Skip to Content

அன்பர் கடிதம்

வணக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக அன்னையை வழிபட்டு மேன்மை   அடைந்து வருகிறேன். தாங்கள் மங்கையர் மலரில் அன்னையின் மகிமையை   எழுதி   வருகிறீர்கள். "அன்னையின் தரிசனம்'' என்ற நூல் பக்தர்கள் அதிகமாக    விரும்பிப் படிக்கின்றார்கள் என அதில் குறிப்பிட்டு  இருந்தீர்கள். இந்நூலை இரண்டு நாட்களுக்கு முன் ஓர் அன்னை பக்தரிடம் இருந்து பெற்றுப் படித்தேன்.   அந்நூலைப் படித்ததும் என் வாழ்விலும் அன்னை புரிந்துள்ள அற்புதங்களை நன்கு  உணர்ந்து எடுத்துக் கூறுகிறேன்.

நான் ஒரு தனியார்  கல்லூரியில்  நூலகராகப் பணிபுரிந்து வருகிறேன். நான்   பணியாற்றிக் கொண்டு இருக்கும்  ஊரில் சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க   முற்பட்டேன். பல வருடங்களாக முயன்றும் தாமதித்து வந்தது.  என் மகனின் உயர்நிலைப் படிப்புக்காக அருகில் உள்ள கும்பகோணம் நகரத்திற்குக் குடிவர முயன்றேன். வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. அப்பொழுது எங்கள் கல்லூரி   மாணவி ஒருவர் மூலம் அந்நகரத்தில்  ஒரு காலனியில் வாடகை வீடு   கிடைத்தது. அக்கல்லூரி மாணவி அன்னை பக்தர் என்பதும், அக்காலனியில் ஒரு   வீட்டில்தான் மாதந்தோறும் அன்னை வழிபாடு நடைபெறுகிறது என்பதும் பிறகுதான்  நான் அறிந்து கொண்டேன். அக்காலனியில் உள்ள ஒரு பெண்மணி    மூலம்  எங்கள் குடும்பத்திற்கு அன்னை அறிமுகமானார். அதன் பிறகு அன்னை   படத்தைப் பெற்று பூஜை செய்ய  முற்பட்டோம். அனைவரும்  அன்னை   பக்தரானோம். சில மாதங்களில்  எங்களுக்கு என்று  சொந்தமாக வீடு கிடைத்தது. அவ்வீட்டில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அனைவரும் நலமுடன்  இருக்கிறோம்.

அதன்பிறகு என் தொழிலில் மேன்மை ஏற்படத் தொடங்கியது. எங்கள் பல்கலைக்  கழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாக (senate member)  தேர்ந்தெடுக்கப்பட்டேன். சென்ற மூன்று ஆண்டுகளில் எங்கள் கல்லூரி   நூலகர்களுக்கும், எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும் என் பணி மிகவும் பயன்படும் வகையில் அமைந்து மனநிறைவோடு  என்னால் முடிந்த அனைத்துப்   பணிகளையும் செய்து கொடுத்தேன். ஆசிரியர் மாணவர்கள்  என்னை பாராட்டும் வகையில் அப்பணி அமைந்திருந்தது. என் பாடத்தில் முதுநிலை பட்டம் எதிர்பார்க்கும் விழுக்காட்டுடன் தேர்ச்சி அன்னையின் அருளால் அமைந்தது.

வானொலியில் சொற்பொழிவு ஆற்ற சந்தர்ப்பமும்  கிடைத்தது. அதனையும்  சிறப்பாகச் செய்து முடித்தேன்.

பிற பல்கலைக்கழகங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, வினாத்தாள்  அமைக்கும் பணி கேட்டு அன்னையிடம்  பிரார்த்தனை செய்தேன். ஆனால்   அன்னையோ என்னை தமிழ்நாடு தேர்வு ஆணைக்குழுவில் ஒரு முக்கியப்   பாடத்திட்ட  அமைப்பாளராக நியமித்து எனக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்துவிட்டார்.

இப்பணியை மிகவும் கவனத்தோடும், சிறப்பாகவும் நல்ல முறையில் செய்து   கொடுத்தேன். அதன் பிறகே ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து விடைத்தாள்   திருத்தும்  பணியும் கிடைத்தது. அதனையும் மிக்க கவனத்துடன் செய்து  கொடுத்தேன். இனி பிற பல்கலைக்கழகங்களிலிருந்து வினாத்தாள்  அமைக்கவும், விடைத்தாள் திருத்தவும்  வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.

என் பாடத்தில்  Ph.D. பதிவு செய்து கொள்ள கடந்த இரு ஆண்டுகளாக முயன்றும்    இதுவரை  அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. அதற்கு வேண்டிய அனைத்து   முயற்சிகளையும் தொடர்ந்து  மேற்கொண்டு வருகின்றேன். என் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக,  நிதானமாக, படிப்படியாக நிறைவேற்றி வைத்த அன்னை இதனையும் நிறைவேற்றிவைப்பார் என்று எதிர்பார்த்துள்ளேன். 

******

Comments

 i was married at a early age

 i was married at a early age . i had a lot of expectations in my life. i want to proceed my studies. but everything went upside down after my marriage. i am not blaming anybody for this but for myself. may be i lacked that enthusiasm to achieve. so that today i am finding fault with everyother person in my family , which is not really good. i know that my thoughts are not correct. i want to overcome these materialistic thoughts and pursue my rest of my life in the spiritual path making myself and my famliy more content and happy. i hope mother will help me out .

Hi anonymous friend,I am also

Hi anonymous friend,

I am also like you only, struggling to get what I want and also dont ask about it. And so, I never thought of a bright future except that I read Mother's books a lot and that is what is keeping me alive and interesting and nothing else.

Last month, I was terribly wondering what to do or how to continue my present life full of boring and no well wishing friends or relatives or even parents. I am not supposed to go out or anywhere alone except accompanying my husband which I hate now-a-days. I want to go elsewhere or go out for some art class or whatever but no permission granted. And finally, Mother gave me a way out for all my frustations and bored life. Yes, I have joined in college course which can be attended only on Sundays and it has the regular syllabus like regular college syllabus. It is really a great boon to me because I was struggling to get to the outside world which is not at all possible in my life except for the Grace of Mother and also Blessings from Ashokan Sir. Because by Mother's Grace my husband gave me permission to join the college! and my life started  getting interest.

As Appa says, if we want and ask for it, Mother will grant us!

 

Are you willing to live up to

Are you willing to live up to your self-awareness?

It is a great self-enlightment few can have.

Mother fully supports those who are aware of themselves and reverse their defects.

 

Yes i am ready. But how can i

Yes i am ready. But how can i know that am i fully aware of my inner self?.And how can i scale my inner awareness. i think i have to still go a very long way to attain self enlightment. I'm confused. Please explain me.

I think you have already got

I think you have already got the awareness wihc is reflected in your questions. The blue highlighted words shows that.

"i was married at a early age . i had a lot of expectations in my life. i want to proceed my studies. but everything went upside down after my marriage. i am not blaming anybody for this but for myself. may be i lacked that enthusiasm to achieve. so that today i am finding fault with every other person in my family , which is not really good. i know that my thoughts are not correct. i want to overcome these materialistic thoughts and pursue my rest of my life in the spiritual path making myself and my family more content and happy. i hope mother will help me out" .

Living or shifting yourself to Mother's ways with respect to these points/awareness definitly moulds you as you want to be.

 

The individual awareness

The individual awareness developing into individual adherence to that cognition is complete self-enlightment. In other words it is the process of  mental realisation turning to vital inspiration and physically doing the very opposite to our present swabhava.

 book | by Dr. Radut