Skip to Content

08. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. இனாமாக வருகிறது என்றால் எதையும் கேட்பான்.
    • இறைவன் அழைப்பை ஏற்பவரில்லை.
  2. நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
    • அன்பர் ஒருவர் செய்வது அனைத்துலகம் பெறுவது.
  3. தாமரை இலைத் தண்ணீர்போல.
    • வாழ்வால் பாதிக்கப்படாமல் வாழவேண்டும்.
  4. நீர்க்குமிழி.
    • சமர்ப்பணமாகாத சித்தி நீர்க் குமிழியாகும் - நிரந்தரமான நீர்க்குமிழி.
  5. பெண்புத்தி பின்புத்தி.
    • ஆன்மா முன்னேயறியும். மனம் அறியும் பின்னே.

 

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தாழ்ந்தவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை சமூகத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்தால் புரட்சி வெற்றியடையும்.

******



book | by Dr. Radut