Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

எளிய மனம் கூறும் இனிய கட்டுக் கதைகள்

Volume 8, page 120

  • மனிதன் தன்னை அறிவதாக நினைத்துப் பெருமைப்படுவான்.
  • தன்னையறியும் திறன் இதுவரை மனிதனில் பிறக்கவில்லை.
  • சிறியதிலிருந்து பெரியதுவரை மனித இலட்சியங்கள் ஏராளம்.
  • கடமையை அறிந்த சிறிய மனிதன் ஆர்வமாகத் தன் வாழ்வைக் குடும்பத்திற்கு தியாகம் செய்கிறான்.
  • உலகம் அவனைப் போற்றும்.
  • அவன் உள்ளம் நிறைந்து பெருமிதமடையும்.
  • இவன் உணர்ச்சியால் வாழ்பவன்.
  • அத்தை மகளை மணக்க மறுத்த கல்லூரி ஆசிரியர் திருமணமான அன்று அவளுடன் வாழப்போவதில்லை என்று அறிவித்து 50-ஆம் வயதில் தனியாக இறந்தார்.
  • அவர் ஓர் இலட்சியத்தை நிறைவேற்றியதாக நினைத்தார்.
  • மனித இலட்சியங்களின் பல கூறுகளில் இதுவும் ஒன்று.
  • பகவானை ஏற்று, ஆன்மா மலர்ந்து 96-ஆம் வயதில் இறப்பவர் பெரும் இலட்சியத்தை சாதித்தவராகக் கருதி மகிழ்கிறார்.
  • மேற்கூறிய எவரும் தம்மை அறிந்தவரில்லை.
  • தன்னை அறிய முடியாத மனிதனின் கற்பனை ஆயிரம் கதைகளாக வெளிவரும்.
  • எது சரி? எது நல்லது? எது பெரியது? எது இலட்சியம் என அறிய ஒருவனுக்கு ‘மனிதன்’ என்றால் என்ன என்று தெரிய வேண்டும்.
  • போக்கிரிக்கு நிச்சயமானவள் நாடு விட்டு நாடு வந்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் பொழுது போக்கிரி தொடர்ந்து அவள் வாழ்வை அழிக்கிறான்.
  • அவள் சரியா? அவன் சரியா? எது சரி?
  • காலம் மாறும்பொழுது கருத்து மாறுகிறது.
  • காலத்திற்குரிய எந்தக் கருத்தும் நிலையானதல்ல.
  • சமூகம் காலத்துள் மாறுகிறது.
  • அன்பர்கட்குக் ‘காலமே’ மாறுகிறது.
  • காலத்தைக் கடந்ததை அன்பர் அறிவதில்லை.
  • எதிரிமீது எழும் கோபம் அவனை வலுப்படுத்தும் என நாம் அறிவதில்லை.
  • எதிரி மறந்து போனால் அவன் எதிர்ப்பால் அவன் அழிவான் எனவும் அறிவதில்லை.
  • அறிவு என்றால் எதை அறிவது அறிவு?
  • ஒரு சில நிமிஷம் ‘கால’த்தை விட்டு வெளி வந்து ‘கண்’ணால் பார்த்தால் ‘அறிவு’ தெரியும். அந்நேரம் அன்பர் காணும் அற்புதம் நாம் எதை அறிவு என நினைக்கிறோம் என்பதும் தெரியும்.
  • அன்பர் அன்பரானால் அவர் இதயம் சொர்க்கம்.
  • அவரால் கதை பேச முடியாது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகவான் உலகுக்குக் கொண்டு வந்த ஆத்ம ஞானப்படி, ஒருவருக்குப் பேரதிர்ஷ்டம் வரும்முன் பேரிடி விழும். பேரிடியைப் பேரிடியாக அறிவது மனித அறிவு. பேரிடியைப் பேரதிர்ஷ்டமாக அறிவது ஆத்ம ஞானம். அந்த ஆத்ம ஞானம் நம்மை ஏக்கத்திலிருந்து விடுதலை செய்யும். துரதிர்ஷ்டத்தைப் பேரதிர்ஷ்டமாக மாற்றும்.

இதுபோன்று ஒருவர் கஷ்டப்படும் பொழுது பகவான் அவரைக் கண்டு அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லையே என ஏங்குவதாகக் கூறுகிறார்.

**********



book | by Dr. Radut