Skip to Content

04. அன்பர் கடிதம்

"அறுவைச் (அற்புத) சிகிச்சை"

அன்புள்ள அன்னை,

ஆயிரம் வணக்கத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் கடந்த 2 வருடங்களாக அன்னையின் அருளைப் பெற்று வருகிறேன். பம்பாயில் வசிக்கும் நான் 22-4-2000 Chennai வந்து 24-4-2000 பாண்டி வந்து சமாதி தரிசனமும் பெற்றேன். கடந்த 3 மாதங்களாக எனது இடது காதில் மிகுந்த வலி ஏற்பட்டு dischargeஉம் இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அதே காதில் major surgery செய்து hospital இல் 4-5 days இருந்து, மிகவும் சிரமப்பட்டு recover ஆக 1 மாதம் ஆகிவிட்டது. என் தந்தை ENT surgeon. 24-4-2000 அன்னையிடம் எனக்கு இந்த operation இருக்கக்கூடாது என்றும், மாத்திரைகள் சாப்பிட்டுச் சரியாக வேண்டுமென்றும் வெகுவாக வேண்டிக் கொண்டேன். பின் 25-4-2000 செவ்வாயன்று என் தந்தையும், மற்றொரு doctorஉம் microscope examination செய்ததில், operation செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமாகக் கூறினர். நான் மிகவும் depressed ஆகிவிட்டேன். பின் அன்னையை மனதில் நினைத்து "இதுவே உன் விருப்பமானால் அதை நான் மகிழ்வுடன் ஏற்கிறேன். நீதான் என்னுடன் இருந்து மற்றவர்களுக்கு தொல்லை தராமல் காக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன். 27-4-2000 என்னை operation table இல் போட்டது mask போட்டிருந்த என் தந்தை, தாடியுடனும் வெற்றுடலில் துண்டு போட்டிருந்த ஸ்ரீ அரவிந்தராகத் தெரிந்தார். பின் மயக்க நிலையில் ஓர் அற்புதமான கண்ணைக் கூச வைக்கும் வெள்ளை ஒளியைக் கண்டேன். அங்கே 6 வருடங்களுக்கு முன் எங்களை பிரிந்து துன்பக்கடலில் எங்களைத் தள்ளிவிட்டு 33ஆம் வயதில் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்த என் அக்காவை ஒளியாய் உணர்ந்தேன். அவள் தான் எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் இருப்பதாயும், ஆனந்தமாக இருப்பதாயும் என்னிடம் கூறுகிறாள். மேன்மேலும் பரந்து விரிந்த வெண்மை ஒளி. அங்கே பளிங்கு போன்ற பாதங்களையும் அதைச் சுற்றித் தங்கநிற வளையத்தையும் கண்டதில் பேரானந்தத்தைப் பெற்றேன். பின் அந்த ஆனந்தத்தில் ஒன்றிப் போனேன். "இந்த உடலை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், நான் இந்த ஆனந்தத்தில் உன்னிடமே இருக்கிறேன்" என்று நான் அன்னையிடம் கூறுகிறேன். அதன் பிறகு நான் எவ்வாறு normal ஆக ஆனேன் என்பது தெரியாது. பின் நான் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்துவிட்டேன். என் தந்தை "4 மணி நேரம் மயக்கத்தில் இருந்த நீ இப்படி நல்லபடியாக இவ்வளவு விரைவாக recover ஆகியுள்ளது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது" என்று ஆச்சர்யத்துடன் சொல்கிறார். இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், என் விருப்பப்படி அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் அன்னையின் பாததரிசனமென்னும் அற்புதப் பேறு கிட்டாமலே போயிருக்கும் என்றுதானோ என்னவோ அன்னையே இந்த அற்புதச் சிகிச்சை ஏற்பாட்டை எனக்காகச் செய்து இருக்கிறார். ஆகவே அன்னையை சரணடைந்தவர்க்கு அற்புத இன்பங்கள் காத்திருக்கின்றன என்பதை எழுதி இக்கடிதத்தை முடிக்கிறேன்.

இப்படிக்கு அன்னையை என்றும் மறவாத மனம் வேண்டும்.

 

********

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒவ்வொரு பகுதியின் ஜீவன் அப்பகுதிக்குள்ள அளவை நிர்ணயிக்கிறது. ஜீவனின் இஷ்டப்படி அளவை மாற்றலாம்.

Comments

04. அன்பர் கடிதம்para 1, line

04. அன்பர் கடிதம்

para 1, line 5 - dischargeஉம்இருந்தது - dischargeஉம் இருந்தது

இப்படிக்கு அன்னையை என்றும் மறவாத மனம் வேண்டும்.  - 2nd paragraph.

ஸ்ரீ அரவிந்த சுடர்

from ஒவ்வொரு to மாற்றலாம். - as a para it should be there.

05. Agenda     Goodwill etc. etc.           -    to be centred

                        பக்தியும் etc. etc.               do.

after para 1 -

                    from  நெஞ்சு etc. etc. to பக்தி எனப் பெயர். - to be centred.

bulleter point 1 - line 1 - இருந்ததுஎன்றார் - இருந்தது என்றார்

           do.           line 3 - மனம்பக்தியால் - மனம் பக்தியால்

          do.      2    line 3 - தரிசிக்கும்பொழுதிருந்தது- தரிசிக்கும் பொழுதிருந்தது

         do.       6   line 3 -வறண்டநெஞ்சுக்குரியவர். - வறண்டநெஞ்சுக்குரியவர்.

from நல்லெண்ணம் to நெஞ்சு பூரிப்பவர் நல்லெண்ணத்திற்குரியவர். -

separate paragraph.

ஸ்ரீ அரவிந்த சுடர் - should be like a paragraph.

 

 



book | by Dr. Radut