Skip to Content

08. அஜெண்டா

Agenda

A child can destroy Europe when her organisation is perfect.

ஐரோப்பாவில் நாட்டு நிர்வாகம் உயர்ந்தது.

அது சிறப்பானால் ஒரு குழந்தை அதை அழிக்க முடியும்.

இது ஸ்ரீ அரவிந்தர் கூறியது. இதைப் படிக்கும்தோறும் தனக்குப் பயமாக இருக்கிறது என்பார் அன்னை. இதனுள் உள்ள வாழ்க்கை இரகஸ்யம், யோக இரகஸ்யம், அழிவுக்குக் காரணம், அன்னை சக்தி எப்படி அழிவை ஆக்கலாக மாற்றும், அது நம் வாழ்வில் எப்படி தரித்திரத்தை அதிர்ஷ்டமாக மாற்றும் என்பதைக் கருதுவோம்.

ஒரு நிர்வாகம் 30 ஆண்டுகட்கு முன்பு சிறப்பாக பிரபலமாக இருந்தது. அதன் பிரபலம் செல்வமாயிற்று. சொத்து பிரம்மாண்டமானது, தொழிலாளிகள் ஏராளம், நிர்வாகம் சீரழிந்து ரூ.50,000 நஷ்டமாயிற்று. உயிருக்குப் பேராபத்து வந்து, பல உயிர்கள் மடிந்தன. அன்னை அன்பர் நிர்வாகத்தை ஏற்றார். மேற்சொன்ன சட்டம் ஆக்கலாகச் செயல்பட்டது. ஆபத்து விலகியது, அமைதி ஏற்பட்டது. நஷ்டம் சிறியதாக மாறி சிறு இலாபமாயிற்று. சிறு இலாபம் வளர்ந்து பெருஇலாபமாயிற்று. பெருஇலாபம் பிரம்மாண்டமான இலாபமாகி ரூ.32 இலட்சம் நிகர இலாபமாக நின்றது. மேற்சொன்ன அனுபவங்கள், உண்மைகள், அன்னைக்குரிய ஆக்கல் உண்மைகள் கீழ்க்கண்டவை.

  1. நிர்வாகம் உயர்ந்தால், இலாபம் அதிகமாகும். நிர்வாகம் உயரஉயர இலாபம் குறையும்.
  2. நிர்வாகம் சிறப்பானால், எதுவும் அசைக்க முடியாது. நிர்வாகம் மிகச்சிறப்பானால், எந்தச் சிறுவனும் எளிதில் அழிக்க முடியும்.
  3. நிர்வாகம் வாழ்வில் உயர்ந்தது.
  4. நிர்வாகம் ஆன்மீகத்திற்கு எதிரி.

முதல் மகாயுத்தம் நடக்கும்பொழுது ஆரம்பத்தில் அன்னை புதுவையில் நேரு வீதியில் (அப்பொழுது டியூப்ளே வீதி என்று அழைக்கப்பட்டது) மாடியில் தங்கியிருந்தார். June 14ஆம் தேதி பாரீஸ் தாக்கப்பட்டது. ரேடியோ வாராத காலம், பேப்பர் செய்திதான் உண்டு. அன்னை அறைக்குக் காளி வந்து, பாரீஸ் சரணடைந்துவிட்டது எனக் கூறினாள். காளியின் சொல் பொய்யில்லை, மெய். அத்துடன் காளி கூறியதால் அது மெய்யாகும். அன்னைக்குக் காளி கூறியதன் உண்மை தெரியும். அந்த உண்மையை அன்னை ஏற்க மறுத்து, தம் சக்தியைச் செயல்பட அனுமதித்தார். சரணடைந்த பாரீஸ் நகரத்தில் நுழைந்த ஜெர்மானியர், எங்கும் பிரெஞ்சுப் படையைக் காணவில்லை. அவர்கட்குச் சந்தேகம் வந்தது. ஏதோ மாயம் நடக்கிறது, நம்மை பாரீஸுக்குள் அனுமதித்து சூழ பிரெஞ்சுக்காரர் சதி செய்தனர் என்று நினைத்து, தாங்கள் பெற்ற பெரு வெற்றியை தரையில் போட்டுவிட்டு வெளியேறினர்!

  • அழியவேண்டிய பாரிஸ் தப்பித்தது.
  • அழிவு, ஆக்கலாக மாறியது.
  • 1914இல் அன்னை செயல்பட்ட நிகழ்ச்சியிது.

எந்தச் சட்டமும் அன்னை சக்தியால் எதிராக மாறும். ஐரோப்பா அழியக் கூடாது என்பது அன்னையின் எண்ணம். அவர் எண்ணம் தவறாது செயல்படுகிறது.

**** 

Comments

08. அஜெண்டா Para  5  -  Line

08. அஜெண்டா

 Para  5  -  Line 1  -   அதிகமாகும்..       -      அதிகமாகும்.



book | by Dr. Radut