Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா (Volume 12, Page 120)

Mother has great hope for the Russians.

ரஷ்யா மீது அன்னைக்கு அதிக நம்பிக்கையுண்டு.

  • ரஷ்யர்கள் உணர்ச்சி மேலிட்டவர்கள், அவர்களை நம்பலாம்.
  • மேல் நாடுகளை விட ரஷ்யரிடம் உண்மை sincerity அதிகம் என அன்னை கூறியிருக்கிறார்.
  • உலக நாடுகளில் அமெரிக்காவில் தான் விழிப்பு அதிகமாக இருக்கிறது என்று அன்னை கூறுகிறார்.
  • இந்தியாவுக்கு அடுத்தபடி உலகுக்குப் பிரான்ஸ் தான் சேவை செய்யும் என்பதால் நான் அங்குப் பிறந்தேன் என்கிறார் அன்னை.
  • இந்திய மக்கள் உடலில் ஜோதியுண்டு என்கிறார் அன்னை.
  • ஜப்பான் நாணயத்திற்கு (honour) பேர் போனது என்கிறார் அன்னை.
  • இந்தியா உலகுக்குக் குருவாகும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
  • பொதுத் தேர்தலில் ஜனாதிபதிக்கும் எளிய மனிதனுக்கும் ஒரு ஓட்டு தான் என்பது உண்மை.
  • அனைவரும் சமம் என்பதால் அனைவரும் ஜனாதிபதியாக முடியாது என்பதும் உண்மை.
  • எல்லா விஷயத்திலும் அன்னை புதியவர் என்பது போல் இங்கு முழுமுயற்சி உள்ளவர் எவரும் ஜனாதிபதியாகலாம் என்பது அன்னையின் உண்மை.
  • பரிணாமம் பூரணமானது. பூரணத்திற்குரிய நேரம் வரும் பொழுது அன்னை நாடுகளைப் பற்றிக் கூறுவது இவ்வளவையும் கடந்தது.

    இறைவன் எண்ணம் பூரணமாகும் நேரத்தில் எல்லா நாடுகளும் அவரவர்க்குரிய முன்னேற்றமடைந்து பூரணத்தில் சம பங்கு கொள்வர் என்று அன்னை கருதுகிறார்.

  • ஆன்மீகம் உயர்ந்த நம் நாட்டில் வளமில்லை, அறிவு இல்லை, முயற்சியில்லை, சுய மரியாதையில்லை, தன்னம்பிக்கையில்லை.
  • வளம் கொழிக்கும் மேல் நாடுகளில் சூட்சும ஞானமில்லை, ஆன்மீக விழிப்பில்லை, மக்கள் மனம் வறண்டுள்ளது.
  • ரஷ்யா போன்ற உணர்ச்சிவசமான நாட்டில் அடிப்படைச் சுதந்திரமில்லை.
  • நேரம் வரும்பொழுது குறையாகக் காண்பது நிறைவாகக் காட்சி தரும் என்பது அன்னை சட்டம்.
  • இந்தியா 600 ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்தது, ஆயிரம் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு சிதைந்து போன நாடு ஒருமைப்படுத்தப்பட்டது என நாம் காண்கிறோம்.
  • உலக வரலாற்றை பகவான் யோகக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் முயற்சி இதுவரையில்லை. அது ஏற்பட்டால் புரியாத புதிரெல்லாம் புரியும். அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.
  • பல கோடி மக்கள் சர்க்காரால் சுடப்பட்டனர் என்ற திடுக்கிடும் செய்தி - ரஷ்யாவில் 1917 முதல் 1990 வரை - அந்த நாட்டில் எந்தப் பெரிய நன்மைக்கு என நாம் அறியும் பொழுது சரித்திரத்தின் இரகஸ்யங்கள் தெரிய வரும்.
  • உயிரைக் காப்பாற்ற உடல் சில கோளாறுகளை - டான்சில் போன்றவை - ஏற்பது மருத்துவ சரித்திரம் அறிந்தது. உலகில் பரிணாமம் பூர்த்தியாக வரலாறு ஏற்ற குறைகளின் உள் அர்த்தம் ஸ்ரீ அரவிந்தம் அறியும்.

*******



book | by Dr. Radut