Skip to Content

Agenda

Agenda Vol 4, P.26

This way it is the Lord, that way it is the doctor

மனம் சிறிது மாறினால் இறைவன் மனிதனாக மாறுகிறான்

நாம் எங்கிருக்கிறோம்  என்பதைவிட  என்ன மனநிலையிலிருக்கிறோம் என்பதே   நாம் அருளைப் பெறுவதை நிர்ணயிக்கும் என்பதை அன்னை வலியுறுத்தியுள்ளார்.

ஒரு  IAS ஆபீசர்  மத்திய  மந்திரிக்கு  personal secretary ஆக இருந்தார். எலக்க்ஷன்   வந்தது. மந்திரி தோற்றார். இவர் மாநில ஆபீசர். மந்திரியும்,  இவரும்  பால்ய  நண்பர்கள்  என்பதால் P.S. பதவி வந்தது.  புது  எலக்க்ஷனில்  மந்திரிசபை  அமைந்தது. தோற்றவர்  டெபுடி மந்திரி.  புதிய  மந்திரி  சபையில்  காபினட்  மந்திரிக்கு P.S. வேண்டும். அருகிலிருந்தவர்  இந்த  IAS ஆபீசர்  பெயரைச்  சொன்னார். மந்திரி ஒத்துக்கொண்டார். அடுத்த  நாள்  மந்திரியிடம்  வேறொருவர்  போய் இந்த IAS ஆபீசர்   கலைக்டர் பதவியில்  இருக்க வேண்டியதை முடிக்கவில்லை என்றார். மந்திரி மனம் மாறினார். வாழ்வில்  வரும் பெரிய    அதிர்ஷ்டங்கள் சிறு நிகழ்ச்சிகளின் குறுக்கீட்டால் கெட்டுவிடுவதை நாம்   அறிவோம். அன்னை புறநிகழ்ச்சிகளின் குறுக்கீட்டைக் குறிப்பிடவில்லை. நம்  மனநிலை 10 நிமிடத்தில் 20 வகைகளாக மாறுகிறது. அதையே  குறிப்பிடுகிறார்.

1963இல் அன்னை  ஸ்ரீ அரவிந்தரை  சூட்சும உலகில் சந்திப்பதைப் பற்றிப்  பேசுகிறார். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் 1950க்கு முன் உரையாடும் பொழுது  அடுத்தவருக்குப் புரியாது என்கிறார். ஒருவர் பேசியதையொட்டி  4, 5 நிலைகள்  கடந்து அடுத்தவர் பதில் சொல்வதும் மீண்டும் பல இடைநிலைகளைக் கடந்து  அடுத்தவர் தொடர்வதும் எங்களுக்கு மட்டுமே புரியுமே தவிர கேட்பவர்கட்குப் புரியாது என்கிறார். அன்னை பேசியபொழுது ஸ்ரீ அரவிந்தர் சத்திய ஜீவியப்  பதிலைத் தர முயன்றார். அன்னை  தலையை  அசைத்தார். அவ்வசைவு  அன்னை  மனநிலையை  மாற்றி சத்திய  ஜீவியம், தெய்வ லோகம், ரிஷிநிலை, யோகி  நிலைகளைக்கடந்து  முனிவர்  நிலைக்கு வந்து  மனிதனுடைய  சத்வகுணத்தை  எட்டியது.  க்ஷணநேர  மாற்றம் சூழலை அத்தனை தூரம் இறக்கியது. எதிரேயிருந்த ஸ்ரீ அரவிந்தர் மாறி டாக்டராகக் காட்சியளித்தார் என்கிறார் அன்னை. பலகோடிச்  சொத்துள்ள பெரியப்பா, வசதியற்ற தம்பி மகனைக் கணக்கெழுத அழைக்கிறார்.  கணக்கை ஒழுங்காக எழுதி பெரியப்பா கொடுத்த வேலையை    விட்டுவிடக்கூடாது என சிறுவன் இடைவிடாது அன்னையை அழைத்து வேலையை நெறியாகச் செய்கிறான். கணக்கு எழுதும் வேலை அன்னை நாம ஜபத்தால் மனம், முனிவர்,   ரிஷி,  யோகி, தெய்வநிலைகளைக் கடந்து நாம ஜெபமுள்ள நேரம் பையனின்   சூழலைச் சத்திய  ஜீவியத்திற்குக் கொண்டு  போகிறது.  பெரியப்பாவும்,     பெரியம்மாவும், பிள்ளையில்லாததால்  தம்பி  மகனைச்  சுவீகாரம்  எடுத்துக்கொள்ள முடிவு செய்கின்றனர்.

வேலை சேவையாகி, சம்பளம் சுவீகாரமாவது அன்னையின்  அருள்.

இதுபோல் நடந்த ஏராளமான  நிகழ்ச்சிகளை அன்பர்கள் அறிவார்கள்.  "ஆயிரம்   முறை நான் உங்களைத் தேடிவந்தால் அத்தனை முறையும் நான் உங்களை   அணுகும்பொழுது  சூழலை ஏதாவது  சிறிய  தவற்றால் பாழாக்கி விடுகிறீர்கள்''  என்று அன்னை கூறியதுண்டு. மேற்சொன்ன உதாரணத்தில் சுவீகாரத்திற்காக அழைத்து வந்த பையன், பெரியவர்கள் பேசும்பொழுது, சில்லரையாக மனதை  ஓட்டினால்,

சுவீகாரம்  சம்பளமாக  மாறுகிறது.

  • எந்த நேரமும் அன்னை நம்முள் வர அருகில் காத்திருக்கிறார்.
  • நம் மனம் உயர்வாக இருந்தால் அருளும்,  தாழ்வாக இருந்தால்  சிறியதும்  கிடைக்கும்.

மனம் அன்னையில் மட்டும் நிலைப்பது ஜீவனை அருளுக்குரிய தாக்குகிறது.

 

*****

Comments

Agenda Para  4   -   Line 

Agenda
 
Para  4   -   Line  1      -  மனநிலையிலி ருக்கிறோம்   -   மனநிலையிலிருக்கிறோம்
 
 
motnir



book | by Dr. Radut