Skip to Content

04.சாவித்ரி

 “சாவித்ரி”

P.17. Or hew the ways of Immortality

          அமரத்துவமான சுவர்க்கத்திற்கு பாதை அமைப்போம்

       காயகல்பம், சாகா வரம், மரணமிலாப் பெருவாழ்வு, அமரவாழ்வு என்பவற்றை மனிதன் சாகாமல் என்றும் உடல் உயிரோடிருப்பான் எனக் கொண்டு இந்திய தவசிகளும், ரிஷிகளும் காயகல்பம் தேடினர்.

       வேதம் அமரத்துவம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

அமரத்துவம் ஆத்மாவுக்கு, உடலுக்கோ, உயிருக்கோ (ஆவி)இல்லை.

அமரத்துவத்தின் இரு அம்சங்கள் infinity அனந்தம், universality பிரபஞ்சம் முழுவதும் பரவுவது.

அனந்தம் எல்லா நிலைகட்கும் உண்டு. ஜடம், வாழ்வு முதல் சத் வரை அனந்தம் உண்டு. ஆனால் அமரத்துவம் Supreme infinityக்கே உரியது. Supremeஎன்பதை ‘பர’ என்று குறிப்பதுண்டு.

•Universality பிரபஞ்சம் முழுவதும் பரவுதலும் எல்லா நிலைகட்கும் உண்டு. அமரத்துவம் Divine universalityக்கேயுண்டு.

ஆன்மா இவையிரண்டையும் - (Supreme infinity, divine universality ) உச்சகட்ட அனந்தமும், இறைவனுக்குரிய பிரபஞ்ச ரூபமும் - பெற்றால் அமரத்துவம் பெறுகிறது என்பது வேதம்.

       சாவித்திரி கூறும் அமரத்துவம் உடலில் வாழும் மனிதனுக்குரியது, உலகுக்குப் புதிய கருத்து. சாவித்திரி எமனை வென்று, அழித்து மரணத்தை அழித்து உலகுக்கு அமரத்துவம் வழங்க வந்தவள். அதைச் சாதித்தாள்.

இப்பக்கத்திலுள்ள மற்ற கருத்துகள்.

எமனெனும் கருமேகத்துடன் போரிட வந்தவள் சாவித்திரி.

மரணம், வீழ்ச்சி, சோகம் ஆன்மாவை நோக்கி உந்தும்.

ஆயுதம் தாங்கிய அமரத்துவம் காலத்தின் கிடுக்கிப் பிடியைச் சமாளித்தது.

ஜடத்தின் இருளில் வாழ்வின் சிறு போராட்டம்.

தம் வலுவே எதிர்ப்புக்கு அளவுகோல்.

தெய்வீக அம்சங்களைத் தாக்கினாள்.

ஆர்வம் நிறைந்த மனித இதயத்திற்கு அவளிதயம் துணை நின்றது.

விதியின் திரையில் விளையாடும் உருவம்.

தெய்வீக விளையாட்டின் வெற்றியும், தோல்வியும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனப்பான்மை (mentality) என்பது பொது; நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவுமிருக்கலாம். கெட்ட எண்ணம் என்பது கெட்டது. பார்க்கப் போனால் இரண்டும் ஒரே தன்மையை உடையவை. நிலை வேறு. பிறர் நலன் கருதும் இனிமையும் (benevolence), கெட்ட எண்ணமும் ஒரே அளவுகோலின் இரு முனைகள். மனப்பான்மை அக்கோலின் மையமாகும்.

நல்லெண்ணமும் கெட்ட எண்ணமும் மனத்தின் இரு முனைகள்

 

 



book | by Dr. Radut