Skip to Content

10. Pride and Prejudice

Pride and Prejudice

இக்கதை 3 வால்யூமாக 61 அத்தியாயங்களாக 345 பக்கங்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது. இக்கதையின் விமர்சனம் சரியாகப் புரிய கதையின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் தெரியவேண்டும். அவற்றை மட்டும் இதில் காணலாம்.

Vol.I

Chapter 1 :

Mr.. பென்னட் லாங்பார்ன் என்ற வீட்டில் மெரிடன் என்ற கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தார். இவருக்கு ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா என 5 பெண்கள். இவரது ஆண்டு வருமானம் £ 2000. இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் இவருக்குப் பின் இவர் சொத்து, இவரது அண்ணன் மகனான காலின்ஸ் என்பவருக்கும் போகும்.

இங்கிலாந்தில் வடபகுதியிலிருந்து பிங்லி என்றெôரு இளைஞன் இவர் கிராமத்தில் நெதர்பீல்ட் என்ற பங்களாவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நண்பன் டார்சியுடன் அங்கு வருகிறான். பிங்லிக்கு திருமணமான சகோதரி லுயிஸா என்பவளும் திருமணமாகாத சகோதரி கரோலின் என்பவளும் உண்டு. இருவரும் உடன் வருகிறார்கள். லூயிஸாவின் கணவன் ஹர்ஸ்ட், பிங்லிக்கு £ 5000 வருஷ வருமானம், டார்சிக்கு £ 10,000 வருமானம், பிங்லியின் இரு சகோதரிகட்கும் தலைக்கு £ 20,000 சொத்தாக இருக்கின்றது.

Mrs.. பென்னட் கணவனிடம் பிங்லி வரும் செய்தியைக் கூறி அவனை சந்திக்கும்படி கேட்கிறாள். அவரும் அவளை சந்திக்கின்றார்.

Chapter 2 :

தான் பிங்லியை சந்தித்ததை Mr. பென்னட் எவரிடமும் சொல்லாததால் பெண்கள் பிங்லி குடும்பத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர் மனைவி கசங்குகிறாள். கணவன் பிங்லியை சந்தித்ததை அறிந்து அனைவரும் ஆனந்தப்படுகின்றனர்.

Chapter 3 :

Mr.பென்னட் பிங்லிக்கு அழைப்பு அனுப்புகிறார். பிங்லி வந்து 10 நிமிஷம் அவரைப் பார்த்துவிட்டுப் போகிறார். அவர் பெண்களின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டதால், அவர்களைக் காணலாம் என்று நினைக்கிறார். பலனில்லை. இலண்டனுக்குப் போய் பலருடன் திரும்பி வந்து நடனம் ஆடும் ஹாலுக்கு வருகிறார். டார்சி பிங்லியை விட அழகானவர் என்பது பொது அபிப்பிராயம். பிங்லி அனைவருடனும் கலந்து பழகுகிறார். டார்சி ஒதுங்கி நிற்பதால் அவரைக் கர்வி என வெறுக்கின்றனர். பிங்லி ஜேனுடன் இருமுறை நடனம் ஆடுகிறார். எலிசபெத்துடன் ஆடுகிறார். டார்சி ஒதுங்கியிருப்பதால், அவரை ஆட அழைக்கிறார். எலிசபெத்துடன் ஆடும்படிக் கூறுகிறார். டார்சி அவள் அழகியல்ல, அதனால் பிறர் விலக்கிய பெண்ணுடன் தான் ஆடமாட்டேன் என்கிறார். பென்னட்டிடம் வந்து விவரம் கூறுகிறார்கள்.

Chapter 4 :

ஜேனும், எலிசபெத்தும் நடனம் முடிந்தபின் பிங்லியைப் பற்றிப் புகழ்ந்தும், அவனுடைய சகோதரிகளைப் பற்றியும் பேசுகின்றனர். ஜேன் அவர்கள் நல்லவர்கள் என்ற பொழுது, எலிசபெத் அவர்கள் தங்களை மட்டமாக நினைப்பதை சுட்டிக்காட்டுகிறார். £ 100,000 தன் தகப்பனாரிடமிருந்து பிங்லி பெற்றான். பிங்லிக்கு வயது 23 டார்சிக்கு 28, பிங்லி டார்சியை அதிகமாக நம்புகிறான். எங்கு போனாலும் பிங்லியை அனைவருக்கும் பிடிக்கும். டார்சியை எவருக்கும் பிடிக்காது. மெயிடனில் பிங்லிக்கு அனைவரையும் பிடிக்கிறது. டார்சி அவர்களுடைய குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறான். அனைவரும் ஜேன் அழகி என்றனர்.

Chapter 5 :

வில்யம் லூகாஸ் என்பவர் லாங்பார்னுக்கு அருகில் வசிப்பவர். சர் பட்டம் பெற்றவர். மேயராக இருந்தபொழுது ராஜாவை வரவேற்றார். நல்ல மனிதன். புத்தியில்லாதவர். ஷார்லோட் அவர் மகள், 27 வயதில் திருமணமாகாதவர். எலிசபெத்திற்கு நெருங்கிய தோழி. அவள் தங்கை மெரையா. அன்று பிங்லி முதலில் ஷார்லோட்டுடன் நடனம் ஆடுகிறான். எலிசபெத்துடன் டார்சி டான்ஸ் ஆட மறுத்தது தவறில்லை என ஷார்லோட் கூறுகிறார். பணம் உள்ளவன் பிறரை அவமதிப்பது வழக்கம் என்கிறாள்.

Chapter 6:

Mr. பென்னட் குடும்பத்தினர் நெதர்பீல்ட்க்கு வந்து பிங்லி, டார்சியுடன் விருந்து சாப்பிட்டனர். இவர்களும் திரும்ப பென்னட் வீட்டிற்கு விருந்திற்கு வந்தனர். இந்த சமயத்தில் ஷார்லோட்

எலிசபெத்திடம் பிங்லியைப் பற்றிப் பேசுகிறாள். ஜேன் மீது பிங்லிக்கு அபிப்பிராயமிருக்கிறது. ஜேனுக்கு அபிப்பிராயம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனக்கு அபிப்பிராயமிருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்கிறாள். எலிசபெத்திற்கு அது சரியாகப் படவில்லை. ஜேனையே கவனித்திருந்து எலிசபெத்திற்கு டார்சியின் கவனம் தன்மீது இருப்பது தெரியவில்லை. அவள் கலகலப்பாக இருப்பது டார்சிக்குப் பிடித்திருந்தது. மேலும் டார்சி அவளைக் கவனித்தான். சர் வில்யம் வீட்டு நடனத்தில் எலிசபெத் கர்னலுடன் பேசுவதை டார்சி கவனிப்பதை எலிசபெத் பார்த்தாள். சர் வில்யம்ஸ் டார்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எலிசபெத்தை அழைத்து டார்சியுடன் நடனம் ஆடச் சொன்னார். டார்சி ஒப்புக் கொண்டான். லிசபெத் மறுத்துவிட்டாள். கரோலின் பிங்லி டார்சியிடம் வந்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டபொழுது எலிசபெத் பென்னட்டின் அழகிய விழிகளை நினைத்துப் பார்க்கிறேன் என்றான்.

Chapter 7:

Mr..பென்னட் எஸ்டேட் வருமானம் 2000. ஆண் வாரிசு இல்லாததால் அது Mr. காலின்ஸ்க்குப் போகும். Mr. பென்னட்டின் சகோதரி தன் தகப்பனாரிடம் குமாஸ்தாவாக வேலை செய்து இப்பொழுது வக்கீலாகவுள்ள Mr. பிலிப்சை மணந்தார்.Mrs. பென்னட் சகோதரர் Mr. கார்டினர் லண்டனில் நல்ல வியாபாரத்தில் இருக்கிறார். லிடியாவும், கிட்டியும் அர்த்தமற்ற பெண்கள் எனத் தகப்பானர் கூறுவார். கரோலின் பிங்லி ஜேனை தம் வீட்டிற்கு அழைக்கிறார். மழை வரும் போலிருக்கிறது. வண்டியில் போகாதே, குதிரை மீது போனால் நனைவார். நெதர்பீல்டில் தங்க வேண்டிவரும் என்று தாயார் போதிக்கிறார். அப்படியே போய் அவளுக்கு ஜலதோஷம் வருகிறது. அவளைப் பார்க்க எலிசபெத் 3 மைல் நடந்து போகிறார். நடந்து துணியெல்லாம் மண்ணாகி, தலைகலைந்து வந்த கோலம் கரோலினுக்கும், லூயிஸாவுக்கும் கேலியாகயிருக்கிறது. டார்சி எலிசபெத்தின் அழகு கூடியுள்ளதை மட்டும் காண்கிறான்.

பிங்லி தனக்கு ஜேன் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறான். எலிசபெத் வீடு திரும்ப முனைந்தபொழுது கரோலின் அவளை அங்கேயே தங்குமாறு அழைக்கிறார்.

Chapter 8 :

ஜேனுக்கு உடல் நலம் குணமாகவில்லை. பிங்லி மட்டும் ஆர்வம் காட்டுகிறார். மற்ற அனைவரும் மரியாதையாகப் பழகுகிறார்கள். டின்னர் முடிந்து எலிசபெத் ஜேனிடம் திரும்பியவுடன் கரோலின் அவளைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். டார்சியையும் திட்ட அழைக்கிறார் கரோலின் அவன் சேரவில்லை. லூயிசாவும், கரோலினும் எலிசபெத்தின் உறவினர்களான வக்கீல், வியாபாரிகளைக் கேவலமாகப் பேசுகிறார்கள். பிங்லி அவற்றை மீறி ஜேனை விரும்புகிறார். எவ்வளவு அழகாக இருந்தாலும், தாழ்ந்த உறவினர்கள் நல்ல சம்பந்தத்திற்கு தடை என டார்சி கூறுகிறான். ஜேன் தூங்கும் பொழுது எலிசபெத் ஹாலுக்கு வருகிறாள். மற்றவர்கள் அவளை சீட்டாட அழைக்கிறார்கள். அவள் மறுத்துவிடுகிறாள். கரோலின் டார்சியை அவன் தங்கை தன் உயரமிருப்பாளா எனக் கேட்டதற்கு எலிசபெத் உயரம் இருப்பாள் என்கிறான். ஜேன் தேராததால் டாக்டர் வருகிறார்.

Chapter 9:

Mrs.பென்னட் வந்து ஜேனைப் பார்க்கிறார். உடன் லிடியாவும், கிட்டியும் வருகிறார்கள். ஜேன் வீட்டுக்குப் போகலாம் என்பதைத் தாயார் ஏற்கவில்லை. பிங்லியைப் பார்த்ததும் அவர் தான் அந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்கலாம் போலிருக்கிறது என்றார். டார்சி கிராம வாழ்வு குறுகியது என்கிறார். கோபப்பட்டு பென்னட் அம்மையார், டார்சியை மறுத்துப் பேசுகிறார். பேச்சு இலக்கியத்திற்குப் போகிறது. லிடியா பிங்லியை தான் ஒரு நடனம் ஏற்பாடு செய்வதாகக் கூறியதை நினைவுபடுத்துகிறார். ஜேன் குணமானவுடன், நடனம் லிடியா சொல்லும் நாளில் ஏற்பாடு செய்வதாக பிங்லி கூறுகிறார்.

Chapter 10:

மறுநாள் கரோலின் டார்சி கடிதம் எழுதுவதை அருகிலிருந்து பாராட்டினாள். லிசபெத் அதைக் கவனித்தாள். பிங்லியும் பேச்சில் கலந்து கொண்டான். பிங்லி மற்றவர் பேச்சை அதிகமாக ஏற்பதாக டார்சி சொல்லிய பொழுது எலிசபெத் அதை பிங்லியின் பெருந்தன்மை என வர்ணித்தாள். பிங்லிக்குப் பெரிய சந்தோஷம். எலிசபெத் பிங்லியை ஆதரித்தும் டார்சி பிங்லியை எதிர்த்தும் பேசினர். டார்சி கரோலினையும், எலிசபெத்தையும் பாடும்படிக் கேட்ட பொழுது எலிசபெத் மறுத்துவிட்டாள். கரோலின் பியானோ வாசித்தாள். இச்சமயங்களில் டார்சியின் பார்வை தன் மீதிருப்பதை எலிசபெத் உணர்ந்தாள். எலிசபெத் இதை எப்படி புரிந்து கொள்வது என்று அறியவில்லை. பாட்டு முடிந்தவுடன் டார்சி எலிசபெத்திடம் வந்து தன்னுடன் நடனம் ஆட அழைத்தான். எலிசபெத் சிரித்தாள் பதில் சொல்லவில்லை. “நான் நடனம் ஆடினால் உன் கேலிக்கு ஆளாவேன்” என்று கூறி மறுத்தாள். டார்சி பிரியமாகப் பேசியதை எலிசபெத் கவனிக்கவில்லை. அவள் சுபாவம் இனிமையும் நிறைந்ததால், பிறர் மனம் புண்படும்படி அவளால் பேசமுடியாது. அதுவரை அந்த அளவுக்கு எந்தப் பெண்ணும் கவரவில்லை. கரோலினுக்கு பொறாமை. எலிசபெத்தைப் பற்றிக் குறைவாகப் பேசினாள். மறுநாள் தோட்டத்தில் டார்சியுடன் கரோலின் உலாவும் பொழுது எலிசபெத்தும் லூயிஸாவும் எதிரில் வந்தனர். பாதை குறுகியது. மூன்று பேர் தான் நடக்கலாம். லூயிஸா டார்சியுடன் கைகோர்த்துக் கொண்டாள். எலிசபெத் தனியே நிற்பது டார்சிக்குக் கஷ்டமாக இருந்தது. எலிசபெத் வீட்டுக்குத் திரும்பினாள்.

Chapter 11:

ஜேன் சற்று குணமடைந்து பிங்லி சகோதரிகள் உள்ள அறைக்கு வருகிறாள். அனைவரும் வரவேற்கின்றனர். பிங்லி ஆர்வமாக அவளை கவனிக்கிறான். எலிசபெத்திற்கு இது பெருமகிழ்ச்சி. கரோலின் அறையில் உலவ எலிசபெத்தை உடன் அழைக்கிறாள். டார்சியையும் அழைக்கிறான். எலிசபெத் வருகிறாள். டார்சி மறுத்துவிடுகிறான். அவர்கள் மூவரும் பேசும் பொழுது டார்சியின் கவனம் எலிசபெத்திடம் அதிகமாக இருப்பதை கரோலின் விரும்பவில்லை. டார்சியின் கவனத்தைத் திருப்ப கரோலின் பாட ஆரம்பிக்கின்றாள்.

Chapter 12:

Mr.. காலின்ஸ் லாங்பார்னுக்கு வருகிறார். இவர் தகப்பனார் படிக்காதவர். குறுகிய உள்ளமுள்ள கருமி. முதல் தலைமுறை படிப்பு என்பதால் உயர்ந்த படிப்புத் திறமை காலின்ஸை கோமாளி ஆக்கிவிட்டது. தன் படிப்பின் சிறப்பை மடத்தனமாக வெளியிடுவது இவருடைய ஆழ்ந்த ஆர்வம். தான் லாங்பார்ன் எஸ்டேட்டைப் பெறப்போவதால் Mr. பென்னட் பெண்களில் ஒருவரை மணக்க விரும்புகிறார். ஜேனுக்கு பிங்லி மனதிலிருப்பதால் காலின்ஸ் தன் கவனத்தை எலிசபெத்தின் மீது செலுத்துகிறார். லேடி காதரீன் ஜமீனில் இவர் வேலை செய்கிறார். இவர் அங்கு ஒரு பாதிரியார். தனக்கு லேடியுடனுள்ள தொடர்பை குறிப்பிடாமல் பேச இவரால் முடியாது.

Chapter 13:

டின்னரில் காலின்ஸ் லேடி காதரீன் மகளைப் பற்றிக் கூறுகிறார். அவர் உடல் நலம் குன்றியவள். டின்னருக்குப் பிறகு காலின்ஸ் பிரார்த்தனை புத்தகம் படிக்கிறார். குறுக்கே லிடியா இராணுவ ஆபீசர்களைப் பற்றிப் பேசியதால் படிப்பதை நிறுத்திவிடுகிறார். ஜேனும், எலிசபெத்தும் லிடியா சார்பில் மன்னிப்பு கோருகிறார்கள்.

Chapter 14:

காலின்ஸ் Mrs. பென்னட்டிடம் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறார். ஜேன் அநேகமாக பிங்லியை மணக்கலாம் என்பதால் அவளைத் தவிர மற்ற எந்த பெண்ணையாவது அவர் மணக்கத் தனக்குச் சம்மதம் என்று தாயார் சொல்கிறார். காலின்ஸ் பெண்களுடன் மெரிடன் கிராமத்திற்குப் போய் வருகிறார். அவர் எலிசபெத்தை தான் விரும்புவதாகத் தாயாரிடம் கூறுகிறார். வழியில் பெண்கள் டென்னி என்ற ஆபீசரைக் கண்டனர். டென்னி அவர்கட்கு தன் நண்பனான விக்கம் என்பவரை அறிமுகப்படுத்துகிறார். அந்த நேரம் டார்சியும், பிங்லியும் ஜேனை விசாரிப்பதற்காக லாங்பார்ன் புறப்பட்டு வருகிறார்கள். அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். விக்கமும், டார்சியும் சந்திப்பதும், அவர்கள் முகம் கறுப்பதையும் எலிசபெத் கவனிக்கிறாள். விக்கம் டார்சிக்கு வணக்கம் சொல்வதை டார்சி ஏற்கவில்லை எனவும் தெரிகிறது. பெண்கள் அவர்கள் சித்தி Mrs. பிலிப்ஸ் வீட்டுக்குப் போவதால் டென்னியும் உடன்வருகிறார். அழைப்பில்லை என்றாலும் விக்கம் கலந்து கொள்கிறான்.

Chapter 15:

காலின்ஸம் 5 பெண்களும் Mrs.. பிலிப்ஸ் வீட்டு விருந்திற்கு வருகின்றனர். விக்காம் வந்தது பெண்களுக்கு அதிக சந்தோஷம். விக்காம் மற்ற ஆபீசர்களை விட அழகிலும், அழகாகப் பேசுவதிலும், கண்ணியமாக நடப்பதிலும் பெருமளவு பொலிவு பெற்றிருந்தான். அத்தனை பெண்கள் பார்வையும் அவன் மீதிருந்தது. அனைவர் மனத்திலும் அவனேயிருந்தான். அவன் கவனம் எலிசபெத் மீதிருந்தது. விஷயம் எதுவானாலும் அவ்வளவு அழகாக அவனால் பேச முடிந்தது. எலிசபெத்தும் விக்காமும் சந்தித்தார்கள். தான் டார்சி வீட்டில் வளர்ந்தது, அவனுடைய தகப்பனார் தனக்களித்த (living) பாதிரியார் வேலையை டார்சி தர மறுத்தது ஆகியவற்றை எலிசபெத்திடம் கூறினாள். அவனுக்கு டார்சி மீது வெறுப்பும், விக்காம் மீது பரிவும் எழுந்தன. பெரிய மனிதர்களிடையே டார்சி பக்குவமாக நடந்து கொள்வான் எனவும் விக்காம் கூறினான். லேடி காதரீன் டார்சியின் சின்னம்மா எனவும் அவள் பெண்ணை டார்சி மணக்க இருப்பதாகவும் எலிசபெத் அறிந்தாள்.

Chapter 16:

ஜேனிடம் தான் விக்காம் மூலமாக டார்சியைப் பற்றி அறிந்ததை எலிசபெத் கூறுகிறார். ஜேனுக்கு நம்பிக்கையில்லை. எப்படி பிங்லிக்குத் தெரியாமலிருக்கும் என்பது ஜேனுடைய கேள்வி. எலிசபெத் விக்காமை முழுவதும் நம்புகிறார். பிங்லி ஏமாந்தவன் என்பது எலிசபெத் அபிப்பிராயம். பிங்லியின் சகோதரிகள் நேரில் வந்து வீட்டுக் நடனம் அழைப்பு தருகின்றனர். இந்த நடன நிகழ்ச்சியில் எலிசபெத் விக்காமோடு அதிகமாக ஆட விரும்புகிறாள். காலின்ஸ்க்கும் அழைப்பு வருகிறது. காலின்ஸ் முதல் இரண்டு நடனம் தன்னுடன் ஆட எலிசபெத்தை அழைக்கிறார்.

Chapter 17:

இந்த நடன நிகழ்ச்சியில் விக்காமை முழுவதும் கவர வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்த எலிசபெத், விக்காம் வரவில்லை என்று காண்கிறாள். எலிசபெத்திற்கு விக்காம் இந்த செய்தியை அனுப்பியிருந்தான். அவளுக்கு டார்சி மீது கோபம் வருகிறது. டார்சியிடம் நல்லபடியாகப் பழகுவது விக்காமுக்குத் துரோகம் என நினைக்கிறார். காலின்ஸ் நடனத்தில் தவறி ஒரு பெண் மீது இடித்துக் கொள்கிறான். ஷார்லோட்டிடம் எலிசபெத் டார்சியை திட்டிக் கொண்டிருக்கும் பொழுது டார்சி வந்து தன்னுடன் ஆட அழைக்கிறான். பதில் சொல்லமுடியாமல் ஏற்றுக் கொள்கிறாள். இது உன் அதிர்ஷ்டம் என ஷார்லோட் கூறுவது எலிசபெத் காதில் விழவில்லை. விக்காமை நினைத்துக் கொண்டு அதிர்ஷ்டத்தைக் கைவிடாதே என ஷார்லோட் புத்திமதி கூறுகிறாள். டார்சியுடன் நடனம் ஆடும் பொழுது எலிசபெத் அவனைப் பேசும்படி அழைக்கிறாள். பேச்சில் தனக்கு விக்காமைத் தெரியும் என்கிறாள். முதலில் அழகாகப் பழகுவான் என்று டார்சி கூறுகிறான். டார்சிக்குப் பிறகு கரோலின் வந்து விக்காமைப் பற்றி எச்சரிக்கிறாள். எலிசபெத் குமுறுகிறாள். ஜேன் மூலம் விக்காமைப் பற்றி பிங்லி அபிப்பிராயம் வருவதையும் எலிசபெத் ஏற்கவில்லை. காலின்ஸ் டார்சி யார் என அறிந்து அவனுடன் போய்ப் பேச முயல்வதை எலிசபெத் தடுக்க முயல்கிறாள். முடியவில்லை. காலின்ஸ் போய்ப் பேசி அவமானப்படுகிறான். Mrs. பென்னட் உரக்க தன் அபிப்பிராயங்களைக் கூறுவது அனைவர் காதிலும் விழுகிறது. பிங்லி திருமணம் முடிந்ததாகவும், டார்சி கர்வி எனவும், பிங்லி மூலம் மற்ற பெண்களுக்கு பெரிய வரன்கள் வரும் எனப் பேசுகிறார். அது பிங்லி, டார்சி காதிலும் விழுகிறது. பிங்லி தன் தங்கையைப் பாடச் சொல்லும் பொழுது மேரி அழைப்பின்றிப் போய்ப் பாடி அவமானப்படுத்துகிறாள். Mrs. Bennet பேச முயன்றதை பிங்லி குடும்பத்தார் ஏற்கவில்லை.

Chapter 18:

Mrs. பென்னட் எலிசபெத்தும் காலின்ஸம் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். தன்னை மணக்கும்படி காலின்ஸ் கேட்கிறார். எலிசபெத் மறுக்கிறார்.பெண்கள் மறுத்தால் சம்மதம் என தான் அறிவதாகக் கூறி மீண்டும் மீண்டும் தன் வேண்டுகோளை வலியுறுத்துகிறார். அவள் மறுத்துவிட்டாள்.

Chapter 19:

Mrs. பென்னட் கணவனிடம் போய் எலிசபெத்தை வற்புறுத்தச் சொல்கிறாள். காலின்ஸை மணக்காவிட்டால் தான் இனி எலிசபெத் முகத்தில் விழிக்க மாட்டேன் என்கிறார். தகப்பனார். நீ காலின்ஸை மணந்தால் நான் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்கிறார். Mrs.பென்னட்டின் முயற்சிகள் தொடர்ந்தன. காலின்ஸ் மறுத்துவிட்டார்.

Chapter 20:

மறு நாள் பெண்கள் மெரிடன் வந்து விக்காமை சந்திக்கிறார்கள். விக்காம் தான் ஏன் நடன நிகழ்ச்சிக்கு வரவில்லை என விளக்கமாகக் கூறுகிறான். நான் வந்து அசம்பாவிதம் நேரக் கூடாது. என வரவில்லை என்கிறான். எலிசபெத் அவன் பொறுமையை மெச்சுகிறான். வீடு திரும்பியதும் கரோலினிடமிருந்து அனைவரும் புறப்பட்டுவிட்டதாகக் கடிதம் வந்தது. கடிதத்தில் டார்சியின் தங்கை பிங்லியை மணப்பதை அனைவரும் விழைவதாக எழுதியிருந்தது.

Chapter 21:

பென்னட் குடும்பத்தார் லூகாஸ் வீட்டில் சாப்பிட ஏற்பாடு. ஷார்லோட் மறுநாளும் வந்து காலின்ஸுடன் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள். எலிசபெத்திற்கு காலின்ஸ் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஷார்லோட் இதை ஏற்றாள். மறுநாள் அதிகாலையில் காலின்ஸ் எழுந்து லூகாஸ் வீட்டிற்குப் போனான். மாடியிலிருந்து காலின்ஸ் வருவதைக் கண்ட லூகாஸ் வந்து வரவேற்றாள். வெகு சீக்கிரம் காலின்ஸ் ஷார்லோட்டை மணப்பது முடிவாயிற்று. லூகாஸ் குடும்பமே சந்தோஷப்பட்டது. அடுத்த நாள் காலின்ஸ் தன்னூர் திரும்புகிறான். ஷார்லோட்டிடமிருந்து காலின்ஸை மணக்கும் செய்தியை அறிந்த எலிசபெத் அவதியால் துடிக்கிறாள். நடக்காது என்கிறாள். ஷார்லோட் நான் காதலை நாடவில்லை. வசதியை நாடுகிறேன். உனக்கு காலின்ஸ் பிடிக்கவில்லை. அவர் நல்ல மனிதர். அதனால் ஏற்றுக் கொண்டேன் என்கிறார்.

Chapter 22:

சர் வில்யம்ஸ் வந்து Mrs. பென்னட்டிடம் தன் மகள் காலின்ஸ் மணக்கப் போவதாகக் கூறினார். ஒரு வாரம் கழித்து காலின்ஸ் லாங்பார்னுக்கு வந்தார். Mrs பென்னட்டால் கோபத்தை அடக்கவே முடியவில்லை.

Vol II

Chapter 1

கரோலின் ஜேனுக்கு எழுதி அந்த ஆண்டு நெதர் பீல்ட்டுக்கு திரும்பவில்லை என்று தெரிவித்தார்.ஷார்லோட் திருமணத்தை ஜேன் ஆமோதித்தார். அவள் நிலைமை வேறு. நாம் அதைக் கருத வேண்டும் என்கிறாள். ஜேன் நிலைமை எல்லோராலும் பேசப்பட்டது.Mr.பென்னட் இது வழக்கம் தானே என்றார். எலிசபெத்தை நோக்கி உனக்கு விக்காம் மீது பிரியம். ஒரு நாள் அவனும் உன்னை ஏமாற்றுவான் என்றார். இந்த நாட்களில் அடிக்கடி விக்காம் எலிசபெத்தை சந்திப்பது அவனுக்கு இதமாயிருந்தது. விக்காம் சொல்லும் பொய் எங்கும் பரவி டார்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது.

Chapter 2:

காலின்ஸ் லாங்பார்னை விட்டுப் புறப்பட்டார். Mr&Mrs. கார்டினர் குழந்தைகளுடன் வந்தார். Mrs. கார்டினர் பிங்லியை பற்றித் தெரிந்து கொண்டு ஜேனைத் தன்னுடன் இலண்டனுக்கு வரும்படி அழைத்தார். எலிசபெத் விக்காமுடன் பழகுவதைக் கண்டவர், அவளை எச்சரிக்க நினைத்தார்.

Chapter 3:

பணமில்லாதவர் எலிசபெத் விக்காமை ஏற்கக் கூடாது என்றார். ஷார்லோட் எலிசபெத்தை தன்னூருக்கு வரும்படி அழைத்தாள். ஜேன் இலண்டனிலிருந்து கரோலினைப் பார்த்ததாகவும், கரோலின் தன்னை வந்து பார்த்ததாகவும், பிங்லிக்கு தான் அங்கிருப்பது தெரிந்தும் வந்துபார்க்கவில்லை எனவும் எழுதினாள். விக்காம் இதனிடையே மிஸ் கிங் என்ற பெண்ணுக்கு £ 10,000 வந்தது என அறிந்து அவளை நாடினான்.

Chapter 4:

அடுத்த இரண்டு மாதங்கள் - ஜனவரி, பிப்ரவரி கழிந்தன. மார்ச்சில் எலிசபெத் ஷார்லோட் வீட்டுக்குப் போக வேண்டும். எலிசபெத் வழியில் இலண்டனுக்குப் போய் ஒரு நாள் ஜேனுடன் தங்கிவிட்டுப் போகிறாள். கரோலின் வீட்டுக்கு வந்த விபரம் அறிந்தாள். ஆனால் இனி பிங்லியை எதிர்பார்க்க முடியாது என அறிந்தாள். கரோலின் வீட்டுக்கு ஜேன் போய் வந்ததும், பிங்லியை சந்திக்க முடியாததும் எலிசபெத் அறிந்தாள்.Mr. கார்டினர் Lake districtக்கு summer tour போவதாகவும், எலிசபெத் வரவேண்டும் எனவும் கூறினார்.

Chapter 5:

எலிசபெத் சர்வில்யம் மரையாவுடன் ஷார்லோட் வீட்டை அடைகிறார். காலின்ஸ் வீட்டையும், தோட்டத்தையும், அங்குள்ள மேஜை நாற்காலிகளையும் அசட்டுத்தனமாக வர்ணித்து, லேடி காதரீனை வாயாரப் புகழ்ந்து அறிமுகத்தை முடித்தார். மறுநாள் லேடிகாதரீன் மகள் வண்டியில் ஷார்லோட் வீட்டெதிரில் நிற்பதை எலிசபெத் பார்த்து டார்சிக்குப் பொருத்தமான பெண் எனக் கேலியாக நினைக்கிறார். அவள் உடல் நலமில்லாதவள்.
 

Chapter 6:

காலின்ஸ் எலிசபெத்தையும் சர்வில்யம்ஸ், மரையாவுடன் ஷார்லேட்டை லேடி காதரீன் வீட்டிற்கு அழைத்தப் போகிறான். லேடி காதரீன் எலிசபெத் அழகான உயர்குடிப் பெண் என்று கூறுகிறாள். அவளுடைய குடும்பத்தைப் பற்றியும், அவள் வயதையும் கேட்கிறாள். எலிசபெத் தெளிவாகப் பேசுவது லேடி காதரீனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவுமிருக்கின்றது.

Chapter 7:

சர் வில்யம் மகளுடன் ஒரு வாரமிருந்தார். மகளுடைய வசதியும், அந்தஸ்தும் அவர் மனதை நிறைத்தன. இருவாரம் கழித்து டார்சி சின்னம்மா வீட்டிற்கு கர்னல் பீட்ஸ் வில்லியத்துடன் வருகிறான். இவன் டார்சிக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஜார்ஜியானாவுக்கு டார்சியுடன் கார்டியன். டார்சி எலிசபெத்தைப் பார்க்க வருகிறான். ஏற்கனவே ஷார்லோட் டார்சியின் கவனத்தை அறிவாள். டார்சி தனக்காக வீட்டிற்கு வரவில்லை. உனக்காகவே வருகிறான். என்று எலிசபெத்திடம் கூறுகிறார். என் தமக்கை இலண்டனில் 3 மாதமிருந்தாள். நீங்கள் சந்தித்தீர்களா? என டார்சியை எலிசபெத் கேட்கிறாள். பீட்ஸ்வில்லியம் எலிசபெத்தின் தெளிவான உரையாடலை பெரிதும் ரசிக்கிறான்.

Chapter 8:

மீண்டும் எலிசபெத் டார்சியையும் பீட்ஸ் வில்லியத்தையும் லேடி காதரீன் வீட்டில் சந்திக்கிறாள். ஆர்வமாக டார்சி அவள் பாடும் பொழுது அருகில் வருகிறான். டார்சி நெதர்பீல்டில் நடனம் ஆட மறுத்ததை பீட்ஸ்வில்லியத்திடம் கூறுகிறார். தனக்கு பேசத் தெரியாது என டார்சி அவனிடம் ஒப்புக் கொள்கிறான். லேடி காதரீன் மகள் மீது டார்சிக்கு அபிப்பிராயமில்லை என எலிசபெத் புரிந்து கொள்கிறாள்.

Chapter 9:

மறுநாள் எலிசபெத் தனியாக அறையிலுள்ள பொழுது டார்சி வருகிறான். அனைவரும் இருப்பதாக நினைத்து வந்தவன் அவளைத் தனியாகக் காண்கிறான். இருவரும் சங்கடப்படுகின்றனர். பிங்லி, நெதர்பீல்ட், ஷார்லோட்டைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுப் போகிறான். உன் மேல் டார்சிக்குக் காதல் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்கிறாள் ஷார்லோட். எலிசபெத் டார்சியை மணக்க வேண்டும், இல்லையெனில் பிட்ஸ் வில்லியமை மணக்கவேண்டும் என ஷார்லோட் கருதுகிறாள்.

Chapter 10:

வீட்டுக்கு அருகேயுள்ள பார்க்கில் எலிசபெத் உலாவும் பொழுது பல முறை சந்திக்கிறார். ஒரு நாள் பிட்ஸ்வில்லியத்தை சந்தித்துப் பேசும் பொழுது பிங்லியைப் பற்றிக் கேட்கிறாள். டார்சி பிங்லியை ஒரு மோசமான திருமணத்திலிருந்து காப்பாற்றினான் என்ற செய்தி கேட்டு அவளுக்கு தலையை சுற்றியது.

Chapter 11:

வீட்டிற்குத் திரும்பி மனப்பாரத்தைக் குறைக்க ஜேன் கடிதங்களை எலிசபெத் படிக்கும் பொழுது டார்சி வருகிறான். தணியாத தன் காதலை வெளியிடுகிறான். தன்னை மணக்கும்படி கேட்கிறான். உன் குடும்பம் மட்டமானது, என்றாலும் என் ஆர்வம் என்னை மீறுகிறது என்றவுடன் அவளுக்குக் கோபம் வருகிறது. தமக்கையை சீரழித்தவனை எப்படி மணப்பேன் என்கிறாள். தான் திருமணத்தைத் தடை செய்ததை ஒப்புக் கொள்கிறான். அது சரியான செயல், அதற்காக தான் வருத்தப்படவில்லை என்றவுடன் அவளுக்கு அதிகக் கோபம் வருகிறது. விக்காமுக்கு இழைத்த அநீதி பெரிதல்லவா எனக் கேட்கிறாள். அது டார்சிக்குப் பொறுக்கவில்லை. ஏன் தான் அவள் மறுத்தாள் என மீண்டும் கேட்கிறான். உனது சுயநலம், கர்வம், மரியாதையில்லாமல் பழகுவது எல்லாம் தடையாக இருக்கிறது என்கிறாள். மனம் புண்படுகிறான். அவளை வாழ்த்திவிட்டு போகிறான்.

Chapter 12:

நீண்ட கடிதம் எழுதி மறுநாள் அவனிடம் தருகிறான். விக்காம் சொன்ன பொய்கள், பெற்ற பணம் (3000), தங்கையைக் கடத்த முயன்றது, தன்னுடைய நேர்மை, ஜேன் விஷயம், அதில் பிங்லியிடம் ஜேன் இலண்டனில் இருப்பதை மறைத்தது ஆகியவற்றை விளக்கி எழுதினான். மறைத்தது தவறு, தடுத்தது சரி என்றான். இத்தனை பெரிய மனிதன் மனதில் தன் மீது காதல் உண்டானது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

Chapter 13:

டார்சி கடிதத்தில் என்ன எழுதியிருப்பான் என அவளால் யூகிக்க முடியவில்லை. ஆர்வமாகக் கடிதத்தைப் படித்தாள். எதுவும் மனதில் பதியவில்லை. என்ன படித்தோம் எனத் தெரியவில்லை. பதைபதைப்பும் கோபமும் வந்தது. விக்காமைப் பற்றியவையை மனம் ஏற்கவில்லை. ஜேனைப் பற்றியவை மனத்தை இரணமாக்கின. ஆத்திரம் அடங்கிய பின் டார்சி சொன்னவை, தாயார், தங்கைகள் நடந்தது மனக் கண்முன் வந்து ஜேன் திருமணத்தைத் தடுத்தது டார்சியில்லை, தன் குடும்பம் என்று உணர்ந்தாள். விக்காம் நடத்தையை இப்பொழுது நினைத்துப் பார்த்தால், அதிலுள்ள பொய், தில்லுமுல்லு தெரிய வருகிறது. ஜேனைப் பற்றி ஷார்லோட் சொன்னதும், தன் குடும்பத்தாரின் நடத்தையும் அவள் மனத்தைப் புண்படுத்தின. அவள் வெட்கப்பட்டாள். வீண் பெருமைக்குத் தான் பலியானது தெரிந்தது. அத்துடன் வீட்டிற்கு வந்தபொழுது டார்சி ஊருக்குப் போகும் முன் அவளிடம் விடைபெற வந்து அவளில்லை என்பதால் போய் விட்டதாக அறிந்தாள்.

Chapter 14:

எலிசபெத் காலின்ஸ் குடும்பத்தாரோடு மீண்டும் லேடி காதரீனைப் பார்க்கப் போகிறாள். எலிசபெத், மேலும் ஒரு மாதம் தங்கினால், தன்னுடன் இலண்டன் அழைத்துப் போவதாக காதரீன் கூறியதை எலிசபெத் ஏற்கவில்லை. டார்சி கடிதம், விக்காமைப் பற்றிய விவரங்கள், பிங்கிலியின் பிரியம் ஆகியவை எலிசபெத்ற்கு மனப்பாடமாயின. அவள் ஊர் திரும்புகிறாள்.

Chapter 15:

மரையாவும், எலிசபெத்தும் ஊர் திரும்புகிறார்கள். வழியில் இலண்டனில் ஜேனும் உடன் வருகிறாள்.

Chapter 16:

மூன்று பெண்களும் இலண்டனிலிருந்து வந்து வழியில் ஒரு ஹோட்டலில் லிடியா, கிட்டியை சந்தித்து தங்கள் வீட்டு வண்டியில் ஊர் திரும்புகின்றனர். மிஸ் கிங் லீவர்பூல் போய்விட்டதாகவும் விக்காம் அவளை மணக்க முடியாது எனவும் தெரிவிக்கிறாள். தகப்பனுக்கு ஜேனும், எலிசபெத்தும் வந்தது திருப்தி. அனைவரும் பிரைட்டனுக்குப் போக வேண்டும் என வீடு லிடியாவால் அமர்க்களப்படுகிறது.

Chapter 17:

வீடுவந்து சேர்ந்ததும், எலிசபெத் ஜேனிடம் டார்சி கூறியதை எடுத்துச் சொன்னாள். பிறகு டார்சி கடிதத்தில் விக்காமைப் பற்றி எழுதியிருந்ததைக் கூறினாள். ஜேனுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. விக்காமைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்வதா, இல்லையா எனக்கருதி, இருவரும் அது தேவையில்லை என முடிவு செய்தனர். ஓரளவு எலிசபெத் மனம் அடங்கிற்று. தாயார் பிங்லி விஷயத்தை எலிசபெத்திடம் பேசிக் குறைப்பட்டாள்.

Chapter 18:

மெரட்டனிலிருந்து இராணுவ முகாம் பிரைட்டனுக்கு மாறுவது இளம் பெண்கட்கு ஏமாற்றமாக இருந்தது. குடும்பம் முழுவதும் பிரைட்டனுக்குப் போக வேண்டும் என்பது தாயார் விருப்பம். தகப்பனார் மறுத்துவிட்டார். கர்னல் பார்ஸ்டர் மனைவி லிடியாவை அழைத்திருந்தாள். தன்னையும் அழைக்கவில்லை என கிட்டி அழுதாள்.லிடியாவை அனுப்பக்கூடாது என எலிசபெத் தகப்பனாருடன் வாதாடினாள். விக்காமைப் பற்றி தானறிந்ததை அவரிடம் கூறாமல் கேட்டாள். ஒன்றும் தவறு வராது என தகப்பனார் லிடியாவை பிரைட்டனுக்கு அனுப்பினார். எலிசபெத் விக்காமை சந்தித்த பொழுது விக்காம் டார்சி, லேடி காதரீன் ஆகியவரைப் பற்றி விசாரித்தான். டார்சியைப் பற்றி தன் மனம் ஓரளவு மாறியதாக எலிசபெத் கூறினாள்.

Chapter 19:

தகப்பனார் இளமை, அழகு, விறுவிறுப்பால் கவரப்பட்டு அறிவில்லாத பெண்ணை மணந்தார். எலிசபெத் இதை நன்கு அறிவாள். விக்காம் ஊரைவிட்டுப் போய்விட்டான். Mrs. கார்டினருடன் Lake Estateக்குப் போனது பெரிய சந்தோஷம். Mr . & Mrs. கார்டினர் வந்தனர். Lake Estate வரை போக முடியாது, டார்பிஷயர் வரை போகலாம் என்றது ஏமாற்றமாயிருந்தது. டார்பிஷயர் வந்தனர். பெம்பர்லி 5 மைல் இருப்பதை அறிந்து அங்கு போகலாமா என எலிசபெத்தைக் கேட்டனர். பெம்பர்லியில் டார்சி குடும்பத்தினரில்லை எனக் கேள்விப்பட்டு பெம்பர்லியைப் பார்க்க எலிசபெத் சம்மதித்தாள்.

Vol.III

Chapter 1

பெம்பர்லியை தூர இருந்து பார்த்தவுடன் எலிசபெத்திற்கு மூச்சே நின்றுவிட்டது. Mrs.ரெய்னால்ஸ் அனுமதியுடன் உள்ளே சென்று பார்க்கும் பொழுது ஒரு ஜன்னலருகே நின்று எலிசபெத்திடம் அரண்மனை போலிருப்பதையும் ஜன்னல் வழித்தெரியும் காட்சியின் உயர்வையும் கண்டு, நான் இந்த வீட்டுக்கு தலைவியாக இருந்திருக்கலாம் என நினைக்கிறார். அங்கு விக்காம் படம் உண்டு. அதைப் பார்த்து ரெய்னால்ஸ் இவன் மானேஜர் மகன். ராணுவத்தில் சேர்ந்து தறுதலையாகி விட்டான் என்றார். டார்சியைப் போன்ற இனிமையான முதலாளியில்லை என்றார். இருவரையும் பற்றி கார்டினர் கேள்விப்பட்டது வேறு. எலிசபெத் இவள் பேச்சை நம்பக் கூடாது என்றாள். பெம்பர்லியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் டார்சி கண்ணில்படுகிறார். டார்சிக்கு தூக்கிவாரி போட்டது. எலிசபெத்திற்குத் தாங்கவில்லை. டார்சி இவளுடைய பெற்றோர்களை விசாரித்தாள் தூரத்திலிருந்து Mr. Mrs. கார்டினர் கவனித்தனர்.

விடைபெற்று டார்சி சென்றான். Mr. Mrs கார்டினர் அவன் உருவத்தையும் நயமான பழக்கத்தையும் புகழ்ந்தனர். எலிசபெத் டார்சியின் மாறிய பழக்கம் தனக்குப் புதியது என்றாள். மிண்டும் டார்சி எங்கிருந்தோ எதிரில் வந்தான். Mr. Mrs. கார்டினரை அறிமுகப்படுத்த வேண்டினான். தான் ஒருநாள் முன்னதாக எதிர்பாராமல் வந்ததாகக் கூறினான். மறுநாள் பிங்லி தங்கைகளுடன் வருவதாகக் கூறினான், தங்கை ஜார்ஜியானாவை எலிசபெத்திற்கு அறிமுகப்படுத்த அனுமதி கேட்டான். Mr. கார்டினரை எஸ்டேட்டில் மீன் பிடிக்க அழைத்தான். வீட்டுக்குள் வந்து சாப்பிட அழைத்தான். அவள் மறுத்துவிட்டாள். வண்டிவரை வந்து அவர்களை வழியனுப்பினான்.

Chapter 2:

எலிசபெத் டார்சியை தங்கையுடன் மறுநாள் எதிர்பார்த்தாள். அவன் அன்றே வந்துவிட்டான். தங்கையை எலிசபெத்திற்கு அறிமுகப்படுத்தினான். உடன் பிங்லி வந்திருந்தான். பிங்லி ஆர்வமாக எலிசபெத்துடன் பேசினான். ஜார்ஜியானா எலிசபெத்தையும் Mr. Mrs. கார்டினரையும் பெம்பர்லிக்கு விருந்துக்கு அழைத்தாள். Mr. Mrs.. கார்டினருக்கு டார்சிக்கு எலிசபெத் மீது அளவு கடந்த காதலிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இது விக்காம் பிறந்த இடமாதலால் அனைவரும் அவனை அறிவர். எங்கு பார்த்தாலும் கடனாகி, அக்கடனை எல்லாம் டார்சி கொடுத்ததாகக் கேள்விப்பட்டனர்.

Chapter 3:

இப்பொழுதுதான் எலிசபெத்திற்கு ஏன் கரோலின் தன்னை வெறுக்கிறாள் எனப்புரிந்தது. டார்சி தன்னை விரும்புவதால் கரோலின் பொறாமைப்படுவதை இப்பொழுது எலிசபெத் அறிந்தாள். எலிசபெத்துடன் Mr. Mrs. கார்டினர் பெம்பர்லிக்கு வந்தபொழுது அங்கு டார்சியில்லை. பிங்லியின் சகோதரிகளிருந்தனர். பிங்லியின் சகோரிகள் வரவேற்றனர். ஆனால் பேசவேயில்லை. டின்னர் வந்தது. பேசாமல் அனைவரும் சாப்பிட்டனர். டார்சியும் மற்றவர்களும் வந்தனர். கரோலின் மட்டும் இராணுவம் மெரிட்டனிலிருக்கிறதா. உங்கள் குடும்பத்திற்கு ராணுவம் போய்விட்டால் பெரிய கஷ்டமல்லவா? என எலிசபெத்தைக் கேட்டாள். எலிசபெத் நிதானமாக இருந்தாள். எலிசபெத்தும் மற்றவர்களும் போனபின் கரோலின் டார்சியிடம் எலிசபெத்தை குறைவாகப் பேசினாள். அவள் நீண்ட விமர்சனம் முடிந்தபின் டார்சி எலிசபெத் என் கண்ணுக்கு மிக அழகானவள் என்றான்.

Chapter 4:

எலிசபெத் ஜேனிடமிருந்து எதிர்பார்த்த கடிதம் வரவில்லை. விலாசம் தவறி தாமதமாக அடுத்த கடிதத்துடன் வந்தது. Mr. Mrs. கார்டினர் சர்ச்க்குப் புறப்பட்டனர். லிசபெத் அறையில் கடிதங்களைப் படிக்கத் தங்கிவிட்டாள். கடிதம் லிடியா விக்காமுடன் ஓடிப் போனதைப் பற்றியது. படித்துப் பதறினாள். உடனே புறப்பட வேண்டும். டார்சி வந்து நிலையை அறிந்து வருந்தி, தன் வீட்டிற்கு வருவது தவறியது பற்றி வருந்தி திரும்பப் போகிறான். மாமாவும் மாமியும் வந்தவுடன் ஊர் திரும்புகிறாள். திரும்புமுன் மாமி பெம்பர்லிக்குப் போவது என்னாவது என்ற பொழுது நான் டார்சியிடம் விபரம் கூறிவிட்டேன் என்கிறாள். அந்த அளவு நெருக்கம் இருப்பது மாமிக்குப் புரிந்தது.

Chapter 5:

விக்காம் லிடியாவுக்கு ஊறு செய்ய முடியாது. அப்பெண் கர்னல் வீட்டில் தங்கியிருக்கிறாள். மேலும் அவள் ஆதரவில்லாவளில்லை எனக் கார்டினர் எலிசபெத்திடம் கூறுகிறார். மெரிட்டன் வந்து சேருகின்றனர். Mrs. பென்னட் புலம்புகிறார். Mr. பென்னட் இலண்டனிலிருந்து இன்னும் வரவில்லை. ஜேன் லிடியா கர்னல் மனைவிக்கு எழுதிய கடிதத்தை எலிசபெத்திடம் தருகிறாள்.

Chapter 6:

காலின்ஸ் துக்கம் விசாரித்து பென்னட்டிற்கு கடிதம் எழுதுகிறார். விக்காம் சூதாடி, ஏராளமாகக் கடன் வாங்கியுள்ளாள் என்று கர்னலிடமிருந்து தான் பெற்ற செய்தியை கார்டினர் லாங்பார்னுக்கு எழுதினார். Mr. பென்னட் இலண்டனிலிருந்து திரும்புகிறார்

Chapter 7:

Mr. பென்னட் திரும்பிய இரண்டு நாள் கழித்து லிடியாவையும், விக்காமையும் தான் சந்தித்து, லிடியாவை வீட்டிற்கு அழைத்து வந்ததை Mr. கார்டினர் எழுதுகிறார்.லிடியாவுக்கு £ 100 சீதனம் தருவதாகவும், ஆண்டுக்கு £ 100 கொடுத்து, அவன் கடன்களை அடைத்து, திருமணம் ஏற்பாடு செய்ததைக் கடிதம் கூறுகிறது. விக்காம் இராணுவத்தில் வடபகுதிக்கு நியூகேசிலுக்கு போவதாகவும் அழைத்தால் மெரிட்டன் வருவதாகவும் கடிதம் கூறிற்று. Mr. பென்னட் எலிசபெத்தின் சொல்லைப் (லிடியாவை அனுப்பவேண்டாம்) பாராட்டுகிறார்

Chapter 8:

£ 10,000 பவுனுக்குக் குறையாமல் கார்டினர் விக்காமுக்குக் கொடுத்திருக்க வேண்டும். எப்படி தான் அதைத் திருப்பித்தர முடியும் என Mr. பென்னட் எலிசபெத்திடம் குறைப்பட்டுக் கொள்கிறார். லிடியா திருமணத்தை அறிந்த எலிசபெத் ஏன் இதை டார்சியிடம் கூறினோம் என வருத்தப்பட்டார்.

Chapter 9 & 10:

லிடியா லாங்க்பார்ன் வரக்கூடாது என்ற முடிவை Mr. பென்னட் பெண்கள் வேண்டுகோளால் மாற்றி அவர்களை அழைக்கிறார் பெண்ணோ மாப்பிள்ளையோ வெட்கப்படவில்லை. டார்சி திருமணத்திற்கு வந்திருந்ததை வாய் தவறி லிடியா உளறிவிட்டு பாதியில் நிறுத்திக் கொள்கிறாள். எலிசபெத் மாமிக்கு விபரம் கேட்கிறார். டார்சி விஷயத்திலிருந்து வந்து விக்காமைக் கண்டுபிடித்து, பணம் கொடுத்து, மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வேலை வாங்கிக் கொடுத்த விபரத்தை மாமி எலிசபெத்துக்கு எழுதுகிறார். எலிசபெத் அக்கடிதத்தை வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து படித்தபொழுது விக்காம் வந்து பேசுகிறான். டார்சியை பார்த்ததாகக் கூறுகிறார். டர்பிஷயரில் தன் சர்ச்சைப் பார்த்தாயா எனக் கேட்கிறான். எலிசபெத் அவன் சர்ச்சில் பாதிரி வேலையை மறந்து பணம் பெற்றதை அறிவேன் என்கிறாள்.

Chapter 11:

பிங்லி நெதர்பீல்ட் வந்த செய்தி Mrs.பென்னட்டிற்கு வருகிறது. Mrs.பென்னட் மீண்டும் கணவனை பிங்லியைப் பார்க்க வேண்டும் என்கிறார். அவர் மறுத்துவிடுகிறார். பிங்லியும், டார்சியும் லாங்பார்ன் வருகிறார்கள்.லிடியா திருமணத்தை Mrs. பென்னட் பிங்லியிடம்  கூறுகிறாள். தன் வீட்டில் சாப்பிட அழைக்கிறார்.

Chapter 12:

டார்சி வந்தவன் தன்னுடன் பேசவில்லை என எலிசபெத் பொருமுகிறார். மீண்டும் டார்சி வந்தபொழுது எலிசபெத்தால் பேசமுடியவில்லை. உங்கள் தங்கை பெம்பர்லியிருக்கிறாளா? என மட்டும் கேட்க முடிந்தது. ஜேன் மீண்டும் சந்தோஷமாகிவிடுகிறாள்.

Chapter 13:

சில நாள் கழித்து பிங்லி வருகிறான். Mrs. பென்னட் ஜேனைத் தவிர மற்ற பெண்களை அழைத்துக் கொண்டு போகிறாள். பிங்லி தன்னை மணக்கும்படி ஜேனைக் கேட்கிறான். வீடே சந்தோஷத்தால் ஆரவாரமாகிறது.

Chapter 14:

சில நாள் கழித்து லேடி காதரீன் வந்து எலிசபெத்தை டார்சியை மணக்கக் கூடாது எனக் கண்டிக்கிறார். அவள் மறுத்துவிடுகிறாள்.

Chapter 15:

காலின்ஸ் பென்னட்டிற்கு எலிசபெத் டார்சியை மணக்கக் கூடாது என எச்சரித்துக் கடிதம் எழுதுகிறார்.

Chapter 16:

கொஞ்ச நாளில் டார்சி, பிங்லியுடன் லாங்க்பார்ன் வருகிறார். உலாவப் போன பொழுது எலிசபெத் லிடியாவைப் பற்றி தான் அறிந்தவற்றிற்கு மனமார நன்றி செலுத்துகிறாள். டார்சி தனக்கு வந்த மனமாற்றத்தை விவரவமாகக் கூறி, எலிசபெத்தை மணக்கும்படிக் கேட்கிறார். அவள் சம்மதிக்கிறாள்.

Chapter 17:

ஜேனிடம் எலிசபெத் டார்சியைப் பற்றிக் கூறியதை அவள் நம்பவில்லை. அதே போல் தந்தையும் நம்பவில்லை. விபரம் தெரிந்தால் நம்புகிறார்கள். லிடியாவுக்கு டார்சி செய்ததை எலிசபெத் இருவரிடமும் விளக்குகிறார்.

Chapter 18:

Mrs. கார்டினருக்கு எலிசபெத் டார்சி தன்னை மணக்க இருப்பதை எழுதுகிறார்.

Chapter 19:

இரு திருமணங்கள் நடந்தன. Mrs.பென்னட் எலிசபெத் திருமணமறிந்து வாயடைத்துப் போனாள். லேடி காதரீன் கோபம் அடங்க நாளாயிற்று. கரோலின் தலைகீழே மாறிவிட்டாள். ஜார்ஜியானா எலிசபெத்தை ஏற்றுக்கொண்டாள். 1 வருஷம் கழித்து பிங்லி பெம்பர்லிக்கு அருகே ஒரு எஸ்டேட் வாங்கினார். கிட்டி ஜேன், எலிசபெத்துடன் நாட்களைக் கழிக்கிறாள். அடிக்கடி பென்னட் எலிசபெத்தைப் பார்க்க வருகிறாள். கடைசிவரை எலிசபெத் விக்காமுக்கு பணம் அனுப்புகிறாள்.

 

****

 



book | by Dr. Radut