நெகிழ்ந்த லோகமுண்டு
  • அது அவள் சொந்த வீடு, அவனுக்கு அவள் உடைமையான நேரம்:
  • மின்னும் உடலை ஜோதிமயமாக்கிய ஆக்கிரமைப்பு
  • அவ்வொளியின் வேகம் உறைந்து நிறைந்த இடம்
  • அவளுடல் பளிங்கு மண்டபமான மகிமை
  • ஆத்மாவில் இணைந்த இருவர் கலந்த சிறப்பு.
  • ஞானம் திருவுருமாற்றிய தெய்வீக உருவம்
  • பிறந்த நாள் தியாகப்பிழம்பாகிய நெறி,
  • நெருப்பின் தழலை வென்ற அழியாத விட்டில் பூச்சி;
  • இனிய பூரிப்பு நெருப்பில் எரியும் அற்புதம்,
  • வென்றவன் அளித்தச் சிறைப்பட்ட வாழ்வு.
  • பரந்த வானில் அவள் கட்டிய புதுமனை;
  • அமைதியான மனம் பெற்ற அதிவேகப் பாங்கு,
  • ஆத்ம திருஷ்டியை மனத்தின் தேவையாக்கி,
  • தெரிவதும் அறிவதும் வாழும் உந்துதலாகும்.
  • அற்புதம் அதிசயமாகும் அம்சம், அவளைக் கெட்டியாகப் பற்றியது;
  • வாழ்வின் ஊதா நிற ஆடைகள் எண்ணத்தை அரச கொலுவேற்றியது,
  • எண்ணம் பெற்ற மந்திரப் பாம்பின் செங்கோல்,
  • அகம் எழுப்பும் அழகுருவங்கள் சேர்ந்து மலிந்தன
  • அவள் செயல் அவனை ஆட்டி வைக்கும் உறுதி.

*****



book | by Dr. Radut