Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • மனிதன் சந்தர்ப்பம் கிடைத்தால் விட முடியாது.
    நீர்க்குமிழி உருவம் பெற்று அழியும்.
    சந்தர்ப்பத்தை விட முடியாத மனிதனுடைய பர்சனாலிட்டி நீர்க்குமிழியாகும்.
    பிறர் தூண்டுதலால் செய்த தவறும், நாம் செய்த தவற்றின் பலன் தரும்.
    தவறு என்பதை "விட முடியவில்லை என்ற இயலாமை'' எனலாம்.
    "விட முடியவில்லை'' என்பவன் "பெற முடியவில்லை'' என பறையறிவிக்கிறான்.
    தவறானவனும் தெளிவான பர்சனாலிட்டி ஆக இருப்பான்.
    அது உருவாகாத பர்சனாலிட்டியை விடப் பெரியது.
    ஏனெனில் தவறானவன் மனம் மாறினால் அவனுக்கு என ஒரு சுபாவம் இருக்கிறது.
    சுபாவம் தெளிவு படுவது கெட்டவன் நல்லவனாவதை விடக் கடினம்.
    அதனால் மனமாற்றம் பெரியது. உலகை சாதிக்க வல்லது.
    மனம் மனிதனின் மையம்.
    அங்கு நின்று எடுக்கும் முடிவு உலகின் மையத்திலிருந்து எடுக்கும் முடிவாகும்.
    இந்த 140 கட்டுரைக் கருத்துகளும், "The Life Divine'' கருத்துகளாகும்.
    அன்னை கருத்தில் சிறந்தவரை (intellectuals) அறிவற்றவர் என்கிறார்.
  • பேச்சு
    1. சரியாக இருக்க வேண்டும்.
    2. இனிக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததை முடித்து விட்டால் தெரியாததைக் கற்றுக் கொள்ளலாம்.

    உ.ம். 

    I
    நீ தவறு
    x
    நீ சரியென நான் நினைக்கவில்லை.
    நீ உன் சந்தர்ப்பத்தில் சரி, ஆனால் மற்றவர் உன்னைச் சரி எனக் கூற மாட்டார்கள். இது (professionals) தொழிலில் உள்ளவர் நோக்கம்.
    II
    விவசாயத்தில் சம்பாதிக்க முடியாது
    x
    ஏராளமாகச் சம்பாதிக்கலாம்.
    ஒருவர் நிலத்தில் அதிகம் சம்பாதித்தால் நாடு முன்னேறும்.

    (சொல்லை விட குரல் நம் போக்கைக் காட்டும்).

    நயமாக இக்கருத்தை மறுப்பதற்குப் பதிலாக, இக்கருத்தில் ஏதாவது உயர்வு உண்டா எனப் பார்த்து அதைச் சொல்ல வேண்டும்.

    உ.ம். நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதிகம் சம்பாதிப்பீர்கள் எனக் கூறலாம். (எது அவர் மனம் இனிக்கும் என யோசனை செய்து பேசுவது நாகரிகம். அதற்குப் பயில வேண்டும்).

    இந்தப் பயிற்சி நம் பேச்சிற்கு Top Score கொடுக்கும்.

    இதைப் பயின்ற பின் அழகான தமிழில் அதை வெளியிட வேண்டும்.

    அத்துடன் குரல் நயமாக, இனிமையாக, சுவையாக இருக்க வேண்டும்.

    பிறர் குறை நம்மிடமிருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

    பேசும்பொழுது பிறர் கவனத்தை ஈர்த்துப் பேசுவது அவசியம்.

    பேச ஆரம்பிக்குமுன் பிறரை நம் பக்கம் திருப்பி, பிறகு பேச வேண்டும்.

  • பத்து கட்டப் பரிகாரம்
    1. (No Reaction) எரிச்சல் படாமலிருப்பது.
    2. எரிச்சல் படக் கூடாது என்ற ஆழ்ந்த முடிவு.
    3. சந்தோஷப்பட வேண்டும் என்ற ஞானம்.
    4. சந்தோஷப்பட வேண்டும் என்ற முடிவு.
    5. சந்தோஷம் எழுவது (எரிச்சல் பட வேண்டிய நேரத்தில்).
    6. எரிச்சலுக்கு ஒரே காரணம், நம்முடைய எரிச்சல்படும் குணம்.
    7. நம் குணத்தை அறிந்து வெட்கப்படுவது.
    8. எந்தக் குணமும் இது போன்றது என்ற (sensation) உணர்ச்சி.
    9. குணத்திலிருந்து உள்ளே பெறும் விடுதலை.
    10. விடுதலை தரும் பலன் strength, நிதானம் - பக்குவம்.
  • உடன்பாடாகும் முரண்பாட்டின் தத்துவம்
    • பதுங்காமல் பாய முடியாது எனத் தெளிவாகத் தெரிவது போல் சண்டை போட்டு வெறுப்பு எழாமல் பிரியம் பிறக்காது எனத் தெரிவதில்லை.
    • தீவிரமாக வேலை செய்ய முதல் நாள் முழு ஓய்வும், உறக்கமும் தேவை என்பது விளங்குவது போல் துரோகம் செய்யாமல் அன்னியோன்யமான விஸ்வாசம் பிறக்காது என நம்மால் எவ்வளவு சிந்தித்தாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
    • அனைவர் மீதும் பிரியமில்லாமல் ஒருவர் மீது பிரியம் எழ முடியாது. எல்லா இடத்திலும் நாணயமில்லாமல் ஓரிடத்தில் நாணயமிருக்க முடியாது. ஆனால் எளிய மனம், "என் மீது மட்டும் உள்ள பிரியமே பிரியம்'' எனத் தெளிவாக நம்புகிறது.
    • பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் ஆகியவை அறிவு பெறுமிடம். நடைமுறையில் அறிவின் சிகரமான மேதைகள் - ராமானுஜம், பெர்னார்ட்ஷா, தாகூர் - ஆகியவர் உருவாவதை இந்த ஸ்தாபனங்கள் தடை செய்கின்றன.
    • இவற்றை வலியுறுத்தும் பழமொழிகள் உண்டு.
      1. ஆபத்திற்கு உதவாத பிள்ளை.
      2. ஆவாதவனே ஆபத்தில் உதவுவான்.
      3. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
      4. நாமொன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது.
      இனிமையைப் பாதுகாக்கும் கடுமை.
      மெய்யின் ஜீவநாடியான பொய்.
      கற்புக்கு இன்றியமையாத வேலியான பொது மகளிர்.
      நிறைவை முழு நிறைவாக்கும் தலைகீழ் நிறைவான குறை.
      அறிவு ஞானமாக முதிரப் பாடுபடும் மடமை.
      வலிமை வளம் பெறும் வழி செய்யும் வகையான இயலாமை.
      மௌனம் காக்கும் மோனத்தின் சிகரமான ஓசை.
  • அசைவற்ற பிரம்மத்தை முழு பிரம்மமாக்கும் அஞ்ஞானமான சிருஷ்டி.
    ஒளியை ஜோதியாக உயர்த்தும் அடர்ந்த காரிருள்.
    சச்சிதானந்தம் பிரம்மானந்தமாகும் வலி, வேதனை, நோய்.
    ஐக்கியம் முழுமையின் ஐக்கியமாகப் பாடுபடும் பிரிவினை.
    அதிர்ஷ்டத்தை அருளாக மாற்றும் தரித்திரம்.
    வாழ்வும், மரணமும் இணைந்து சாதிக்கும் அமரத்துவம்.
  • பிரியம் காதலால் கனிந்த அன்புப் பிழம்பாகும் வேதனையான பிணக்கும் பிரிவும்.
    உதவியை உயர்த்தும் உபத்திரவம்.
    அழகை சௌந்திர லாவண்யமாக்க கோரமும் விகாரமும் செய்யும் சேவை.
    வெற்றியை நிரந்தர வெற்றியாக்கும் தோல்வியின் பரிணாமச் சேவை.
  • இலட்சுமணனாக வந்த இராவணன்.
    உயர்த்தும் தாழ்வு.
    பயம் வளர்க்கும் தைரியம்.
    பாய்ச்சலுக்கு அவசியமான பதுங்கல்.
    அன்பிற்கு அடிகோலும் வெறுப்பான பாசம்.
    மரணமிலா வாழ்வளிக்க உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கும் மரணம்.
    அன்பான வெறுப்பு.

தொடரும்....

*******



book | by Dr. Radut