Skip to Content

13.மனம் திறந்து பேசினால் மதரிடம் பேசலாம்

மனம் திறந்து பேசினால் மதரிடம் பேசலாம்

இரண்டு ஆபீசர்கள். ஒருவர் பெரிய ஆபீசர். அடுத்தவர் இருவரிடமும் வேலை செய்யும் குமாஸ்தா. அனைவரும் அன்னை அன்பர்கள். 3 பேருக்கும் ஒருவர் மீது மற்றவர்க்கு அதிகப்பட்ட குறையுண்டு. அன்னைச் சட்டப்படி ஒருவர் மீது குறை சொன்னால் அது தன் குறை என்ற அறிவுண்டு. அறிவு செயலைக் கட்டுப்படுத்தாது. அதனால் குறை கூறும் படலம் அன்றாட அனுபவம். அவற்றுள் எவரிடமும் சொல்லமுடியாத குறையுண்டு. சிலரிடம் மட்டும் கூற முடியாதவையுண்டு.

சிறிய ஆபீசர் தாம் தவறு செய்துவிட்டு அதைக் குமாஸ்தா செய்ததாகப் பெரிய ஆபீசரிடம் கூறுவதை, குமாஸ்தா கேட்டுக் கொண்டிருந்தார். பொறுக்க முடியவில்லை. ஆத்திரம் பொங்கி வருகிறது. இப்படியும் ஓர் அன்பர் உண்டா? என மனம் பொருமி அடங்கியபொழுது, அன்னை படத்தின்முன் நின்று "உங்களிடம்தான் கூற முடியும். எவரிடமும் என்னால் முறையிட முடியாது'' என்றார். ஒரு 15 நிமிஷம் கழித்து பெரிய ஆபீசர் குமாஸ்தாவை வரவழைத்து, அங்கேயே இருக்கும்படிக் கூறி சிறிய ஆபீசரைப் போனில் கூப்பிட்டார். குமாஸ்தா அன்னையிடம் கூறிய அதே செய்திகளை, அதே சொற்களால் சிறிய ஆபீசரிடம் கூறுவதை காதால் கேட்டும் குமாஸ்தாவால் நம்ப முடியவில்லை.

இதுபோன்ற சக்தி உலகிலிருப்பதாக நான் அறியவில்லை என நினைத்தார். அன்னைக்கும் இந்த சக்தியிருப்பதாக இதுவரை தாம் அறியவில்லை என ஆச்சரியப்பட்டு, விவரம் தெரிந்தவர்களை அணுகி விளக்கம் கேட்டார். அவர் பெற்ற பதில், "உண்மை உலகத்திற்குரியது, vibration of the world. மனம் பேசுவது உண்மையானால், உலகம் அதை ஏற்காது. அன்னை ஏற்பார். உங்களிடமிருந்து உண்மையை ஏற்கமுடியாத பெரிய ஆபீசர் அன்னையிடமிருந்து அதை மறுக்கமாட்டார்''.

உண்மை உலகெங்கும் பரவும். அன்னை அதைப் பரப்புவார்.

****

Comments

13.மனம் திறந்து பேசினால்

13.மனம் திறந்து பேசினால் மதரிடம் பேசலாம்
 
Please move the following line to new paragraph and highlight it.
 
உண்மை உலகெங்கும் பரவும். அன்னை அதைப் பரப்புவார்.



book | by Dr. Radut