Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Page 403 The miracle of its omniscience appears most strikingly of all

               what seems to  us the action of an inconscient.

              அஞ்ஞானம், அறியாமை என்று நாம் கருதுவதன்    

              செயலில், எல்லாம் அறிந்தவன் செயல் ஆச்சரியமாக,        

              அற்புதமாக வெளிப்படுகிறது.

  • ஸ்ரீ அரவிந்தம் உலகை புதிய கண்ணோட்டத்துடன் காண்கிறது.
  • வாழ்வு என்பது பேய் போன்ற சக்தி. பெண் மனிதனுக்கு ஆசை காட்டப் பிறந்தவள்.

    வாழ்வை விட்டு விலகாமல் இறைவனைக் காண முடியாது.
    சேலை கட்டிய மாதரை நம்ப முடியாது என்பது மரபு. 

    வாழ்வு பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தி. பிரபஞ்சம் அழிந்தாலும் வாழ்வு அழியாது. இருள் நிறைந்த இன்றைய வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறுவது ஸ்ரீ அரவிந்தம். இந்த வாழ்வின் அஸ்திவாரம் உடல். உடல் அற்புதமான ஆன்மாவின் அணிகலன். பெண் பெருமையுடையவள். வாழ்வை ஆணுக்குப் பூர்த்தி செய்யப் பிறந்தவள். ஆண் சக்தியின் உறைவிடம். சக்தியின் சாதனைக்குரிய கருவி பெண். ஆண் சாதிக்கும் வகை பல. சாம்ராஜ்யங்களை நிறுவுவது ஆண். சாஸ்திரங்களை உருவாக்குவது ஆண். ஆண் சாதிக்கும் வகை பல. உலகில் சாதனை என்பனவெல்லாம் ஆணுடையது. அவ்வளவும் புறச் சாதனைகள். ஆணின் சாதனையின் சிகரம் அகத்திற்குரியது. அகத்திற்குரியவள் அகம் உடையவள். புறம் பூர்த்தி செய்யும். அகம் இனிக்கும். இனிக்கும் பூரணம் தருபவள் பெண். மனிதன் பிறந்த நாளிலிருந்து பெண்ணுக்கு மனத்தால் கட்டுண்டவன். அடிமையாய் வாழ ஆசைப்படுபவன். இந்த உண்மையை அக்பர் ஏற்கவில்லை. பீர்பால் ஊரில் உள்ளவரைக் கூட்டினார். மனைவி சொல்லுக்கு உட்பட்டவரை ஒரு புறமும், உட்படாதவரை மறுபுறமும் நிற்கச் சொன்னார். அனைவரும் ஒரு புறமும், ஒருவர் மட்டும் மறுபுறமும் நின்றனர். அவரை, "ஏன் மறுபுறம் நிற்கிறீர்கள்?'' என வினவியதற்கு, "என் மனைவி கூட்டத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளாள்'' எனப் பதில் வந்தது. பெண் சக்தி. ஆண் ஈஸ்வரன். ஈஸ்வரன் ஆணையை ஏற்று மகிழ்பவள் சக்தி. ஈஸ்வரன் தன் ஜென்மம் பூர்த்தியடைய சக்தியைச் சரண் அடைகிறான். சக்தியைச் சரணடைந்த ஈஸ்வரனே உலகில் சத்தியஜீவிய அற்புதம் நிகழ்த்துகிறான் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

    தீமை, பெண், உடல், வாழ்வு, அஞ்ஞானம் மரபில் விலக்கு.
    ஸ்ரீ அரவிந்தம் எதிராகக் கூறுபவை:

    • தீமை இறைவனுக்கு உச்சக்கட்ட ஆனந்தம் தரும் அரங்கம்.
    • பெண் இறைவனின் யோகத்தை ஆணில் பூர்த்தி செய்ய வந்த அவதாரம்.
    • உடல் பெருவாழ்வின் சிறப்பான அம்சங்கள் சீராக அமைந்த அடிப்படை.
    • அஞ்ஞானம் ஞானத்தைக் கடந்த சிறப்புடையது. 
  • அயூப்கான் பாகிஸ்தானில் எதேச்சாதிகார ஆட்சியை ஏற்படுத்திய பொழுது இந்தியர் அனைவரும், படித்தவர் உட்பட அப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்றனர். 1975இல் இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்தபொழுது சர்க்கார் அதிகாரிகள் "இப்பொழுதுதான் சர்க்கார் சர்க்காராக இருக்கிறது. இப்படியேயிருந்தால் நாடு திறமை பெறும்'' என்றனர்.
  • எதேச்சாதிகாரம் இன்றும் சுமார் 50 நாடுகளில் உள்ளது. மக்கள் அதைப் பாராட்டுகின்றனர். உலகம் அமெரிக்கத் தலைமையை ஆர்வமாக ஏற்றுள்ளது. அமெரிக்கா மக்களாட்சி. உலகில் மக்களாட்சி மலர்ந்து பிரபலமான நாடு. அங்கு மக்கள் தனி நபர் சுதந்தரத்தை எல்லா வகையிலும் அனுபவிக்கின்றனர். இந்தச் சுதந்தரம் சுபிட்சமாகிவிட்டது. மனைவி, குழந்தையுள்பட எவரையும் எவரும் அடிக்க முடியாது. ஆபத்து சுவிட்சைப் போட்டால் அடுத்த 10 நிமிஷத்தில் போலீஸ் அடித்தவரை ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லும். அவர்கள் இன்று மக்களாட்சியை மன்னராட்சிக்கு மாற்ற மனம் இசையமாட்டார்கள். மக்களாட்சி அறியாதவன் ஆட்சி.
    • அறியாமையை அதிகம் அனுபவிப்பவன் ஆட்சி உலகில் வளம் நிறைந்த நாடாக இருப்பதெப்படி?
    • அறியாமை அறிவைவிட உயர்ந்தது என நம் அறிவுக்குப் புலப்படவில்லையெனினும் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் சக்திக்குப் புலப்படுகிறது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உணர்வின் தேவையும், உண்மையும், உணர்வில் சக்தியுள்ளவரை, உறவை நீடிக்கும். உணர்வின் சக்தி திடீரென எழுந்து மடியும். அடிக்கடியும் அப்படிச் செயல்படும். நிலையாமை அவற்றின் முத்திரை. நித்தியமான பண்பை அவற்றால் ஏற்கவோ, போற்றவோ முடியாது.
 
உறவை நீடிப்பது உணர்வின் தேவை.

******



book | by Dr. Radut