Skip to Content

04.சாவித்ரி

"சாவித்ரி"

P.31. And danger brought a keen sweet tang of joy

        வெண்கலக்குரலினிமை ஆபத்துடன் வந்தது.
 

  • நிகழ்ச்சி நினைவை விட்டகலாத அனுபவம்.
  • பெரிய மோதல்கள், குருக்ஷேத்திரக் குருவின் உபதேசங்கள்.
  • வையகத்தின் குரலாக வந்த உபதேசங்கள்.
  • தேனினும் இனிய தென்றலாக சூட்சுமம் உதட்டால் பேசியது.
  • இதயம் எழுச்சியை ஏற்று மகிழ உதவும் குரல்.
  • அழகசைய எழும் ஆசையில் இனிய ஆர்வங்கள்.
  • ஆனந்த லோகம் அதிர எழுந்த புல்லரிப்பு.
  • அற்புதம் ஆனந்தமாகும் லோகம்.
  • அசரீரியாக ஒலிக்கும் அரிய சொற்கள்.
  • ஏதும் அறியாத எழுச்சியின் பூரிப்பு.
  • உலகத்தைக் கடந்த உறவு விழித்தெழுந்தது.
  • சூட்சுமம் அனந்தமாகத் தொட்டிழுத்தது.
  • கிரீச்சிட்ட கதவின் கீதம் போன்ற ஒலி.
  • மின்னல் பார்வை துள்ளி மறைந்தது.
  • வளரும் ஜீவனும் உடன் வளரும் திருஷ்டியும்.
  • விரியும் வீச்சும், உயரும் பறவையும்.
  • ஜடத்தின் சாம்ராஜ்ய எல்லையைக் கடந்தான்.
  • வாழ்வின் எல்லையையும் கடந்து எண்ணத்தின் ஆட்சிக்குள் வந்தான்.
  • உலகைக் கடந்த மோனப் பிரம்மம்.
  • உருவம் பெற்ற உலகைக் கடந்து வந்தான்.
  • விரியும் வியாப்தியைக் கடந்து பார்வையைச் செலுத்தினான்.
  • அடையாளம் அர்த்தமிழந்தது.
  • புலனறியும் புலன்கள் மறைந்தன.
  • உடலால் அசையும் இதயம் துடிப்பை மறந்தது.
  • அழகின் அலைகள் இனி பார்வைக்கு விருந்தல்ல.

நாம் நல்லதை நல்லதாக மட்டும் அறிகிறோம். கெட்டது ஒதுக்கப்பட வேண்டும் எனவும் உணர்வோம். இரண்டும் பிரிக்கப்பட முடியாதவை. இரண்டும் உயர்ந்தவையாகத் திருவுருமாற வேண்டியவை என்பது ஸ்ரீ அரவிந்தம். முதன்முறையாக ஆசிரமம் வரும்பொழுது பஸ்ஸில் இடமில்லை என்பது வருத்தமான சகுனம். சற்று நேரம் கழித்து காரில் வர முடிந்தது. 12 ஆண்டுகள் கழித்து வரப்போகும் காரை அன்றே சகுனம் உணர்த்தியது. நடப்பதை மனம் கசங்காமல் ஏற்பது சரி. இன்று ஹர்த்தால், பெரிய ஆர்ப்பாட்டம். எத்தனை கொலை விழும் எனத் தெரியாது என்ற நாளில் தரிசனத்தன்று அறியாத பேரமைதி, கனத்த மௌனம், கடைத்தெருவில் கண்டார் பக்தர். அது ஆண்டவன் இருப்பதைக் காட்டுகிறது. ஆபத்து என்பது ஆண்டவன் உலகைத் திருப்பி வைக்கும் நேரம். நமக்கு மனம் பதறும். பெரிய நல்லதுடன் வரும் தவறான செய்தியும், கெட்டதுடன் வரும் நல்லதும் வாழ்வின் ஆன்மீக உண்மையைக் காட்டுகின்றன.

       ஆபத்தும் இனிமையும் சேர்ந்து வருவது வாழ்வு.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் தன் நலம் மட்டும் கருதுவதால், அவனது உண்மை, பொய்யாகும்.

சுயநலத்திற்கு மெய்யில்லை

Comments

04.சாவித்ரி Line 13  -  ஒ  

04.சாவித்ரி
 
Line 13  -  ஒ   -   ஒலி



book | by Dr. Radut