Skip to Content

01. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

N. அசோகன்

1. ஆனந்தம்:
பரம்பொருள் எந்தகட்டுப்பாட்டிற்குள்ளும் வராமல் பூரண சுதந்தரத்துடன் இருக்கும் பொழுது வெளிப்படையாக இந்த பூரண சுதந்தரம் வரம்பற்ற நிலையாகவும் சப்ஜெக்டிவாக, பேரின்பமாகவும் உணரப்படுகிறது.
2. உண்மை:
சத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது சத்தியமாக மாறுகிறது. அந்த சத்தியத்தைதான் நாம் இங்கே உண்மை என்கிறோம்.
3. பொய்:
சத்தியத்திற்கு மாறுபட்டு இருப்பவையெல்லாம் பொய் என்று கருதப்படுகிறது.
4. அன்பு:
ஒன்றாக இருக்கும் பரம்பொருள் பலவாக பிரிந்து நிற்கும் தன்னுடைய படைப்போடு தன்னை இணைத்துக் கொள்ள பயன்படுத்தும், ஒன்றுபடுத்தும் உணர்வைதான் அன்பென்று நாம் அழைக்கிறோம்.
5. வெறுப்பு:
இப்படி ஒன்றுபடுத்தும் வேலையை அன்பு செய்யும் பொழுது அதை எதிர்த்து பிரிவினையை வலியுறுத்தும் உணர்வுதான் வெறுப்பு.
6. மகிழ்ச்சி:
நம்முடைய பிராண மையத்தில் உள்ள எனர்ஜி லெவல் திடீரென்று உயரும் பொழுது அதை நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம்.
7. வருத்தம்:
நம் உணர்வு மையத்தினுடைய எனர்ஜி லெவல் திடீரென்று குறையும் பொழுது அதை நாம் வருத்தமாக உணர்கிறோம்.
8. தைரியம்:
மனிதனுடைய மன உறுதி முடியாது என்று தென்படுகின்ற சூழ்நிலையில் முடியும் என்று செயல்படும் பொழுது அது தைரியமாக வெளிப்படுகிறது.
9. பயம்:
ஆபத்தை உணர்கின்ற உணர்வை நாம் பயம் என்கிறோம். வெளிநோக்கிச் செல்கின்ற மன உறுதி வழக்கத்திற்கு மாறாக திசை திரும்பி உள்நோக்கி போகும் பொழுது அது அச்சமாகத் தெரிகிறது. மேலும் அச்ச உணர்வு பாஸிட்டிவான முயற்சிகளை முறியடிக்கும்.
10. ஆசை:
தான் விரும்பியதை அனுபவிக்க வேண்டும் மற்றும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு.
 
தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் கட்டுப்படாத இடத்தில் கட்டுப்பட்டால், எவருக்கும் முடியாதது நமக்கு முடியும்.
நமக்கு முடியாதது முடிந்தால் உலகம் உள்ளடக்கம். உலகத்தை வெல்ல உன்னை உள்ளே சந்திக்க வேண்டும்.
 

******



book | by Dr. Radut