Skip to Content

"ஸ்ரீ அரவிந்தம்" லைப் டிவைன்

கர்மயோகி

VIII. The Methods of Vedantic Knowledge

 

Human reason has a double action.

It can be mixed or dependent.

It can also be pure and sovereign.

Reason sometimes confines itself.

It limits itself to sensible experience.

Then, it admits law as final.

Law studies only phenomenon.

Phenomenon is the appearance of things.

Appearance is in relations.

Processes and utilities also give appearances.

This is rational action.

It is incapable of knowing anything.

It knows the appearances.

The truth is in the depths of being.

Reason cannot fathom it.

Reason surveys becoming.

Reason can also assert.

Its pure action does so.

It accepts our sensible experience.

8.  வேதாந்த  ஞானம்

 

பகுத்தறிவு  இருவகைகளில்  செயல்படும்.

தனித்தும்,  கலந்தும்  செயல்பட  வல்லது  அறிவு.

தூய்மையாகவும்,  பவித்திரமாகவும்  அதனால்  செயல்படமுடியும்.

அறிவு  தன்னைக்  கட்டுப்படுத்துவதுண்டு.

புலனுக்கு  அதுபோல்  கட்டுப்படும்.

அப்படிக்  கட்டுப்பட்டால்,  அறிவைச்  சட்டம்  கட்டுப்படுத்தும்.

சட்டம்  தோற்றத்திற்குரியது.

தோற்றம்  என்பது  புறத்தோற்றம்.

தோற்றம்  தொடர்பாலானது.

பலனும்,  வழியும்  தோற்றத்திற்குரியவை.

இதுவே  பகுத்தறிவின்  செயல்.

அதற்கு  வேறெதுவும்  தெரியாது.

தோற்றம்  மட்டும்  தெரியும்.

சத்தியம்  ஜீவனின்  ஆழத்திலுள்ளது.

அறிவால்  ஜீவனை  ஆழங்காண  முடியாது.

அறிவு  வாழ்வை  ஆராய்ச்சி  செய்கிறது.

அறிவுக்கு  வலிமையுண்டு.

அதன்  தெளிவான  செயல்  தன்னை  வலியுறுத்தவல்லது.

புலனனுபவத்தை  அறிவு  ஏற்கும்.

 

But it is not final for the reason.

It is only a starting point.

Reason goes behind the experiences.

It refuses to limit itself by it.

It works in its own right.

Behind the appearances are concepts.

They are unalterable.

They do not attach to the appearances.

These concepts are general.

Reason strives to reach them.

It judges by them.

Reason passes from the appearance behind.

Thus it may arrive at its result.

It will be a direct judgement.

This may appear to be the result of sense experience.

It may also appear to depend on it.

But it is really a perception of reason.

Here it works on its own right.

There is another more characteristic action of reason.

Its perception starts from an experience.

It is a mere excuse.

Reason may leave it behind.

Maybe far behind.

And proceed to the result.

Our senses give us an experience.

They wish to dictate a result.

அறிவுக்கு  அதுவே  முடிவானதன்று.

அது  ஆரம்பமே.

அறிவு  அனுபவத்தைக்  கடந்து  செல்லும்.

அனுபவத்திற்கு  அறிவு  கட்டுப்படாது.

தன்  சுய  உரிமையுடன்  செயல்படக்கூடியது  அறிவு.

தோற்றத்தின்  பின்  தத்துவம்  மறைந்துள்ளது.

அவை  மாற்றமில்லாதவை.

தத்துவம்  தோற்றத்தால்  பாதிக்கப்படாது.

இந்தத்  தத்துவங்கள்  பொதுவானவை.

அவற்றைக்  காண  அறிவு  முயல்கிறது.

தத்துவத்தைக்  கொண்டு  அறிவு  முடிவு  செய்கிறது.

தோற்றத்தைக்  கடந்து  அறிவு  அதன்பின்  செல்கிறது.

தன்  முடிவை  அறிவு  அங்கு  நாடுகிறது.

அதுவே  தீர்க்கமான  முடிவாகும்.

இது  புலனறிவின்  பலனாகத்  தோன்றும்.

புலனை  நம்பியிருப்பதாகவும்  தோன்றும்.

இருப்பினும்  இது  பகுத்தறிவின்  பார்வை.

அதுவே  அதன்  தனி  உரிமை.

அறிவுக்கேயுரிய  அடுத்த  அம்சமும்  உண்டு.

அப்பார்வை  அனுபவத்திலாரம்பிக்கிறது.

அது  வெறும்  சாக்கு.

அறிவு  அதைக்  கடக்கும்.

கடந்து  காததூரம்  செல்லும்.

நேராகப்  பலனை  நோக்கிப்  போகும்.

புலன்கள்  அவ்வனுபவத்தைத்  தரும்.

அவை  ஓர்  முடிவை  வலியுறுத்தும்.

 

Reason may arrive at an opposite result.

This movement is legitimate.

It is indispensable.

Our normal experience is small.

It covers a small part of the universal fact.

This is a limited field.

Our instruments are defective.

They give us false weights and measures.

It must be exceeded.

We must put it away to a distance.

Their insistence must be denied.

Our conceptions are inadequate.

There are more adequate conceptions.

They give us the truth of things.

We must arrive at it.

Sense-mind commits errors.

Reason must correct them.

It is a valuable power.

Man has developed it.

He is a superior terrestrial being.

Reason makes him so.

  

 

Senses belong to physical knowledge.

Reason is of the metaphysical

அறிவு  எதிரான  முடிவுக்கும்  வரும்.

இது  சரி.

இது  தவிர்க்க  முடியாதது.

நமது  அனுபவம்  சிறியது.

பிரபஞ்சத்தின்  மிகச்  சிறிய  பகுதி  அது.

இது  அளவுக்குட்பட்டது.

நம்  கருவிகள்  குறையுடையவை.

அவை  தவறாக  எடை  போடவல்லவை.

நாம்  அவற்றைக்  கடக்க  வேண்டும்.

நாம்  அவற்றிலிருந்து  தூர  விலக  வேண்டும்.

அவற்றை  மறுக்க  வேண்டும்.

நமது  தத்துவம்  சிறியது.

பெரிய  தத்துவங்களுண்டு.

அவை  உண்மை.

அவற்றைக்  காண  வேண்டும்.

புலன்  தவறு  செய்யும்.

அறிவு  அதைத்  திருத்த  வேண்டும்.

அறிவு  உயர்ந்தது.

அது  மனிதனுக்குரியது.

மனிதன்  பூமியில்  உயர்ந்த  பிறவி.

அறிவால்  மனிதன்  உயர்வடைகிறான்.

 

 

புலன்கள்  ஜடத்தை  அறியும்.

அறிவு  தத்துவமானது.

 

Our being is integral.

Metaphysics gives us concepts.

It does not fully satisfy us.

Pure reason accepts concepts entirely.

It is satisfactory to it.

Concepts are the stuff of reason.

Our nature has two eyes.

Things appear as an idea.

They also appear as facts.

Therefore concepts are incomplete for us.

They are unreal to a part of us.

Only experience is complete there.

Now we have different truths.

They are of a different order.

They are outside our experience.

They cannot be seen by the senses.

They can be seen only by the reason.

It needs another faculty in us.

We are dealing with the supraphysical.

So, we must extend our psychological experience.

 

 

 

contd...

நம்  ஜீவன்  முழுமையுடையது.

தத்துவம்  விளக்கம்  தரும்.

அது  திருப்தி  தராது.

அறிவு  தத்துவத்தை  பூரணமாக  ஏற்கும்.

அறிவுக்குத்  தத்துவம்  திருப்தி  தரும்.

தத்துவம்  அறிவுக்கேயுரியது.

நமக்கு  இரு  பார்வைகளுண்டு.

பொருள்கள்  எண்ணமாகத்  தோன்றும்.

அவை  பொருள்களாகவும்  தோன்றும்.

அதனால்  தத்துவம்  நமக்குப்  போதாது.

நம்முள்  ஒன்று  தத்துவத்தை  மாயை  என்று  கூறும்.

அனுபவமே  முழுமை  தரும்.

பலவகையான  உண்மைகள்  உள.

அவை  வேறு  வகையானவை.

அவை  நமக்கு  அனுபவமில்லை.

அவற்றைப்  புலன்களால்  அறியமுடியாது.

அறிவால்  அறியலாம்.

அதற்குப்  புதிய  திறமை  தேவை.

நாம்  சூட்சுமத்தில்  இங்குச்  செயல்படுகிறோம்.

எனவே,  நம்  ஆத்மானுபவத்தை  வளர்க்க  வேண்டும்.

 

தொடரும்...

 



book | by Dr. Radut