Skip to Content

12.நின் அருள் மறவாதன்றோ!

நின் அருள் மறவாதன்றோ!

நீ மறந்தாலும், நின் அருள் மறவாதன்றோ என்பது இராமலிங்க சுவாமியின் வாக்கு. நீ என்பது Personal Divine தெய்வம், நின் அருள் என்பது impersonal divine power தெய்வத்தின் பின்னாலுள்ள பொதுவான தெய்வ சக்தி. அதை ஆன்மா Spirit என்கிறோம். சத் என்ற அகத்தின் புறம் சத்தியம். சத் என்பதின் அனுபவம் ஆன்மா. உலகம் ஆன்மாவாலானது. நாமும், நம் உடலும், உயிரும் ஆன்மாவாலானவை. அருள் ஆன்மாவின் செயல்பாடு என்பதால், அருள் உலகை எங்ஙனம் மறக்க முடியும்? நாம் தெய்வம் என்பது அருளைக் கடந்து சிருஷ்டியிலுள்ள நிலை.

அன்பருடன் பேசிக்கொண்டிருந்த நண்பர் புறப்பட எழுந்தார். நண்பர் மறதியுள்ளவர். அவரிடம் பல வேலைகளைச் செய்யும்படிக் கூறினால் ஒன்றிரண்டே நினைவிருக்கும். அவருக்கு நல்லெண்ணம். சுயநலமில்லை. தம் வேலைகளையே மறந்துவிடுவார். முன்பு ஒருமுறை அன்பர் இட்ட வேலையை நண்பர் மறந்தவர். இம்முறை அன்பர் நண்பரிடம் "என் மகனை வரச் சொல்'' என்று கூற நினைத்தார். சென்ற முறை நண்பர் மறந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அன்பர், "எதிரில் intercom இருக்கிறது. அதில் என் மகனைக் கூப்பிடுங்கள். வெளியில் போனால் மறந்துவிடுவீர்கள்'' என்றார். அன்பரால் எழுந்து நடக்க முடியாத நிலை. நண்பர் intercom அருகே போனவுடன் மகன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறான். இதை Life Response என்கிறோம்.

நம் மனம் அன்னை மீதிருந்தால், காரியத்தைவிட அன்னை முக்கியமானால் Life Response நடந்தபடியிருக்கும். அன்பருக்கு மகன் வரவேண்டுமானால் அன்னையிடம் கூறத் தோன்றவில்லை. நண்பரிடம் கூறுகிறார். நண்பர் மறப்பவர் என்றாலும் அன்னை நினைவு வரவில்லை. அறிவுக்குரிய அடுத்த முறை மனதில் எழுகிறது. தன்னை மறந்த அடுத்த முக்கிய முறையை அன்பர் நினைக்கும்பொழுது அந்த ஆழ்ந்த நினைவுக்கு அன்னை தம் அருள்மூலம் பதிலளிக்கிறார்.

****

Comments

12.நின் அருள் மறவாதன்றோ! Para

12.நின் அருள் மறவாதன்றோ!

 
Para 1     -   Line 3      -   Spiritஎன்கிறோம்            -   Spirit என்கிறோம்
Para 2   -   Line 6   -   intercomஇருக்கிறது      -   intercom இருக்கிறது
 



book | by Dr. Radut