Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

122. எதுவும் செய்ய முனைப்பு எழாதவருக்கு யோகம் பலிக்கும்.

  • சுறுசுறுப்பானவர் எதையாவது செய்ய நினைப்பார்.
  • சோம்பேறிக்கு எதுவும் செய்யக்கூடாது எனத் தோன்றும்.
  • சிந்திப்பவருக்கு ஏதாவது சிந்தனையெழும்.
  • கற்பனையாளர் மனம் கற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது.
  • சிறு குழந்தையால் ஓடியாடாமலிருக்க முடியாது.
  • எவருக்கும் எந்த நேரமும் சுறுசுறுப்பான நேரம்.
  • சுறுசுறுப்பு அகந்தையின் முனைப்பு.
  • வழக்கத்திற்கு மாறாக எதுவும் செய்யத் தோன்றாதவர்க்கு பூரணயோகம் பயிலும் விருப்பமிருந்தால் கூடி வரும்.
  • அந்த நேரம் - சும்மாயிருக்கும் நேரம் - வராது. வந்தால் ஓரிரு நிமிஷமிருக்கும். ஐந்து அல்லது பத்து நிமிஷமிருப்பது கேள்விப்படாதது.
  • ஐந்து நிமிஷம் அந்நிலையிருந்தால் அதைப் பத்து நிமிஷமாக்க வேண்டும் அல்லது ஆறு நிமிஷமாக்க வேண்டும். அல்லது மீண்டும் அது வரும்படி செய்ய வேண்டும்.
  • அது தானே வந்தது. நாம் செய்யக் கூடியது என்ன?
  • நாம் முயல்வது அகந்தையின் முனைப்பல்லவா?
  • தானே வந்தது என்ற தெளிவு அகந்தையைக் கடந்த தெளிவு.
  • அகந்தையைக் கடந்தது மனம், ஆத்மா. அவற்றில் எதன் தெளிவு, எப்படி வந்தது. “நான்” செயல்படக் கூடாது என்றால் நான் செய்யக்கூடியதென்ன?
  • அகந்தையைக் கடந்த மனத்திற்கு மனச்சாட்சியுண்டு.
  • மனச்சாட்சி பொன் விலங்கு என்றார் Mother.
  • மனமும் சாட்சி சொல்லாத நேரம் மனத்தைக் கடந்த நேரம்.
  • மனத்தைக் கடந்த நேரம் ஆத்ம விழிப்புள்ள நேரம்.
  • மனத்தைக் கடந்து விட்டோம் என்பது ஆன்ம விழிப்பு, ஆன்மாவின் தெளிவு. அகந்தை சுறுசுறுப்பானது. அகந்தையைக் கடந்தால் மனம் முழு விழிப்புப் பெறும். இவை தானே நடப்பவை.
  • புலன் செயல்படாத நேரம் அகந்தையைக் கடந்த நேரம்.
  • இந்த “எண்ணங்கள்” அகந்தையின் ஆசை, மனத்தின் புலன் கூறும் சாட்சி ஆகியவற்றைக் கடந்த நேரம். பொதுவாக “விழிப்பு” ஏற்பட்ட நேரம். விழிப்பு ஏற்பட்ட நேரம் யோக தீட்சை பெற்ற நேரம்.
  • தீட்சை மௌனமாகவோ, அமைதியாகவோ, ஆனந்தமாகவோ அற்புதமாக ஆச்சரியமாக அதிசயமாக மனத்துள் உருவாகும்.
  • அது அவருக்கு யோகம் பலிக்கும் நேரம் எனக் காட்டுவதாகும்.
  • சும்மாயிருந்து சுகம் பெறும் நேரம் அது.
  • அந்த நேரம் உள்ளே Mother பகவான் தோன்றுவது அவர் அனுபவிக்கும் ஆசீர்வாதம்.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறர் பிரச்சனையைத் தீர்க்க முடிவது யோக சக்தி. பிறர் பிரச்சனையைத் தீர்க்க மறுப்பது யோக சித்தி.

சுயநலத்திற்கும் யோக சித்திக்கும் தோற்றம் ஒன்றே.

**********



book | by Dr. Radut