Skip to Content

15. மாம்பழத் தோப்பு

அன்னை இடையறாது நம் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்.அது அவர் அவதார நோக்கமல்ல, எனினும் செய்கிறார்.மனிதன் இறைவனாகி, பூலோகம் சுவர்க்கமாக அவர் அவதரித்தார்.அதற்கு மனிதன் அன்னையை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்கவேண்டும்.இதன் கட்டங்கள் ஏராளம்.அதற்குரிய ஆராய்ச்சி பெரியது.யோகத்திற்குத் தேவையில்லாதது.வாழ்வில் முடியாதது.நான் இங்கு கருதுவது ஒரு சிறிய, முக்கிய, சிறப்பான அம்சம்.திறமை, நேர்மை, ராசி, அம்சம், பொறுமை, உழைப்புள்ள ஆயிரம் பேர் உலகில் பிறந்த நிலையில் கேட்பாரற்று மடிகின்றனர்.அவர்களில் சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து அமெரிக்கா போகின்றனர், பாரத இரத்தினம் பெறுகின்றனர், மத்திய மந்திரியாகின்றனர், கோடீஸ்வரராகின்றனர்.இதுபோன்ற அம்சமுள்ள அனைவரும் அன்னையிடம் இதுபோன்ற பரிசைத் தவறாது பெறலாம் என்பதே நான் கருதுவது.எதுவுமில்லாதவர் அவற்றைப் பெறுவதும் முடியும்.அதற்குரிய முறை வேறு.உலகில் எவராலும் எதுவும் முடியும் என்ற அன்னையின் கொள்கையில் ஒரு அம்சம் இது.

1967இல் 160ரூபாய் சம்பாதித்தவர் 1972இல் ரூ.650 பெற்றபொழுது வருஷத்தில் இலட்சரூபாய் அவருக்கு அளித்ததை மறுத்து விலகினார்.மற்றொருவர் 1977இல் ரூ2000/- சம்பளம் பெற்றவர் கீழ் சொன்ன முறை ஒன்றால் 1985இல் தொழிலதிபரானார்.அம்முறைகளை இங்கு விவரிக்கிறேன்.

நாமெல்லாம் அன்னையிடம் வந்த முதல் ஓரிரு ஆண்டுகளில் வாழ்வில் ஏற்பட்ட நல்ல மாற்றம், உயர்ந்த மாற்றம், அதிர்ஷ்டம், ஆச்சரியங்களை அறிவோம்.அது முதற் தொடர்பு.முடிவு எந்த மனிதனும், முயன்றால் முறையாக முயன்றால் எதுவும் சாதிக்கலாம் என்பது.அதற்கு மனித சுபாவம் எப்படிப்பட்டது, நம் சுபாவம் எந்த நிலையிலுள்ளது, எந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்கிறோம், என்பதை அறியவேண்டும்.

வடநாட்டுக் கதை ஒன்றை நான் பல முறை எழுதுவதுண்டு.அக்கதை மாம்பழம் மனிதன் அறியுமுன் நடந்தது.குரங்குக்கூட்டம் மாம்பழத் தோப்பில் ஆற்றங்கரையில் வசித்தது.ஒரு நாள் அரசன் தன் பரிவாரத்துடன் வருவதை ராஜா குரங்கு பார்த்து, யாரோ அரசனுக்கு மாம்பழத்தைக் கொடுத்துள்ளனர். அதைப்பெற அவன் வருகிறான்.இனி நாம் இங்கிருக்க முடியாது.என் பரிவாரத்தை நான் காப்பாற்ற அக்கரைக்கு அவர்களை அழைத்துப்போக வேண்டும் என இரு கரையிலுள்ள மரங்களில் கொடிப்பாலம் கட்டியது.கொடி ஒரு முழம் குறைந்தது.தானே அக்குறையைத் தன் கையால் பிடித்து நிறைவு செய்து குரல் கொடுத்தது.பாலத்தின் மீது குரங்குகள் அனைத்தும் வந்து சேர்ந்தன.ராஜாவுக்கு எதிரி பொறாமை நிறைந்த குரங்கு, ராஜா குரங்கை அழிக்கத் திட்டமிட்டுக் கடைசியாய் வந்து பாலத்தைக் கடந்து ராஜாவைக் கீழே பிடித்துத் தள்ளியது.ராஜா குரங்கின் மண்டை உடைந்தது.அரசன் எதிர்கரையிலிருந்து இதைக் கண்டவன் ஆற்றைக் கடந்துவந்து ராஜா குரங்கை மடியில் வைத்து ஆறுதல் சொன்னான்."நான் என் கடமையைச் செய்துவிட்டேன்" எனக் கூறிக் குரங்கு இறந்துவிட்டது.இதையே அன்பருக்குச் செய்தவர் ஒருவர்.அவரே அன்பரை அன்னைக்கு அறிமுகப்படுத்தியவர்.ஒரு முறை அன்னையைத் தரிசனம் செய்தவர்.அன்பரால் உயிர் பிழைத்தெழுந்து அன்பர் உயிரை எடுத்தவர்.தம் சொத்தை முழுவதும் இழந்து தற்கொலை செய்து கொண்டார்.பிறகு பிள்ளைகள் நடுத் தெருவுக்கு வரும் நேரம், முதல் தரிசனம் செயல்பட்டு பிள்ளைகள் சீக்கிரம் கோடீஸ்வரர்களானார்கள்.

முதலில் எதுவும் தெரியாமல் அன்னையிடம் வருகிறோம்.பிறகு சுத்தத்தை ஏற்கிறோம்.கெட்டதை விட்டு நல்லதை ஏற்க முடிவு செய்கிறோம்.பிறகு அப்படி மாறுகிறோம்.முதலில் ஓரளவும் பிறகு முழுவதும் மாறுகிறோம்.நல்லதையும் விடுகிறோம்.இத்துடன் ஒரு circle வட்டம் முடிகிறது.அடுத்த வட்டம் ஆரம்பித்தால் அடுத்த கட்டத்தில் இதே கட்டங்கள் தொடரும்.ஒவ்வொரு கட்டத்திலும் பலன்களைக் காண்கிறோம்.2, 3, 4 கட்டங்கள் கடந்து வந்தபின் மாம்பழக்குரங்கின் குணம் நம்மிடம் இருப்பது தெரியும்.(பலனை அடைந்து துரோகம் செய்வது) மனத்தில் மனித சரித்திரம் முழுவதுமிருப்பதால் (subconscious) ஆழ்மனதில் "குரங்கு" அவசியம் இருக்கும்.மேற்கூறியதில் வாழ்வு அவரை விலக்கிப் பிள்ளைகட்குச் செல்வத்தைக் கொடுத்தது.அறிவால் அதை உணர்ந்து, சமர்ப்பணத்தால் விலக்கினால் அதிர்ஷ்டம் வரும்.

  • எந்தக் கட்ட முயற்சிக்கும் உயர்ந்த பலன் உண்டு. எல்லோர் மனதின் ஆழத்திலும் 'குரங்கு' உண்டு.
  • முதலிலேயே அதைக் கண்டு முழுவதும் விலக்கினால் முடிவான பலன் கிடைக்கும்.

 



book | by Dr. Radut