Skip to Content

02. இம்மாதச் செய்தி

நண்பன் உயிர் கொடுப்பான். தாயார் தன் உடலின் பகுதியைக் குழந்தைக்குக் கொடுக்கிறாள். குரு தன் ஆன்மாவின் அனுக்கிரஹத்தைச் சிஷ்யனுக்கு அளிக்கிறார்.

இறைவன் தன் ஜீவனில் சித்தித்தவருண்டு.அன்னையை ஆன்மாவில் கண்டு அன்னை ஆகியவருண்டு. அவர்கள் தன்னையும், தன் ஜீவனையும், ஜீவன் அடைந்த முக்தியையும், இறைவனாக ஆன்மாவில் மாறிய யோக சித்தியையும் தன்னைப் பக்தியால் கொடுத்துத் தெய்வீக அன்பின் பூரணத்தை மனித வாழ்வின் சிறப்பில் காண்பார்கள்.

தெய்வம் உலகில் பிறப்பதை அவதாரம் என்போம். மனிதவுடல் தெய்வம் மலரும் பீடமானால் அது அருளின் அவதாரம் அன்பொளியாக ஜனிப்பதாகும்.

Comments

02. இம்மாதச் செய்தி   para 1,

02. இம்மாதச் செய்தி

 
 

 

para 1, line 1 - தன்உடலின் - தன் உடலின்

from இறைவன் to காண்பார்கள் - separate next paragraph.

 from தெய்வம் to ஜனிப்பதாகும் -              do.



book | by Dr. Radut