Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • கிராக்கி
    • இது சின்ன புத்தி.
      தலைமுறை தலைமுறையாகப் போகாத தரித்திரம்.
      திறமையுள்ளவர் வாழ்வில் பெரும்பலன் பெறுவார்கள்.

      அவர்களுக்கு கிராக்கி - சிறிய புத்தி - பழக்கமிருந்தால் உச்சகட்டத்திற்குப் போவதை அது தடுக்கும்.

      30 வருஷத்திற்குமுன் அப்படிப்பட்ட அரசியல்வாதி தம் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தலைவருக்கு அடுத்த பதவி பெற்றார். இதன்பின் 30 ஆண்டுகளாகத் தலைவராக அவர் முயன்றது பலிக்கவில்லை. அவர் அன்னை பக்தர். ஒரு முறை தலைவர் தேர்தலுக்குமுன் சமாதிக்கு வந்து பிரார்த்தனை செய்தார். அம்முறை கட்சி அவரைத் தலைவராக்க முடிவு செய்து, கூப்பிட்டனுப்பினர். "என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தால் வருவேன்'' என்றார். கட்சித் தலைமைக்கு மனம் கசந்து மனதை மாற்றி, அடுத்தவருக்குக் கொடுத்தனர். அத்துடன் அவர் (career) அரசியல் வாழ்வு முடிந்தது.

      அகந்தை, ஆணவம், அகங்காரம் ங்ஞ்ர்என்பது சிறியது. கிராக்கி இயல்பாக அதைச் சுருக்கும் திறனுடையது. பரம்பரைப் பட்டினி, அறிவும் அனுபவமுமில்லாதது. அவற்றைப் பெறமுடியாதது.

      பெரியது, பெருந்தன்மையாக விசால மனப்பான்மை உடையது. அதனால் கிராக்கி செய்யமுடியாது.

      பெருந்தன்மையாக நடிப்பது கிராக்கியேயாகும்.
      அது கிராக்கியின் மறுபுறம்.

      கிராக்கி என்பது அற்புதமான தமிழ்ச்சொல் (idiom in Tamil).
      அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது.

      தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சி கிராக்கி. வறண்ட பிரதேசங்களில் உள்ளமும் வறண்டுபோனால் கிராக்கி எழும். நீர்வளம், நிலவளம் உள்ள இடங்களில் மேற்சொன்ன கிராக்கியிருக்காது. திருச்சி, தஞ்சாவூரில் கிராக்கி குறைவு. அப்படியிருந்தால் அது உயர்ந்த விஷயங்களில் இருக்கும்.

      காதல் கனிந்து எழுமிடத்தில் கிராக்கி சுபாவத்திலிருந்தாலும், தானே மறையும். ஆண், பெண் காதல் உறவுள் உலகையறிய முயன்றால் தெள்ளத் தெளிவாகப் புரியும். நாம் யார் என்பது யார் மீது நமக்கு இயல்பாக ஆசை எழுகிறது எனக் காட்டும்.

      திருடு, கயமை, தவறான நடத்தையுள்ளவர் பிள்ளைகள், தாழ்ந்த குணம் உள்ளவர்களுக்கு கவர்ச்சி அதிகம். விக்காம் கவர்ச்சிமிக்கவன்.

      வசீகரம் என்பது கவர்ச்சியினின்று மாறுபட்டது. கவர்ச்சி, மையல், உடலின்தேவை, திருட்டுஆசை, பல பெண்களை நாடும் ஆண்கள் இவற்றிற்குப் பெரும்- பான்மையான அடிப்படை தாழ்ந்த குணங்கள், திருடு, பொய் போன்றவை. இவற்றின் அடிப்படையில் எழும் காதலுக்கு வேகம் அதிகம். லிடியா, விக்காம் போலிருக்கும்.

      உலகம் காதல் என்ற அனுபவத்தின் சிகரத்தைக் கண்டதில்லை. கண்டதும் காதலை உலகம் அறியும்.
      சில அவற்றுள் திருமணத்தில் முடியும். கொஞ்ச நாளைக்குப்பின் அது வெறும்திருமணமாகும்.
      கோர்ட், புரோக்கர், ஜேப்படித் திருடன், அரசியல்வாதி, வியாபாரி, கூட்டுக்குடும்பம், பேராசிரியர் குழாம் ஆகிய இடங்கள் தவறான அனுபவங்கட்கும், உயர்ந்த அனுபவங்கட்கும் சிறப்பான இடங்கள்.

      மத ஸ்தாபனங்களில் நல்லதும், கெட்டதும் அதிக அளவில் கலந்திருக்கும். பொதுமக்கள் அவற்றின் உயர்ந்த நிலை கருதி தவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

      கிராக்கி செய்ய முடியாத ஊர் நாகரீகச் சின்னம்.
      கிராக்கிக்குரிய பாஷையே தனி.
      எதில் கிராக்கி செய்யாமலிருக்க முடியாதோ அங்கு பெருந்தன்மையாக இருப்பது, அதுவும் ஊர் முழுவதும் அப்படியிருப்பது ராஜவம்சம். பரம்பரை ராஜபரம்பரை.
      எதில் எவருமே எப்பொழுதுமே கிராக்கி செய்யக்கூடாதோ அதில் கிராக்கி செய்பவர் "பெரிய மனிதர்''.
      இந்த ஊரில் "மனிதரில்லை” என அங்கு வந்த சாமியார் கூறினார்.

  • ஆழ்ந்த தியானத்திற்குப்பின் சுவையான காப்பியை மறுப்பவரை, தவறு செய்கிறார், மரியாதையின்றிப் பழகுகிறார் என நாம் நினைக்கிறோம்
    • ஆழ்ந்த தியானம் உடலின் சக்தியாக மாறும்.
      சந்தோஷமாக மாறும்.
      ஏதாவது ஒரு நல்ல அம்சமாக மாறும்.
      ஒரு சிலருக்குப் பசியாக மாறும்.
      அது பசியில்லை.
      சக்தி உடலோடு கலக்கும்பொழுது ஏற்படும் உணர்ச்சி.
      அப்பொழுது காபி சாப்பிட்டால் தியானம் கொடுத்த சக்தி உடலில் கலப்பது தவறிவிடும்.
      இது அனைவருக்கும் உண்மையில்லை.
      தியானம் பசியாக மாறுபவர்கட்குமட்டும் உண்மை.
      அப்படிப் பசி எடுப்பவருக்கு ஒருவர் சுவையான காப்பி கொடுத்தால், சாப்பிடுவது தவறு.
      சாப்பிடாவிட்டால் கொடுப்பவர் அவரைத் தவறாக நினைப்பார்.
      அந்த நிலையில் கொடுப்பவர் தவறு, சாப்பிடாதவர் செய்வது சரி.
      நமக்கு வேண்டியதைத் தாராதவர் எதிரி, தருபவர் நண்பர் என்பது எளிய மனம் அறிவது. தராதவர் நண்பர் என அறிய அனுபவம் – முதிர்ந்த அனுபவம் - வேண்டும்.
      இக்கருத்தை மேலும்மேலும் கருதினால், பெரிய துரோகம் செய்பவர் நெருங்கிய நண்பராவர்.
      மனத்தைவிட உணர்ச்சியின் அறிவு பெரியது. இக்கருத்தை உணர ஆன்மீகப் பக்குவம் தேவை.
      படிப்பு, தண்டனை, சுக்கு, விளக்கெண்ணெய், மருந்து ஆகியவற்றைத்தரும் பெற்றோர் குழந்தையின் எதிரியில்லை.
      நாகரீகம் வளரும்பொழுது படிப்பு விளையாட்டாகிறது.
      தண்டனைக்குரிய சிறை வசதியுள்ளதாகிறது.
      மருந்து இனிக்கிறது.
      வலியை anesthesia வாங்கிக் கொள்கிறது.
      அரசியலில் எதிரிகள் மேடையில் இனிமையாகச் சந்திக்கின்றனர்.
      இவை முதல் நிலை.
      முடிவான நிலை வலி ஆனந்தமாவது.
      விபசாரம் கற்பாவது.
      துரோகம் நட்பாவது.
      இவை உயர்ந்த எண்ணங்கள்.
      அன்பு அதிகமானால் மரியாதை விலகும்.
      அறிவு அதிகமானாலும் மரியாதை போகும்.
      நம்பிக்கை அதிகமானால் பணத்திற்கு ரசீது கேட்க முடியாது.
      நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாதவனை நம்புவது அறிவீனம்.
      அப்படி நஷ்டப்படுவது புத்தி கொள்முதல்.
      அத்தவற்றை செய்ததால் வரும் பலன் ஞானம்.
      அது அடுத்த ஜென்மத்தில் வரும்.
      அன்னையிடம் சீக்கிரம் வரும்.
      உடமை, உரிமை, மரியாதை, மானம் போகாமல் யோகமில்லை.
      அன்பர்கட்கு அவற்றை பக்தி காப்பாற்றிக் கொடுக்கிறது.
      மரணம் பயம் தாராவிட்டால் மரணமில்லை.
      இந்நோக்கில் நம் வாழ்வை அறிவது பூரண ஞானம்.
      அன்னை "என்னால் அனைவரையும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. கொடுமையை ரசிப்பவரைப் பொறுக்க முடியவில்லை” என்கிறார்.
      கதவின் மீதுள்ள குருவி கதவைச் சார்த்தினால் கஷ்டப்படும் என்பது பகவான் மனநிலை.
  • எல்லாம் எல்லார்க்கும் வேண்டும் - எனக்குக் கடைசியில் கடைசி என்பது முதல்
    நம்மை முதலாவதாக ஆக்க அன்னை அனைவருக்கும் உடனே கொடுத்து விடுகிறார்
    • "எனக்கு முடிவில் வரட்டும்” என்பது ஒரு பொறுமையான பரந்த சுயநலமற்ற மனப்பான்மை.
      காரியத்தைச் செய்வது செயலன்று, மனப்பான்மை (attitude).
      மனப்பான்மைக்கு சக்தியுண்டு. மனமும் உணர்ச்சியும் சேர்ந்த சக்தியுண்டு. செயலுக்கு physical power மட்டும் உண்டு.
      அது உடலுக்குரியது; சிறியது.
      உணர்வும், மனமும் உடலைவிட அதிக சக்தி வாய்ந்தவை.
      இப்படி நினைப்பதால், எல்லோர்க்கும் உடனே வந்துவிடும்.
      அத்துடன் நமக்கும் வரும்.

      நமக்காக அனைவருக்கும் வருகிறது.

      "எனக்குக் கடைசியில்' என்ற நினைவு, எல்லோருக்கும் முதலில் தருகிறது.
      மனம் குதர்க்கமாக இருப்பதால் சில சமயங்களில் இப்படித் தலைகீழே நடக்கிறது.
      எதிர்பார்த்தால் கிடைக்காது.
      இச்சையற்றவர்க்குச் சித்திக்கும் என்பதும் அதுவே.
      "என்னால் எவரைப் பற்றியும் குறை கூற முடியாது” என்ற மனம் அனைவரும் என்னை உயர்ந்தவனாகக் கருத வேண்டும் என்பதைத் தலைகீழே கூறுகிறது.
      "எல்லோரும் என்னை மட்டமாக நினைக்க வேண்டும், ஏனெனில், அதுவே உண்மை' என்பதை என் மனம் என் வாயால் அனைவரையும் சந்தேகிக்கும், மட்டமாகப் பேசும்.
      • இது மனம் மூலம் பேசும் பாஷை.
      • மனிதனுடைய காதல் சுயநலம் நிறைந்ததுஎன்பதும் இதுவே.
        Possessiveness (தானே உடமையாக்கிக் கொள்ள வேண்டும்) உடலுக்குண்டு.
        பொருள்களை, மனிதர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள possess செய்ய மனம் விழைகிறது.
        அது மனத்தில் உடலின் பகுதி (physical part), மிகவும் தாழ்ந்தது.
        Possessivenessக்குப் பெருமையிருந்த காலம் உண்டு.
        இன்றும் ஏராளமாக அது காணப்படும்.
        எவரும் எதையும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது என்பதே உண்மை.
        தான்மட்டும் ஒரு பொருளை ஆள வேண்டும் என்பது அல்ப குணம்.
        விலக்கில்லாமல் நாமனைவரும் அப்படியே இருக்கிறோம்.
        அதைப் புனிதமாக நினைக்கிறோம்.
        அது மூடநம்பிக்கை.
        அதுவும் உலகிலில்லாத மூடநம்பிக்கை.
        மனித இலட்சியத்தின் சிகரமாக இக்குணம் கருதப்படுகிறது.
        குளத்தில் ஜாதிக்கொரு துறையுண்டு, மற்றவர் துறை என்பது சிறந்த உதாரணம்.
        துறை பிரிந்தாலும், குளத்து நீர் ஒன்றுதான்.
        அர்த்தமற்றதை அர்த்தமுள்ளதாக்குவது
        அர்த்தமற்றவனுக்குள்ள அர்த்தம்.
  • மனத்தில் கேள்வியுள்ளவரை, நாம் அதனுள் சிக்கியிருப்போம்
    • மனமுடையவன் மனிதன்.
      மனம் முழுமையைத் துண்டு செய்து, துண்டைச் சிக்கலாக்கும்.
      சிக்கலின் சிறப்பான மையம் மனம்.
      மனம் உள்ளவரை குணம் குறையாகும்.
      கேள்வி மனம் செயல்படும்வகை.
      சிந்திக்க முடியாதவன் சிறியவன்.
      அவன் கேள்வி சிதறிய மனம் சிறப்புறுவது.
      உலகம் அதை அதிகப் பிரசங்கித்தனம்எனும்.
      சிந்திப்பவனுடைய கேள்வி சிறப்பான செயல்.
      அக்கேள்விக்குப் பதில் பெறும் தகுதியுண்டு.
      அது கேள்வி.
      அக்கேள்வி ஞானத்தை நாடும்.
      அறியாதவன் கேள்விக்குப் பதில்கூற முயல்வது அறியாமை. அறிஞனின் கேள்வியுள் பதில் புதைந்திருக்கும்.
      உலகில் அறிவுள்ள கேள்வியை எழுப்பிய அறிஞர் எழவில்லை.
      கேள்வி பிறந்தால், பதில் கிடைக்கும்.
      எவரும் கேட்காத கேள்வியை எழுப்பி, பதில் கூறுவது ஸ்ரீ அரவிந்தம்.
      The Life Divine புரியவில்லை என்பதற்கு ஒரு காரணம் வாசகர்கட்கு எழாத கேள்விகட்கு பகவான் பதில் தருகிறார்.
      கேள்வி எழுப்பாத மனம் கேள்விப்படாதது.
      மனம் கேள்வியை இழக்க வலிமை தேவை.
      நமக்கு வலிமையுள்ள இடத்தில் கேள்வி எழாது.
      பரிட்சையில் காப்பியடிப்பது சரியாஎன்ற கேள்வி எழுவதில்லை.
      கேள்வியும் பதிலும் சிந்தனையின் கூறுகள்.
      எழும் கேள்வி மனம் சிந்திக்கும் பாணி.
      மடி நிறையப் பணமிருந்தால் மனம் நிறைய நிம்மதியிருக்கும்.
      பணம் பெருத்துவரும் நிம்மதி, நல்லது செய்யாது.
      பணம் பெருத்து நிம்மதி வாராமல் நிம்மதி வாராது.
      பணம் அவசியம்.
      பணம் மட்டும் அவசியமில்லை.
  • தொடரும்....

    *******



book | by Dr. Radut