Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

நான் BSNL அலுவலகத்தில் மதுரையில் பணிபுரிகிறேன். கடந்த 8 வருடங்களாக நான் மதர் "டிவோட்டி". அன்னை நடத்திய அற்புதங்கள் எனக்கு நிறையவே நடந்து ஒவ்வொரு விஷயத்திலும் அன்னையைத் தீவிரமாக நம்புவதால் எனக்கு வெற்றிதான் இன்றுவரை. எல்லாமே சுமுகமாகவே நடந்துகொண்டு வருகிறது. என்னைச் சார்ந்த மற்ற அன்னை அன்பர்கட்கும் சேர்த்து - நான் தியானம் செய்யும் நேரம் - முதலில் உலக க்ஷேமத்திற்காக, பிறகு எல்லாவற்றையும் அன்னைக்குச் சமர்ப்பணம் என ஒரு 30 நிமிட நேரம் தினமும் கடைப்பிடிக்கிறேன். இதன் பலன் மூலம் நான் கண்கூடாக, நம்பமுடியாத ஆனால் நம்பத்தகுந்த ஓர் அனுபவத்தை இக்கடிதம்மூலம் தெரியப்படுத்துகிறேன்.

எங்கள் BSNL அதிகாரி ஒருவரின் மனைவி மதுரை வெயிலில் ஒரு நாள் தலை சுற்றி விழுந்து, "கோமா" ஸ்டேஜ்வரை சென்றுவிட்டார். அவரை ஆஸ்பத்திரியில் ரொம்ப ஸீரியஸான நிலைமையில் சேர்த்த தகவல் கேட்டு எங்கள் ஆபீஸ் முழுதும் ஆஸ்பத்திரிக்குச் சென்று ICUவில் சேர்த்த அவரை வெளியில் இருந்தபடி பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். அங்குச் சேர்த்த மறுதினம் காலை டாக்டர்கள் ஏதோ கூடிகூடிப் பேசிவிட்டு, வெளியே நின்ற எங்களிடம் இன்னும் ½ மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்துவிடும் என்றும், உங்கள் ஆபீஸர் எங்கே? எனவும் வினவினர். ஆபீஸர் அச்சமயம் வீடுவரை சென்றிருந்தார். நாங்களும் அவர் வீட்டிற்குப் போன் போட்டு அவரை உடன் வரும்படிக் கூறினோம்.

அங்கு இருந்த எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அதே ஆஸ்பத்திரியில் கீழே ஒரு "மதர்" போட்டோ மாட்டி இருக்கிறது. உடனே நான் வேகமாகச் சென்று இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, "எதுவும் டாக்டர் கூறியபடி நடக்கக் கூடாது மதர், அவர்கள் நல்லபடியாக வீடு திரும்பவேண்டும்" என மனமுருகி பிரார்த்தனை செய்து மாடிக்கு வந்தேன். ½ மணி நேரமும் கடந்தது. உடனே அங்குள்ள டாக்டர்கள், "patient is OK now" என்றார்களே பார்க்கலாம். அரை மணி நேரம் உயிருக்கு கெடு கொடுத்த டாக்டர்தானா அதைச் சொல்கிறார் என்று மீண்டும் "கன்பர்ம்" செய்துவிட்டு, அங்கிருந்தபடியே இது ஒரு மிராக்கல் (miracle) என்று நான் கத்திவிட்டேன். உடனே அலுவலகம் வந்து அந்தக் கண்கண்ட தெய்வ அன்னைக்குச் சிறு காணிக்கையும் அனுப்பி வைத்தேன். தற்போது அந்த அதிகாரியின் மனைவி நல்லபடியாக குணம் அடைந்து வீட்டில் இருக்கிறார். அவர்கட்காக நான் இன்னமும் அவர் நலனுக்காக மதரிடம் தினமும் pray செய்து வருகிறேன்.

"அன்னையை நம்பினோர் கைவிடப்படார்" என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறேன். நன்றி!

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜபம் வாயால் உச்சரிக்கப்படுவது. ஜபத்தை மேற்கொள்பவர்கள் உடலின் நிலையிலேயே இருக்க வேண்டும். மந்திர சக்தி உணர்ச்சியைத் தொட்டால், அது ஆர்வமாகும். மந்திரத்தின் உட்பொருளை மனம் உணர்ந்தால், உலகை ஆளும் ஜட சக்தியை மனம் எட்டும். அதனால் சொல்லால் சொல்லப்பட்டது, உடனே நிகழும். ஜடத்தின் பிடியிலிருந்து மனத்தை விடுவிக்கும் முறை இது. (மனமும் உணர்வும் திருவுருமாற்றமடைந்த பின், உடலை மாற்ற அன்னை மந்திரத்தை மேற்கொண்டார்).

உட்பொருளை மனம் உணர்ந்தால் உலகையாளும்

ஜடசக்தியை மனம் எட்டும்.

***** 

Comments

06.அன்பர் கடிதம் Para  1   - 

06.அன்பர் கடிதம்
 
Para  1   -  Line  1  -  "டிவோட்டி'   -   "டிவோட்டி"
Para  2   -  Line  2  -  "கோமா'        -   "கோமா"
Para  2   -  Line  4  -  ஒஈமவில்     -    ICUவில்
Para  3   -  Line  3  -  "மதர்'            -     "மதர்"
Para  3   -  Line  4  -   திரும்பவேண்டும்'     -   திரும்பவேண்டும்"
Para  3   -  Line  6  -   now'              -     now"
Para  3   -  Line  7  -  "கன்பர்ம்'      -    "கன்பர்ம்"
Para  4   -  Line  1  -  கைவிடப்படார்'  -   கைவிடப்படார்"book | by Dr. Radut