Skip to Content

லைப் டிவைன் - கருத்து

The spiritual fullness of being is eternity

ஜீவனின்  ஆன்மீக  நிறைவு  காலத்தை  வெல்லும்

நாம் வாழ்க்கையை எப்படி நடத்துகிறோம்? நம் கையில் எதுவுமில்லை. ஏதாவது ஒரு விஷயம் கூடிவந்தால் அது அதிர்ஷ்டம் என்பது நம் நிலை. பெண் மனம் அடிமை என்ற கருத்தை விளக்க அவள் ஒவ்வொரு பருவத்திலும் தகப்பனார், கணவன், மகன் ஆதரவிலிருக்கவேண்டும் என்று அந்த நாளில் சொல்வதுண்டு. சாதாரண மனிதன் ஆபீஸில் வேலை செய்தால், ஆபீசுக்குக் கட்டுப்படவேண்டும். ரோட்டில் போனால் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும். கட்சியிலிருந்தால் கட்சிக்குக் கட்டுப்படவேண்டும். வீட்டில் தலைவருக்குக் கட்டுப்படவேண்டும். சாதாரண மனிதன் வீட்டில் தலைவராக இருந்தாலும் அடுத்தவர் பேச்சைக் கேட்க வேண்டும்.

சாதாரண மனிதனுக்கு எங்கும், எப்பொழுதும் சுதந்திரம் இல்லை.

தலைவன், கெட்டிக்காரன், முதலாளி, பணக்காரன், அதிகாரி போன்றவர்க்குச் சுதந்திரம் உண்டு. தலைப்பிலுள்ள கருத்தில் ஜீவனின் நிறைவைப்பற்றி பகவான் எழுதுகிறார். நிறைவு உடல், உணர்வு, மனம், ஆன்மா என்ற நிலைகளில் உண்டு. உடல் நிறைவு பெற்றால் ஆரோக்கியமும், உணர்வு நிறைவு பெற்றால் சந்தோஷமும், மனம் நிறைவுபெற்றால் தெளிவும் ஏற்படும் என நாம் அறிவோம்.

பகவான் ஜீவனுடைய ஆன்மீக நிறைவைக் குறிக்கின்றார்.

இதன் உட்கரு ஸ்ரீ அரவிந்தம். இதன்படி, சாதாரண மனிதன் காலத்தை வெல்லமுடியும். சாதாரண மனிதன் எல்லா இடங்களிலும் பிறருக்குக் கட்டுப்படுபவன். காலத்தை வெல்ல யாராலும் முடியாது. யாராலும் வெல்ல முடியாத காலத்தை ஸ்ரீ அரவிந்தம் சாதாரண மனிதனால் வெல்ல முடியும் என்று கூறினால் அதை நாம் புரிந்து பயனடையலாம்.

விஞ்ஞானமும், technologyயும் ஒரு காலத்தில் எவராலும் முடியாத காரியத்தை அடுத்த காலத்தில் எவருக்கும் முடியும் என்ற நிலையை ஏற்படுத்துவதை நாம் அறிவோம். விஞ்ஞானம் வருமுன் அரசர்களும் அனுபவிக்காத வசதிகளை இன்று பாமரர்களும் அனுபவிக்க முடிகிறது.

விஞ்ஞானம் வசதியில் நமக்களித்தது போல் ஸ்ரீ அரவிந்தம் வாழ்வில் கனவிலும் காணமுடியாத பலனைத் தருகிறது.

ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பது இன்றும் முழு உண்மை. காலத்தை வெல்லுதலுக்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். வெகு நாளில் நடப்பதைக் குறுகிய காலத்தில் செய்வது காலத்தை வெல்வதாகும். அந்தக் காலத்தில் முடியாததை இன்று செய்ய முடிவதும் காலத்தை வெல்வதாகும். 6 மாதத்தில் பெறும் லைசன்ஸ் பெற சாதாரண மனிதனுக்கு 2 வருஷமாகும். அவனுக்கு அது 6 மாதத்தில் கிடைத்தால் அவன் காலத்தை வென்றவனாவான். அன்னையை அழைப்பது உடலையோ, உணர்வையோ, மனத்தையோ நிரப்புவதைவிட ஆன்மாவைப் பூர்த்தி செய்யும்.

அழைப்பு ஜீவனின் ஆன்மீக நிறைவு.

அழைப்பை மேற்கொண்டவரின் ஆரோக்கியமும், சந்தோஷமும் பெருகுவதைக்கண்டு தொடர்ந்தார். தெளிவு நிறைவுபெற்றது. அடுத்தாற்போல் அவர் பெற்றது என்ன என்று அவர் அறியவில்லை. நிறைவாக இருந்தது. அன்று அவர் கடையில் 3 நாளைய வியாபாரம் ஒரே நாளில் நடந்தது. 3 நாள் ஒரு நாளாக சுருங்குவது காலத்தை வெல்வதாகும். ஜீவனை ஆன்மா நிறைவுபெறச் செய்யும் வழிகளில் மேற்சொன்னது ஒன்று. இடையறாத நினைவும் அதைச் செய்யும். 

அதை மேற்கொண்ட ஒருவர் தம் தொழில் சம்பந்தமான கூட்டத்திற்குப் போனார். அங்கு முதல் வரிசையில் உட்காருபவரில்லை இவர். இவர் பெறும் நிறைவு ஆன்மநிறைவு. கூட்டத்துடன் கூட்டமாக உட்கார்ந்திருந்தவரை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தனர். எளிய மனிதனுக்கு எதிர்காலத்தில் மரியாதை வரலாம். இன்றில்லை. ஜீவன் நிறைவு பெற்றதால் எதிர்காலம் இவர் வாழ்வில் நிகழ்காலமாயிற்று.

ஸ்ரீ அரவிந்தம் எளிய மனிதனுக்குக் காலத்தை வெல்லும் தகுதியை அளிக்கிறது.

********

ஸ்ரீ அரவிந்த சுடர் 

நோயாலும், வேதனையாலும் உடல் திருவுருமாற்றமடைகிறது.

 

***********

Comments

லைப் டிவைன் - கருத்து Para 

லைப் டிவைன் - கருத்து
 
Para  5   -  Line  1   -   முதலாü      -    முதலாளி
Para 13  -  Line 5    -   வழிகüல்      -     வழிகளில்
 
 
 
motnir



book | by Dr. Radut