Skip to Content

09.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

அன்றாட வாழ்வில் அருளின் அற்புதம் அனந்தம்.

(Spiritual significance of a token act)

  • அணுவே பிரம்மம்.
  • சிறிய காரியத்தினுள் சிருஷ்டியுள்ளது.
  • சமர்ப்பணம் சிறப்பானால் சாதாரணச் செயலில் சர்வேஸ்வரன் வெளிப்படுவான்.
  • கற்புக்கரசிக்குக் கடவுளின் அம்சம் உண்டு - "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'' எனக் கேட்கும் திறன் கணவனின் பணிவிடைக்குண்டு.
  • அன்னையின் சூழலில் நடக்கும் எந்தச் செயலும் உலகெங்கும் நடக்கும்.

மேற்கூறிய கருத்துகள் தத்துவம், அன்னை கூறிய விளக்கங்கள், அன்பர்களுடைய அனுபவம். அழைப்பு என்பது மூச்சு விடுவதுபோல் ஆழத்திலிருந்து எழவேண்டும். Token act ஒரு காரியத்தைச் செய்தால் அதன்மூலம் உலகமே புரளும் என்பதால் நாம் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று பொருளில்லை. மனத்தைத் தயார் செய்து பக்குவப்படுத்த வேண்டும். பக்குவப்பட்டதற்கு அடையாளம் எரிச்சல் வரும் இடத்தில் சந்தோஷம் வரவேண்டும். இம்மனப்பக்குவம் போதாது. இனி எனக்குக் கொடுமை, கடுமை, எரிச்சல் வரும்படியானவை உள்ளேயில்லை என்று நமக்குப் புலப்படவேண்டும்.

உடலால் செய்யும் வேலையில் ஆர்வம் வந்தால் திறமையும், தெம்பும் வரும். அறிவோடு அதையே செய்தால் ஆயிரம் மடங்கு செயல் உயரும். அமைதியாகச் செய்தால் காரியம் அற்புதமாகும். ஆர்வம் என்பது உணர்வு, அறிவு என்பது மனம், அமைதி ஆன்மா. ஆன்மா வெளிப்பட்டால் செயலில் திறமை உச்சக்கட்டத்திற்குப் போகும். ஒரு வேஷ்டியை சுருக்கி மோதிரத்தின் வழியாக செல்லும்படி அன்று இந்தியர் நெய்தனர் எனில் ஆன்மா நெசவில் வெளிப்பட்டது என்று பொருள். அந்த ஆன்ம ஒளி இந்தியருடம்பில் இன்றும் உள்ளது என்கிறார் அன்னை. வாயால் பேசுவது சத்தியமானால், கையால் செய்வது திறமைமிக்கதானால், உடல் சுறுசுறுப்பாக இருந்தால், வேலை செய்ய ஆர்வம் அதிகமானால், உள்ளொளி புறச்செயலில் வெளிப்படும். ஒன்று பதினாயிரமாகும். ஒரு token act செயலைச் செய்யுமுன் சமர்ப்பணத்தை ஏற்று, மனத்தை நிதானமாக்கி, ஆர்வமாக, தீட்சண்யமாகச் செயல்பட ஆரம்பித்தால், வழக்கமான பொய் வெளிவரும். அவற்றை அறவே விலக்கவேண்டும். எரிச்சல் எழும், எதிரியைக் கொளுத்தவேண்டும் எனக் கொதிக்கும். அது எதிராக மாறி, எதிரி நண்பனாகி, நண்பன் மீது நயமான பிரியம் வரும்வரை மனம் தயாராகவில்லை என்று நாம் அறியவேண்டும். மனம் தயாரானால் Life Response வாழ்வு நம் மனநிலையைத் தன் செயலால் சுட்டிக்காட்டும், சுட்டிக்காட்டியபடியேயிருக்கும்.

ஆன்மா செயலில் வெளிப்படாமல் திறமை உச்சக்கட்டத்திற்குப் போகாது. நெசவிலும், அஜெந்தா சித்திரங்களிலும், மாமல்லபுரம் சிற்பங்களிலும், பெண்களின் பவித்திரமான வாழ்விலும், சான்றோரின் அடக்கத்திலும், இந்தியர் வாழ்வில் இன்றும் இதைக் காண்கிறோம். மேல்நாட்டார் செயல்கள் அனைத்திலும் இவ்வான்மீக உயர்வு தென்படுகிறது. உடல் இருளாக இருக்கும்பொழுது செயல் ஆன்மாவை மேல்நாட்டில் காட்டுகிறது. உடல் ஒளியால் நிரம்பினாலும், செயல் இருளால் சூழப்பட்டிருப்பதால் இந்தியர் வறுமையிலிருக்கின்றனர்.

நாம் மேற்கொள்ளப் போகும் சிறு செயல் token act நம் உடலில் புதைந்துள்ள ஒளி செயலில் ஆன்மாவாக வெளிப்படவேண்டும். அப்படி ஒரு செயலை நாம் செய்து அதில் ஒன்று ஆயிரமாவதைக் கண்ணுற்றால், நாம் அடிப்படையில் தயாராகிவிட்டோம். அதன்பின் நம் வாழ்வை அருளின் வெளிப்பாடாக ஆக்க முடியும். எப்பக்கம் திரும்பினாலும் அதிர்ஷ்டம் எதிர்கொள்ளும். வீட்டு மாடியில் கட்டும் புது அறை, தீபாவளிக்கு அனைவருக்கும் ஜவுளி எடுப்பது, மகனை பெரிய கோர்ஸில் சேர்ப்பது, ஆபீசில் செக்ரடரி எலக்ஷனுக்கு நிற்பது, பாக்கியான பிரமோஷனை சமர்ப்பணத்தால் பெறுவது, 100 ஏக்கர் பண்ணையில் ஓர் ஏக்கர் புதுப் பயிர் செய்வது, குடும்பத்தோடு காஷ்மீர் போவது போன்ற சிறு காரியத்தை முக்கியமானதாக எடுத்துச் சோதனை செய்யலாம்.

மாடியில் புது அறை கட்டும் வேலையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

எல்லாச் செயல்களையும் சமர்ப்பணம்

செய்யவேண்டும் என்பது அடிப்படை.

சமர்ப்பணமாகாத செயல்களைச் செய்யக்கூடாது. சமர்ப்பணம் என்பது அன்னையை நினைத்துச் செயல்படுவது. அது முதல் நிலை. அதை மட்டும் செய்தால் token act வெற்றிகரமாக முடியும். அது வாழ்வில் அருளாகத் தொடரவோ, அதிர்ஷ்டமாக நீடிக்கவோ, முதல்நிலை சமர்ப்பணம் போதாது. மீண்டும் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். Token actஇல் முடிவான சமர்ப்பணத்தை நாடினால், அது முடிந்தபின் பெரிய ஆத்மாவுக்கு அருளும், சிறிய ஆத்மாவுக்கு அதிர்ஷ்டமும் தென்படும். தானே நீடிக்கும். செயலை சமர்ப்பணம் செய்யுமுன், அது உணர்வாக இருப்பதைக் காணலாம். அதற்கும் முன்நிலையில் எண்ணமாக எழுவதும் தெரியும். எண்ணம் எழுந்து, உணர்ச்சியாகி, செயலாக நிரம்புவதால் சமர்ப்பணம் எண்ணத்தில் ஆரம்பிக்க வேண்டும். எண்ணம் சமர்ப்பணமானால், எண்ணம் நம்மைவிட்டுப் போகும், அது மறந்துபோகும். இது எண்ணத்திற்கு முடிவான சமர்ப்பணம். இங்கு ஆரம்பித்தால் முடிவான பெரும்பலன் உண்டு. இதற்கடுத்த இரண்டு நிலைகளில் உள்ள சமர்ப்பணத்தையும் தெரிந்துகொள்ளலாம். நமது முயற்சி மனித வாழ்வில் சிறு முயற்சி என்பதால் அவை இப்பொழுது தேவையில்லை. எண்ணம் மறந்துபோனபின், காரியத்தைத் தொடங்குமுன் உணர்ச்சி எழும். உணர்ச்சி எழுந்து நம்மை ஆக்கிரமித்து, வெளிப்பட்டபின்தான் நமக்குத் தெரியும். அதற்குமுன் தெரிய உணர்ச்சி விழிப்பாக இருக்கவேண்டும். விழிப்பாக இருந்தாலும் சமர்ப்பணமாகாது. காற்றைக் கையால் பிடிப்பது போலிருக்கும். அடுத்தகட்டப் பக்குவத்திற்கு உணர்ச்சி பிடிபடும், சமர்ப்பணமாகும். சமர்ப்பணமானால் உடல் புல்லரிக்கும், காரியம் மறந்துபோகும்.இவ்வுணர்வு எழுந்தால், வீட்டில் அறை கட்டப்போனால், வீடு அமையும். முடிவான பலன் முதலிலேயே கிடைக்கும். உடல் உணர்ச்சி என்பது செயல். அது யோகத்திற்குரியது. இது பலிப்பது intolerable ecstasy பொறுக்கமுடியாத பூரிப்பு. எண்ணம் முழுவதுமாகச் சமர்ப்பணமானாலும், முதல் நிலையில் சமர்ப்பணமானாலும், நாம் சோதனையை மேற்கொள்ளலாம். இதற்குரிய முறைகளை உதாரணமாக விளக்கமாகக் கருதுவோம். சில முக்கியமான கருத்துகள்,

  1. நாம் செய்யவேண்டிய வேலைகளைப் பல பாகங்களாகப் பிரித்து, பகுதிகளைச் சிறு பாகங்களாகவும் பிரித்து, இனிப் பிரித்துப் பார்க்க எதுவுமில்லை என்ற அளவில் பிரித்து எழுதிக் கொள்ளவேண்டும்.
  2. அவற்றை முழுமையாகவும், பகுதியாகவும், சிறு பகுதியாகவும் சமர்ப்பணம் செய்து சமர்ப்பணம் பூர்த்தியாகும்வரை காத்திருக்கவேண்டும்.
  3. பிறர் செய்யக்கூடிய வேலைக்கு நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பைக் கண்டு அதைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.
  4. காரியத்தைச் சமர்ப்பணம் செய்வதைவிட உணர்வு உள்ளே சமர்ப்பணம் செய்யப்படுவது முக்கியம். அவசரம் எழுந்தால் அவசரம் சமர்ப்பணத்தால் நிதானமாக வேண்டும்.
  5. பொதுவாக நாம் நம்மை இக்கண்ணோட்டத்தில் தயார் செய்வது காரியத்தைவிட முக்கியம்.

வீட்டில் கட்டும் அறைக்குரிய முக்கியப் பகுதிகள்:

  • கார்ப்பரேஷன் உத்தரவு வாங்குவது, அதற்குரிய blue print தயார் செய்வது.
  • பணம் நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது.
  • காண்ட்ராக்டரிடம் பேசி முடிவு செய்வது.
  • நாமே செய்வதானால், சிமெண்ட், கல், ஆட்கள் தயார் செய்வது.

மேற்சொன்னவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனி சிறு பகுதிகளாகப் பிரித்து நோட்டில் எழுதுவது. பணம் கையிலிருக்கலாம், பாங்கில் வாங்கலாம், கல் நாமே வாங்கி காண்ட்ராக்டரிடம் தரலாம், காண்ட்ராக்டரிடமே அதையும் ஒப்படைக்கலாம். நாமே வாங்குவதானால், அது புது அனுபவம். அதனால் நமக்கு முன் செய்தவர்களைக் கலந்து விசாரிக்க வேண்டும். காண்ட்ராக்டரே செய்வதானால் நாம் சும்மா இருப்பதற்குப் பதிலாக, இக்காண்ட்ராக்டர் ஏற்கனவே செய்த வேலைகளைப் பற்றி அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் செய்த வேலைகளைப் போய்ப் பார்க்கவேண்டும். நாம் செய்வது சரியானால், எதுவும் விட்டுப்போகவில்லை எனில் தப்பு வாராது. இப்படியெல்லாம் பார்த்தால் எந்த வேலையும் நடக்காது, ஓரளவுக்குமேல் துருவக் கூடாது என்ற எண்ணம் அடிக்கடி எழும். முடிவாக தவறு வரவில்லை என்றால் நாம் செய்தது தவறில்லை எனப் பொருள். "அட, இதை மறந்துவிட்டேன்'' என்று பின்னால் சொல்லக்கூடிய நிலை எழக்கூடாது. முழு மனதுடன் நாம் செயலை அணுகும்பொழுது செயலின் நுணுக்கங்கள், தில்லுமுல்லுகள் தானே வெளிப்பட்டு அகலும். அதுவே சமர்ப்பணமான செயலுக்குரிய இலட்சணம். உதாரணமாக சிமெண்ட் கலவைக்கு நாம் பணம் நிர்ணயிக்கும்பொழுது 1:3 என நிர்ணயித்துப் பணம் கொடுத்தால் காண்ட்ராக்டர் 1:6 என்று போட்டால் என்ன செய்வது? நாமே உடனிருந்து ஒவ்வொரு கலவையையும் பார்ப்பது ஒரு முறை. சிறு வேலையில் அதைச் செய்யலாம். அதற்குரிய முறையென்ன? அதைச் செய்யாத காண்ட்ராக்டரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர் நம்மை நாடி வருவது சமர்ப்பணம். நாமே முனைந்து ஒவ்வொன்றையும் பார்க்கலாம். அது குறைந்தபட்சம். தானே எல்லாக் காரியங்களும் சிறப்பாக நடக்கலாம். அது அதிகபட்சம். நம் மனநிலை எது? அதற்குரிய அளவுக்கு நாம் செயலைச் சீர்செய்வது சரியான முறை. வேலை சரியாக நடக்கிறதா, இல்லையா என்பதை மனமும், செயலும், புற நிகழ்ச்சிகளும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும், சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளும், காட்டிக்கொண்டேயிருக்கும்.அவற்றைக் கவனிக்கவேண்டும். Type செய்வதை இதுபோல் பாகுபாடு செய்வதில் 1) எழுத்துப் பிழை 2) இலக்கணப் பிழை 3) மார்ஜின் 4) அடுத்த பக்க மார்ஜின் 5) Spacing 6) எழுத்தின் சைஸ் 7) இங்கின் தெளிவு எனப் பிரிகிறது. எந்த வேலையும் 5 முதல் 10 சிறு பிரிவுகளாகப் பிரியும். அவற்றை எழுதி ஒவ்வொன்றிற்கும் தரம் - scale - நிர்ணயம் செய்து 1 முதல் 10 வரை பாயிண்ட் கொடுத்து நாம் 5ஆம் நிலையிலிருந்தால் 10ஆம் நிலைக்குப் போக முயலவேண்டும். 100 பக்க புத்தகத்தில் 1 பிழை இருப்பது 10 பாயிண்ட் குறைந்து திறமை 90% ஆகும். 2 பிழையிருந்தால் 80%க்குப் போகாது, 50%க்குப் போகும். அதற்குமேல் பிழையிருந்தால் அது வேலையில்லை, அது பிழை.

  • செய்வன திருந்தச் செய்.
  • திருத்தமாகச் செய்வதை ஆர்வமாகச் செய்.
  • ஆர்வத்திற்கு அறிவுண்டு.
  • அறிவுக்கு அமைதியிருப்பது ஆத்மாவின் செயல்.
  • அமைதியை சமர்ப்பணம் செய்.

இதுபோல் அன்பர் செய்த வேலைகள் ஏராளம்.

  • ஒரு கிராமத்துச் சேவை நாட்டிற்கே பலன் தந்தது ஒரு திட்டம்.
  • ஓர் ஏக்கர் நிலம் வாங்கச் செய்த முயற்சி 1000 ஏக்கரைக் கொண்டுவந்தது ஒன்று.
  • ரூ. 10,000 வசூல் செய்ய முயன்றபொழுது 10½ லட்சம் வசூலானது மற்றொன்று.
  • ஒரு கிராமத்திற்கு மின்சாரம் கொண்டுவர முயன்றது தமிழ்நாட்டிற்கே எல்லாக் கிராமங்களுக்கும் கிடைத்தது.
  • ஓர் அன்பர் பெற்ற பிரமோஷன் அவர் போன்ற ஆயிரம் பேர் பெற்றது.

நாம் திறமையை அதிகரிக்க முனையும்பொழுது நம்மை நாமே வற்புறுத்திச் செய்தாலும் காரியம் கூடிவரும், ஆனால் மனம் கல்லாகும். அது கடுமையாகும். அப்படி நிகழ்ந்தால், token act ஜெயிக்கும். ஓரளவு வளர்ந்து ஒரு நிலையில் நின்றுவிடும். கடுமை எழக்கூடாது, கனிவு வேண்டும். அடுத்தகட்டத் திறமையை ஆர்வமாக ஏற்று மனம் பூரித்தால், கனிவு எழும், கருணையாகும். முடிவில்லாத வளர்ச்சி முழுமையாக வரும்.

முற்றும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை, தானறிந்ததைக் கொண்டு புரிந்துகொண்டால், அது அபிப்பிராயமாக மாறுகிறது. அவற்றை ஆராய்ச்சி செய்தால், அதனுள் உள்ள கருத்து விளங்கும். செய்தி அல்லது நிகழ்ச்சி வந்தால் அதைச் சரணம் செய்தால் அதனுள் பொதிந்துள்ள ஒளி தெரியும்.

  • புரியும் அபிப்பிராயம்.

ஆராய்ந்த கருத்து.

பொதிந்துள்ள ஜோதி.

  • அபிப்பிராயம் கருத்துமூலமாக ஜோதியாகிறது.

 

****

Comments

09.அபரிமிதமான செல்வம் Para

09.அபரிமிதமான செல்வம்
 
Para 1   -  Line 3     -   செயலி ல்                 -    செயலில்
Para 2   -  Line 2     -   ஆழத்திலி ருந்து      -    ஆழத்திலிருந்து
Para 2   -  Please high light Lines 5, 6 & 7
Para 3   -  Line 9     -   புறச்செயலி ல்         -    புறச்செயலில்
Para 5   -  Line 2     -   செயல்                       -   செயலில்
Para 7   -  Line 18   -   போருக்கும்                -   போலிருக்கும்
Para 7   -  Line 21   -   முதலேயே                -    முதலிலேயே
Para 7   -  Line 22   -    பலி ப்பது                 -     பலிப்பது
Para 7   -  Line 22   -   ecstasyபொறுக்கமுடியாத   ecstasy பொறுக்கமுடியாத
Para 9   -  Line 6     -   கையிருக்கலாம்      -     கையிலிருக்கலாம்
Para 9   -   கீழ்க்கண்ட சொற்க்களுடன் ஆரம்பிக்கும் வாக்கியத்தை Para 10- உடன் இணைக்கவும்
 
மேற்சொன்னவற்றை ஒவ்வொன்றையும்
 
Para 10   -  Line 23  -  பஹ்ல்ங்                       -  Type
Para 10   -  Line 24  -  நல்ஹஸ்ரீண்ய்ஞ்          -  Spacing
Para 10   -  Line 27  -  நிலையிலி ருந்தால்   -   நிலையிலிருந்தால்
Para 12   -  Line 3    -  10ணீ                              -   10 ½
Para 12   -  Line 6    - 
 
கீழ்க்கண்ட சொற்க்களுடன் ஆரம்பிக்கும் வாக்கியங்களை Para 13 (புதிய para) - உடன் இணைக்கவும்
 
நாம் திறமையை அதிகரிக்க
:
:
முடிவில்லாத வளர்ச்சி முழுமையாக வரும்.
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Please remove the extra blank line before the following line
 
பொதிந்துள்ள ஒளி தெரியும்.



book | by Dr. Radut