Skip to Content

10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

CHAPTER 2 – THE MATERIALIST DENIAL:

  1. Tradition chooses the one and forgets the other.
    Sri Aurobindo tries to dissolve the multitudinous illusion into the sole Truth of eternal Silence.

    மரபு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றதை மறக்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் பன்முக மாயத் தோற்றங்களை அமர மௌனத்தின் தனிப் பெருஞ்சத்தியத்தில் கரைக்க முயல்கிறார்.

  2. Tradition offers a vague concession to the rigidities of the materialist as well as the ascetic.
    Sri Aurobindo extends the limits of inquiry to meet the inexorable demands of Thought.

    துறவிகளிடம், பொருள் முதல்வாதிகளிடமும் உள்ள மாற மறுக்கும் இறுக்கங்களை மரபு தெளிவின்றி அனுமதிக்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் சிந்தனையின் தவிர்க்க முடியாத கேள்விகளை எதிர்கொள்ள ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவுபடுத்துகிறார்.

  3. Tradition accepts the barren contradictions of the human mind.
    Sri Aurobindo reconciles them by the objective methods of analysis or by the subjective method of synthesis.

    மனித மனதின் மலட்டு முரண்பாடுகளை மரபு ஏற்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் பகுத்தறியும் புறவயமான முறைகளின் மூலமும், ஒருங்கிணைத்தறியும் அகவயமான முறைகளின் மூலமும் முரண்பாடுகளை உடன்பாடுகளாக்குகிறார்.

  4. Tradition tests each of these great opposites separately.
    Sri Aurobindo shows by whatever road we may travel That is always the end.

    இப்பெருமெதிர் முனைகளை மரபு தனித்தனியாக ஆராய்கிறது.
    எப்பாதையில் பயணித்தாலும் "அது"வே முடிவென்பதை ஸ்ரீ அரவிந்தர் காட்டுகிறார்.

  5. Tradition in Europe and in India espoused Matter and Spirit which led to the bankruptcy of the Spirit and bankruptcy of Life.
    Sri Aurobindo sees that the time grows ripe for a new and comprehensive affirmation in thought and experience.

    ஐரோப்பா பொருளை மட்டும் ஆதரித்து, ஆன்மாவை இழந்தது.
    இந்தியா ஆன்மாவை மட்டும் ஆதரித்து, வாழ்வை இழந்தது.
    சிந்தனையிலும், அனுபவத்திலும் அனைத்தையும் தொகுத்து ஏற்கும் புதிய நிலைக்கான நேரம் கனிந்து வந்திருப்பதை ஸ்ரீ அரவிந்தர் காண்கிறார்.

தொடரும்....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரம்மத்தை அனுபவிக்க மற்றவரில்
இறைவனை அனுபவிக்க வேண்டும்.
 

********



book | by Dr. Radut