Skip to Content

07. சிறு குறிப்புகள்

"சிறு குறிப்புகள்"

தியான அறை

சிறுவர்கள் தியான அறையில் கொஞ்சநேரம் வேலை செய்தால் முகம் பிரகாசமாகிவிடும். பெரியவர்களுக்கு அந்த அளவு வித்தியாசம் தெரியாது.மலர்கள் பல இடங்களிலிருந்தாலும் தியான அறையிலுள்ளவை அதிக நேரம் வாடாமலிருக்கும்.தியான அறையில் அன்னையின் சக்தி அதிகமிருப்பதை அனுபவம் உணர்த்தும்.

ஒரு பிரெஞ்சுக்காரர் புதுவையில் தங்கிவிட்டுத் திரும்பும்பொழுது தன் டைப்ரைட்டரை விற்க விரும்பினார்.மொழி வேறானாலும், எழுத்து key board கிட்டத்தட்ட ஒன்றாகவேயிருக்கும்.அது எலக்ட்டிரிக் டைப்ரைட்டர்.பரவலாக எலக்ட்ரிக் டைப்ரைட்டர் பயன்படாத நாட்கள்.வெளிநாட்டுப் பொருள்களை விரும்பி வாங்கிவிட்டால், ஒரு ரிப்பேரானால் அதைச் சரி செய்ய முடியாது. ஒரு முறை அனுபவப்பட்டவர்கள் வெளிநாட்டுப் பொருள்களை வாங்கத் தயங்குவார்கள்.பிரெஞ்சுக்காரரால் அதை விற்க முடியவில்லை.இதை வாங்கினால் பிரெஞ்சுக்காரருக்கு உதவி என்றும் சிலரைக் கேட்டார்கள்.எதுவும் நடக்கவில்லை. கடைசியில் ஒரு அன்பர் அதை வாங்கினார்.

Key board சற்று மாறியிருப்பதால் பிழை அடிக்கடி வருகிறது. ஆனால் மெஷின் நன்றாக வேலை செய்கிறது.சுமார் 5 ஆண்டுகட்குப் பின் ரிப்பேராகி விட்டது.ரிப்பேர் செய்ய புதுவையிலும், சென்னையிலும் வசதியில்லை.என்ன செய்வது என்று கேள்வி.ஒரு அன்பர், "டைப்ரைட்டரைத் தியான அறையில் வைக்கலாம்" என்றார்.எல்லோரும் சிரித்தனர்.1 வாரம் கழித்து டைப்ரைட்டரை என்ன செய்வது என மீண்டும் பேசியபொழுது, எடுத்து உபயோகப்படுத்தினர்.நன்றாக வேலை செய்தது! ஜடமான பொருள்களும் அருளைப் பெறும்.ஆனால் மெதுவாகப் பெறும்.

stapler பெரிய சைஸ் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்தனர். கொஞ்சநாள் கழித்து வேலை செய்யவில்லை.அடுத்தமுறை வாங்கி வந்தவர் வந்தபொழுது அவரிடம் காட்டினர்.சரி செய்துவிட்டார். அவர் ஊருக்குப் போனபின் பின் போட்டால் 2 பின் விழுகிறது. எவருக்கும் சரி செய்யத் தெரியவில்லை. தியானஅறையில் 10நாள் வைத்திருந்தனர்.மீண்டும் வேலை செய்யவில்லை.மீண்டும் தியான அறையில் வைத்தனர்.அடுத்தமுறை பெரிய fileக்கு staple போடவேண்டும் என்றபொழுது stapler ஐ எடுத்துப் பயன்படுத்தினால், 2பின் விழுகிறது."சரி, தியான அறையிலேயே இருக்கட்டும். ஊரில் இதை ரிப்பேர் செய்யும் கடையிருக்கிறதா என விசாரிப்போம்" என்றனர்.

  • 2 நாள் கழித்து stapler வேலை செய்கிறது!அறையில் வை என்ற பொழுது, எடுத்துப்போனவர் அறையில் வைக்காமல், என்ன செய்யலாம் எனயோசனை செய்து, கடைக்குப் போய் pin வாங்கி வந்து போட்டுப் பார்த்தால், வேலை செய்கிறது.
  • புதிய பின் வேலை செய்வதாகப் புரிந்துகொள்ளலாம்.
  • வேலை செய்வது அருள் எனப் புரிந்துகொள்வது நம்பிக்கை.

 

புதிய வெளியீடு

கணவன் மனைவி

கர்மயோகி

விலை : ரூ.20/-

தபால் பெற ரூ.10/- சேர்த்து M.O செய்யவும்



book | by Dr. Radut