Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 170: A door is cut in the mud wall of self

பிரம்மத்தின் மண் சுவற்றில் பொருத்திய வாயில்

  • தாழ்ந்த கூரைகளில் தலை வணங்கும் சிரம்
  • பூரித்து மலரும் புண்ணிய தேவதைகள் நடக்கும்
  • அந்தரங்க காராக்கிரஹத்தில் கனவில் வாழும்
  • பரிதாபம் பரிமளிக்கும், நெருப்பாகப் பறக்கும் தியாகம்
  • அனுதாபமும், அன்பொழுகும் இதமான இங்கிதமும்
  • இதயக் கோவிலினின்று எழும் சொர்க்க லோக ஜோதிகள்
  • ஆழ்ந்த மௌனம் சாதிக்கும் அற்புதச் செயல்
  • உலகின் அனுபவம் ஆனந்தமாய் மாறும்
  • தீண்டாத இடைவெளி, புதிரில் உறையும்
  • காலத்தின் கதி அமைதியாக்கும், இறைவன் இதயத்துள் உறங்குகிறான்
  • தாளிட்ட நெஞ்சம், அதன் ஆழத்தின் ஆனந்தம்
  • மரணமெனும் புறத்தின் பின் நின்று அசைய மறுக்கும்
  • பிரம்மத்தின் ஜீவன் உள்ளே உருவாகிறது
  • அது தெய்வீக ஆனந்தத்தின் திருவுருவம்
  • அது மோட்ச லோகம் இங்கு ஆள்வதாகும்
  • நம்பிக்கையற்ற அறியாமை மனம்
  • பெருவிடுதலை தரும் தீர்க்க தரிசனம்
  • லேசாக எழும் கரங்களை உயர்த்தும் மன உறுதி
  • நம் பகுதிகள் நாடும் அதன் ஆசையின் பிரம்மம்
  • எண்ணங்கள் சூழும் நிலையான ஜோதி
  • எல்லாம் வல்ல சக்தி எழுப்பும் நம் வலிமை
  • மறைந்துள்ள தெய்வீக ஆனந்தம் சிருஷ்டிக்கும் நம் உலகம்
  • அமர வாழ்வின் அழகு நாடும் சிறப்பான ரூபம்
  • ஜீவனின் தூசி சிருஷ்டித்த நம் உலகம்
  • வலைவீசும் ரூபங்களில் விரும்பி விழும் நம் நெஞ்சம்
  • குருட்டுப் புலன் நாடும் பேரானந்தப் பெருவெள்ளம்
  • சத்தியத்தைச் சிலுவையிலறையும் நம் தவறு
  • தெய்வீக உடல் இங்கு பிறக்கும் கட்டாயம்
  • மனிதப் பிறவியில் மறைந்துள்ள நிர்ப்பந்தம்
  • தொட்டு அணைக்கும் உயிருள்ள உடல்
  • ஆதிகால அறியாமையைக் காப்பாற்றும் ஞானம்
  • இருண்ட பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் ஜோதி

********

ஜீவிய மணி

கெட்டவர்களின் கெட்ட குணத்தை விலக்கி அவரிடம் பிரியமாக இருப்பதும், நல்லவரிடம் அவர் நல்ல குணத்தை விலக்கி அவரிடம் பிரியமாக இருப்பதும், மனிதனை, மனிதனாகக் கருதாமல் ஆன்மாவாகக் கருதுவதாகும். இதை நெருங்கிய உறவில் கடைப்பிடித்தால், ஆசை அன்பாகவும், அன்பு செலுத்துவது ஆன்மாவையும், ஆண்டவனையும் நெருங்குவதாகவும் ஆகும்.

********



book | by Dr. Radut