Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

636) சக்தியை விரயம் செய்வது எல்லா நிலைக்கும் உண்டு. உடலுக்கு உணர்வு இருப்பதுபோல் மனத்திற்கு எண்ணமுண்டு. எதிர்பார்க்கும் எண்ணமும், அவசரமும் அதற்குச் சமமானவை. உடல் உணர்வைக் கட்டுப்படுத்த, மனத்தின் பொறுமையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவசரம் அதிக விரயம்.

நாம் விரயத்தை முக்கியமாகக் கருதுகிறோம். இயற்கைக்கு விரயம் என்பதில்லை என்கிறார் அன்னை. மரச்சாமான் செய்பவன், ஒரு சாமான் உடைந்துவிட்டால், அல்லது கதவு அளவு பொருத்தமில்லாவிட்டால், அது வீணாகிறது என்கிறான். பேப்பர் கம்பனியில் (sheet making) பேப்பர் சரியாக வராவிட்டால், அதை சுருட்டி (pulp) பேப்பர் குழம்பில் போட்டுவிடுவார்கள். விரயம் என்பதில்லை. களிமண் பானையாக உருவாகாவிட்டால், மீண்டும் களிமண்ணாகிறது. அங்கு விரயமில்லை. இயற்கைக்கு விரயம் என்பதில்லை. பல பொருள்களை, உருவங்களை, நிகழ்ச்சிகளை உற்பத்திசெய்ய இயற்கை முயல்கிறது. உருவானால், உருவமே பலன். உருவாகாவிட்டால் இயற்கையின் சக்தி, சக்தியுடன் சேர்ந்து மீண்டும் முயல்கிறது. விரயமில்லை.

திருச்சியிலிருந்து கோவைக்குப் போகும்பொழுது, தாமதமானால் வேலை கெட்டுவிடுகிறது. போகின்றவர் ஆபீஸில் வேலை செய்பவரானால், அன்றெடுத்த லீவு விரயமாகிறது. ஆனால் அதே பயணத்தைப் பொழுதுபோக்குக்காக வேலையில்லாதவர் ஏற்றுக்கொண்டால், தாமதமானால், விரயமில்லை. பவானியைப் பார்ப்பதற்கு பதிலாக ஈரோட்டைப் பார்க்கிறார். எங்கு தாமதமாகிறதோ அதைப் பார்க்கிறார். அதுவும் பொழுதுபோக்கு. வீட்டில் வேலையில்லை என்பதால் அங்கும் நஷ்டமில்லை. அதுபோல் இயற்கை ஆயிரம் வழிகளில், ஆயிரம் நிகழ்ச்சிகளையும், உருவங்களையும், பொருள்களையும், மனிதர்களையும், எண்ணங்களையும்,உணர்வுகளையும், தன்னைத் தானே அனுபவிக்க, தன் செயலைத் தான் அனுபவிக்க, தன் முயற்சியைத் தானே ரசிக்க, இரண்டு வயது குழந்தைபோல் துள்ளி விளையாடுவதால், இயற்கைக்கு விரயமில்லை. நாம் இயற்கையின் பகுதி. ஒரு குறிக்கோளை நாடிச் செயல்படுகிறோம். பல சமயம் அதுபோல் எதையும் நாடுவதில்லை. மகன் பட்டம் எடுக்க வேண்டும் எனில், ஒரு வருஷம் பாஸாகாவிட்டால், பட்டம் எடுக்கும் குறிக்கோள் ஒரு வருஷம் தள்ளிப் போகிறது. அந்த ஒரு வருஷம் வீணாயிற்று. பட்டம் எடுப்பது குறிக்கோளில்லை, படிப்பதே இலட்சியம் என்றால் 4 வருஷம் படித்தாலும் அது படிப்பு, 5 வருஷம் படித்தாலும் அது படிப்பு. விரயமில்லை.

நாம் எப்பொழுதும் ஒரு குறிக்கோளைக்(பலனை) கருதி செயல்படுவதால் அது தாமதமானால் விரயம் எனக் கருதுகிறோம். மனம் எண்ணத்தால் செயல்படுகிறது. கண், பார்வையால் செயல்படுகிறது. உடல், உணர்வால் செயல்படுகிறது. உடல், உணர்வு பலன் தர, உணர்வு கட்டுப்பட வேண்டும். கட்டுப்படாவிட்டால் செயலில்லை. செயல் இல்லாவிட்டால் பலன் இல்லை. காலையில் 10 மணிக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டிய பையன், 9 மணியிலிருந்து குறுக்கிடும் செயல்களைப் புறக்கணித்துப் பள்ளிக்குத் தயாராகி புறப்படுகிறான். அந்த நேரம்  "குமுதம்" வந்தால் பார்த்துவிட்டு வைத்துவிடுவான். அப்புறம் படிக்கலாம் எனத் தனக்கே சொல்லிக் கொள்வான். அண்ணன் அவனைப் புத்தகத்திற்கு அட்டை போட்டுக் கொடு எனில் சாயந்திரம் போட்டுத் தருகிறேன் என்பான். 9 3/4 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனைக் கட்டுப்படுத்துகிறது. குமுதம் படிக்கும் ஆர்வம் கட்டுப்படுகிறது. அதனால் பள்ளிக்குப் போகிறான். பலன் வருகிறது. உணர்வு கட்டுப்பட்டால்தான் பலன். வெளி நிர்ப்பந்தத்திற்கு உணர்வு கட்டுப்படுவதைவிட, உள்ளிருந்து கட்டுப்பாடு எழுமானால், பலன் பதின்மடங்காகும். உடல் உணர்வு கட்டுக்கடங்காதது. பசி அவற்றுள் முக்கியமானது. பயம் உலுக்கும். இனஉணர்வு கட்டுப்பாட்டிலிருக்காது. தூக்கம் நம்மை மீறிவிடும்.

உடலின் உணர்வும், மனத்தின் எண்ணமும் தொடர்புள்ளவை. உடலுக்கு உணர்வு என்பதுபோல் மனத்திற்கு எண்ணம் கருவி. மனம் உயர்ந்த கருவி. மனமே உடலை உற்பத்தி செய்தது. மனத்திற்கு உடல் கட்டுப்பட்டால், பலன் அதிகம். இன்று உடலுக்கு மனம் கட்டுப்பட்டிருப்பதால் பலன் சிறியது. எனவே மனத்தில் எண்ணம் கட்டுப்பட்டால், உடலில் உணர்வு கட்டுப்படும்.

எதிர்பார்ப்பதும், அவசரமும் மனத்தின் எண்ணங்கள். அவை கட்டுப்பட்டால் பொறுமையின்மை போய் பொறுமை வரும். மனம் கட்டுப்படும். அதனால் உடலுணர்வு கட்டுப்படும். அபரிமிதமான பலனுண்டு.

****** 

637) "திறமையான வேலை யோகமாகும்" - திறம்பட வேலை செய்தால் செயலில் நேரடி ஞானம் பிறக்கும்.  

"நேரடியான ஞானம் செயலில் மறைந்துள்ளது" - அறிவைச் சரியாகப் புரிந்துகொண்டால் ஜோதி நேரடி ஞானமாகும்.  

 "பூரணனுக்குரிய சொல் ஜோதி, நேரடியான ஞானம் ஜோதிமயமானது" - புலன்களால் சிதைக்கப்படாத பகுத்தறிவு நேரடியான ஞானமாகிறது.  

பகுத்தறிவு புலன்களிலிருந்து விடுபட்டால் அதன்மூலம் பூரணத்திறமை பூரண ஞானமாகும்.  

வேதாந்தம் செயலின் நேரடி ஞானத்தையும், பூரணனின் ஞானத்தையும் இணைக்க முயல்கிறது.

நாம் மனிதனை உடல், உணர்வு, அறிவு, ஆன்மா எனப் பிரிக்கிறோம். அவை நான்கும் ஒன்றே, அமைப்புச் சற்று மாறியிருக்கும். மனத்திற்கும், ஆன்மாவுக்கும் சூட்சுமம் அதிகம், உணர்வுக்கும், உடலுக்கும் சூட்சுமம் குறைவு. ஒரே கருத்தை வசனமாகவோ, கவிதையாகவோ சொல்லலாம். வசனம், கவிதை வேறுபட்ட தோற்றங்கள். செய்தி ஒன்றே என்பதுபோல் உடலும் ஆன்மாவும் ஒன்றே, ஒரே பொருளால் ஆனவையே.

சூட்சுமம் குறைந்தால் பார்வை குறைகிறது. அறிவும் தெளிவும் குறைகின்றன. உடலுக்குரிய செயல், அறிவுக்குரிய எண்ணத்தைவிட தெளிவில் குறைந்துள்ளது. செயல் உழைப்பாக இருப்பது முதல் நிலை. உழைப்பு அனுபவத்தால் திறமையாகிறது. திறமை செயலின் தரத்தை உயர்த்துகிறது. தரம் முழுவதும் உயர்ந்த நிலையில் திறமைக்கு ஆன்மாவுக்குள்ள தெளிவு வந்து செயல் யோகமாகிறது. கடமையைச் செய்வதே வழிபாடு என்று அனைவரும் உலகில் சொல்வதின் தத்துவம் இது. ஆன்மாவுக்குள்ள தெளிவு ஞானம். அதை நேரடியாகப் பெறுவது நேரடி ஞானம் (intuition).

கம்பனியில் சூப்பர்வைசர், மானேஜர், தொழிலாளி எனப் பலர் வேலை செய்கின்றனர். முதலாளி முதலில் ஏமாந்து போகிறார். பிறகு ஆராய்ச்சியால், அனுபவத்தால் யார் யார் தன்னை ஏமாற்றுகிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள் எனக் கண்டுபிடிக்கிறார். அதற்குள் 5 அல்லது 10 வருஷமாகிறது. அதன் பிறகு தொழிலுக்குரிய நேரடி ஞானம் வருகிறது. அதன் பின் புதியவரை நியமிக்குமுன், பார்த்தவுடனே இவன் நாணயமானவன், திறமையற்றவன், சுறுசுறுப்பு, சோம்பேறி என அறிகிறார். 5 அல்லது 10 வருஷத்தில் இதைப் பெறுவதற்கு பதிலாக 5 அல்லது 10 வாரத்தில் திறமை (skill) பெற்றுத் தரும்.

கம்பனி ஆரம்பித்தவுடன், சூப்பர்வைசரை மெஷினை அமைக்கச் சொல்லிவிட்டு தான் வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக, மெஷின் வாங்கியவுடன், எப்படி அமைப்பது (install) என்பதைத் திறமையுடன், முழுத் திறமையுடன் முதலாளி கற்றுக்கொண்டால், அந்த மெஷினை அஸ்திவாரம் போட்டு ஏற்றும்பொழுது யார்யார் திறமைசாலி , யார் சோம்பேறி, யார் ஏமாற்றுபவன் என்று பத்து வருஷத்திற்கு பின் வரும் ஞானம் பத்து நாளில் வரும்.

அதேபோல் மானேஜர் என ஒருவரை நியமித்து ஆபீஸைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதற்குப் பதிலாக, தபால், கணக்கு, பைல், வரி, போன்ற எல்லா ஆபீஸ் வேலைகளையும் முதலாளி தானே முதலில் முழுத் திறமையுடன் கற்றுக் கொள்ள ஒரு வாரம் ஆகும். அதற்குப் பயிற்சி (training) எனப் பெயர். பயிற்சி முடிவான திறமையைக் கொடுத்துவிட்டால், ஆபீஸ் நிர்வாகத்தில் ஆரம்பத்திலிருந்தே ஞானம் ஏற்படும். விற்பனை, வெளிவிவகாரம் ஆகியவற்றிற்கும் இதுவே உண்மை. குடும்பத்தலைவனுக்கும் கணவனாக இருப்பதற்கும், மனிதனாக இருப்பதற்கும், ஆன்மாவாக இருப்பதற்கும் சட்டம் இதுவே.

பயிற்சி பல துறைகளில் உண்டு. எல்லாத் துறைக்கும் பயிற்சியில்லை. கணக்கெழுத, டைப் அடிக்க, மெஷின் ஓட்டப் பயிற்சியுண்டு. வந்தவருடன் பேச, எவ்வளவு உற்பத்தி செய்வது என்பதற்குப் பயிற்சியில்லை. தேங்கிய சரக்கை விற்கப் பயிற்சியளிக்கும் இடமில்லை. பொய் சொல்லும் மானேஜரைச் சமாளிக்கும் பயிற்சி இதுவரை ஏற்படவில்லை. வீட்டிற்கு வந்தால் எதைச் செய்தாலும் திருப்தியடையாத மனைவியை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பயிற்சிக்கு எங்கு போவது? பணத்தைக் கண்டால் உடனே ரேஸுக்குப் போகும் கணவனை, அல்லது முகஸ்துதியாகப் பேசுபவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு செலவுக்குச் சிரமப்படும் பிள்ளையை எப்படிச் சமாளிப்பது என மனைவிக்கு யார் பயிற்சியளிக்கப் போகிறார்கள்? வாழ்வு ஒரு பயிற்சிக்கூடம். செயல்கள் அதன் அரங்கம். கவனம் அதன் கருவி, பலன் அளவுகோல். முதலாளி - அல்லது தொழிலாளி, கணவன், மனைவி எவராக இருந்தாலும் - தான் செய்யும் செயல்கள் எதிர்பார்க்கும் பலனைத் தருகிறதா எனக் கூர்ந்து கவனித்தால் தெளிவு உயர்ந்து ஞானம் பிறந்து நேரடி ஞானமாகி, முழுப்பலன் வந்து, செயல் யோகமாகும் என்பது கீதையின் வாக்கு. திறமை உச்சகட்டத்திற்குப் போனால் செயல் யோகமாகிறது என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

மனிதன் அறிவுடையவன். அவன் அறிவு புலன்களால் செயல்படுகின்றது. கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டும், நுகர்ந்தும், ருசித்தும் நாம் புறஉலகை அறிகிறோம். அவை சொல்வதை நூற்றுக்கு நூறு பங்கு நம்பி ஏற்றுக் கொள்கிறோம். அறிவை, புலன்கள் அறியாமையாக்குகின்றன. ஒரு பென்சிலைத் தண்ணீர் நிறைந்த டம்ளரில் வைத்தால் அது வளைந்து ஒடிந்து தெரிகிறது. வெய்யிலில் போனால் கானல்நீர் தெரிகிறது. நாம் கண்ணால் கண்டதை நம்பினால் வாழ்வு கானல் நீராகும். பென்சில் உடைந்துவிட்டது என நம்புவோம். நாம் அதுபோல் நம்புவதில்லை. மற்ற இடங்களில் முழுமையாக நம்புகிறோம்.

காலையிலிருந்து நம்மிடம் பேசுபவர்கள் சொல்வதை எல்லாம் முழுமையாக நம்பினால் மாலையில் பயித்தியம் பிடித்துவிடும். அல்லது மாலையில் மடையன் பட்டம் நிரந்தரமாக வரும். நாம் கேட்பதை அப்படியே நம்பாமல் யோசித்து நம்புகிறோம். புலன்கள் விஷயத்தில் நாம் யோசிக்காமல் முழுமையாக நம்புவதால் அறிவு, அறியாமையாகிறது. புலன்களை ஒதுக்கினால் நாம் செவிடாகக், குருடாக, ஜடமாகிவிடுவோம். நிஷ்டையில் புலன்கள் அவிந்து மனம் கண் உதவியின்றி பார்க்கிறது. காதின் உதவியின்றிக் கேட்கிறது.

புலன்களை ஒதுக்கியபின் பொருள்களில் உள்ள ஜோதி நமக்கு தெரிகிறது. அறியாமை அறிவாகிறது. இருள் விலகி ஜோதி தெரிகிறது. அறிவு ஞானமாகி அதை மனம் நேரிடையாகப் பெற முடிகிறது. அதுவே நேரடி ஞானம் (intuition). மேலுள்ள இறைவன் பூரண ஞானமுடையவன். செயலில் நேரடி ஞானம் புதைந்துள்ளது. அதை விடுவிப்பது வேதாந்த ஞானம். வேதாந்த ஞானம் பெற்றால் செயலின் நேரடி ஞானம் பூரண ஞானமுள்ள பூரணனுடன் இணையும். 

******** 

638) ஜோதிக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பு, திறமைக்கும் வேலைக்கும் உண்டு.  

செயலின் ஞானம் திறமை.

தெய்வலோகம் சிருஷ்டியின் பிரபஞ்சப்பகுதியின் உச்சி. சிருஷ்டியை ஒளியின் பகுதி, இருளின் பகுதி அல்லது அறியாமையின் பாகம், அறிவின் பாகம் எனப் பிரித்தால் கீழ்ப்பகுதியின் உச்சியில் தெய்வலோகம் அமைகிறது. தெய்வங்களும், இந்தக் கணக்குப்படி அறியாமைக்குட்பட்டவர்களேயாகும். இந்த லோகம் காலத்தாலும், அறியாமையாலும், இருளாலும், பகுதிகளாகப் பிரிந்து நிற்பது. மேற்பகுதி ஒளி, அறிவு, அனந்தம், காலம் கடந்த நிலை, ஆனந்தம், சத்தியம் ஆகியவற்றாலானது. மனித அறிவு, உணர்வால் அறிய முடியாதது (superconscient) என்பதாகும் இது. சிறு ஜோதியாக, ஒளியாக வெளிப்பட்டுத் தலை நீட்டுகிறது.

கீழ்ப்பகுதியில் தெய்வம், மனிதன், ஜடம் உள்ளன. ஜடம் (inconscient) இருள் செறிந்து, தன் ஆதியை மீண்டும் நினைவுபடுத்த முடியாத அளவு மறந்து, உணர்வற்று அசைவற்றுச், செயலற்று, பிறர் நகர்த்தினால் நகரும் நிலையிலுள்ளது. மனிதன் ஓரளவு தன்னையறியும் நிலையிலிருக்கிறான். அறிய விரும்பினால், மனிதன் தன்னை அறியமுடியும். மனிதன் ஜடமில்லை. அவனுள் இருள் உண்டு. ஆனால் ஜடம்போல் இருள் மட்டுமேயில்லை. தன் பிறப்பிடத்தை அறிய விரும்பினால் அதற்குரிய திறமையுண்டு மனிதனுக்கு. (Destiny of Man) மனிதப் பிறவிக்கு விதிக்கப்பட்ட முடிவான நிலை எது? என்ற கேள்வியை Life Divineஇல் எழுப்பி பகவான் பதில் சொல்கிறார்.

ஜோதிமயமான மேற்பகுதியைக் கண்ணால் காண முயன்றால் கண்கூசி இருளாகத் தெரியும். கீழ்ப்பகுதி இருளாலானது. ஒன்றான பிரம்மம் இருகூறாகப் பிரிந்து சிருஷ்டியாக நிற்கிறது. மீண்டும் இவை ஒன்று சேர்வது சிருஷ்டியின் முடிவு. அதைச் செய்ய ஒரு கருவி வேண்டும். சிருஷ்டியிலுள்ள தாவரத்தாலோ, விலங்காலோ அதைச் செய்ய முடியாது. ஏனெனில் அவற்றால் தன்னையறிய முடியாது.  தெய்வங்கள் ஒளி நிறைந்தவர்கள். ஆனால் அவர்கள் உலகத்தில் மாறுதல் என்பது இல்லை. பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற சூழல் இல்லை. மாறுதலிருந்தால்தான் வளர்ச்சியுண்டு. உடல் வளர்ந்து இறக்கின்றது. ஆனால் உடலால் சிருஷ்டியைப் பூர்த்தி செய்ய முடியாது. மனமும் வளருகின்றது. மனம் இரு பிரிவாக இருப்பதால், ஒருமையை அதனால் உண்டு பண்ண முடியாது. ஆன்மாவால் அது முடியும். மனிதனில் ஆன்மா சாட்சி புருஷனாய், அசைவற்ற, அழிவற்ற நிலையிலிருப்பதால், முடியும் என்றாலும், செயல்படும் நிலையில்லை. சைத்தியம் ஆன்மா என்பதால் அதனால் முடியும். சைத்தியம் வளரக்கூடியது என்பதால் அதனால் முடியும். தெய்வங்களுக்குச் சைத்தியமில்லை. அதனால் அவர்களால் சிருஷ்டியை ஒன்றாக்க முடியாது. மனிதனால் முடியும், அவனுள் பொதிந்துள்ள சைத்தியபுருஷன் அதைச் செய்யும்.

வேலையைத் திறமையாகச் செய்தால் திறமை மூலமாக நேரடி ஞானம் ஏற்பட்டு மேற்பகுதியிலுள்ள ஒளியை (ஜோதியை) அதனால் அறிய முடிகிறது. மேற்பகுதி ஜோதியாக வெளிப்பட்டுத் தலை நீட்டுவதை நேரடி ஞானம் கண்டு கொண்டு அத்துடன் கீழ்ப்பகுதியை இணைக்கிறது. 

********

639) மனம் அழிந்துவிட்டது. பழைய பழக்கம் வந்தால் மனம் மீண்டும் வருகிறது என்கிறார் அன்னை.

நாம் செய்வது நாமுள்ள நிலையை நிர்ணயிக்கும்.

சிந்தித்தால் மனத்தால் செயல்படுகிறோம்.

உணர்ந்தால் பிராணன் நம் மையம்.

சிந்தனை நின்றால், நாம் மனத்தைத் தாண்டுகிறோம். எல்லா வகையான எண்ணமும் அழிய வேண்டும். திருஷ்டியுள்பட அழிய வேண்டும்.

மனமும், உணர்வும் தன்னுள் அழிந்துவிட்டன. உடல் மட்டுமேயிருக்கிறது என்று அன்னை கூறுகிறார். மனம் அழிந்தது என்றால் என்ன? புதிதாகக் கற்றுக் கொள்ளும்பொழுது ஒவ்வொரு செயலையும் நினைத்து நினைத்துச் செய்கிறோம். நெடுநாள் பழக்கமாகிவிட்டால், நம்மையறியாமல் செய்கிறோம் - டைப் செய்தல், சைக்கிள் விடுதல், வயலின் வாசிப்பது, எழுதுவது போன்றவை - என்றால் முதலில் மனம் செய்ததை நாளானபின் உடலே செய்கிறது. உடலே அந்த அறிவைப் பெற்றுவிட்டது. இனி அந்தச் செயலுக்கு மனம் தேவையில்லை. அந்தச் செயலைப் பொறுத்தவரை மனம் அழிந்துவிட்டதாகும். வெளியே போகும்பொழுது கதவைப் பூட்டுகிறோம். புதிய வீட்டில் இதை நினைவாகச் செய்கிறோம். நாளானபின் இயல்பாக - ஆட்டோமேடிக் - கதவைப் பூட்டிவிட்டு ஆபீசுக்கு போனபின் கதவைப் பூட்டினோமா எனச் சந்தேகம் வருகிறது. மனம் இதை நினைவாகச் செய்யவில்லை என்பதால் நினைத்துப் பார்த்தால் நினைவு வருவதில்லை. இதை அனிச்சை (reflex) செயல் என்பார்கள். அந்த செயலைப் பொறுத்தவரை நினைவும் மனமும் அழிந்துவிட்டதாகும். எல்லாச் செயல்களையும் உடலே கற்று இயல்பாகச் செய்ய ஆரம்பித்தால் இனி மனத்திற்கு வேலையில்லை. மனம் செய்ததை இனி உடலே செய்கிறது என்ற நிலையில் மனம் கரைய ஆரம்பிக்கிறது. அதுபோல் கரைந்து, மனம் தனக்கு அழிந்துவிட்டது என்கிறார் அன்னை. அடுத்த கட்டத்தில் உணர்வும் அது போன்று அழிந்துவிட்டது என்கிறார். அன்னையின் திருவுடல் மனமாகவும், இதயமாகவும் வளர்ந்து திருவுருமாற்றம் அடைந்துவிட்டது. அந்த நிலைக்குப் போன பின்னும், பழைய பழக்கம் வருகிறது. அது வந்தால் மனம் (அழிந்த மனம்) மீண்டும் எழுகிறது என்கிறார்.

மனத்தின் செயல் எண்ணம். மனம் புரிந்துகொள்ள ஆரம்பித்தால் எண்ணம் எழுகிறது. எண்ணம் அற்றுப் போனபின் மௌனம் நிலைக்கிறது. எண்ணம் அழிவது முனிவர் நிலை. மனம் அழியமுடியும் என்று இதுவரை யோக மரபில் இல்லை. ஞானயோகம் எண்ணத்தைக் கருவியாகப் பயன்படுத்துவது. முழு மனத்தையும் கருவியாகப் பயன்படுத்திய யோகம் ராஜயோகம். ராஜயோகம் கருவியாகப் பயன்படுத்திய மனத்தை அழிப்பது பூரணயோகம். வளர்ந்து அனுபவப்பட்ட பின் இனித் தகப்பனார் உபதேசம் தேவையில்லை என்று பையன் மாறுவதுபோல், உடல் வளர்ந்து இனி மனம் தேவையில்லை என்ற நிலையை எட்டியபின் மனம் அழிகிறது. மனிதனுடைய எண்ணமும், முனிவருடைய எண்ணமற்ற சிந்தனையும், ரிஷியின் திருஷ்டியும் மனத்தின் செயல்களானதால், திருஷ்டியுட்பட அனைத்தும் - புரிந்துகொள்ளும் திறனனைத்தும் - அழிந்தால்தான் மனம் அழியும்.

********

640) எண்ணத்தை அழித்தால் மனம் அழியும். மனம் அழிந்தால் ஜீவியம் முன் வரும். பரபிரம்மத்தை அடைய முயல்பவர் தோற்றம், அதனுள் உறையும் சக்தி ஆகியவற்றைக் கடந்து செல்லவேண்டும். அவற்றின் அடிப்படையான பொருளை (substance) அதன் அமைப்பிலிருந்து (structure) விடுவிக்க வேண்டும். இறைமனம், ஆன்மா மூலம் செய்தால் சிருஷ்டிக்கு முன்னுள்ள பரம்பொருளையடையலாம். சத்தியஜீவியம், ஈஸ்வரன் மூலம் இதையே செய்தால் சிருஷ்டியிலுள்ள பரம்பொருளையடையலாம்.

ஈஸ்வரன் சிருஷ்டியிலுள்ள பரம்பொருள்.

வேலைக்குப் போனால் சம்பாதிக்கலாம் எனில், வேலை செய்ய ஆர்வம் வேண்டும். ஆர்வமிருந்தால் சிறப்பாக வேலை செய்யலாம். ஆர்வமில்லாவிட்டாலும் ஓரளவு செய்யலாம். ஆபீசில் வேலை செய்ய நமக்குத் திறமையுண்டு. இத்திறமையை நமக்களிப்பது நமது மனதின் அமைப்பு mental structure. மனம் 14 ஆண்டு படித்து படிப்பைப் பெற்றுள்ளது. அதனால் பேசத் தெரியும். ஒரு பேப்பரைக் கொடுத்தால் படித்துப் பதில் எழுதத் தெரியும். பட்டம் பெற்றிருப்பதால் குறித்த நேரத்தில் வரும் பழக்கமுண்டு. படிப்பும், குடும்ப அனுபவமுமிருப்பதால், ஆபீசில் நம்மை அனுப்பி ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ளச் சொன்னால், அங்குபோய் நடப்பவற்றைக் கவனித்துத் திரும்பவந்து நடந்ததைக் கோர்வையாகச் சொல்லத் தெரியும். பணம் கொடுத்தால் சரியாக எண்ணி வாங்க முடியும். வெளியூர் போகச் சொன்னால் ரயில், பஸ்ஸில் பிரயாணம் செய்து, போன ஊரில் ஹோட்டலில் தங்கி, சொன்ன விலாசத்தைக் கண்டு, கொடுத்த வேலையைப் பூர்த்தி செய்யத் தெரியும். இவற்றிற்கான திறமை (skill), பொதுத் திறமை (capacity), குறிப்பான திறமை (talent), பண்பு (values), நடத்தை, பழக்கம், சாதுரியம், சமயோசிதம், அனுபவம் ஆகியவை நமக்குண்டு. இவையெல்லாம் சேர்ந்து (mentral structure) மனத்தின் அமைப்பாகிறது. இவையில்லாவிட்டால் செயல்பட முடியாது. இதையெல்லாம் இல்லாதவரை இதுபோன்ற வேலைக்குப் போகச் சொன்னால், விசேஷத்தலிருந்து வந்து, "ரொம்ப பேர் பேசினார்கள்" என்பான். ஊருக்குப் போகச் சொன்னால், திரும்பிவந்து ரயிலில் டிக்கட் கிடைக்கவில்லை அல்லது போனேன் அந்த ஆபீசில் எவரும் பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்பன போன்ற பதில்கள் வரும்.

மனிதனுக்கு எல்லா நிலைகளிலும் இதுபோன்ற structure அமைப்புண்டு. அவன் ஜீவியத்திற்கு அமைப்புண்டு. அது கரைந்தால் ஜீவியம் கரையும். ஜீவியம் கரைந்தபின் அதன் அஸ்திவாரமான பொருளிருக்கும்(structure). அதற்கும் அமைப்புண்டு. அதுவும் கரைந்தால் அந்நிலை - உ-ம் மனம், உணர்வு, உடல் - கரையும். மனம் அழிய அதன் ஜீவியமும், பொருளும் அவற்றின் அமைப்பை இழக்க வேண்டும். அமைப்பை இழப்பது என்ன என்று விளக்குவது சிரமம். நமக்கு புரிந்த விஷயங்களைப்பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்கிறோம். புரியாதவற்றைப் பேசினால் கொட்டாவி வருகிறது. ஒன்றுமே புரியாதவற்றைப் பேசினால் குழப்பம் வருகிறது. நம் அறிவுக்கு அதிகமாக மீறிய விஷயங்களைப் பேசினால் தலையே காலியானது போலிருக்கிறது. புரிந்த விஷயங்களுக்கு மனதில் அமைப்புண்டு. அமைப்பில்லாத விஷயங்களைக் கேட்டுக் கொண்டால் உள்ளே போய் விஷயம் பதிவாவதில்லை. புரிந்த விஷயங்களுக்குள்ள அமைப்பை மனதிலிருந்து நீக்கினால் அமைப்பு கரையும். பழக்கத்தை விடுவது போன்ற செயல் இது.

மனம், உணர்வு, உடல், ஆன்மா அத்தனைக்கும் அததற்குரிய ஜீவியம் உண்டு. மனம் கரைந்தால், ஜீவியம் முன்வரும். அது கரைந்தால், பொருள் எழும். பொருள் கரைந்தால் மனம் முழுவதும் - மனமும், அதன் ஜீவியமும், பொருளும், கரையும். ஜீவியமும், பொருளும் கரைந்தபின் பரம்பொருளையடையலாம். பரம்பொருள் இரு நிலையிலுள்ளது. நாம் பின்பற்றும் மார்க்கத்தைப் பொருத்து அதற்குரிய பரம்பொருளையடையலாம்.

வறியவனுக்குப் பணம் பெரியது. பணத்தைச் சம்பாதித்துவிட்டால் வறுமை ஒழிகிறது. பெரும் செல்வம் பெற்ற வறியவன், சுவர்க்கத்திலிருப்பான். இதை இருவிதமாக வாழ்வு அவனுக்கு அளிக்க முடியும். இரண்டும் பணமே. ஒரு வகையில் ஒன்றே. உட்பொருளைக் கருதினால் வேறு. ஒரு செல்வர் அவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டு தன் செல்வத்தை அளித்தால், அவன் உச்சாணிக் கொம்புக்குப் போகிறான். அவனைப் பொறுத்தவரை எல்லாம் பெற்றாயிற்று. அவனே செல்வம் பெறும் திறமை பெற்றுச் செல்வத்தைச் சம்பாதித்தால், அது மேல். சிருஷ்டிக்கு அப்பாலுள்ள பரம்பொருள் செல்வம் போன்றது. சிருஷ்டியிலுள்ள பரம்பொருள் திறமை மூலமாக வந்த செல்வம் போன்றது.

மனத்தை அழிப்பதை இருவகையாகச் செய்யலாம். முதல் வழி ஆன்மாமூலம் செய்வது. மனமும், அதன் ஜீவியமும், பொருளும் அவற்றின் அமைப்பை இழந்தால் மனம் அழிகிறது. மீதியாக எதுவும் இல்லை. அது நிர்வாண நிலை. இதனால் ஆன்மா மூலம் நிர்வாணத்தை எய்தி, பரம்பொருளை அடையலாம். மோட்சங்களில் பல்வேறு உயர்வுகளுண்டு. அவற்றுள் இது ஒன்று.

ஆன்மா மூலம் செய்யாமல், ஆன்மீக மனம் (முனிவர், ரிஷி, யோகி, தெய்வம்) மூலம் மனத்தை அழித்தால் நாம் சத்தியஜீவியத்தை அடைகிறோம். அதன் மூலம் ஈஸ்வரனை அடைகிறோம். ஈஸ்வரனே சிருஷ்டிகர்த்தா. அவன் சிருஷ்டியைவிட்டு வெளியே போவதில்லை. ஈஸ்வரன் சிருஷ்டியை நாடி அதிலுள்ள பரம்பொருளை விடுவிக்க முயல்வதால், உலகில் - வாழ்வில் - சிருஷ்டியில் நாம் மனத்திலிருந்து உயர்ந்து பரம்பொருள்வரை உயர்ந்து கொண்டே போகிறோம். இது இறைவன் நாடும் லீலையை நம்மிடம் கொண்டு வரும்.

ஏன் இறைவனை வழிபட வேண்டும்? ஏன் நாமே இறைவனாகக் கூடாது? என்பது அன்னையின் கேள்வி. நாமே இறைவனாக நாம் சிருஷ்டியிலுள்ள பரம்பொருளை நாடவேண்டும். இன்று நாம் சிருஷ்டியில் மனமாக இருக்கிறோம். உயர்ந்து கொண்டே போனால் பரம்பொருளை யடையலாம். உயரும்பொழுது சிருஷ்டியை விட்டு வெளியே போகாமல், மனித வாழ்வினுள் உயர்ந்து கொண்டே போவதாகும். வாழ்வை ஏற்று, அதைவிட்டுப் போகாமல், பரம்பொருளை நாடினால், வாழ்வைத் தெய்வீக வாழ்வாக்கி பரம்பொருள் நிலைக்கு உயர்த்துவதாகும்.

- தொடரும்

***

 

ஜீவிய மணி
 
ஆன்மாவுக்கும் அகந்தையுண்டு.

 

Comments

640 - 5th heading - after

640 - 5th heading - after lines 5 & 7 - extra space.

para 1 - after lines 2 and 18 - extra space.

para 1, line 4 - நமக்கüப்பது - நமக்களிப்பது

para 2 - after line 5 - extra space

para 2, line 11 - காலி யானதுபோலிருக்கிறது -காலியானதுபோலிருக்கிறது

para 3, - after line 5 - extra space.

para 4, line 3 - அüக்க - அளிக்க

para 5, line 5 - மோட்சங்கüல் - மோட்சங்களில்

para 6, line 4 - வெüயே - வெளியே

para 6 - after lines 4 & 7 - extra space.

para 6, line 6 - மனத்திருந்து - மனத்திலிருந்து

637 - 2nd heading

637 - 2nd heading (contd.)

para 7, - after line 3 - extra space.

para 8, - after line 8 -     do.

para 9, - after line 2 -      do.

638 - 3rd heading

para 1 - after line 1 - extra space.

para 1 - after line 6 -        do.

para 3 -      do.     6 -         do.

   do.           do.    15 -        do.

   do.           do.     16 -       do.

para 4, line 2  - ஒüயை - ஒளியை 

para 4, line 3 -  வெüப்பட்டுத் - வெளிப்பட்டுத்

639 - 4th heading - 5th point - from சிந்தனை to அழிய வேண்டும். - single line space only.

para 1 - after line 7 - extra space

 do.              do.    11 -        do.

para 2 -        do.    7  -         do.

 

01. யோக வாழ்க்கை விளக்கம்

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

 
 

636) 1st heading - After 1st line extra space is there.

 
 

para 2, line 8 - வழிகüல் - வழிகளில் 

   do.  - after line 14 - extra space

para 3, - after line 2 - extra space

               do.           5 -          do.

para 3, line 5 - செயல்லை - செயலில்லை

para 3, line 9 -" "குமுதம்'"  - "குமுதம்" 

para 4, - after line 1 - extra space

para 4, - after line 2 - extra space

637) - 2nd heading -

point no.2 - after  line no.1 - extra space.

para 1 - after line no.3 - extra space.

para 2 - after line 8 - extra space.

para 4, line 4 - முதலாü - முதலாளி 

para 4, line 7 -  நாüல் -  நாளில்

 

para 5, line 6 - ஆரம்பத்திருந்தே - ஆரம்பத்திலிருந்தே

para 6, line 1 -  துறைகüல் - துறைகளில்



book | by Dr. Radut