Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.123 But here were world's half-way to heaven

        மோட்சப் பாதையின் மேலான லோகங்கள்

  • திரையிருக்கிறது ஆனால் நிழல் போன்ற சுவரில்லை;
  • அவை மனிதனுக்குப் பிடிபடும் ரூபங்கள்
  • கறைபடாத தூய்மையை நாடும் தீவிரம்
  • மூலத்தின் ஆனந்தம் முகத்தைக் காட்டியது.
  • பூமியின் தூய்மை மோட்ச உலகின் ஆனந்தம் பெற்றுத்தரும்.
  • அது இதயம் இறைவனையறியும் உணர்வாகும்
  • இயற்கை எழிலின் ஜோதியின் சிகரம்,
  • இயற்கையைக் கடந்த பிரம்மத்தின் புல்லரிப்பு:
  • புவியின் கடின பாதைகளில் வலிமை கொண்டாடும் கொக்கரிப்பு
  • வலியின் கொடுமையை அனுபவித்தறியாத,
  • அன்பின் லீலை அகன்று வெட்கத்தைக் கடந்த இயற்கை.
  • ஜடத்தின் சபைகளில் கொட்டாரமடித்த கனவுகள்
  • என்றாலும் இறைவனின் கோயில் கதவு மூடப்பட்டது.
  • இறைவன் விடும் மூச்சு தழுவும் உலகங்கள்;
  • பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்தின் ஆடையின் அலங்காரம்.
  • யுகாந்த மௌனத்தின் வெண்ணிறப் பரப்பு
  • ஜீவன் பெற்ற ஆனந்தத்தின் அமரத்துவ ரூபங்கள்
  • பரந்த லோகங்களைக் கடந்து வரும் பிரம்ம உறக்கம்.
  • புதிரான குரலின் ஆனந்தமடங்கும் ஒர்
  • புனித இனிமையின் அன்பு அழைக்கிறது,
  • உலகத்தின் உடல் புல்லரிக்கத் தீண்டும் தேனின் சுவை,
  • இயற்கையின் உடலைத் தழுவும் பொங்கிவரும் ஆனந்தம்,
  • காப்பாற்றும் கரங்கள் அணைத்துப் பிடித்த லோகம்
  • எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத ஏற்றமிகு தோற்றம்,
  • மனிதன் மறுக்கும் ஆனந்தத்தை வலிய அளிக்கும்.
  • காணாத தெய்வத்தைக் கை தட்டி அழைக்கும் குரல்,
  • தழலாக எழும் கானம், வெண்ணிற ஆசை
  • வையகத்தின் இசையை வைத்திருக்கும் நெஞ்சம்
  • உறங்கும் காதில் ஒலிக்கும் பூரிப்பு.
  • தூய்மை நெருப்பாக உணர்த்தும் உறவு நிறை வீடு,
  • மனித உடலறியாத மகிமை நிறைந்த வேகம்;
  • பரந்து விரிந்த சக்தி பாரமற்று செயல்படும்
  • தாளம் பூரித்துத் தழைக்கும் இன்பம்.
  • காலம் கனிந்து பாடும் கானம் இறைவனின் மகிழ்ச்சி;

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மேல்மனத்தின் எந்நிலையிலிருந்தும் அழைப்பது நம் முயற்சி. அதைத் தாண்டினால் அழைப்பு நிற்காது. தானே எழும்.

*****



book | by Dr. Radut