Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

வாழ்வுக்குரிய சட்டம்போல் மனத்திற்குரிய சட்டங்களும் உண்டு. ஆன்மாவுக்குரிய  சட்டங்களும்  உள்ளன. சிலவற்றை மட்டும் உதாரணமாக  எழுதுகிறேன். நீண்ட   விளக்கமின்றிச் சுருக்கமாக எழுதுகிறேன்.

  1. நமக்கு வரும் அத்தனைத் தொந்தரவுகளும், நம்மால் பயனடைந்தவர்களால்  மட்டுமே வரும்.
  2. ஒரு நல்ல காரியம் செய்தால், பெற்றவர் அதை மறந்துவிட்டாலும், அந்தக் காரியம் நம்மை மறக்காது. அதே குணமுள்ள மற்றொருவர் மூலம்  நமக்குரிய  பலன்  வரும்.
  3. பலனை எதிர்பார்த்தால், எதிர்பார்த்த அளவு பலன் வரும்.
  4. பலனை எதிர்பார்க்காவிட்டால், அதிகப் பலன் வரும்.
  5. நாய் விற்ற காசு குலைக்குமா என்பது பழமொழி  -  நிச்சயமாகக் குலைக்கும். பணம் எந்த வழியாக வருகிறதோ, அதேபோல் செலவாகும்.
  6. நல்ல முறையில் சம்பாதித்த பணம் கடனாகக் கொடுக்கப்பட்டால் தவறாது  வரும். கேட்காமலும் வருவதுண்டு.

மேற்சொன்னவை வாழ்வுக்குரியவை. மனத்திற்குரியவை  சில.

  1. கேட்டால் கிடைக்காது, எதிர்பார்த்தால் கிடைக்காது. கேட்காவிட்டால்  கிடைக்கும்.
  2. வாய் விட்டுப் படித்தால் கொஞ்சம் புரியும். மௌனமாகப் படித்தால் அதிகம்  புரியும்.
  3. சிந்தனை பலன் தரும்.   சிந்திக்காவிட்டால் அதிகமாகப் புரியும், அதிகமாகப்  பலன் எழும்.

ஆன்மாவுக்குரிய சில சட்டங்களும் உண்டு.

  1. பிரியம் எவர் மீதுண்டோ அவர் வியாதி, கர்மம், அதிர்ஷ்டம், குணம்,  நம்மை  நாடி  வரும்.
  2. பரோபகாரம் செய்தால் பெற்றவர் துரோகம் செய்வார்.
  3. ஆண்டவனுக்குச்  சேவை  செய்ய  விரும்பினால்,  அதை யாருக்குச் செய்தாலும் சேவையை அவர் மூலம் ஆண்டவன் பெற்றுக் கொள்வார்.

அன்னைக்குரிய  சட்டங்களில்  சில.

  1. பணம் செலவு செய்தால் பெருகும்.
  2. நமக்கு எப்பொருள் அபரிமிதமாகத் தேவைப்படுகிறதோ, அதை நல்ல   மனதுடைய  அன்னை  அன்பருக்குக்  கொடுத்தால், அப்பொருள்  நம்மை  நாடி  அபரிமிதமாக  வரும்.
  3. சேவை என்பதை ஆண்டவனுக்கு மட்டும்தான் செய்யமுடியும்.
  4. நாம் மனத்தால் அன்னைக்குரியவராக மாறுவதுதான் அச்சேவை.
  5. பொருள்களுக்கு  ஜீவன்  உண்டு.
  6. ஜீவனோடு பொருள்களைக் கவனித்தால் அவை நம்மிடம் பேசும், உறவாடும்,  ஒட்டிக்  கொள்ளும்.
  7. உடலுக்கு உயிரிருப்பதைப்போல்,  மனம்  உண்டு, ஆத்மாவுண்டு, சைத்தியபுருஷனுண்டு.
  8. மானுடர் அனைவருக்கும் ஒரே மனம், ஒரே உயிர், ஒரே ஆன்மா, ஒரே  உடலாகும்.
  9. காலம்  உடலுக்கும்,  உணர்வுக்கும்  வேறுபட்டது.
  10. உடலுக்குரிய  காலம் 1 நிமிஷம் 1 மணியாக நகரும்.
  11. உணர்வுக்குரிய காலம் 1 மணி 1 நிமிஷமாக ஓடும்.
  12. அன்னை சக்தி செயல்படும்பொழுது ஜடத்திற்குள்ள சட்டங்களை மீறும்.  (தண்ணீர் பள்ளத்திலிருந்து மேட்டுக்குப் போகும்)
  13. ஒருவர்  நம்மை  நாடி  வரவேண்டுமானால்,  அவர் உணர்வுடன் தொடர்பு   கொண்டால்  அது முழுமை பெறும் நேரம் அவர் நம்மை நாடி வருவார்.
  14. ஒரு பொருள் அபரிமிதமாகப் பெருகவேண்டுமானால் அதன் ஆத்மீகம்   நமக்குத் தெரியவேண்டும் (1லிட்டர் அரிசியில் 5 பேர் பசியாறுவது வழக்கமானால்  அதன்  ஆத்மீகம்  தெரிந்தால் 8  பேருடைய  பசியை  அது  ஆற்றும்).



book | by Dr. Radut