Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • பிடிக்கவில்லை, எரிச்சல் வருகிறது, பண்றது பொறுக்க முடியாது* என்பவற்றிற்கு ஒரு காரணம் " He has an ability I don't have".

    இரு சட்டம்:

    1. எல்லா நல்ல செயலுக்கும் நானே பொறுப்பு.
    2. எது தவறானாலும் நானே பொறுப்பு.
    *இப்படித் தோன்றினால் நம்முள் எது அப்படிப் பேச வைக்கிறது என நினைக்க வேண்டும்.

    எவருக்கும் தங்களைப் பற்றி சில அபிப்பிராயம் உண்டு. E.g.

    1. எனக்குச் சிரமம் எப்பொழுதும் இல்லை.
      வேலை என்றால் பொதுவாக முடியும்.
      எதிரி என எவருமில்லை.
      என் ராசி, நான் போகிற வேலைக்கு மற்றவர் உதவுவார்கள்.
    2. எதுவும் மல்லு போட்டுதான் முடியும்.
      மற்றவர்க்கு எளிதில் நடப்பது எனக்குச் சிரமப்பட்டு நடக்கும்.
      எது ஆரம்பித்தாலும் வளரும்.
    3. என் உழைப்புப் பிறருக்குப் பலன் தரும்.
      என் மீது தப்பில்லாமல் எல்லோரும் என்னைத் தப்பாக நினைப்பார்கள்.
      எனக்கு வர வேண்டியது எப்பொழுதும் தவறும்.
      எனக்குரியது உழைப்பு, கெட்ட பெயர்.
    4. எனக்கு வேலையே கிடைப்பதில்லை.
      தரை மட்டம் என்னுடையது.
      இதுவரைக்கும் தலை தூக்கியதில்லை.
      அப்படித் தூக்கினால் அடி விழுகிறது. 

    மனித சுபாவத்தில் இதுபோல் பல கருத்துகள் உண்டு. இவர்களைப் பற்றி உலகம் கூறுவது வேறு. தன்னையறிவது Self-awareness, திருவுருமாற்றம் transformation, அன்னை Mother வேண்டும் என்பவர் இப்படிப்பட்ட கருத்துகட்கு ஆன்மீக அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை ஏராளம். அவற்றுள் நம்மைச் சரியாக விளக்குவது, செய்வது எது எனப் புரிவது உண்மை. அப்படிப்பட்ட (statements) கருத்துகள்:

    • எனக்குக் காரியத்தில் குறி, கவனம்; மற்றது பொருட்டல்ல.
    • எவரும் என்னிடம் பிரியமாக, உதவியாக நடப்பார்கள்.
    • வேலையை முதலில் கவனிப்பேன்; மற்றதெல்லாம் அப்புறம்.
    • யாராவது வந்து என் வேலையைச் செய்து தருவார்கள்.
    • எவரும் கேள்விப்படாத உதவியை எவருக்கும் செய்வேன்.
    • எதுவும் வேண்டாம். சந்தோஷமாக இரு, போதும் என்பது என் சட்டம்.
    • எப்படியாவது மரியாதை தேவை.
    • யாரைக் குறைத்துச் சொன்னால் எனக்கு மரியாதை வரும்.
    • இவருக்கு எதைச் சொன்னால் சந்தோஷப்படுவார்.
    • என்ன செய்தால் இவர் முகம் கறுத்து, வாடி, சுருங்கி, வதங்கும்.
    • எல்லோரும் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுகிறார்கள்.
    • மட்டமான வார்த்தை காதில் விழவில்லையே.
    • எவருக்கும் மரியாதையே தெரியவில்லை.
    • உதவி கேளாமல் வருகிறது.
    • இந்த மாதிரி நல்ல மனிதரைக் கண்டதில்லை.
    • எவர் எப்படியிருந்தாலும், நாம் சரியாக இருப்போம்.
    • பணம் ஏராளம்; பண்பு அதைவிட அதிகம்.
    • சந்தேகம் என்பது எனக்கு வாராது. 
  • பூகம்பம்
    • எனக்கு அரைகுறையாக நம்பிக்கையுள்ளவற்றையும் நான் சொல்வதால் சிலர் நம்புவார்கள்.
      நம்பிக்கை சாதிக்கும், பலிக்கும்.
      தனக்கே நம்பிக்கையில்லாமல் சும்மா பேசுபவருண்டு. அவர் நம்பாவிட்டாலும் அன்னைக்காக நாம் அவர் கூறுவதை அப்படியே அப்பட்டமான உண்மையென நம்பினால் நம் நம்பிக்கைக்காகப் பலிக்கும். என் குரு ஸ்தானத்திலுள்ளவர் ஒரு ஞாயிறன்று கிறுக்குக்காக என்னை போஸ்டாபீஸுக்கு அனுப்பி கார்ட் வாங்கி வரச் சொன்னார்.
      • எந்தச் சிந்தனையுமில்லாமல் ஏற்றுக் கொண்டு போனேன்.
      • போஸ்ட்டாபீஸ் ஞாயிறு திறந்திருந்தது.
        ஒரு சோதனை (experiment)க்காக திறந்தோம் எனக் கூறினர்.
      நம்மால் முடியாததும் பலிக்கும்.
      ஊரில் இல்லாததும் நம் நம்பிக்கையால் பலிக்கும்.
      நம் ஊரில் இல்லாத பொருள் கிடைக்கும் என நம்பினால் அது வெளியூரிலிருந்து எவர் மூலமாகவாவது வரும்.
      உலகில் இல்லாததும் அப்படி பெரிய நம்பிக்கைக்குப் பலிக்கும்.
      ஊரும் உலகமும் எதிர்ப்பதை நாம் நம்பினால் அவை பூகம்பமாக எழும்; புயலாக வீசும். அங்கும் நம்பிக்கை பலிக்கும். ஆனால் அதன்முன் பெரிய எதிர்ப்பு எழும்.
      அது காற்றின் எதிர்ப்பானால் புயலாகும். மண்ணின் எதிர்ப்பானால் பூகம்பமாகும். மனிதர் எதிர்ப்பானால் சண்டையாகும்.
      ஒரு நாள் காலை 8.45க்கு ஒரு அன்பரை, "யோகத்தில் முடிவான நிலையை ஏற்க முடியுமா?'' எனக் கேட்டேன். அவர் ஏற்றுக் கொண்டார். 9.00 மணிக்குப் பூகம்பம் வந்து நம் வீடு ஆடியது.
      நம்பிக்கையின் நிலைகள் ஏராளம்.
    • அவை முதலில் பலிக்கும்.
      அடுத்தாற்ப்போல் பெரிய அளவில் பலிக்கும்.
      பிறகு அனைவருக்கும் அது சிறிய, பெரிய அளவில் கிடைக்கும்.
    • நிலைக்குத் தகுந்த பலன் உண்டு.
      நிலை மனத்தையும், சந்தர்ப்பத்தையும் பொருத்தது.
    • பையனுக்குப் பெண் அமைவதும், பெண்ணுக்குப் பையன் அமைவதும் மனத்தின் நம்பிக்கையின் அளவைக் காட்டும்.
      அதில் மற்றவர் தலையிடுவதால் - பெற்றோர் தலையிடுவதால் - குளறுபடி வருகிறது.
      பெண் நேராகப் பையனைப் பெறுவதும் பையன் நேராகப் பெண்ணைப் பெறுவதும் அரிது.
      அது நம்பிக்கையின் வண்ணத்தை விளக்கும்.
      சிக்கலும் விளங்கும், புரிவது சிரமம்.
    • நம்பிக்கை மலையையும் நகர்த்தும்.
      அரசியல் தலைவரான நண்பருக்கு மாதம் ரூ.100/- மலை.
      குரு ஸ்தானத்திலிருந்தவருக்கு இலட்சம் இமயமலை.
      கிராமத்தில் போர் போட்டுப் பயிரிடுவது உலகில் இல்லாத மலை.
      இதெல்லாம் நல்லது நடப்பது.
      கெட்டது விலகுவது பெரியது.
    • இருவரிடையே நம்பிக்கை மலர்ந்தால், அது அபூர்வம்.
      அதைப் பாதுகாக்கும் முயற்சி அன்னை atmosphere சூழலை நிரந்தரமாக்கும்.
      அதற்குரிய அதிகபட்சம் போனால் ஆனந்தமும், பூரிப்பும் தாங்காது (intolerable ecstasy).
  • பிறர் இராசி
    • 1½ மணி கரண்ட் இல்லை. இவரிடம் சொன்ன உடனே கரண்ட் வருகிறது.
      (Instantaneous miraculousness is intensity of goodwill).
      நயமான நல்லெண்ணம் நெகிழும் நேரம் மனம் க்ஷணத்தில் நிறையும்.

      கரண்ட் போகும்பொழுது இது ஒரு டிஸிப்ளின்.
      எங்கோ வேலை நடக்கிறது, ஜெனரேட்டர் ரிப்பேர் செய்கிறார்கள்.
      நேற்றே டி.வி.யில் சொன்னான் எனக் கூறக் கூடாது.
      இது ஒரு சோதனை. நமக்குப் பவர்கட்டில்லை.
      (பெரிய, நல்ல, சக்தி வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான பதில் ஒன்றுண்டு. அது நல்லதாகவோ, அல்லதாகவோ இருக்கும் - இரண்டில் ஒன்று உண்மை).
      ரூலை ஏற்றுக் கொள், எனக்குப் பவர்கட்டில்லை, இல்லவே இல்லை.
      கரண்ட் போனால் நல்லெண்ணமுள்ள ஒருவரிடம் கூறு.
      உடனே பவர் வரும்.
      உடனே பவர் வந்தால், இதைத் தொடர்ந்து செய்.
      • பவர்கட் குறையும், ஒவ்வொரு முறையும் சற்று சீக்கிரம் வரும்.
    • தொடர்ந்து செய். அவரே மாறிவிடுவார். அவர் நல்லெண்ணம் அதிகமாகும்.
      • ஒரு அதிசயம் நடக்கும். மாதம் 3, 4 முறை இருந்த பவர்கட் 3, 4 மாதத்திற்கு ஒரு முறை வரும்.
      இந்தக் கட்டத்தில் நமக்குப் பவர்கட் இல்லையெனச் செய்யலாம் எனப் புரியும். நிதானமாகத் தீவிரமாக, முனைந்து, 3 அல்லது 4 மாதத்தை 1 வருஷமாகச் செய்யலாம். அதற்கு மேல் தொடரக் கூடாது.
      உள்ளே பார்த்தால் உள்ளேயுள்ள சுமுகம் இதைச் சாதித்தது தெரியும். எரிச்சல்படாமல், அமைதியாக சந்தோஷமாக இருந்ததன் பயனிது எனத் தெரியும்.
    • இது பவருக்கு மட்டுமல்ல, எல்லாச் செயலுக்கும் உண்மை.
      நான் ஏமாந்துபோகிறேன்.
      என்னை அவமானப்படுத்துகிறார்.
      உள்ளது கிடைக்கவில்லை.
      மறந்துபோகிறது.
      ஒன்று போனால் ஒன்று வருகிறது.
      எதுவும் கூடி வரமாட்டேன் என்கிறது.
      எந்தக் குறையும் மனக் குறையே; மற்ற குறை உலகிலில்லை.
      அது புரிவது, அன்னை புரிவதாகும்.
      சோதனை புரிந்த பின்பும் மனம் பழைய பேச்சைப் பேசும்.
      அது சரி வாராது.
    • அர்த்தமற்ற காரணத்தை அர்த்தபுஷ்டியாகக் கருதுவது.
      (Arrive at the right result by an erroneous process).
      • கூந்தலுள்ள சீமாட்டி.
        மனம் இருந்தால் எதற்கும் அர்த்தம் தர முடியும்.
        கணவன், மனைவி உறவு பெரியது, நுட்பமானது.
        அந்த உறவில் அர்த்தம் ஏற்பட்டால், எதற்கும் அர்த்தம் வரும்.
        அர்த்தம் என்றால் பொருள், பணம் எனப் பெயர்.
        அர்த்தம் தரும் தனம் அனந்தனுக்குரியது.
        அர்த்தம், காமம் என்பது வழக்கு.
        அர்த்தம் பொருள், காமம் பொருளில்லாதது.
      • இவை விளக்கப்படுவதைவிட, செய்து பார்த்தால் தெரியும்.
        செய்து சோதனைப் பார்க்க நிதானம் வேண்டும்.
        கடைநிலை ஊழியனுக்கு அர்த்தம் கற்பித்தால் teacher ஆசிரியருக்கு இல்லாத அர்த்தம் வரும்.
        இன்று (Delhi) டெல்லியில் (Vice-President) வைஸ் பிரசிடெண்ட்ஆக இருப்பது கீழிருந்து உயர்ந்தவர்.
        அர்த்தமற்றவரை அர்த்தமுள்ளவராக்குவது (democracy) மக்களாட்சி.
        அர்த்தமற்ற மனிதன், விலங்கு, தாவரம், ஜடம் ஆகியவற்றிற்குப் பூரண சிறப்பான பரிணாம அர்த்தம் தருவது திருவுருமாற்றம்.
        நிலக்கரியிலிருந்து கம்ப்யூட்டர் சிப் (computer chip) செய்கின்றனர்.
        100 புத்தகம் (100 encyclopedia) என்ஸ்சைக்குளோபீடியாவை ஒரு (chip) சிப் வைத்துள்ளது.
      • நமக்குக் குழந்தைகள் சிறுவர்.
        அர்த்தம் கொடுத்தால் அவர்கள் பெரியவர்கள்.
        அதிலும் (Genius) மேதை.
        மேலும் சொன்னால் குழந்தைகள் பிரம்மம்.
        அவர்களால் எதுவாகவும் ஆக முடியும்.
        நம் வீட்டில் சோதனை செய்யலாம்.
        பலன் இமயமலை போலிருக்கும்.
        கண்ணால் பார்த்தும் நம்ப முடியாது.
        எல்லா அன்பர் (devotee)களும் உலகப் பிரசித்தி (world famous) ஆகலாம்.
        10 அல்லது 100 ரூபாய் பெறலாம். (1 ரூ. என்பது 1 கோடி).
        எவரும் எதுவாகவுமாகலாம்.
      • ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு நடைமுறையில் concentrate செய்து ஒரு வருஷத்தில் பலனைக் காணலாம். கண்ட பிறகும் நம்ப முடியாத அளவு பெரியதாகச் சிறப்பாக, உயர்ந்த உன்னதம் பெற்றதாக இருக்கும்.
  • நிலையாக இல்லை
    • நடப்பது
      1. பிறருக்காகக் கேட்டால்
      2. மனம் நெகிழ்ந்தால்
      3. உள்ளே சுமுகம் நிறைந்தால்
      4. அன்னை நம்மை நினைவு கூர்ந்தால்
      5. மனம் பாஸிட்டிவாக இருந்தால்
      6. மனம் முழுமையாக இருந்தால் (when there is fullness)
      7. மனம் லேசாக இருந்தால்
      8. ஆணவமில்லாமல் unegoisticஆக இருந்தால்
      9. மறந்து நெகிழ்ந்தால்
      10. அகண்டம் கண்டத்திலிருந்து எழுந்தால்
        பொதுவாக நன்றாக இருந்தால் க்ஷணத்தில் நடக்கும்.
    • நடக்காதது
      1. அல்பம்
      2. சொல்பம்
      3. இடுப்பொடித்துப் பேசுவது
      4. அதிகாரம் செய்வது
      5. குறை கூறுவது
      6. தவறு பிறர் மேல் என நினைப்பது
      7. அவசரப்பட்டால்
      8. Tension எரிச்சலாக இருந்தால்
      9. நம்மை உயர்வாக நினைத்தால்
      10. பொய் சொன்னால்
      11. சத்தமாகப் பேசினால்
      12. பிறர் தவறு செய்யும் பொழுது, "அது தவறு” என நினைத்தால் (நடக்க, பிறர் தவறு செய்வது நம்முடைய குறை காரணம் என அறிய வேண்டும்)
      13. வறண்ட மனமிருந்தால்
      14. தவறானவரை எதிர்த்தால்
      15. தவறானவரை ஆதரித்தால்
      16. மட்டமானவரை ஆதரித்தால் அல்லது எதிர்த்தால்
      17. பொதுவாக மனம் மட்டமாக இருந்தால் காரியம் நடக்காது

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இம்முறைக்குட்பட்ட பிரார்த்தனைகள், இம்முறையால் பலிக்கின்றன. மேம்பட்டவை, தெய்வத்தால் இம்முறை மூலம் பலிக்கின்றன.
 
தெய்வம் முறையைக் கடக்கும்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்கிறோமோ அது பலன் தருகிறது. மேலும் ஓர் உண்மையுண்டு. நாம் எந்நிலையில் நம் சக்திகளைச் சேர்த்து முறைப்படுத்துகிறோமோ அந்நிலையில் அம்முறைக்குத் தெய்வீகச் சக்தியுண்டு. அதுவும் பிரார்த்தனைக்குப்
பலன் தரும். யார் பிரார்த்தனைக்குப் பதில் சொன்னார்கள் என்பது வேறுபடும்.
 
முறைக்கும் சக்தியுண்டு.
 
 
******



book | by Dr. Radut