Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

70. இச்சா மிருத்யு

 • மனித வாழ்வு மனிதன் கையில் இல்லை.
 • மனிதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன். எனவே மரணம் அவன் பிடியில் இல்லை.
 • மனம் என்பது புறத்தில் புலனாகவும், அகத்தில் எண்ணமாகவும் செயல்படுகிறது.
 • புறம் இடம், அகம் காலம். புலனும் காலமும் மனத்தைக் கட்டுப்படுத்துபவை.
 • ரிஷிகள் புலனை அவிக்கும் திறனுடையவர். காலத்தைக் கடக்கும் திறனுடையவர்.
 • காலத்தைக் கடந்த ரிஷி இச்சா மிருத்யுவைப் பெற முயன்று வெற்றி பெறலாம்.
 • தானே முடிவு செய்து உயிரை விடுவதை "இச்சா மிருத்யு' என்பர்.
 • ரிஷிகள் நிலை கடவுள்களை விட உயர்ந்தது எனினும், அன்பர் நிலையில் ரிஷிகளைக் கடந்த பவர் பெறுவது வித்தாகப் புதைந்துள்ளது.
 • பல அன்பர்கட்கு ரிஷிகளுடைய சக்தியும், அதைக் கடந்த சக்தியும் சில சமயங்களில் சில விஷயத்தில் வருவதை அவர்கள் பெரும்பாலும் அறியார்.
 • பாரதியை பகவான் போற்றினார். பகவான் சுதந்திரப் போராட்ட வீரரென பாரதி போற்றினார். சுதந்திரத்தை விட்டு பகவான் யோகத்தை நாடியதால் பாரதி பகவானுடைய தொடர்பை குறைத்துக் கொண்டார். பாரதி யோகத்தை மேற்கொள்ளவில்லை. அவர் கவி. சுதந்திரம் அவர் மூச்சு.
 • புயலால் புதுவை முழுவதும் சேதமானபொழுது பாரதி அடிக்கடி வருகின்ற தென்னந்தோப்பு அப்புயலால் பாதிக்கப்படவில்லை.
 • சித்த பிரமை ஏற்பட்ட சிறுவனை பாரதி தன்னுடன் ஒரு மாதம் வைத்திருந்து குணப்படுத்தினார்.
 • இவையிரண்டும் ரிஷியுடைய நிலை.
 • வார்த்தை பலிப்பது, எல்லாப் பிரார்த்தனைகளும் பலிப்பது, எதிர்கால திருஷ்டி, போட்டோவில் அன்னையை உயிருள்ள உருவமாகக் காண்பது போன்றவை ரிஷிகட்குரிய பவர் ஏராளமான அன்பர்கட்குண்டு.
 • அடுத்தவருக்கு மோட்சம் தரும் திறன் அன்பருக்கிருந்ததும் உண்டு.
 • ஆசனத்தில் கடைசி ஆசனம் "சவாசனம்'. உடலில் உயிர் பிரிந்த நிலையை ஆசனமாகப் பயில்வது அன்பர்கட்கு இந்நிலை பலிப்பதுண்டு.
 • அந்த அன்பர்கட்கு இச்சா மிருத்யு பயின்றால் பலிக்கும்.
 • சொல்லும் வார்த்தை பலிப்பது ஆன்மீகத் திறன்.
 • நினைப்பது நடப்பது அதைக் கடந்த உயர்ந்த திறன்.
 • பிறர் மனம் அறிவது (telepathy) நேரடி ஞானம்.
 • அஞ்ஞானமுள்ளவனின் அஞ்ஞானத்தினுள் உள்ள ஞானத்தால் அஞ்ஞானத்தை ஞானமாக மாற்றுவது சத்திய ஜீவியம், ரிஷி, கடவுளைக் கடந்த நிலை.
 • பிறருக்கு உதவுவது பரோபகாரம்.
 • பிறருக்கு அவரிடம் உள்ள சந்தர்ப்பத்தால் அவரே அவர் பிரச்சினையைத் தீர்க்க வழி கூறி ஒருவர் வெல்வது ரிஷியைக் கடந்த நிலையை அன்பர் பெற்றிருப்பது.
 • இச்சா மிருத்யுவிற்கு ஜீவ சமாதி என்ற பெயரும் உண்டு.
 • மரணப் படுக்கையில் உள்ளவர் அன்பர் பேசியதால் உயிர் பெற்று எழுவது அந்த அன்பருக்கு மேற்கூறிய ஆன்மீக சித்திகள் உண்டு என்று அறியலாம்.
 • இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் என்பது ஆன்மீகம் சித்தித்த நிலை. ஆன்மீக வலிமை அது போல் உள்ளவரை பணம், ஆன்மீகத்தை, நாடி வரும்.
 • பணம், பதவி நாடி வருவது ஆன்மீகம்.
 • கோபத்தை அடக்குவது, கோபம் எழாத நிலை, கோபம் எழ வேண்டிய நேரம் சந்தோஷம் எழுவது ஆன்மீக நிலைகள்.
 • போக்கிரி, அடாவடிக்காரன், நாணயமற்றவன், ஆன்மீகமுள்ளவரிடம் தானே நாணயமாக நடப்பான்.
 • அப்படிப்பட்டவர் உள்ள இடத்தில் மௌனம் குடி கொள்ளும்.
 • அவரிடம் நேரிலோ, மானசீகமாகவோ கூறியவை நிறைவேறும்.
 • அவரிடமிருந்து ஓர் உரிமையைப் பொருளை பறிக்க விரும்புபவர் அவருக்கு அவற்றை அதிகமாகக் கொடுக்க நேரிடும்.

*******

71. அசரீரி, திருஷ்டி, ஸ்பர்சம், ரஸா, தெய்வீக மனம் - காரண லோகம்.

 • மேல் மனம் ஜடம். உள் மனம் சூட்சுமம், அடிமனம் பிரபஞ்ச சூட்சுமம், ஆன்மீகமானது.
 • இதுவரை யோகம் என்பது மேல் மனத்தினின்று ஏதாவது ஒரு முறையினால் உள் மன சூட்சுமத்தையடைந்து, மேல் நோக்கி பிரம்மத்தை அடைய முயல்வது.
 • உள் மனத்திற்கு சூட்சுமம் உண்டு, ஆனால் அது ஆன்மீக சூட்சுமமில்லை.
 • இதுவரை எல்லா யோகங்களும் மேல் மனத்தில், அகந்தையால், காலத்தில் நிகழ்ந்தவை.
 • பூரண யோகம் மேல் மனத்தினின்று செய்ய முடியாது. அடி மனத்தினின்று செய்ய வேண்டும்.
 • அடி மனத்தில் பாதாளமும், பரமாத்மாவும் சந்திக்கின்றன. இது பிரபஞ்ச முழுவதும் பரவியுள்ளது.
  அடி மனக் குகையில் சைத்திய புருஷன் இருக்கிறான்.
 • அடி மனத்தை உள் மனம் வழி அடைய வேண்டும்.
 • உடலின் சூட்சுமம் முதலிலும், உயிரின் சூட்சுமம், மனத்தின் சூட்சுமம் தொடர்ந்தும், முடிவாக சைத்திய சூட்சுமமும் வெளிப்படும்.
 • சைத்திய சூட்சுமத்தைத் தொடர்ந்து சென்றால் அடி மனக் குகையில் சைத்தியம் பலிக்கும்.
 • உள் மனத்தில் ஞான யோகி மனோமய புருஷனை சந்தித்து அதன் வழியாக ஜீவாத்மாவை அடைகிறான்.
 • நிஷ்டை விசாரமானால் - எண்ணம் ஆராய்ச்சியால் கரைவது - உன் மனம் நிர்வாணக் கதவை திறக்கும்.
 • பூரண யோகிக்கு மனோமய புருஷனும், நிர்வாணக் கதவும் பயன்படாது. சைத்திய வாயில் பயன்படும்.
 • அசரீரி, திருஷ்டி, ஸ்பர்சம், ரஸா, தெய்வீக மனம் தட்டுப்படுவது உள்மனம் திறந்து சூட்சுமம் பலிக்கும் வாய்ப்பைக் காட்டும்.
  அது பூரண யோகம் பலிக்கும் அறிகுறிகளில் ஒன்று.
 • ஜெயிலில் பகவான் அசரீரியால் புதுவைக்கு அனுப்பப்பட்டார்.
 • விஷ்ணு லீலி, பகவானை மௌனத்திற்குப் போகும் வழியைக் கூறினார்.
 • "உட்கார், கண்ணை மூடு, எண்ணம் உள்ளே வருவதைப் பார். அவற்றை தூர எறி" என்பது லீலியின் கட்டளை.
 • நாம் உட்கார்ந்து கண்ணை மூடினால் எண்ணம் உள்ளே வருவது தெரியாது. மனம் ஸ்தம்பிக்கும்.
 • குருவை ஏற்பவனுக்கு குரு தீட்சை அளிப்பதால், குரு அனுக்கிரஹம் எண்ணம் உள்ளே வருவதைக் காட்டும்.
 • லீலி எதிர்பார்த்தது மௌனம், பக்தி, ஆர்வம்.
 • பகவான் எண்ணங்களைக் கண்டு எறிந்த பொழுது முதல் நாளில் மனம் காலியாகிவிட்டது.
  லீலி சொன்னது மூன்று நாள். அதனால் மேலும் இரண்டு நாள் தொடர்ந்தார்.

  பிரம்ம ஜீவியமே பலித்துவிட்டது
  அசரீரி கேட்டது.

 • இவை முடிவான சித்திகளாதலால் லீலிக்குப் புரியவில்லை.
  "உன்னை பிசாசு பிடித்துக் கொண்டது'' என பகவானிடம் கூறினார்.
 • அதன் பின் பகவான் லீலியிடம் அசரீரியைப் பற்றிக் கூறவில்லை.
 • அதிலிருந்து நாள் முழுவதும் தியானம் பகவானுக்குத் தானே அமைந்தது.
 • அதையும் பகவான் லீலியை அடுத்த முறை சந்தித்தபொழுது கூறவில்லை.
 • அசரீரியில் பல கட்டங்களுண்டு. அகத்திற்குரிய குருவின் குரல் அசரீரியானால் அவருக்கு அதன் பிறகு மனித குரு தேவையில்லை.
 • அன்பர் மௌனத்தை நாடினால், எந்த பயிற்சியுமின்றி தியானத்தில் மௌனம் குடி கொள்ளும்.
 • அதை நீடிக்கும்படி புறச்செயல்களை அமைத்தால் - சமர்ப்பணத்தால் செயல்பட்டால் - தியானம் வளரும், முழுமை பெறும்.
 • பூரண யோகம் அது போல் தரும் நிலை பெரியது. தியானம் அதில் ஒரு பகுதி.
 • வளரும் ஜீவியம் நாளில் முழுமை பெறுமுன் ஒரு மணி, இரண்டு மணி இடைவெளியிருப்பது தெரியும்.
 • இந்த இடைவெளியில் மௌனம் பூரணமில்லாமலிருப்பதால், இருபத்து இரண்டு மணி நேரம் மௌனமிருப்பது தெரிய வரும்.
 • இருபத்து இரண்டு மணி நேர மௌனம் ஏற்பட தேவைப்பட்ட நேரம் மீதி இரண்டு மணி பூர்த்தியாகத் தேவைப்படும்.
 • தானே தேடி வரும் மௌனம் பெரிய வாயில்.

தொடரும்.....

*******

ஜீவிய மணி
 
சூட்சுமம் அதிகமானால்
சக்தி அதிகமாகும்.
 

*******book | by Dr. Radut